விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 29 ஏப்ரல், 2015

விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை

                             விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை
                                                          நவகிரகங்களால் உண்டாகும் பாவங்களையும், தோஷங்களையும், அவயோகங்களையும், வாழ்வில் தோன்றும் துன்பங்களையும், துயரங்களையும், தரிதிரங்களையும் நீக்கி நவகிரகங்களின் ஆசியை பெற்று வாழ்வில் எந்நேரமும் சுபிட்சமாகவும் வளமுடனும், மன நிம்மதியுடனும், உடல் நலமுடனும் வாழ வைக்கும் ஒரு அபூர்வ பூஜை தான் விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை.

நவகிரக தாந்த்ரீக பூஜை செய்ய தேவையான பொருள்கள் :
1. பஞ்சமுக குத்து விளக்கு ஒன்று,

2. ஐந்து விதமான எண்ணெய் கலவை (நெய், விளக்கெண்ணை , இல்லுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்)

3. ஐந்து திரிகள்,

4. பல வண்ண உதிரி மலர்கள்,

5.ஐந்து விதமான வாசனை உடைய ஊதுபத்திகள்,

6. தூபமிட சாம்பிராணி,

7. வெண்பொங்கல்,

8. சர்க்கரை பொங்கல்,

9. மனைப்பலகை ஒன்று,

ஆரஞ்சு நிற கதர் துணி ஒரு மீட்டர்.


                                           வளர்பிறை ஞாயற்றுக்கிழமை அன்று விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜையை செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பூஜையை முடிக்க வேண்டும். குத்து விளக்கை மனைப்பலகையில் வடக்கு நோக்கி வைத்து எண்ணெய் உற்றி தீபமிடவும். தீபத்தின் முன் ஆரஞ்சு வண்ண துணியை விரித்து வைக்கவும். சாம்பிராணி, ஊதுபத்தி தீபமிடவும். தீபத்தின் முன் வாழை இலை விரித்து சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் படையலிடவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கிழ்கண்ட மந்திரங்களை சொல்லவும். மந்திரங்களை சொல்லும் போது கொஞ்சம் மலர்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஆரஞ்சு வண்ண துணியில் சமர்பிக்கவும். நவகிரகத்துக்கும் இவ்விதமாக பூஜை செய்யவும்.


1. சூரியன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சூர்யாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

2. சந்திரன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சந்த்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

3. செவ்வாய் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ பொளமாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

4. புதன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ புதாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

5. குரு :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ குருவே நமஹ" - 21 முறை சொல்லவும்.

6. சுக்கிரன் :

"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சுக்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

7. சனி :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சனியே நமஹ" - 21 முறை சொல்லவும்.


8. இராகு :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ இராகுவே நமஹ" - 21 முறை சொல்லவும்.


9. கேது :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ கேதுவே நமஹ" - 21 முறை சொல்லவும்.



                               விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை முடிந்தபின் பிரசாதத்தை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மட்டுமே சாப்பிடவேண்டும். வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜை செய்த மலர்களை ஆரஞ்சு வண்ண துணியில் மூட்டை போல் கட்டி பூஜை அறையில் வைத்து கொள்ளவும். நவகிரக ஆசிகள் எப்போதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் துணை நிற்கும். தாந்த்ரீக பூஜைகள் செய்யும் முன் முன்பயிர்ச்சிகள் (ஒய்வு பயிற்சி, முத்திரை பயிற்சி, மூச்சு பயிற்சி) கட்டாயம் செய்ய வேண்டும்.





தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க