தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) என்பது நாம் வழிபடும் தெய்வங்களால் நமக்கு வருவதாகும். நாம் நாம் வழிபடும் தெய்வங்கள் கூட நமக்கு தோஷத்தை தருமா என்ற கேள்வி இங்கு எழலாம். உண்மை தான் நாம் வழிபடும் தெய்வங்களை முறையாக வழிபடாமல் விட்டால் கூட அது தோஷங்களாகும். அத்தகைய தோஷங்களை தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) என்கிறோம்.
தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) என்பது நமது இல்லங்களில் தலைமுறை தலைமுறையாக பூஜித்து வந்த தெய்வ படங்கள், தெய்வ சிலைகள், தெய்வீக எந்திரங்கள் இவற்றை சரிவர பூஜிக்காமல் விடுவது அல்லது அலட்சிய படுத்துவது ஆகிய காரணங்களால் தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) உண்டாகிறது.
தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) ஒரு வீட்டில் உண்டானால் அதனால் அந்த வீட்டில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் வீட்டில் தங்கது, தொடர்ந்து வீண் செலவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். உற்றார் உறவினர் நண்பர்கள் மூலம் செலவுகள், வம்பு, வழக்குகள், விபத்துகள், மருத்துவ செலவுகள், உறவுகள் பகையாக மாறுதல், அக்கம் பக்கம் வீட்டுகாரர்களால் சதா பிரச்சனைகள், கணவன் - மனைவி உறவில் விரிசல், தாம்பத்தியத்தில் வெறுப்பு முதலிய தொல்லைகள் அந்த வீட்டில் உண்டாகும்.
தேவ தோஷம் ( தெய்வ சாபம் ) இருப்பவர்கள் சரியான பரிகாரங்களை செய்து கொள்ளுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்வினை பெறலாம்.