எந்திரம் என்பது இயக்குதல்-கருவி, பொறி என பொருள்படும். அதாவது வரைகளும் (கோடுகளும்), பீஜம் (எழுத்துக்கள்) முதலியவற்றை முறைப்படி வரையப்பட்டு வழிபடப்படும் சக்கரம் எந்திரம் எனப்படும். இறைவனது அருட்சக்தி பதிந்து விளங்கி நின்ற ஜாதகர் விழைந்த பொருளையும், வினையையும் இயக்குவதற்கு நிலைகலன் ஆக விளங்குவதால் எந்திரம் என்று பெயர்பெற்றது. மந்திரம் உயிர் போன்றது, எந்திரம் பிராணனை போன்றது, பிம்பம் உடலினை போன்றது. இத்தகைய எந்திரங்கள் பொதுவாக 1.மூல எந்திரம், 2.பூஜா எந்திரம், 3.தாபன எந்திரம், 4.தாரண எந்திரம், 5.ரட்சா எந்திரம், 6.பிரயோக எந்திரம், 7.பிரயோகார்த்த பூசன எந்திரம், 8.சித்திப் பிரத எந்திரம், 9.முத்தொழில் சக்கரம், 10. ஐந்தொழில் சக்கரம், 11.ஐம்பூத சக்கரம், 12.ஏரொளி சக்கரம், 13. சட்கர்ம சக்கரம், 14.அஷ்டகர்ம சக்கரம், 15.அறாதாரா சக்கரம், 16.சிவ சக்கரம், 17.சிவகோணம், 18.சக்தி சக்கரம், 19.சக்திகோணம், 20.கால சக்கரம், 21.ராசி சக்கரம், 22.சர்வதோபத்ர சக்கரம், 23.கசபுட சக்கரம், 24.முக்கோண சக்கரம், 25.சதுரசிர சக்கரம், 26.ஐங்கோண சக்கரம், 27.அறுகோண சக்கரம், 28.எண்கோண சக்கரம், 29.நவகோண சக்கரம், 30.விந்துவட்ட சக்கரம், 31.ரவி சக்கரம், 32.பிறைமதி சக்கரம், 33.நாற்பத்து முக்கோண சக்கரம், 34.சம்மேளன சக்கரம், 35.திருவம்பல சிதம்பர சக்கரம், 36.பதினாறு பத சக்கரம், 37.இருபத்தைந்து பத சக்கரம், 38.முப்பத்தாறு பத சக்கரம், 39.என்பதொரு பத சக்கரம், 40.அறுபத்தி நான்கு பத சக்கரம், முதலான பல சக்கரங்களும் அதுமட்டும் அன்றி ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே சிறப்பான சக்கரங்கள் பல உள்ளன.அவை 41.வாலை சக்கரம், 42.புவனை சக்கரம், 43.திரிபுரை சக்கரம், 44.புவனாபதி சக்கரம்,45.சாம்பவி மண்டல சக்கரம், 46.வயிரவ சக்கரம், 47.நவாக்கரி சக்கரம், 48.நவகிரக சக்கரம், 49.சுதர்சன சக்கரம், 50.விஷ்ணு சக்கரம், 51.நரசிம்ம சக்கரம், 52.சரப சாளுவ சக்கரம், 53.விநாயக சக்கரம், 54.வீரபத்திர சக்கரம், 55.சண்முக சக்கரம், 56.மிருத்யுஞ்சய சக்கரம், 57.நீலகண்ட சக்கரம், 58.சண்டி சக்கரம் 59. துர்க்கை சக்கரம் 60.இராமர் சக்கரம் 61.சீதா சக்கரம் 62.லக்ஷ்மி சக்கரம், 63.அனுமார் சக்கரம், 64.ஸ்ரீ சக்கரம் முதலிய பல சக்கரங்களும் உள்ளன.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் நன்கறிந்து மக்கள் நலம்பெற சுவடிகளாக்கி உலக மக்கள் நலம்பெற வழிவகை செய்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களின் வழியினை மக்களுக்கு பறைசாற்றுவதே இந்த தளம்.
சக்கரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சக்கரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 17 மார்ச், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
-
சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம...