யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 30 ஏப்ரல், 2014

யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை!



                                                                 மகான்களும் யோகிகளும் ஒருபோதும் மறைவதில்லை, தமது உடலை ஆடைகளை களைவதை போல களைந்து சூக்கும உடலோடு சிவனுடன் ஒன்றி வாழ்கின்றனர். இதனையே திருமூலர் "யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்கிறார். இன்றைய காலகட்டத்தில் பல பேர் தனது பெயருக்கு முன்பு ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, வாலை என்றும், பெயருக்கு பின்னால் சித்தர் என்றும் பட்டங்களை போட்டுக்கொண்டு அலைவதை மக்களை ஏமாற்றி பிழைப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.

                                                                   அவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ வாலையை சித்தி செய்த ஒருவன் ஒரு மஹா சித்தர் ஆகிவிடலாம். நாம் போற்றி வணங்கும் பதினென் சித்தர், நவ நாத சித்தர் தொட்டு கடந்த நூற்றாண்டு தோன்றிய கடைப்பிள்ளை சித்தர் வரை வாலை சித்தி செய்துதான் பல சித்துக்களை உலகத்துக்கு செய்து கட்டினர். வாலை சித்தி பெற்ற தவசீலர்கள் அடையாத பலன்கள் உலகில் எதுவுமில்லை, சகல காரிய சித்தி, ரசம், ரசாயனம், அஞ்சனம், பாதுகா சாதனம், மூலிகை, குளிகை, கட்சம், சரஸ்வதம், முதலிய சித்துகளும் அணிமா, மகிமா, லகிமா, கிரிமா, ஈஸித்வம், வசித்வம், பகுரூப சித்தி, சுரூப சித்தி என்னும் அஷ்ட மஹா சித்தி பெற்று சித்தனுக்கு சித்தனாய் பெரும் புகழ் பெற்று இம்மை இன்பத்தை அனுபவித்து தேவி சயுச்யம் அடைவார் என சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இன்று பெயருக்கு முன் வாலை என்றும் சித்தர் என்றும் போட்டு கொள்ளும் நபர்கள் மேலே சாஸ்திரம் சொல்லும் ஒரு சித்தினையாவது செய்து காட்ட இயலுமா? இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடனேயே தற்கலத்தில் வாழ்ந்த ரமண மகரிஷி, யோகிராம் சுரத் குமார், ஓஷோ, யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, சச்சிதானந்த சுவாமிகள் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் பல சித்திகளை பெற்ற மஹா புருஷர்களும் கூட தன் பெயருக்கு முன்னால் வாலை என்றோ சித்தர் என்றோ அடைமொழிகளை போட்டுக் கொண்டதில்லை என அறியவும். ஏன் சிவனே ஆதிசங்கரராக அவதரித்தும் தன் பெயரை இன்றுவரை ஆதிசங்கரர் என்றே நிலைப்பெற செய்தார் எனவும் அறிக. சித்தர்கள் தமக்காக வாழாதவர்கள், தமக்காக காசு பணம் தேடாதவர்கள், என்றும் இறைவனுக்காகவும், இன்னலுற்ற மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள்.

யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை!

"சித்தியெனில் கண்கட்டு வித்தையல்ல
சில்லறையாம் கருமத்துச் செய்கையல்ல

மித்தையெனும் சூனியமாம் மாயமல்ல

மின்னணுவாம் விஞ்ஞான வியப்புமல்ல

சித்தியெனில் ஈசனுடன் ஒன்றாம்சித்தி

சிவனாவானவனேதான் சித்தன் சித்தன்!"




"தானான காயத்தை நிறுத்த வேண்டும்

சதாகாலம் சுக்கிலத்தைக் கட்டவேண்டும்

வேனான மும்மலத்தை யறுக்க வேண்டும்

வெளியான சிதாபாசம் நீக்கவேண்டும்

பானாக முச்சுடரை யறுக்க வேண்டும்

பாழான துலமதை வெறுக்கவேண்டும்

மானான பராபரியை நிர்த்தனம் செய்து

மானிலத்தில் வாழ்பவனே சித்தனாமே"



"பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு

பிதமுற்ற பாசஇருளைத் துறந்து

மதமற் றெனதியான் மாற்றிவிட்டாங்கே

திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே"




"நாணயமாய் நடப்பவரே ஞானி

யோகியமாய் நடப்பவரே யோகி

சகலமும் தள்ளியவரே சந்நியாசி

ஆண்டவனை அறிந்தவரே ஆண்டி

ஒழுக்கம் உடையவரே துறவி

சிந்தை தெளிந்திருப்பவன் அவனே சித்தன்

செகமெல்லாஞ் சிவமென்று அறிந்தோன் சித்தன்"





வாழ்க சித்தர்கள்!                                                    வணங்குவோம் சித்தர் மலரடி!

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க