பேய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 ஜூன், 2015

இரத்தக்காட்டேறி இரகசியம்



                                   
                                        இரத்தக்காட்டேறி இரகசியம்


                                   இன்றைய உலக மக்களுக்கெல்லாம் சகல கலைகளிலும் முன்னோடியாய் விளங்கியவன் தமிழன், ஆகாய விமானம் என்னவென்றே மனிதன் கண்டுபிடிக்கும் காலத்துக்கு முன்பே இந்திரனின் விமானத்தை பற்றியும், இராவணனின் புஷ்பக விமானத்தை பற்றியும் காவியங்களில் சொன்னவன் தமிழன், "கல் தோன்றி மண் தோன்ற காலத்தே முன்தோன்றிய மூத்த குடி" என்ற பெருமையை கொண்டவன் தமிழன், ஆதிகாலம் தொடக்கதிலிருந்தே சகல கலைகளிலும் பண்டைய தமிழர்கள் இந்த உலகினருக்கு முன்னோடிகளாய் திகழ்ந்தது உலகறிந்த உண்மை.


                                   சரித்திர காலங்களில் யுத்த நாட்களின் போது எதிரிகளின் பாசறைகளில் எதிரி பாசறைகளில் அம்புலியை (இரத்தக்காட்டேறி) ஏவி விட்டு எதிரிகளை கிலிகொள்ளவைத்தான் தமிழன். இப்போது என்ன செய்கிறான்? மலிவு விலையில் ஒரு நிலத்தை (காணியை) வாங்குவதற்கு இந்த அம்புலியை குறித்த நிலத்தில் (காணியில்) இரத்தகாட்டேரியாக அலையவிட்டு அந்த நிலத்தின் (காணியின்) விலையை அடிமாட்டு விலைக்கு வாங்க பயன்படுத்துகிறான்.


                   இந்த செய்வினைகளை விஞ்ஞான செயற்பாடுகளாக ஆரம்ப கால தமிழர்கள் , அதாவது இதன் கண்டுபிடிப்பாளர்களும் அவர்களது வழி வந்த சில சிஷ்ய கோடிகளும் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்கள். தொழில் ரகசியம், தொழில் பாதுகாப்பு போன்ற காரணங்களால் இதன் உண்மையான செயல்முறை ரகசியங்களை பின்வந்த தலைமுறைக்கு சொல்லித்தராத காரணத்தால் பின்னாளில் இது வெறும் அனுமானுஷ்ய சக்திகளின் வேலை என்று ஆகிப்போனது






                      சரி இப்போது செய்வினையின் செயல்முறைக்கு வருவோம், ஒரு செய்வினை உள்ளது, அதை வைத்துவிட்டால் , யாருக்கு செய்வினை வைக்கபடுகிறதோ அவனது வீட்டை சுற்றி பேய் நடமாட்டம் இருக்கும், அவனது வீட்டில் பேய் குடியிருக்கும். இந்த செய்வினையை - இரத்தக்காட்டேறியின் துணைகொண்டு இப்போது செய்துவருகிறார்கள்.


                                              இப்போது இரத்தகாட்டேறி என சொல்லப்பட்ட இந்த செய்வினையின் விஞ்ஞான பெயர் "அம்புலி". இந்த அம்புலி தான் மருவி இரத்தகாட்டேறி ஆகி இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு.


                                  சரி இந்த அம்புலியை (இரத்தகாட்டேறியை) வசியப்படுத்தி செய்வினை செய்யும் வழிமுறையை பார்க்கலாம். இந்த எலுமிச்சை , சிறிது குங்கும், இரண்டு கோழிகள், நான்கைந்து பூசணிக்காய்கள். இவை அத்தனையும் ஒரு அக்கினி குண்டத்தின் முன்வைத்து மந்திரத்தினை 324 முறை உருவேற்ற வேண்டும்.



                                   இந்த உச்சாடனத்தை தொடர்ந்து 324 முறை ஓத வேண்டும். இவற்றை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே எலுமிச்சையை வெட்டி அதில் குங்குகுமத்தை தடவி தீயில் போடவேண்டும். பின்னர் பூசணிக்காயை வெட்டி அதில் ஏற்கனெவே வெட்டப்பட்டு கிடக்கும் கோழியின் இரத்தத்தை பூச வேண்டும். அதன் பின்னர் அந்த பூசணிக்காயை சிறிதாக வெட்டி அதில் விபூதி சேர்த்து அந்த விபூதியை எந்த குடும்பம் செய்வினை செய்ய வந்திருக்கிறதோ அந்த குடும்பத்தின் மேல் தூவ வேண்டும். இப்போது செய்வினை முடிந்தது. அந்த செய்வினை பூசணிக்காயை எதிரியின் வீட்டிலோ, அல்லது தோட்டத்திலோ, அல்லது சம்மந்தப்பட்ட எல்லையிலோ புதைத்து விட்டால் செய்வினை வேலை செய்ய தொடங்கி விடும். குறிப்பிட்ட இடத்தில் பேயின் நடமாட்டம் தொடங்கிவிடும்.


                                          அந்த குறிப்பிட இடத்தில் நாய் உருவில், பெண்ணின் உருவில், கிழவன் உருவில், கிழவி உருவில் பேய் நடமாடுவதை எதிரி வீட்டாரும் அந்த வழியால் கடந்து போவோரும் அல்லது அந்த இடத்துக்கு வருவோரும் காணத் தொடங்கி விடுவார்கள்.




                  இப்போது இந்த இரத்தகாட்டேறியின் (அம்புலி) எவுவதன் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறியலாம். மேலே குறிப்பிட்ட அந்த செய்வினை மந்திரத்தை 324 முறை உச்சாடனம் செய்யும் போது வளிமண்டலத்தில் உள்ள காற்றலையில் எதிர்மறையான அழுத்தம் உண்டாகின்றது. இந்த எதிர் மறை அலைகளுக்கு இவ்வாறு உதாரணம் சொல்லலாம், சில இசைகளை கேட்கும் போது மனதுக்கு அமைதியும், சில இசைகளை கேட்கும் நம்மை அறியாமல் சங்கடம் மற்றும் துக்கம் தோன்றுவது இல்லையா? காரணம் அந்த இசை, காற்றலைகளில் எதிர் மறையான அலைகளை உண்டாக்குவது தான் . இந்த எதிர் அலைகள் காற்றில் கலக்கும் போது எலுமிச்சைகளை வெட்டி குங்குமத்தை தடவும் போது நிகழ்வது இதுதான். எலுமிச்சையில் அடிப்படையிலேயே இருக்கின்ற இரசாயணமும், குங்குமத்தில் இருக்கின்ற இரசாயணமும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நெருப்பில் போடும் போது அந்த வெப்பத்தின் விளைவால் இந்த கூட்டு ரசாயணம் எதிர்மறை அலைகளுடன் கலக்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து உருவாகும் வலுவான எதிர்மறை காற்றலைகள்.

                          இப்போது பூசணிக்காய்க்கு வேலைவருகிறது, பூசணிக்காயில் இருக்கின்ற செல்கள் இந்த எதிர் மறை அலைகளை சிறைவைக்க சரியான சிறைகள். ஆனால் இந்த செல்களை திறப்பதற்கு கோழியின் இரத்தத்தில் இருக்கின்ற ஊக்கி கொஞ்சம் தாராளமாக தேவைப்படுகின்றது. எனவே தான் வெட்டிய கோழி இரத்தம் பூசணிக்காய் மேல் தடவப்படுகிறது. இந்த செயற்பாட்டின் பின்னர் அந்த வலுவான எதிரலைகள் அந்த பூசணிக்காயின் செல்களில் சிறைப்படுகின்றது. இந்த செயற்பாடு மின்சாரத்தை ட்ரான்ஸ்பார்மர்களில் அடைக்கும் செயற்பாட்டை ஒத்தது. அடைபட்டிருக்கும் சிறிய அளவு சக்தியும் வெளியேறுகையில் பெரும் சக்தியாக வெளிவரும்.


                               இப்போது செய்வினை வைப்பவனின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டுமே? அதுக்கு தான் விபூதி இருக்கிறதே! விபூதியில் இருகின்ற வேதிப் பொருள் இந்த எதிர்மறை அலைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்த கூடியது. இதை அந்த குடும்பத்தின் மீது தெளிக்க அந்த எதிர்மறை அலைகளின் தாக்கம் அவர்களை விட்டு அகன்று விடுகிறது. இப்போது வலுவான எதிர்மறை அலைகளை சுமக்கின்ற இந்த பூசணிக்காயை எதிராளியின் வீட்டில் புதைத்ததும் இரத்தகாட்டேறியின் ஆட்டம் ஆரம்பமாகின்றது. இரத்தகாட்டேரி ஏவப்பட்ட குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் நாய் போலவும் , வெள்ளை உடையில் பெண் போலவும், கிழவி போலவும் தெரிய ஆரம்பிக்கின்றது. அது எப்படி என்று பார்க்கலாம், ஒவ்வொரு மனிதனுக்கும் அடிமனதில் பயம் இருக்கும். அது பேய், பிசாசு, பூதம், நாய், அல்லது பாட்டி கதைகளில் வரும் மோகினி, கிழவி எதுவாகவும் இருக்கலாம். இவர்களது அடிமனதில் இருக்கும் இந்த பயங்களை இந்த எதிமறை அலைகள் வெளியே உருவங்களாக நடமாட வைத்துவிடும், அடிமனது உருவங்களை கண்முன் உருவங்களாக கொண்டுவருவது தான் இந்த எதிர்மறை அலைகளின் பிரதான வேலை. இந்த எதிர்மறை அலைகளின் தாக்குதல் வட்டத்தில் அதிகநேரம் இருந்தால் இருதய வால்வுகளை வலுவிழக்க செய்யும், இதன் விளைவாக வாயிலும், மூக்கிலும் ரத்தம் வெளியேறி (இரத்தகாட்டேரி தாக்கி) மரணம் உண்டாகும். இப்போது புரிகிறதா செய்வினை - இரத்தகாட்டேரி ஒருவரை தாக்குவது எப்படி? என்று, இப்போது அடிமனதில் ஒரு கேள்வி? பகலில் அடங்கி இருக்கும் இரத்தகாட்டேரி இரவில் மட்டும் தாக்குவது எப்படி?



                                          இரவு என்றால் இயல்பாகவே அனைவருக்கும் பயம் இருக்கும். அதாவது இரவில் வெளியாகும் மீதேன் வாயுவுடன் இந்த எதிர்மறை அலைகள் சேரும் போது தான் செய்வினை - இரத்தகாட்டேரியின் தாக்கம் வலுப்பெறுகிறது. ஆகவே இந்த எதிர்மறை அலைகளை இரவில் வெளியாகும் மீதேனுடன் தாக்கமடைவது போல் சூத்திரம் வகுத்து இந்த "அம்புலியை" - இரத்தகாட்டேரியை இரவில் பயங்கரமாக அலைகின்ற இரத்தகாட்டேரியாக உருவாக்கினான். இது தான் இரத்தக்காட்டேறியின் விஞ்ஞான சூத்திரம். இவ்வாறு ஒவ்வொரு செய்வினைக்கும் பின்னால் ஒரு விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. செய்வினை செய்யும் மந்த்ரீகர்களே அறியாத சூட்சுமம் இதுவாகும்.

வியாழன், 24 அக்டோபர், 2013

அமானுஷ்யம் வீட்டால் வந்த வேதனை



                             கடந்த இரண்டு மதங்களுக்கு முன்பு  நமது ஸ்ரீ விருட்ச பீடத்துக்கு ஒரு கணவனும் மனைவியும் வந்திருந்தனர் பெயர் திரு/திருமதி. சுந்தரம் (பகத்தூர் கிராமம், சிறுமுகை, கோவை மாவட்டம் ), வந்திருந்த தம்பதிகளுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் அவர்களின் முகத்தில் சந்தோஷ களையே இல்லை. எதோ ஒரு தீராத சிக்கலில் சிக்கி தவிப்பது மட்டும் எனக்கு தெரிந்தது. சரி பூஜையில்  தெய்வத்தின்  வாயிலாகவே தெரிந்து கொள்வோம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் வேறு எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை விறு விறுவென பூஜையில் அமர்ந்தேன். பூஜையில்  அவர்கள் குடியிருக்கும் வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாகவும் அதனால் மன குழப்பமும், வேதனையும், விரக்தியும் அடைந்திருப்பதும் எனக்கு தெரிந்தது. அவர்கள் குடியிருக்கும் இல்லத்துக்கு சென்று பூஜித்து பார்க்க எனக்கு கட்டளையை தெய்வம் சொன்னது .  விஷத்தை அவர்களிடம் சொன்னேன் அவர்களும் உடனே வாருங்கள் எங்கள் இல்லத்துக்கு செல்வோம் என்றனர். உடனே நானும் எனது சகாக்களுடன் புறப்பட்டோம்.
              
                      அவர்கள் இல்லம் களையே இல்லாமல் இருந்தது. வீட்டில் இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு வித அச்சம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.சிறிது நேரத்தில் அந்த தம்பதியினர் சில விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். ஒரு நாள் கூட இந்த வீட்டில் இரவு நிம்மதியாக உறங்க முடியவில்லை. எதோ ஒரு உருவம் காலில் கொலுசு அணிந்துக் கொண்டு நடமாடும் சத்தம் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்பதாகவும், ராட்சச உருவங்கள் அனைவரின் கனவிலும் வந்து பயமுறுத்துவதாகவும் இது போன்ற பாதிப்பு தொடர்ந்து வீடு வாங்கிய நாளில் இருந்து தொடர்ந்து எழு வருடமாக தினம் தினம் நடைபெறும் சம்பவங்கள் என்றும் இதுவரை யாரும் இரவில் நிம்மதியாக உறங்கியதில்லை என்றும், சிறு குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் உடலிலும் முகத்தினை தவிர அறாத புண்கள் உண்டாகியுள்ளது இதுவரை பலப் பல மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனில்லை என்றும் சொல்லிமுடிதனர். இனி நீங்கள் தான் எங்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க சொன்னனர்.
                       அந்த வீட்டின் பூஜை அறையை கேட்டு அங்கு அமர்ந்து என் இஷ்ட தெய்வத்தை பூஜித்து இவர்களின் நல்வாழ்வுக்கு நல்வழி கட்ட வேண்டும் என்று பிராத்தித்து வேண்டினேன். ''இந்த இல்லத்தில் இதற்க்கு முன் வாசித்தவருக்கு ஆகாத சிலர் வைத்த ஏவல் இந்த வீட்டில் இருப்பதாகவும், அது மட்டும் இல்லாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த ஒரு கற்பஸ்திரியின் ஆவியும் அங்கு உலவுவதாகவும்'' என் தெய்வம் எனக்கு சொன்னது. பூஜையில் தெரிந்ததை  அவர்களிடம் சொன்னேன். அவர்களும் பல மாந்திரீகர்களை அழைத்துவந்து பலப்பல பரிகாரங்களை செய்தோம் இலட்சங்கள் கரைந்ததே தவிர பலன் ஒன்றும் இல்லை நீங்கள் தான் இந்த பிரச்சனையில் இருந்து மீள வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடினார்.
                           
                             அந்த தம்பதியிடம் மறுநாள் வாருங்கள் வழி சொல்கிறேன் என்று சொல்லி கிளம்பினேன். ஸ்ரீ விருட்ச பீடம் வந்து இவர்களின் துயரை தீர்க்க நீயே உடனிருந்து வழிநடத்த வேண்டும் என்று என் இஷ்ட தெய்வம் ஸ்ரீ மகா லக்ஷ்மியையும் சித்தர்களையும் வேண்டிக்கொண்டேன். என் தெய்வமும் நீ செய் என்று உத்தரவு தந்தது மகிழ்வுடன் உறங்கச் சென்றேன்.
                           
                     மறுநாள்  அந்த தம்பதியினர் வந்தனர் அவர்களிடம் செய்ய வேண்டிய பூஜை முறைகளை விளக்கினேன். அதன் படி மூன்று நாட்கள் பூஜித்து அவர்களின் வீட்டில் இருந்த ஏவலை போக்கினேன். அவர்களுக்கு 15 நாள் உருவேற்றி ஒரு வராகி எந்திரத்தை உரிய மூலிகையை உடன் வைத்து பிரேம் செய்து அவர்கள் வீட்டில் தலை வாசலுக்கு மேலே பூஜித்து மாட்டினேன்.



பறந்து வந்த எந்திர தகடு :
                                                   

                                                            அன்று எந்திரதகடை மாலை ஐந்து மணிக்கு மாட்டி பூஜித்து கிளம்பினேன். சுமார் இரவு 11 மணி இருக்கும் நானும் எனது சாகவும் வேறு ஒரு வீட்டில் பூஜைக்கு புறப்பட்டு வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். சுந்தரம் செல்போனில் அழைத்தார் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது என்ன நடந்தது என்று விசாரித்தேன். இரவு 10.45 க்கு அனைவரும் உறங்கச் சென்றோம்.கதவுகள் அனைத்தும் தாழிட்டு விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தது. இரவு விளக்கு ஒன்று மட்டும் எரிந்தது. அனைவரும் டிவியில் ஒலிக்கும் படலை கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருந்தோம். உறங்கிய இடம் ஹால் சுமார் 10 அடி துரத்தில் வாசலில் நீங்கள் மாட்டிய வாராகி எந்திரம் எங்கள் அருகில் பறந்து வந்து விழுந்தது. இது எப்படி சத்தியம் எங்களுக்கு பயமாக உள்ளது உடனே நீங்கள் வாருங்கள் என்றார். நான் வேறு ஒரு நபரின் ஏவலை தீர்க்க பயணப்பட்டு சென்று கொண்டிருப்பதை சொன்னேன். எந்த பயமும் பட தேவையில்லை எந்திரத்தை எடுத்து மீண்டும் மாட்டிவிட்டு பயப்படாமல் துங்கும்படி சொன்னேன். பேசி முடித்து 2 நிமிடம் கூட இருக்காது மீண்டும் செல்போனில் அழைத்தார். என்ன நடந்தது என்றேன் எந்திர தகடு மாட்டியஉடன் தகடு சுவற்றில் டமார் டமார் என்று தட்டி மோதிக்கொள்கிறது  எங்களுக்கு பயமாக உள்ளது பயணத்தை முடித்துக் கொண்டு உடனே வரவேண்டும் என்று கெஞ்சினார். எந்த பயமும் வேண்டாம் எல்லாம் வாராகி அம்மன் செயல் பயப்படாது தூங்குங்கள் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் ஒரு 5 நிமிடம் கடந்திருக்கும் மீண்டும் அழைத்தார். ஆன் செய்து பேசினேன் வீட்டில் உள்ள அனைவரின் கைகளும் இழுப்பது போல் உள்ளது உடனே வரவேண்டும் என்று சொல்லி அவரின் குரல் கம்மியது. அவரிடம் சொன்னேன் நான் கொடுத்து வைத்த விபூதியை கொஞ்சம் எடுத்து அனைவரும் பூசிக்கொள்ளும் படி சொன்னேன் அவ்வாறே செய்தார். இனி எந்த தொந்தரவும் உங்களுக்கு வராது நிம்மதியுடன் உறங்குங்கள் காலையில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி போனை வைத்தேன்.
                         

                                 மீண்டும் காலையில் செல்போனில் அழைத்தார். இரவு நடந்த மர்மங்களை விளக்கும் படி கேட்டார். நானும் சொன்னேன். 3 நாள் பூஜையில் உங்கள் வீட்டில் இருந்த ஏவலையும், ஆவியையும்  விரட்டினேன். ஆனாலும் நிறைவேறாத ஆசையுடன் இறந்த அந்த பெண்ணின் ஆவி மீண்டும் உங்கள் வீட்டில் நுழைய முயற்சி செய்தது அதை தடுத்து அடித்துக் கொல்லவே வாராகி எந்திரம் பறந்து வந்து விழுந்தது. ஏனென்றால் அந்த எந்திரத்தின் பின்புறம் ஒரு துஷ்ட சக்திகளை ஒடுக்கும் சக்தி வாய்ந்த மூலிகை வேர் வைத்து பிரேம் செய்திருப்பதை சொன்னேன். சரி மீண்டும் சுவற்றில் மாட்டிய பிறகு தானாக டமார் டமார் என்று அடித்து கொண்டது எதனால் என்றார். எந்திரம் பறந்து வந்து அந்த கெட்ட ஆவியை அடித்து விழுந்ததும் அதில் வைத்திருந்த வேர் அந்த கெட்ட ஆவியை பிடித்துக் கொண்டது அதை அடித்து விரட்டவே  தானாக சுவற்றில் அடித்துக் கொண்டது என்றேன். மீண்டும் ஒரு கேள்வியை கேட்டார் எங்களின் கைகள் பிடித்து இழுப்பது போல் இருந்தது எதனால் என்றார். அந்த எந்திரத்தை மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுங்கள் நான் வாழ்ந்த வீட்டில் நான் இருந்துகொள்கிறேன் என்று அந்த ஆவி உங்களின் கைகளை பிடித்து கெஞ்சியது.அதை அங்கிருந்து உங்களை தொந்தரவு செய்யாமல் விரட்டவே நான் மந்திரித்து கொடுத்து சென்ற விபூதியை அனைவரும் வைத்துக்கொள்ளும்படி சொன்னேன் என்றேன். அப்போது தான் அவருக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. மீண்டும் அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்.....



தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க