மாந்தி தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாந்தி தோஷம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 11 மே, 2014

மாந்தி இராசியில் இருப்பதினால் உண்டாகும் பலன்கள்




                                         12 இராசிகளிலும் ஜனன ஜாதகத்தில் மாந்தி அமரும்போது உண்டாகும் பலன்களை பொதுவாக காணலாம்.

1.மேஷம் :
                     மேஷத்தில் மாந்தி அமர்ந்திருப்பது ஜாதகரின் புத்தியை கெடுத்துவிடும், தீய வழிகளில் செல்ல துணைபுரியும், இது தீமையை உண்டாக்கும், முரட்டு சுபாவமும், தந்தை சொல்லை மதிக்க மாட்டார்கள்.

2.ரிஷபம் :
                     அதிக கோபத்தை உண்டாக்கும், கண், காது இவைகளில் வியாதிகளை உண்டாக்கும். பேச்சு ஏட்டிக்கு போட்டியாக இருக்கும். பற்களை அடிக்கடி நறநறவென கடிக்கும் பழக்கம் உண்டாகும்.

3.மிதுனம் :
                      வாய், தொண்டை பகுதிகளில் நோய்கள் ஏற்படும். மன கோளாறுகளை உண்டாக்கும், மனதைரியத்தை குறைக்கும், கலைத்துறையினருக்கு நல்லது.

4.கடகம் :
                    சுய ஒழுக்கத்தையும் கெடுக்கும், வாக்கு சுத்தம் இருக்காது, கடன்தொல்லைகளை உண்டாக்கும், எல்லாம் தெரிந்தவர்கள் போல் வேசமிடும் போலிமனிதர்கள் இவர்களே.

5.சிம்மம் :
                    வீண் ஜம்பங்களை உடைய மனிதர்.வயிற்றுக் கோளறுகளையும், நுரையீரல் மற்றும் இருதய கோளாறுகளையும், பெண்களுக்கு யோனியில் நோய்களையும் தரும்.

6.கன்னி :
                    கல்வியில் தடையை கொடுக்கும், தாம்பத்ய வாழ்வு சரியாக இருக்காது, குடும்பத்தாருடன் சண்டை, சச்சரவு பிரிவினைகளை உண்டாக்கும். கெட்ட வழியில் நடத்தையை உண்டாக்கும்.

7.துலாம் :
                    கெட்ட நடத்தை உள்ள பெண்களின் தொடர்பு உண்டாகும், வாழ்வில் ஏற்ற தாழ்வுகளும், கெட்ட பெயரையும் உண்டாக்கும், வீண்கர்வம் இருக்கும்.

8. விருச்சிகம் :
                              வாழ்வே போராட்டமாகும், கடன், நோய், எதிரிகளின் தொல்லைகளை கொடுக்கும்.

9.தனுசு :
                  இந்த இராசியில் மாந்தி அதிக கெடுதலை தருவதில்லை.

10. மகரம் :
                     இந்த இராசியில் மாந்தி நிற்க வாழ்வில் அதிகமான கஷ்டங்களை உண்டாக்கும். கெட்டவழி நடத்தைகளை உண்டாக்கி வாழ்வினை பாழாக்கும்.

11.கும்பம் :
                      மாந்திரீக பதிப்புகளை உண்டாக்கும், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை பதிப்புகளால் வாழ்வில் சீர்கேடு உண்டு.

12.மீனம் :
                   வெளிநாடு சென்று வேலைசெய்யவும், வியாபாரம் செய்யவும் நல்லது, அதிக தனவரவினையும் உண்டாக்கும். பெண்களால் வாழ்வில் துன்பங்கள் வரும்.

               மாந்தி 2,7,12 ம் இடங்களை பார்க்கும் தன்மை உடையது. மாந்தி இருக்கும் வீடும், பார்க்கும் வீடுகளும் பாதகத்தை உண்டாக்கும். இந்த மாந்தியை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் பார்த்தால் கெடுபலன்கள் குறையும், உங்கள் ஜனன ஜாதகத்தில் மாந்தி கெடுபலன்களை உண்டாக்கும் வண்ணம் அமர்ந்திருந்தால் உடனே மாந்திகுரிய பரிகாரங்களை செய்துகொள்ள நல்ல பலன்களை உடனே பெறலாம்.

மாந்தி ஜோதிட பார்வை




                                  ஜோதிடத்தில் மாந்தி கிரகம் சனியின் உபகிரகமாகவும், சனி பகவானின் மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்தி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த ஸ்தானம் பாதக  ஸ்தானமாகும். அந்த ஸ்தான அதிபதியும் பாதகாதிபதி ஆகும். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகும். மாந்தி தான் இருக்கும் வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களை பார்க்கும். மாந்தியின் பார்வை பதியும் வீடுகளும் தோஷத்தை உண்டாக்கும்.
          
                         உதரணமாக மாந்தி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு மனை தோஷம் ஆகும். வீட்டில் தெய்வம் குடியிருக்காது. வீடு களையிழந்து இருக்கும். சுக ஜீவனம் அமையாது. தொடர்ந்து வழக்குகளோ மருத்துவ செலவுகளோ வந்து கொண்டிருக்கும். குடும்பம், தொழில்,அந்தஸ்து முதலியவற்றில் பாதிப்பு இருக்கும்.
           
                    ஐந்தில் மாந்தி இருந்தால் பிரேத சாபம் ஆகும். ஆறில் மாந்தி தீராத கடன் உண்டாகும். எழலில் மாந்தி கணவன் - மனைவி உறவினை பாதிக்கும். ஒன்பதில் மாந்தி கடந்த ஜென்ம பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் தோஷங்களை குறிக்கும்.
          
                   இது மட்டுமல்லாது மாந்தியல் வரும் கெடுபலன்கள் ஏராளம். அதை சொல்ல வார்த்தையில் அடங்காது. மாந்தியல் வரும் கேடுப்பலன்களை நீக்க நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது ஆலயத்திலோ மஹா ம்ருத்யுஞ்ச யாகம், சுதர்சன யாகம் செய்து யாக கும்ப நீரில் ஸ்தானம் செய்வித்தல் நீங்கும். மேலும் நல்லதொரு கனக புஷ்பராக கல்லை அணியவும்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க