வெள்ளி, 29 ஜூலை, 2016

பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

                             
                  4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியின் தோற்றம் 
                                       


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 

ஆதி யுகம் 


4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பிராணவாயு இல்லாத வளிமண்டலம். 

3,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியில் பெருங்கடல்கள் தோன்றுதல்.

3,400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - உயிரின் தோற்றம்.

2,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆற்றலை உருவாக்கும் உயிரின் தோற்றம்.

2,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - வளிமண்டலத்தில் பிராணவாயு கிடைத்தல் .

1,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலின இனப்பெருக்கம், இதே காலகட்டத்தில் ஓசோன் படலமும் தோன்றியது.


...........................................................ஆதியுகத்தின்முடிவு...........................................................


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 

முதல் யுகம்

700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பல செல்கள் கொண்ட உயிரினங்களின் தோற்றம்.

500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தாடையற்ற மீன்களின் தோற்றம்.

440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - கட்டைத் தன்மை கொண்ட ஒளிசேர்க்கை செய்யும் தாவரங்களின் தோற்றம்.

425 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தாடையுள்ள மீன்களின் தோற்றம்.

355 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நீரோடு நிலத்திலும் வாழும் உயிரினங்களின் தோற்றம்.

350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - விதையுடன் கூடிய பெரணித் தாவரங்களின் தோற்றம்.

320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஊர்ந்துசெல்லும் விலங்குகள் மற்றும் இறக்கையுடன் கூடிய பூச்சிகளின் தோற்றம்.

300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலூட்டும் தன்மைக்கொண்ட ஊர்வனவற்றின் தோற்றம்.


......................உயிரினங்களின் பேரழிவு - முதல் யுகத்தின் முடிவு.......................




பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

இரண்டாவது யுகம்

220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தேவதாரு, மதனகாம மரங்களின் தோற்றம், இதே காலகட்டத்தில்தான் டைனோசர்களும் தோன்றி ஆதிக்கம் செலுத்தின.

144 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலூட்டிகளின் தோற்றம்.

134 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பறவைகளின் தோற்றம்.

115 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நஞ்சு கொடியுள்ள பாலூட்டிகளின் தோற்றம்.

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனை குடும்பத் தாவரங்களின் தோற்றம்.

இரண்டாவது யுகத்தின் போது தான் பூமியின் நிலப்பகுதிகள் உடைந்து வெவ்வேறு திசையில் நகர்ந்து பல கண்டங்களாக பிரியத் தொடங்கின.

...................உயிரினங்களின் பேரழிவு இரண்டாவது யுகத்தின் முடிவு.......................




பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

மூன்றாவது யுகம்


56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குரங்குகளின் முன்னோர்களின் தோற்றம்.

55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - புற்களின் தோற்றம்.


52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குதிரைகள், காண்டாமிருகங்கள் தோற்றம்.

35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - வாலற்ற குரங்குகளின் தோற்றம்.

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஆதி மனிதனின் தோற்றம்.

மூன்றாவது யுகம் முடியும் தருவாயில் பூமி பல கண்டங்களாக முழுமையாக பிரிந்துவிட்டது.


...................உயிரினங்களின் பேரழிவு - மூன்றாவது யுகத்தின் முடிவு.......................


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

நான்காவது யுகம்

0.018 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனிக்கட்டிகள் உடைந்து, உருகி பூமியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

0.03 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நவீன கால மனிதனின் முன்னோர்கள் பூமியில் தோன்றினர்


                                           மேற்கண்ட நான்கு யுகங்களில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் ஆதி மனிதன் பூமியில் அவதரித்ததில் இருந்து இன்றுவரை வெறும் 20 இலட்சம் வருடங்களே ஆகிறது. ஆனால் நமது பூமி தோன்றி 460 கோடி வருடங்கள் ஆகிவிட்டது. பூமி உயிரினங்களை வழி நடத்திய காலமெல்லாம் மாறி, இன்று மனிதன் பூமியை அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டான். பூமியின் வளங்களை அழியாமல் காத்து, பூமியின் இயற்கை வளங்களை அளவோடு அனுபவித்து வந்தால் இன்னும் 100 கோடி ஆண்டுகள் நம் சந்ததிகள் இந்த பூமியில் செழித்து வாழும்...

செவ்வாய், 22 டிசம்பர், 2015

தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள்

                                              
                                            
                      தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சள் அற்புத பலனைப் பற்றி பார்க்கவிருக்கிறோம். மஞ்சள் வகைகளிலே அபூர்வமாக கிடைக்ககூடியதான ஒன்று தான் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கருமஞ்சள் ஆகும் இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா பகுதியில் விளைபவை ஆகும். பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள்


                    

                                               தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கரு மஞ்சளில் காளியும், பைரவரும் வசிக்கிறார்கள் என்று சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இந்த கரு மஞ்சளை சிவப்பு பட்டு துணியில் கட்டி கழுத்தில் அணிந்திருந்தால் நாம் செய்யும் செயல்களில் எல்லாம் எதிர்பாராத வெற்றிகளை கொடுக்கும், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்களை கொடுக்கும், எதிர்பாராத தன வரவுகளையும் பொருள் வரவுகளையும் உண்டாக்கும், இதுவரை வெளியில் கொடுத்து திரும்பி வராத பணம் திடீரென எதிர்பாராமல் நல்லபடியாக வந்து சேரும், அற்புதமான முன்னேற்றத்தையும் பண வரவுகளையும் தருவதால் வியாபாரிகள் கட்டாயம் அணியவேண்டியது கருமஞ்சள் ஆகும். வாழ்வில் எதிர்பாராத வெற்றிகளை கருமஞ்சள் பெற்றுத்தரும். ஆகையால் வாழ்வில் வெற்றியையும் முன்னேற்றத்தையும் விரும்பும் அனைவரும் கருமஞ்சள் அணியலாம்.

கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது, ஏழரை சனி, அஷ்டம சனி மற்றும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்த்ரீக பாதிப்புகளால் நீங்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கருமஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும்.


திங்கள், 14 டிசம்பர், 2015

ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை

                                 
                                              ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை
                                              ஜீவ சஞ்சீவி வசிய மூலிகை 


                                                       இங்கே அற்புதமான ஒரு வசியத்தை பற்றி பேசவிருக்கிறோம். நீங்கள் மேலே பார்த்த படத்தில் இருப்பது ஜீவ சஞ்சீவி மற்றும் ஜீவ சஞ்சீவி வசிய எண்ணை, இந்தியாவில் கிடைக்கும் ஜீவ சஞ்சீவி பழுப்பு நிறத்தில் இருக்கும் ஆனால் மேலே படத்தில் இருப்பது கருப்பு நிறம் உடைய ஜீவ சஞ்சீவி ஆகும். இதில் ஆண் பெண் இரண்டும் உண்டு, ஆண் பெண் இரண்டையும் ஒன்று சேர்த்து வைத்தால் தான் வேலை செய்யும், இந்த ஜீவ சஞ்சீவி வேரை சந்தனாதி தைலம் அல்லது அல்ககால் கலக்காத வாசனை திரவியத்தில் போட்டு வைத்துக்கொண்டு அந்த வாசனை திரவியத்தை உங்கள் வலது கை மோதிர விரலால் தொட்டு நெற்றியில் பொட்டிட்டு கொண்டு இரண்டு புருவங்களிலும் வைத்துக்கொண்டு வெளியில் சென்றால் உங்களை பார்பவர்கள் எல்லாம் வசியமாவார்கள், பெண் வசியம், வியாபார வசியம் உண்டாகும். உங்கள் முகத்தை கண்டவர்கள் உங்களுக்கு வசியமாவர்கள், செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களை வசீகரித்து கொடுத்து வியாபாரத்தில் இலாபத்தை அதிகரிக்கும், எதிர்பாராத அதிஷ்டங்களை உண்டாக்கும். 

திங்கள், 30 நவம்பர், 2015

அஷ்ட கர்மமும் உட்பிரிவுகளும்


                                           மாந்த்ரீக கலையை பொறுத்தவரை நம் தமிழக சித்தர் பெருமக்களே உலகளவில் சிறந்து விளங்கினார்கள் என்பது உண்மை. அத்தகைய சித்தர்கள் அருளி செய்த மாந்த்ரீகம் ''அஷ்ட கர்மங்கள்'' என்று அழைக்கப்படுகிறது. அஷ்ட கர்மங்களவான 1.வசியம், 2.மோகனம், 3.தம்பனம், 4.உச்சாடனம், 5.ஆகர்ஷணம், 6.வித்வேஷணம்,  7.பேதனம், 8.மாரணம் ஆகும். இந்த ஒவ்வொரு கர்மத்திலும் உட்பிரிவுகள் உண்டு. அவை


1. வசியம் :

                       ஆறு வகைப்படும், அவை 1. உலக வசியம், 2. அரசர் வசியம், 3. மாதர் வசியம், 4. மைந்தர் வசியம், 5. பகைவர் வசியம், 6. விலங்கு வசியம் ஆகும். இதன் உட்பிரிவாக ஜன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், வழக்கு வசியம் முதலியன அடங்கும்.


2. மோகனம் :

                            ஐந்து வகைப்படும். அவை 1. உலக மோகனம், 2. மாதர் மோகனம், 3. மைந்தர் மோகனம், 4.பகைவர் மோகனம், 5.விலங்கு மோகனம் முதலியன அடங்கும்


3. தம்பனம் :

                          எழு வகைப்படும். அவை 1. நில தம்பனம், 2. நீர் தம்பனம், 3. தீ தம்பனம், 4. சுக்கில தம்பனம், 5. படைக்கல தம்பனம், 6. பகை தம்பனம், 7.விலங்கு தம்பனம். இதில் நில தம்பனத்தின் உட்பிரிவாக மர தம்பனம், செக்கு கரும்பாலைகளின் தம்பனம், தன தானிய தம்பனம் முதலியனவும், நீர் தம்பனத்தின் உட்பிரிவாக உப்பு படாமை, முத்து மீன்கள் படாமை, ஆறு கரைபுரளாமை, மழை பெய்யாமை, இடி மரக்கலங்களின் தம்பனம், ஆறு குளங்களில் நீர் நிற்க முதலியனவும்,  சுக்கில தம்பனத்தின் உட்பிரிவாக சுக்கில தம்பனம், கரு தம்பனம், குழவி (குழந்தை) சாகாமை, மாதர் தெருளாமை, கெங்கை எழாமை முதலியனவும், தீ தம்பனத்தின் உட்பிரிவாக மழுவேந்த, இரும்பு வேகாமை, வீடு வேகாமை முதலியனவும், படைகல தம்பனத்தின் உட்பிரிவாக வெட்டறாமை, குத்து உறையாமை, அம்பு தைக்காமை, மரம் வெட்டறாமை, கிடாய் வெட்டறாமை முதலியனவும், பகை(சத்ரு) தம்பனத்தின் உட்பிரிவாக பகை நாவடக்கம், சினம் அடங்க, கால் நடை மடங்க, பகைவர் படைக்கலம் முடங்க, கை முடக்கம், பாடல் தம்பனம், ஆடல் தம்பனம், சரக்கு விற்காமை, தச்சர் தொழில் தம்பனம், தண்ணுமை (வாத்தியங்கள்) கொட்டல் , மண்கலங்கள் வனைதல்களின் தம்பனம் முதலியனவும், விலங்கு தம்பனத்தின் உட்பிரிவாக புலி தம்பனம், கரிதம்பனம், எலிதம்பனம், கிடாய்தம்பனம், பாம்புதம்பனம், நரித்தம்பனம், நாய்த்தம்பனம், பரித்தம்பனம், ஏற்றுதம்பனம், பசுதம்பனம், பன்றிதம்பனம் முதலியனவும் அடங்கும்.


4. உச்சாடனம் :

                               எட்டு வகைப்படும். அவை 1.தெய்வ உச்சாடனம், 2. அரசர் உச்சாடனம், 3.உலக உச்சாடனம், 4.பிணி உச்சாடனம், 5.மனிதர் உச்சாடனம், 6. பகைவர் உச்சாடனம், 7. நீர் உச்சாடனம், 8. பகைவர் உச்சாடனம் முதலியன அடங்கும், இதன் தெய்வ உச்சாடனத்தின் உட்பிரிவுகளாக ஐயன் போக, பிடாரி போக, பிரமகண்டன் போக, முயலகன் போக, குமாரகண்டன் போக, பிசாசு குரளி பேய்கள் போக முதலியனவும், அரச உச்சாடனத்தின் உட்பிரிவாக அரசன் போக, அரசன் பதி போக, அரசன் செல்வம் போக, அரசன் சேனை போக, அரசன் தேர் பரி கரி கருவி போக முதலியனவும், உலக உச்சாடனத்தின் உட்பிரிவாக வழிநடை போக, கிலேசம் இடர் போக, மோகம் போக, அச்சம் போக பெருவினை போக, தளை போக முதலியனவும், வியாதி உச்சாடனத்தின் உட்பிரிவாக சூலை நோய் போக, பித்து போக, வைசூரி நோய் போக, உளைப்பு நோய் போக, கழலை போக, விப்புருதி போக, வாதம் போக, குரல்வளை நோய் போக, குன்மம் போக, பித்தம் போக, தொடர் பித்தம் போக, பித்த பாண்டு போக, உக்கிர பித்தம் போக, ஈளை போக, கபம் போக, மேகம் போக, கல்லெரிப்பு போக, உடம்பெரிப்பு போக, வெப்பு நோய் போக, நான்மாறல் சுரம் போக, குலைப்பு போக, செவிநோய் போக, முலைகுத்து போக, தொழுநோய் போக, கண்நோய் போக, பல்லரணை பல்குத்து போக, கருங்குட்டம் செங்குட்டம் போக, ஒற்றை தலைவலி போக, வாயிற்று நோய் போக முதலியனவும், மாந்தர் உச்சாடனத்தின் உட்பிரிவாக மாதர் உச்சாடனம், மைந்தர் உச்சாடனம் முதலியனவும், சத்ரு (பகைவர்) உச்சாடனத்தின் உட்பிரிவாக சத்ரு போக, சத்ரு நாடு பதி போக, சத்ரு சேனை போக, சத்ரு தன தானியம் போக, சத்ரு செல்வம் போக, சத்ரு இருந்த மனை போக, சத்ரு கை ஆயுதம் போக, சத்ரு மனை வெண்கலம் போக, சத்ரு அணிகலன் போக, சத்ரு சுகம் கெட முதலியனவும் அடங்கும்.


5.ஆகர்ஷணம் :

                                ஏழு வகைப்படும். அவை 1. அரசர் அகர்ஷணம், 2. உலக அகர்ஷணம், 3. மாதர் அகர்ஷணம், 4. மைந்தர் அகர்ஷணம், 5. விலங்கு அகர்ஷணம், 6. பகைவர் அகர்ஷனம் 7. நீர் அகர்ஷணம் முதலியன அடங்கும். இதில்  அரசர் ஆகர்ஷணத்தின் உட்பிரிவாக அரசர் வர, அரசர் கரி பரி தேர் வர, அரசர் படை வர, அரசர் படைக்கலம் வர, அரசர் செல்வம் வர முதலியனவும், உலக அகர்ஷணத்தின் உட்பிரிவாக அகன்றவர் வர, நினைத்தவை வர, சுகம் வர, உணவு வர, தானியம் வர, வைப்புநிதி வர, கிலேசம் வர, படை வர முதலியனவும், விலங்கு ஆகர்ஷணத்தின் உட்பிரிவாக யானை வர, புலி வர, பரி வர, பன்றி வர, பாம்பு வர, எலி வர, பசு வர, எருமை வர, மரை, கலை, கரடி வர முதலியவையும், பகைவர் அகர்ஷணத்தின் உட்பிரிவாக பகைவர் வர, பகைவரின் தன தானியம் வர, பகைவரின் சேனை வர, பகைவரின் ஜனம் வர, பகைவரின் படைக்கலம் வர முதலியனவும், நீர் ஆகர்ஷணத்தின் உட்பிரிவாக கிணற்றுநீர் வர, மழை நீர் வர முதலியனவும் அடங்கும்.


6. வித்வேஷணம் : 

                                      மூன்று வகைப்படும். அவை உலக வித்வேஷணம், மிருக வித்வேஷணம், படைக்கல வித்வேஷணம் முதலியவை அடங்கும். உலக வித்வேஷணத்தின் உட்பிரிவாக வாது வெற்றி, சொல் வெற்றி, வழக்கு வெற்றி, படை வெற்றி, போர் வெற்றி, பாட்டு வெற்றி, எழுத்து வெற்றி, இசை தமிழ் வெற்றி, நாடக தமிழ் வெற்றி, மாதர் வெற்றி, மைந்தர் வெற்றி, சிறை வெற்றி,ஊழ் வெற்றி முதலியனவும், விலங்கு வித்வேஷணத்தின் உட்பிரிவாக கிடாய் வெற்றி, சேவல் வெற்றி, வேழ வெற்றி, குதிரை வெற்றி, காடை வெற்றி, கோழி வேழத்தை வெல்ல, தகர், சேவல், யானை, குதிரை, காடை முதலியவற்றின் வெற்றி முதலியனவும் அடங்கும்.


7. பேதனம் : 

                         ஏழு வகைப்படும். அவை நில பேதனம், நீர் பேதனம், உலக பேதனம், மாதர் பேதனம், மைந்தர் பேதனம், விலங்கு பேதனம், பகை பேதனம் முதலியவை அடங்கும். இதில் நில பேதனத்தின் உட்பிரிவாக பயிர் ஆதல், நெல் விளைதல், தனம் பொலிதல், தானியம் மெத்தவதால், ஊனமரம் காய்த்தல், கூடு கொட்டாரம் பெருகல், செக்கெண்ணை காணுதல், ஆலைச்சாறுண்டாதல், பயிரழிதல், தனதானியங்குன்றல், கூடு கொட்டாரம் குன்றல், ஆலைச்சாரு குறைதல், செக்கெண்ணை குறைதல், மரம் காயுதிர்தல் முதலியவையும், நீர் பேதனத்தின் உட்பிரிவாக ஆற்றில் நீருண்டாதல், கிணற்றில் நீருண்டாதல், உப்பு விளைதல், முத்து விளைதல், மீனுண்டாதல், மரக்கலம் உடையாமை, மரக்கலம் உடைதல், மீன்படாமை, ஆற்றுநீர் வற்றல், கிணற்றுநீர் வற்றல், உப்பு விளையாமை, முத்து விளையாமை முதலியனவும், உலக பேதனத்தின் உட்பிரிவாக சபையில் வார்த்தை வெல்லல், பெரும் பட்டம் கட்டுதல், நற்குணம் உண்டாதல், மைந்தரும் மாதரும் கூடுதல், உறவு உண்டாதல், சிறப்பு உண்டாதல், சுகம் உண்டாதல், செட்டு உண்டாதல், தலைமயிருண்டாதல், கேட்டது கூடுதல், தாரமுண்டாதல், வித்துவானாதல், நாட்டிற்கு நலம் பயத்தல், மனையுண்டாதல், பெண் வாழ்தல், ஞானம் உண்டாதல், கவிதை உண்டாதல், தனம் உண்டாதல், நாணம் உண்டாதல், தானியம் உண்டாதல், தன்வசமாதல், பெண்ணான்விடுதல், செய்மைக்காட்சி, முக்காலமும் உணரும் ஞானம், காய சித்தி, கூடுவிட்டு கூடு பாய்தல், உடம்பு பருத்தல், வாழ்நாள் வளர்தல், ஆரோக்கியமுண்டாதல், சொல் தெளிவின்றி மாறுதல், பட்டம் அழிதல், குணம் கெடல், மாதர்  மைந்தர் மனம் பிரிதல், மாதர் உறவு கெடுதல், சுகங் கெடுதல், வித்தை கெடுதல், நன்மை கெடுதல், சிறப்பு அழிதல், செட்டு இலையாதல், தலை தட்டல், கெட்டது கூடாமை, கவித்துவம் கெடுதல், மனை கெடுதல், பெண் வாழாமை, ஞானங் கெடுதல், தானியம் குறைதல், நாணம் அழிதல், தனம் தானியம் அழிதல், தூர தரிசனம் கெடுதல், பெண் ஆண் பிரிதல், தன்வயமாகாமை, கண் தெரியாமை, முக்கால உணர்வு அழித்தல், காய சித்தி கெடுதல், சீர் சிறப்பு கெடுதல், உடல் இளைத்தல், ஆரொகியங்கெடுதல், ஆயுள் அழிதல் முதலியனவும், பெண் பேதனத்தின் உட்பிரிவாக கன்னி கூடுதல், கெங்கை அரும்புதல், மாதர் தெருளல், கருவுண்டாதல், பெண் வாழ்தல், பகம் பருத்தல், வீருண்டாதல், போகம் பெருகுதல், பெரும்பாடு நீங்குதல், கெங்கை சுருங்குதல், கன்னி கூடாமை, தெருளாமை, மகளிர் வெறுத்தல், கருச்சிதைதல், பகஞ் சுருங்குதல், வீறு கெடுதல், போகங் கெடுதல், பெரும்பாடு தங்குதல் முதலியனவும், மைந்தர் பேதனத்தின் உட்பிரிவாக நோக்கியவர் கூட, கண்டவர் விளைய, கோசம் வளர, தாது பெருக, பிரிவுண்டாக, பிரிந்து பிணங்க, கோசங் குறைய, தாது குன்ற முதலியனவும், மிருக பேதனத்தின் உட்பிரிவாக எருமை பாலுண்டாதல், எருமை உண்டாதல், பசுவுண்டாதல், பசு பாலுண்டாதல், எருமை கெட, எருமை பால் குறைய, பசு கெட, பசு பால் குறைய முதலியனவும், சத்ரு பேதனத்தின் உட்பிரிவாக தினம் பகை உண்டாதல், பகைவரின் படைகள் வருதல், பகைவரின் தனம் தானியம் கெடுதல், பகைவரின் படைக்கலம் வருதல், பகை கெடுதல், பகைவரின் சேனை கெடுதல், பகைவரின் செல்வம் கெடுதல், பகைவரின் படைக்கலம் கெடுதல் முதலியனவும் அடங்கும்.


8. மாரணம் : 

                        பதிநான்கு வகைப்படும், அவை சத்ரு மாரணம், கருமாரணம், குழவி மாரணம், சேனை மாரணம், மனைவி மாரணம், கண் மாரணம், பகைவர் மாரணம், சத்ரு நாசம், கரி மாரணம், பரி மாரணம், மறி மரணம், எருமை மாரணம், பசு மாரணம், விஷ நாசம் முதலியவை அடங்கும்.


                    இத்தகைய அபூர்வ அஷ்ட கர்ம மாந்த்ரீக கலையை மக்களின் நன்மைக்காக பயன்படுத்தி மக்களை வளம்பெற செய்வதே அஷ்ட கர்ம மந்த்ரீகத்தின் நோக்கமாகும்.


வெள்ளி, 4 செப்டம்பர், 2015

ஜால வித்தை குளிகை

                           




                                    "தாரணி வேரொடு தாளிப்பானைவேர்
                                     கோரமில் லாமற் கூட்டிச்சமனாய்
                                     பூநீரா லரைத்துக் குளிகைசெய்
                                     குளிகை தலைகொள் குத்தேறாது
                                     பழிபடும்போரிற் படாது வெட்டு
                                     ஒளிவிட்டெரிந்த உயர்பாணம் மேறாது
                                     அழிவுறாதிந்த அதிசயக் குளிகையே"


                                         நாம் சாலைகளில் வாகனங்களில் செல்லும் பொழுது விபத்துகளிருந்தும் சில ஆபத்துக்களில் இருந்தும் ஆயுதங்களினால் காயம் படாமல் தப்பிக்கும் உபாயமாக இதை "கருவூரார் பலதிரட்டு" என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. சித்தர்கள் கூறியுள்ள பல விஷயங்கள் , நம்மை ஆச்சர்யத்தின் விளிம்பில் தள்ளுவனவாகவும் இருக்கின்றன இதை ஜாலவித்தைகள் என்கின்றனர். தாரணி என்ற மூலிகையின் வேர், தாளிப்பானை என்ற மூலிகையின் வேர் இரண்டையும் சம அளவு எடுத்து அத்துடன் பூநீர் விட்டு அரைத்து குளிகையாகச் செய்து கொள்ள வேண்டுமாம். இந்தக் குளிகையினை அணிந்து கொண்டு நாம் வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது

விபத்துகளிருந்தும் சில ஆபத்துக்களில் இருந்தும் காப்பதோடு, போரிற்குச் சென்றால்குத்துகள் வெட்டுகள் அடிகள் ஆகியவற்றின் பாதிப்புக்களில் இருந்து  நம்மை காத்துக்கொள்ள உதவிடும் என்கிறார்.


வெள்ளி, 3 ஜூலை, 2015

சாளக்கிராமம்


                                         "சாளக்கிராமம்" என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ரகிரீடம்" என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.

சிறப்பு : 

                      சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் "ஸ்வயம் வியக்தம்" என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது "லட்சுமி நாராயண சாளக்கிராமம்". நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது "லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம்", இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது "ரகுநாத சாளக்கிராமம்". இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது "வாமன சாளக்கிராமம்". வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது "ஸ்ரீதர சாளக்கிராமம்". விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது "தாமோதர சாளக்கிராமம்". மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது "ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம்". விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது "ரணராக சாளக்கிராமம்". பதினான்கு சக்கரங்களும் கொண்டது "ஆதிசேட சாளக்கிராமம்". சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது "மதுசூதன சாளக்கிராமம்".


                            ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது "சுதர்சன சாளக்கிராமம்". மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது "கதாதர சாளக்கிராமம்". இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது "ஹயக்ரீவ சாளக்கிராமம்". இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது "லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம்". துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது "வாசுதேவ சாளக்கிராமம்". சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன "சாளக்கிராமம்". விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது "அநிருத்த சாளக்கிராமம்". இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும், பச்சை - பலம், வலிமையைத் தரும், கருப்பு - புகழ், பெருமை சேரும், புகைநிறம் - துக்கம், தரித்திரம்.

சாளக்கிராமம் என்பது கண்ணனின் நிறம் கொண்ட கல் ஆகும். இது இந்துக்களால் திருமாலின் அருவத் தோற்றமாகக் மாலவனை வழிபடப்படும் சிறப்புக் கல் இதுவாகும். இந்து சமயம் பெரும்பாலும் உருவ வழிபாட்டைக் கொண்டிருந்தாலும் சிவபெருமானை சைவர்கள் லிங்க வடிவில் வழிபடுவதுபோல வைணவர்கள் திருமாலை சாளக்கிராமக் கற்களில் வழிபடுகின்றனர்.இந்தப் புனிதக் கற்கள் நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் கண்டகி நதியில் காணப்படுகின்றன. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.



சாளக்கிராம வகைகள் :




                                     பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன.


                          பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து ’சாளக்கிராம சாட்சியாக’ சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது.புராணக் குறிப்புகள்கருட புராணம் மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
விஷ்ணு புராணம் : 


                          கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது.


பத்ம புராணம் :


சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது.
ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி :


சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று "ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி" எனும் நூல் கூறுகின்றது,


"ஸ்ரீதேவி பாகவதமும்" "ஸ்ரீநரசிம்ம புராணமும்" :
"ஸ்ரீதேவி பாகவதமும்" "ஸ்ரீநரசிம்ம புராணமும்" சாளக்கிராம வழிபாட்டினை புகழ்கின்றன.
துவாரகா சிலா :



சாளக்கிராமத்தை துவாரகா சிலாவுடன் சேர்த்து வணங்குவது சிறப்பானது என்று கூறுவர். தரமான பூஜிக்கப்பட்ட சாளக்கிராமங்கள் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் கிடைக்கும்.

வெள்ளி, 26 ஜூன், 2015

இரத்தக்காட்டேறி இரகசியம்



                                   
                                        இரத்தக்காட்டேறி இரகசியம்


                                   இன்றைய உலக மக்களுக்கெல்லாம் சகல கலைகளிலும் முன்னோடியாய் விளங்கியவன் தமிழன், ஆகாய விமானம் என்னவென்றே மனிதன் கண்டுபிடிக்கும் காலத்துக்கு முன்பே இந்திரனின் விமானத்தை பற்றியும், இராவணனின் புஷ்பக விமானத்தை பற்றியும் காவியங்களில் சொன்னவன் தமிழன், "கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன்தோன்றிய மூத்த குடி" என்ற பெருமையை கொண்டவன் தமிழன், ஆதிகாலம் தொடக்கதிலிருந்தே சகல கலைகளிலும் பண்டைய தமிழர்கள் இந்த உலகினருக்கு முன்னோடிகளாய் திகழ்ந்தது உலகறிந்த உண்மை.


                                   சரித்திர காலங்களில் யுத்த நாட்களின் போது எதிரிகளின் பாசறைகளில் எதிரி பாசறைகளில் அம்புலியை (இரத்தக்காட்டேறி) ஏவி விட்டு எதிரிகளை கிலிகொள்ளவைத்தான் தமிழன். இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு நிலத்தை (காணியை) வாங்குவதற்கு இந்த அம்புலியை குறித்த நிலத்தில் (காணியில்) இரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த நிலத்தின் (காணியின்) விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.


                   இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள் , அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழி வந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள். தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால் இதன் உண்மையான செயல்முறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அனுமானுஷ்ய சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது






                      சரி இப்போது செய்வினையின் செயல்முறைக்கு வருவோம், ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை - இரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.


                                              இப்போது இரத்தகாட்டேறி என சொல்லப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர் "அம்புலி". இந்த அம்புலி தான் மருவி இரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.


                                  சரி இந்த அம்புலியை (இரத்தகாட்டேறியை) வசியப்படுத்தி செய்வினை செய்யும் வழிமுறையை பார்க்கலாம். இந்த எலுமிச்சை , சிறிது குங்கும், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள். இவை அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து மந்திரத்தினை 324 முறை உருவேற்ற வேண்டும்.



                                   இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324 முறை ஓத வேண்டும். இவற்றை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குங்குகுமத்தை தடவி தீயில் போடவேண்டும். பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும். இப்போது செய்வினை முடிந்தது. அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.


                                          அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.




                  இப்போது இந்த இரத்தகாட்டேறியின் (அம்புலி) எவுவதன் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறியலாம். மேலே குறிப்பிட்ட அந்த செய்வினை மந்திரத்தை 324 முறை உச்சாடனம் செய்யும் போது வளிமண்டலத்தில் உள்ள காற்றலையில் எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது. இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் . இந்த எதிர் அலைகள் காற்றில் கலக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே இருக்கின்ற இரசாயணமும், குங்குமத்தில் இருக்கின்ற இரசாயணமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நெருப்பில் போடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம் எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை காற்றலைகள்.

                          இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது. எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான எதிரலைகள் அந்த பூசணிக்காயின் செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ட்ரான்ஸ்பார்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.


                               இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டுமே? அதுக்கு தான் விபூதி இருக்கிறதே! விபூதியில் இருகின்ற வேதிப் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை அந்த குடும்பத்தின் மீது தெளிக்க அந்த எதிர்மறை அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது. இப்போது வலுவான எதிர்மறை அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் இரத்தகாட்டேறியின் ஆட்டம் ஆரம்பமாகின்றது. இரத்தகாட்டேரி ஏவப்பட்ட குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண் போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் பயம் இருக்கும். அது பேய், பிசாசு, பூதம், நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த எதிமறை அலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த எதிர்மறை அலைகளின் பிரதான வேலை. இந்த எதிர்மறை அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்வுகளை வலுவிழக்க செய்யும், இதன் விளைவாக வாயிலும், மூக்கிலும் ரத்தம் வெளியேறி (இரத்தகாட்டேரி தாக்கி) மரணம் உண்டாகும். இப்போது புரிகிறதா செய்வினை - இரத்தகாட்டேரி ஒருவரை தாக்குவது எப்படி? என்று, இப்போது அடிமனதில் ஒரு கேள்வி? பகலில் அடங்கி இருக்கும் இரத்தகாட்டேரி இரவில் மட்டும் தாக்குவது எப்படி?



                                          இரவு என்றால் இயல்பாகவே அனைவருக்கும் பயம் இருக்கும். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த எதிர்மறை அலைகள் சேரும் போது தான் செய்வினை - இரத்தகாட்டேரியின் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த எதிர்மறை அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்புலியை" - இரத்தகாட்டேரியை இரவில் பயங்கரமாக அலைகின்ற இரத்தகாட்டேரியாக உருவாக்கினான். இது தான் இரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம். இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. செய்வினை செய்யும் மந்த்ரீகர்களே அறியாத சூட்சுமம் இதுவாகும்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க