ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் நன்கறிந்து மக்கள் நலம்பெற சுவடிகளாக்கி உலக மக்கள் நலம்பெற வழிவகை செய்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களின் வழியினை மக்களுக்கு பறைசாற்றுவதே இந்த தளம்.
திங்கள், 31 அக்டோபர், 2022
வியாழன், 18 ஆகஸ்ட், 2022
பரிகார மர்மம்
ஜாதகத்தில் தோஷத்தை தரும் கிரகம் நிற்கும் இராசிகளை வைத்துதான் அதற்கான பரிகாரங்களை செய்ய வேண்டும். அத்தகைய பரிகார மர்மம் முன்னோர்கள் மறைத்து வைத்திருந்தனர். அந்த பரிகார மர்மம் இரகசியத்தை இங்கே விரிவாக பார்போம்.
நெருப்பு இராசிகள் பரிகார மர்மம் - மேஷம், சிம்மம், தனுசு.
நில இராசிகள் பரிகார மர்மம் - ரிஷபம், கன்னி, மகரம்.
காற்று இராசிகள் பரிகார மர்மம் - மிதுனம், துலாம், கும்பம்.
நீர் இராசிகள் பரிகார மர்மம் - கடகம், விருட்சிகம், மீனம்.
நில இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்கு உண்டான அதிஷ்ட கற்களை அணிந்து கொண்டால் தோஷம் நீங்கும்.
காற்று இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்குரிய மந்திர ஜெபம் பூஜைகள் செய்ய தோஷம் நீங்கும்.
நெருப்பு இராசிகள் பரிகார மர்மம் - மேஷம், சிம்மம், தனுசு.
நில இராசிகள் பரிகார மர்மம் - ரிஷபம், கன்னி, மகரம்.
காற்று இராசிகள் பரிகார மர்மம் - மிதுனம், துலாம், கும்பம்.
நீர் இராசிகள் பரிகார மர்மம் - கடகம், விருட்சிகம், மீனம்.
நில இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்கு உண்டான அதிஷ்ட கற்களை அணிந்து கொண்டால் தோஷம் நீங்கும்.
காற்று இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அந்த கிரகத்திற்குரிய மந்திர ஜெபம் பூஜைகள் செய்ய தோஷம் நீங்கும்.
நீர் இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அக்கிரகத்துக்குறிய பொருட்களை தானம் செய்யலாம், மீன்களுக்கு இறையாக நீரில் இடலாம்.
நெருப்பு இராசி பரிகார மர்மம் - இராசியில் தோஷம் செய்யும் கிரகம் இருந்தால் அக்கிரகத்திற்குரிய தீபாராதனை, யாகபூஜைகள் செய்யலாம்.
இவ்விதம் தோஷம் செய்யும் கிரகம் இருக்கும் இராசிக்கு உண்டான இராசி (பரிகார மர்மம்) பரிகாரங்களை, நீங்கள் பிறந்த நட்சத்திர நாளிலோ, தோஷம் தரும் கிரகத்தின் நாளிலோ தங்களுக்குண்டான இராசி பரிகார மர்மம் சொல்லிய பரிகாரங்களை செய்ய உடனே தோஷம் நீங்கும்.
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் அவதார வரலாறு
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் |
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலய வரலாறு பற்றி இந்த பதிவினில் நாம் விளக்கமாக காணவிருக்கிறோம். தமிழகத்தில் தென்கயிலை என்று போற்றுதலுக்கு உரிய மேற்கு தொடர்ச்சி மலையில் எண்ணிலடங்கா புகழ்பெற்ற ஆலயங்களும், சித்தர்கள் தவமியற்றிய மலைகளும், குகைகளும் அமைந்துள்ளதனை அனைவரும் அறிவோம். மேற்கு தொடர்ச்சி மலையாம் தென்கைலாயத்தில் பூண்டி வெள்ளியங்கிரி, பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம், பழநி பாலதண்டாயுதபாணி ஆலயம், மருதமலை முருகர் ஆலயம், பாலமலை அரங்கநாதர் ஆலயம், காரமடை அரங்கநாதர் ஆலயம், ஓதிமலை முருகர் ஆலயம், பண்ணாரி மாரியம்மன் ஆலயம் போன்ற அருட்பொதிந்த ஆலயங்கள் ஏராளம் ஏராளம்.
தென்கயிலை நெல்லிமலை தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் :
நெல்லிமலை |
மேற்கண்டவகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அற்புத ஆலயம் தான் தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம். தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் வரலாறு பற்றி நாம் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றால் சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பான பஞ்சபாண்டவர்களின் காலத்துக்கு பின்நோக்கி நாம் செல்ல வேண்டும்.
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம் தென்கயிலை என்று போற்றப்படும் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரல் நெல்லிமலையில் அடிவார வனத்தினில் அமைந்துள்ளது. நிலவளமும், நீர்வளமும் அமைந்த மலைச்சாரல் தான் நெல்லிமலை. வற்றாத ஜீவநதியாம் பவானி ஆறு பவனி வரும் பகுதியாகும். யானை, கரடி, சிறுத்தை, காட்டெருமை, மான் போன்ற பலதரப்பட்ட விலங்குகளும், பறவைகளும் வாழும் அடர்ந்தகாடு நெல்லிமலை ஆகும்.
அத்தகைய நெல்லிமலையின் அடிவாரத்தில் நீர்வளத்தால் தென்னை மற்றும் பாக்கு தோப்புகளும், வாழை தோட்டங்களும், காய்கறி விவசாயமும் செழித்து விளங்கும் இயற்கை எழில் கொஞ்சும் பசுமை தாயகமம் நெல்லிமலை சாரல். இத்தகைய இயற்கை சூழலில் வனத்தினில் சுமார் 5500 வருடங்களுக்கு முன்பு வந்தமர்ந்து கோயில் கொண்டு அருளாட்சி செய்பவள் தான் அன்னை தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன்.
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் - பவானி நதி தீர்த்தம் :
பவானி நதி |
"சந்துவரு வாணி நீரினும் தீன்தண்
சாயலன் மன்ற தானே" - பதிற்றுபத்து.
வாணி என்றால் கலைமகள் (சரஸ்வதி), வாணி நதி என்று பதிற்றுபத்து சிறப்பிக்கும் நதியானது பவனி வருவதால் பவானி என்று பெயர் பெற்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற பவானி நதி தீர்த்தமானது தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயத்தின் அருகில் தெற்கில் இருந்து வடக்கு திசையை நோக்கி பாய்கிறது. புண்ணிய தீர்த்தமான தெற்கிலிருந்து வடக்கு திசையில் ஓடுவது தனி சிறப்பு கொண்டதாகும்.
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் - ஆரவல்லி சூரவல்லி இராஜ்யமும் :
ஆரவல்லி சூரவல்லி இராஜ்யம் |
சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்ச பாண்டவர் வாழ்ந்த காலத்தில் இன்றைய கர்நாடகா - தமிழ்நாடு எல்லையில் உள்ள கொள்ளேகால் தாலூக்காவுக்கும், பவானி தாலூக்காவுக்கும் எல்லையில் அமைந்துள்ள பாலாறு கரையில் உள்ள நல்லூர் என்ற பகுதி முதல் கொங்கு மண்டலத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் தென்கயிலை எனும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மேட்டுப்பாளையம் வட்டம், தேக்கம்பட்டி நெல்லி மலை பகுதிகளை எல்லாம் கோட்டை கட்டி, கொடி கட்டி ஆண்டுவந்தனர் ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி, பகவதி என்ற பெயர் கொண்ட ஏழு சகோதரிகள்.
இவர்கள் எழுவரில் ஆரவல்லி அரசியாகவும், சூரவல்லி மந்திரியாகவும் மற்ற ஐவரும் அமைச்சர்களாகவும் கொண்டு இராஜ்யத்தை ஆண்டு வந்தார்கள். இவர்களின் ஆட்சியில் ஆண்கள் அனைவரையும் அடிமைப்படுத்தி பெண்களே ஆளும் அல்லி இராஜ்ஜியத்தை நடத்தி வந்தனர்.
அரவல்லிக்கு பல்வரிசை (அலங்காரவல்லி) என்ற பேரழகு பொருந்திய மகள் ஒருவள் இருந்தாள். பல்வரிசை எனும் அலங்காரவல்லியின் பேரழகிற்கும், கவர்ச்சிக்கும், நளினத்திற்கும் மயங்காத ஆடவர்களோ, இளவரசர்களோ, அரசர்களோ உலகில் கிடையாது. அப்பேர்ப்பட்ட அரவல்லியின் மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லிக்கு சுயம்வரம் (திருமணம்) செய்வது என்பது சர்வ சாதாரணமா என்ன?
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நான் பதிவு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் எழுவரும் காளியின் அருள்பெற்று சாகாவரம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காளியின் அருளோடு மந்திரம், தந்திரம், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் என்ற மந்திர தந்திர வித்தைகளில் உலகில் கைதேர்ந்தவர்களாக விளங்கியவர்கள். இவர்களின் மந்திர, தந்திர வித்தைகளை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தவர்கள் அந்நாள் வரையில் உலகில் யாரும் இல்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை.
மீண்டும் விஷயத்திற்கு வருவோம். பேரழகியான ஆரவல்லி மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியை திருமணம் செய்ய விரும்பும் ஆடவர்கள் யாராயினும் ஆரவல்லி, சூரவல்லி வைக்கும் போட்டிகளில் வெல்ல வேண்டும். இவர்களின் மந்திர தந்திர வித்தைகளை உலகில் எந்த ஆடவர்களாலும், அரசர்களாலும், இளவரசர்களாலும் ஜெயிக்க இயலாது. இவர்கள் வைக்கும் போட்டிகளில் தோல்வியடைந்தாலோ அல்லது போட்டிகளுக்கு பயந்து இடையில் விலகினாலோ ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளுக்கு அடிமையாகி பாதாள சிறையில் அடைக்கப்படுவதோடு, கொத்தடிமைகளாக பணிபுரிய வேண்டும்.
பஞ்சபாண்டவர் - பீமன் வருகை :
பீமன் |
ஆரவல்லி சூரவல்லியின் அல்லி இராஜ்ஜிய அட்டகாசங்கள் பஞ்ச பாண்டவர்களின் அஸ்தினபுர அரண்மனைக்கு எட்டியது. இவர்களின் அராஜகங்களை கேள்வியுற்ற பீமன் கொதித்தெழுந்தான். பீமன் எந்த போரிலும் தோல்வியே தழுவாத மாவீரன். பீமன் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் கொட்டத்தை அடக்கியே தீருவேன் என்று சபதமேற்று ஆரவல்லி சூரவல்லி அரண்மனையை நோக்கி புறப்பட்டான்.
ஆரவல்லி சூரவல்லி அரண்மனையை அடைந்து அவர்கள் வைக்கும் போட்டிகளில் கலந்துகொண்டான் பீமன். ஆரவல்லி சூரவல்லி வைக்கும் போட்டிகள் மந்திர தந்திர வழியில் நடத்தப்படும் சூழ்ச்சிகள், நேர்மையான போட்டிகள் இல்லை என்று அறியாத பீமன் அவர்களின் போட்டிகளை எதிர்கொண்டான். அந்த போட்டிகளில் இரண்டு போட்டிகளில் பீமன் வெற்றிகண்டான். இரண்டு போட்டிகளில் பீமன் வென்றதை பார்த்து கலக்கம் கொண்ட ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் மூன்றாவது போட்டியில் மந்திர தந்திர வித்தைகளை பயன்படுத்தி பீமனை தோல்வியடைய செய்தனர். பீமன் பாதாள சிறையில் அடைக்கப்பட்டார்.
தந்திரத்தை சூழ்ச்சியை சூழ்ச்சியால் தான் வெல்ல வேண்டும் என்று பீமன் பாதாள சிறையில் இருந்து தப்பி தனது இராஜ்ஜியமான அஸ்தினாபுரம் வந்தடைந்தார். இதனை அறிந்த அரவல்லி சூரவல்லி அஸ்த்தினாபுரம் அரண்மனை சென்று அஸ்தினாபுர அரசனான தர்மனிடம் வழக்கு தொடுத்தனர். போட்டியில் தோல்வியுற்று கைதியாகி சிறைப்பட்ட பீமன், சிறையில் இருந்து தப்பியோடி அஸ்த்தினாபுரம் வந்தது எவ்வகையில் நியாயம் என்று வாதிட்டனர். தர்மம் தவறாத தர்ம மகாராஜா மீண்டும் பீமனை ஆரவல்லி சூரவல்லி உடன் கைதியாக அனுப்பிவைத்தார். பீமன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான்.
கிருஷ்ண பரமாத்மா - பஞ்ச பாண்டவர் ஆலோசனை :
கிருஷ்ண பரமாத்மா - பஞ்ச பாண்டவர் ஆலோசனை |
பீமன் சிறைப்பட்ட செய்தியை தருமர் மூலமாக அறிந்த கிருஷ்ண பரமாத்மா பீமனை மீட்கும் பொருட்டு பஞ்சபாண்டவர்களில் தர்மர், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வருடன் கலந்தாலோசித்தார். இவர்களில் சகாதேவன் சகல ஜோதிட சாஸ்திர வித்வான் ஆவார்.
சகாதேவா பீமனை மீட்க என்ன வழி இருக்கிறதென்று உனது ஜோதிட சாஸ்திரம் மூலம் அறிந்து சொல் என்று கட்டளையிட்டார் கிருஷ்ண பரமாத்மா! ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் காளியின் அருள் பெற்றவர்கள். காளியின் அருளால் மந்திர தந்திர வித்தைகளை கற்று ஈடு இணையற்றவர்கள். காளி தேவியினால் சாகாவரமும் பெற்று வாழ்பவர்கள். இவர்களை ஜெயித்து பீமனை காக்க வேண்டும் என்றால் அதற்கு என்ன வழி இருக்கிறது என்பதனை சகாதேவர் ஜோதிட சாஸ்திரம் மூலம் ஆராய்ந்து சொல்லலானார்.
அவரது ஜோதிட சாஸ்திரத்தில் ஆரவல்லி மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியின் கணவனாக வருபவரது பெயர் அல்லிமுத்து என்று ஜோதிட சாஸ்திரம் குறிப்பிட்டது. இந்த அல்லிமுத்து பஞ்ச பாண்டவர்களின் தங்கை மகன் பெயர். உடனே தர்மர் தனது தங்கையின் இல்லம் நோக்கி விரைந்தார். உனது மகன் அல்லிமுத்துவால் தான் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளை வெல்ல முடியும் எனவே அல்லிமுத்துவை உடனே ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் அல்லி இராஜ்ஜியத்துக்கு அனுப்பி வைக்க வேண்டினார். முதலில் அல்லிமுத்துவை அனுப்ப ஒப்புக்கொள்ளாத தங்கை பின் தருமரும், அல்லிமுத்துவும் சொன்ன வார்த்தைகளை ஏற்று அல்லிமுத்துவை ஆரவல்லி சூரவல்லி இராஜ்ஜியத்துக்கு அனுப்பி வைத்தாள்.
ஆரவல்லி சூரவல்லி இராஜ்ஜியம் - அல்லிமுத்து வருகை :
ஆரவல்லி சூரவல்லி |
ஆரவல்லி சூரவல்லியின் அல்லி இராஜ்ஜியம் வந்தடைந்தார் அல்லிமுத்து. நெல்லிமலை சாரல் வந்தடைந்த அல்லிமுத்து பவானி நதி தீர்த்தமாடி தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் சன்னதி வந்து ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் மந்திர தந்திர வித்தைகளை அடக்கி அவர்களை வெல்ல அருள்புரியுமாறு தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மனை மனமுருக வேண்டி ஆசிபெற்றார்.
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் அருளைப்பெற்று பவானி நதியை கடந்து நெல்லிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆரவல்லி சூரவல்லி கோட்டையை அடைந்தான். தேவியின் அருளால் ஆரவல்லி சூரவல்லி வைத்த மூன்று போட்டிகளிலும் அல்லிமுத்து வென்றான். அரவல்லியின் மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியையும் கரம்பிடித்தான். ஆரவல்லி சூரவல்லியால் அடிமை சிறைப்பட்டிருந்த பீமன் மற்றும் அனைவரையும் விடுதலை செய்தான்.பீமனை உடனே பாண்டவர்களின் அசத்தினாபுரம் அரண்மனை செல்ல பணித்தான். தான் பல்வரிசை எனும் அலங்காரவல்லியுடன் நாளை வருவதாகவும் அதற்க்கு உண்டான வரவேற்பு ஏற்பாடுகளை செயுமாறு சொல்லி பீமனை அனுப்பிவைத்தான். அரவல்லியின் மகளை கரம்பிடித்து, அரவல்லியின் இராஜ்ஜியத்தின் அரசனாக ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளிடம் சாசனம் எழுதி பெற்றுக்கொண்டான்.
ஆரவல்லி சூரவல்லி சூழ்ச்சி - அல்லிமுத்து மரணம் :
ஆரவல்லி சூரவல்லி |
ஆரவல்லி சூரவல்லி இராஜ்ஜியத்தை கைப்பற்றி, ஆரவல்லி மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியை கரம்பிடித்து அல்லிமுத்து பாண்டவர் இராஜ்ஜியமான அஸ்த்தினாபுரம் புறப்பட்டான். அல்லிமுத்துவிடம் தோல்வி அடைந்ததால் ஆத்திரம் கொண்ட ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் அல்லிமுத்துவை பழிவாங்க திட்டம் தீட்டினார்கள். எலுமிச்சம் கனியில் மந்திர உருவேற்றியும், தின்பண்டங்களில் நாகபாஷாணங்களை தடவியும் அல்லிமுத்துவுக்கு உண்ண கொடுத்து அல்லிமுத்துவை கொல்ல சதி செய்தனர். மந்திர உருவேற்றிய எலுமிச்சம் கனியையும், நாகபாஷாணம் கலந்த தின்பண்டங்களையும் ஆரவல்லி தனது மகள் பல்வரிசை எனும் அலங்காரவல்லியிடம் கொடுத்து செல்லும் வழியில் பசி தாகம் உண்டானால் அல்லிமுத்துவுக்கு இவைகளை உண்ண தரும்படி தனது மகளிடம் பாசமாக பேசி நல்லவர்கள் போல நாடகமாடினார்கள் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள்.
ஆரவல்லி சூரவல்லி செய்த சூழிச்சி பல்வரிசை எனும் அலங்காரவல்லிக்கு தெரிந்திருக்கவில்லை. அஸ்தினாபுரம் செல்லும் வழியில் களைப்பாற இரத்தத்தை நிறுத்தி இளைப்பாறிய வேளையில், அல்லிமுத்துவுக்கு விஷம் கலந்த தின்பண்டங்களையும், அருந்துவதற்கு எலுமிச்சை பழ இரசத்தையும் பல்வரிசை எனும் அலங்காரவல்லி கொடுத்தாள். உண்ட சில நிமிடங்களில் அல்லிமுத்துவின் உயிர் பிரிந்தது.
அபிமன்யு வருகையும் - அல்லிமுத்து உயர்பெற்றதும் :
அபிமன்யு |
அல்லிமுத்துவின் மரண செய்தி அஸ்த்தினாபுர பாண்டவர்களின் இராஜ்ஜியத்துக்கு எட்டியது. இவர்களில் அர்ச்சுனனின் மகன் அபிமன்யு, அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வர ஆயத்தமானான். நெல்லிமலை விரைந்தான். தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம் வந்து அல்லிமுத்துவின் உயிரை மீட்க உபயம் சொல்லி அருள வேண்டினான்.
அன்னையின் அருளாசியோடு விண்ணுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு உடலுடன் சேர்த்து அல்லிமுத்துவை உயிர்பெற செய்தான்.
ஆரவல்லி சூரவல்லியுடன் போர் :
ஆரவல்லி சூரவல்லியுடன் போர் |
உயிர் மீண்ட அல்லிமுத்துவும், அவர்களால் சிறைப்பட்ட பீமனும் அவர்களுடன் அர்ச்சுனனும், அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவும் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் சூழ்ச்சிகளுக்கும், மந்திர தந்திர வித்தைகளுக்கும் இனி உலகில் யாரும் பலியாக கூடாது, அவர்களின் ஆணவத்தை அடக்கி ஒடுக்கி இராஜ்ஜியத்தை விட்டே விரட்டவேண்டும் என்று சபதமேற்றனர்.
கிருஷ்ண பரமாத்மா மற்றும் சகாதேவரின் சாஸ்த்திர ஆலோசனைகளை சிரமேற்று ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகளுடன் போரிட புறப்பட்டனர். ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் தங்களது மந்திர தந்திரங்களால் புலிகளையும், கரடிகளையும் சூனியத்தால் உருவாக்கி போரிட வைத்தனர். மகா பலசாலியான பீமனும், அஸ்திரவித்தைகளில் கைதேர்ந்தவனான அர்ச்சுனனும், சக்ராயுத போர்முறையில் வல்லவனான அபிமன்யுவும், அல்லிமுத்துவும் இவர்களின் மந்திர தந்திர சூன்ய சக்திகளை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினர்.
பின் காளியின் அருள்பெற்றவர்களை வெல்ல காளியே அருள் தர முடியும் என்று எண்ணி தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம் நாடி வனபத்ரகாளி அம்மனை வேண்டி நின்றனர். மது கைடபர்களை அழித்தவளே! மகிஷனை கொன்றவளே! தூம்ரலோசனை நசுக்கியவளே! சண்ட - முண்ட அசுரர்களை வதைத்தவளே! ரக்த பீஜனை ஒழித்தவளே! சும்ப, நிசும்ப, சம்புவை அழித்தவளே! உன்னால் அருள்பெற்று உலகை மாய மந்திர தந்திர சூழ்ச்சிகளால் வதைக்கும் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் ஆணவத்தை அடக்கி அவர்களை விரட்ட நீயே அருள்தர வேண்டும் என்று வேண்டினர். உலகில் அசுரர்களை எல்லாம் அழித்து ஒழித்து பக்தர்களை காக்கும் மஹாசக்தியான தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன், உலக உயிர்களை காக்கும் பொருட்டும், தனது சக்தியால் உருவாகி அசுரர்களாக மாறி உலக உயிர்களை வதைக்கும் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளின் கொட்டத்தை அடக்க அருள்புரிந்து ஆசியும் தந்தாள்.
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆசிபெற்ற பீமன், அர்ச்சுனன், அபிமன்யு, அல்லிமுத்து நால்வரும் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றனர். அப்போரில் அம்மன் அருளிய ஆயுதத்தால் சாகாவரம் பெற்ற ஆரவல்லி சூரவல்லியும் மாண்டனர். வீரவல்லியும், பகவதியும் அன்னையிடம் சரணாகதி அடைந்து உயிர்பிச்சை அளிக்கும்படி மன்றாடினர். அவர்கள் இருவருக்கும் உபயம் அருளிய தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் மீண்டும் இத்தகைய அக்கிரமங்களை செய்யாமல் தான் அருளிய மந்திர தந்திர சூனிய வித்தைகளை நீங்கள் மக்களின் நல்வாழ்வுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இவ்விடம் விட்டு வேறு தேசம் புகுந்து என்னுடைய பக்தர்களை காக்கும் பணியை செய்ய பணித்தாள்.
உயிர் தப்பிய வீரவல்லி கொல்லிமலையில் தஞ்சம் புகுந்தாள், எனவே தான் கொல்லிமலையில் மாந்திரீகம் வளர்ந்தது. பகவதி மலையாள தேசம் சென்று வாழலானாள், எனவே தான் மலையாள தேசமான கேரளாவில் மாந்திரீக சாஸ்திரம் வளர்ந்தது.
உலகிலேயே மந்திர தந்திர சூனிய சாஸ்திரங்களின் பிறப்பிடமாக விளங்குவது தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் ஆலயம் அமைந்துள்ள நெல்லிமலை பகுதிகளாகும். காளியே மந்திர தந்திர சூனிய வித்தைகளின் நாயகி ஆகும். காளியே துஷ்ட மாத்திர தந்திர சூனிய விதைகளான செய்வினை, ஏவல், பில்லி, சூனிய வித்தைகளை போக்கி அருளும் தேவியும் ஆவாள்.
இத்தகைய ஆற்றல் வாய்ந்த ஸ்தலமான தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மனின் அனுகிரகம் பெற்று சிறுவயது முதல் தேவியின் மீது பற்றுக்கொண்டு இன்று காளியின் புத்திரன் என்று எல்லோரும் போற்றும் சுவாமிகள், தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் கோவில் நுழைவு வாயில் அருகில் "காளி மந்திர ஆலயம்" என்ற பெயரில் ஆசிரமம் அமைத்து ஜோதிடம், பிரசன்ன ஜோதிடம், சித்த மருத்துவம், அஷ்ட கர்ம மாந்திரீகம் ( வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆகர்ஷணம், பேதனம், வித்வேஷணம், மாரணம்), சாபங்கள், தோஷங்கள் நீங்க பரிகார பூஜைகள், யாக பூஜைகள் முதலிய கலைகள் மூலம் உங்கள் வாழ்வில் தோன்றும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வினை உண்டாக்கி தருகிறார். தொடர்புக்கு : காளி மந்திர ஆலயம். செல் : 99440 99980, 85260 74891.
ஆரவல்லி சூரவல்லி சூனியம் புரியாத மர்மங்கள் :
1.ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் நீராட தங்களது கோட்டையில் இருந்து பவானி நதிக்கு வருவார்களாம். அவர்கள் நீராடும் பகுதிக்கு எந்த ஆண்களும் அப்பகுதிக்கு வரமுடியாத படி சூனியம் செய்து வைத்திருந்தார்களாம். அதனை மீறி நதியில் இறங்கி நீராடினால் அந்த சூனியத்தில் சிக்கி இறந்து போய்விடுவார்கள் என்ற செவிவழி செய்திகளும் இங்கு வாழும் மக்களால் சொல்லப்படுகிறது. 5500 வருடங்களை கடந்த பின்பும் இத்தகைய மர்மமான மரணங்கள் இன்றுவரை தொடர்வது மர்மமே.
2. ஆரவல்லி சூரவல்லி சகோதரிகள் வாழ்ந்த கோட்டை, வேறு யாரும் நுழைய முடியாதபடி பலவித சூனியங்கள் ஆரவல்லி சூரவல்லி சகோதரிகளால் செய்து வைக்கப்பட்டிருந்ததாம். அந்த கோட்டை 5500 வருடங்களாக முழுவதும் அழிந்து போகும் நிலை வரையிலும் அந்த கோட்டையின் உள்ளே நுழைந்தவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்ற செவிவழி செய்திகளும் சொல்லப்பட்டு வருகின்றன. கடந்த ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன் ஆரவல்லி சூரவல்லி கோட்டை முற்றிலும் சிதைந்து போய் சுற்று சுவர்கள் மட்டும் இருந்தது. விவசாயி ஒருவர் அந்த சுற்று சுவரை அகற்ற ஒரு டிராக்ட்ர் வைத்து சுற்று சுவரை இடித்து டிரக்ட்டரில் நிரப்பி வர ஓட்டுனரை பணித்தார். அந்த பணியை செய்ய கோட்டைக்குள் ட்ரக்ட்ர் உடன் சென்ற ஓட்டுநர் அந்த இடத்திலேயே மர்மமான முறையில் இறந்து போனார். அந்த ட்ராக்ட்டரை கூட பதினைந்து நாட்கள் கழித்தே அந்த இடத்தில இருந்து மீட்டனர்.
பகாசுரன் கதை :
பகாசுரன் |
பஞ்ச பாண்டவர்கள் ஆரண்ய (வன) வாசத்தில் இருந்த சமையம், அவர்கள் கானகத்தில் நெல்லிமலை பகுதியில் ஒரு சிறிய கிராமத்தில் தங்கியிருந்தனர். அந்த கிராம மக்களிடம் யாசகம் பெற்று பாண்டவர்கள் வாழ்ந்து வந்தனர். ஒருநாள் இரவு பொழுதில் பாண்டவர்கள் தங்கியிருந்த வீட்டில் திரவுபதி மற்றும் பாண்டவர்கள் உரையாடி கொண்டிருந்த வேளையில், அந்த வீட்டுக்கு வெளியே ஒரு அந்தணர் அழும் குரல் பாண்டவர்களுக்கு கேட்டு அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
துக்கத்துடன் அழுதுகொண்டிருந்த அந்தணரை பார்த்து திரவுபதி, ஐயா உங்களுக்கு என்ன துன்பம் நேர்ந்தது? ஏன் அழுதுகொண்டு உள்ளீர்கள் என்று கேட்டாள். அந்தணரோ! தாயே நெல்லிமலையின் மறுபகுதியில் உள்ள நீலமலை என்னும் நீலகிரி மலையில் பகாசுரன் என்ற அரக்கன் கோட்டை கட்டி வாழ்ந்து வருகிறான். பகாசுரன் மனித இரத்தத்தை உண்ணும் வழக்கம் கொண்டவன். அவனுக்கு (பகாசுரன்) பசி எடுக்கும் போதெல்லாம் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து அகப்பட்ட மனிதர்கள், ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட அனைத்தையும் விழுங்கிவிடுவான். பகாசுரனை கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினர். பகாசுரன் ஊருக்குள் வந்து உயிர்களை அழிப்பதை நிறுத்த அருகில் உள்ள அனைத்து கிராம மக்கள் ஒன்றுகூடி பகாசுரன் உடன் ஒப்பந்தம் செய்தனர். அந்த ஒப்பந்தத்தின் படி தினமும் ஒரு வீட்டில் இருந்து ஒரு ஆண் பகாசுரனுக்கு ஒருவண்டி உணவும், ஒரு ஜோடி எருமை மாடுகளும் பகாசுரன் இருப்பிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்படி கொண்டு சென்ற உணவு, எருமைமாடுகள், கொண்டு சென்ற ஆணையும் சேர்த்து விழுங்கிவிடுவான். அந்த முறையில் நாளை நான் பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்ல வேண்டும். அதனை நினைத்து தான் அழுகிறேன் என்று கூறினான்.
கவலைப்பட வேண்டாம் அந்தணரே! நாளை உனக்கு பதிலாக என் மகன் பீமன் செல்வன் என்று சொல்லி அந்தணரை சமாதானம் செய்தாள். மறுநாள் பீமன் உணவு வண்டியுடன் பகாசுரன் கோட்டை நோக்கி பயணப்பட்டான். பகாசுரன் கோட்டையை அடைந்து வாசலில் நின்று, பகாசுர வெளியே வா என்று உரக்க கத்தினான். பகாசுரன் கோட்டையை விட்டு வெளியே வந்தவுடன் அவன் கண்முன்பே கொண்டுவந்த உணவினை பீமன் உண்ண தொடங்கினான். இதனை பார்த்து கொதித்த பகாசுரன் ஏய்! முட்டாள் மனிதனே என்னை பற்றி தெரிந்தும் எனக்கு கொண்டு வந்த உணவை என் கண் முன்னாலே உண்கிறாய். இதோ உன்னை என்ன செய்கிறேன் பார் என்று சொல்லி, அருகினில் இருந்த பெரிய மரத்தினை பிடுங்கி பீமனை அடித்தான். உணவினை உண்டு கொண்டு இருந்த பீமன் பகாசுரன் மரத்தால் அடிக்க வந்ததனை தனது இடது கையால் தடுத்தான். பின் பீமனும் மரங்களை பிடுங்கி பகாசுரனை தாக்கினான். இவர்கள் இருவரும் மோதியதில் அந்த காட்டினில் இருந்த அத்தனை மரங்களும் ஒன்றும் இல்லாது போனது. நீண்ட நேரம் நடந்த சண்டையின் முடிவில் பீமன் பகாசுரனை பூமியில் தள்ளி தனது கால் முட்டிகளால் பகாசுரனை தாக்கி அவனை கொன்றார். இந்த பகாசுரன் என்ற அரக்கனை பீமன் அழித்ததும் தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் அருளால் தான், அதனால் தான் தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் சன்னதிக்கு எதிரில் பீமன் மற்றும் பகாசுரன் ஆகிய இருவருக்கும் பிரமாண்ட சிலைகள் மக்கள் வழிபாட்டுக்காக அமைந்துள்ளது.
பீமன் பகாசுரன் |
நமக்கு வாழ்வில் உண்டாகும் தடைகள், எதிரிகள், எதிர்ப்புகள், நோய்கள், கடன்கள், துன்பங்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் முதலிய மாந்திரீக பாதிப்புகள் நீங்க தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மனை முறையாக வழிபட்டு பயனடைய வாசகர்களை வாழ்த்துகிறோம்.
தேவிகோட்டம் வனபத்ரகாளி அம்மன் |
கர்மவினையை வெல்ல

கர்மவினை :
நம் அனைவரின் மனதிலும் அடிக்கடி தோன்றும் ஆயிரமாயிரம் அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமில்லா கேள்விகள் ???
நான் தினமும் கடவுளை வழிபடாமல் இருந்தது இல்லை....
நான் தெய்வீக யாத்திரை சென்று புனித ஸ்தலங்களையும், புனித மலைகளையும் தொடர்ந்து தரிசித்து வருகிறேன்....
என்னால் இயன்ற அளவு தான தருமங்கள் செய்துவருகிறேன்....
நான் குறிப்பிட்ட சித்தரையோ ஞானியையோ குருமார்களையோ குருவாக ஏற்று வழிபட்டு வருகிறேன்....
யோகா தியானம் முதல் வாசியோகம் வரை எல்லாம் முறையாக செய்து வருகிறேன்...
மந்திர உபதேஷங்களைப் பெற்று வருடக்கணக்காக மந்திரங்கள் உச்சாடனம் செய்து வருகிறேன்
இத்தனை நான் செய்தும் இந்த கடவுளுக்கு என்மேல் கருணையே இல்லையா ?
என்னுடைய கண் முன்னே பல கொடியவர்கள் கூட நன்றாக வாழ்கிறார்களே...
இவ்வாறு இத்தனை நற்காரியங்களை புண்ணியங்களை நான் செய்தும் என் வாழ்வில் பல இன்னல்களை தினம்தோறும் சந்தித்து வருகிறேன், உதாரணமாக சரியான உத்தியோகமோ இல்லை வியாபரமோ அமைவதில்லை,போதிய வருமானம் கிடைக்கவில்லை,சீராக குடும்பத்தை நடத்த முடியாமல் திண்டாடுகிறேன், தீராத வியாதிகளால் துன்பப்படுகிறேன், மருத்துவ செலவுகள் உண்டாகி வாட்டுகிறது. கடனாளியாகிறேன், குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து பிரிவினைகள் உண்டாகி பிரிந்து வாழும் சூழ்நிலை,
நானும் பல ஜோதிடர்களை அணுகி அவர்கள் சொல்லும் தோஷங்களுக்கு உரிய பரிகாரங்களும் செய்தேன். ஏழரை சனி, கண்டக சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று விடாமல் ஜோதிடர் சொன்ன அனைத்து விதமான பரிகார நிவர்த்தியும் செய்தாகிவிட்டது, ஆனாலும் இன்றுவரை ஒரு சிறு முன்னேற்றமும் நம்வாழ்வில் வரவில்லையே. துன்பங்களே போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனவே, என இப்படி நம் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடைதான் என்ன ???
கடவுளும் பிரபஞ்சமும் கர்மவினையும் :
இங்கு நாம் அனைவரும் முதலில் கடவுள் தன்மையையும் பிரபஞ்ச இயக்கத்தையும், கிரகங்களின் சஞ்சாரத்தையும் முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. இந்த பூவுலகத்தில் எத்தனை கோடி பிறப்புகள் உயிர்வாழ்கின்றன, அத்துனை கோடி ஜீவராசிகளுக்கும் இந்தந்த விநாடியில் இந்த பலன் தான் நிகழ வேண்டுமென்று படைத்த பிரம்மாவோ காக்கும் விஷ்ணுவோ உட்கார்ந்து தீர்மானித்துக் கொண்டிருக்க இயலுமா.?
இயலாது என்பதே உணமை. சரி அப்படியென்றால் நமக்கு உண்டாகும் இன்பமோ துன்பமோ எப்படி நம்மை வந்தடைகிறது. ஒன்று புரிந்து கொள்ளவும், நம் முன்னோர்களும், சித்தர் பெருமக்களும் மற்றும் ஞானிகளும் முட்டள்தனமாக எந்த விஷயத்தையும் சொல்லிச் செல்லவில்லை, நாம் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.
"நன்மையும் தீமையும் பிறர்தர வாரா"
உங்களுக்கு உண்டாகும் நல்ல பலன்களும், தீய பலன்களும் பிறரால் உங்களுக்கு வந்ததல்ல, இவை அனைத்துமே நீங்கள் உண்டாக்கியது தான். புரியும்படி சொன்னால் கடந்த பிறவிகளில் நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் வித்தே இப்பிறவியில் கர்மவினை என்ற பெயரில் வினைப்பயன் எனும் விருட்சமாக வளர்ந்து உங்களை வந்தடைகிறது.
இன்னும் சற்றே விளக்கமாக பார்தோமேயானால், கடந்த பிறவிகளில் செய்த தொழிலில் நீங்கள் செய்த பாவம் அல்லது புண்ணியம் இருக்குமானால் இப்பிறவியில் தொழிலின் வாயிலாக அந்த பலனை திரும்ப பெறுவீர்கள். அதாவது முற்பிறவியில் தொழில் வஞ்சம் புரிந்திருந்தால் இப்பிறவியில் தொழில் அமையாமை, தொழிலில் விருப்பமில்லாமை, தொழிலில் நஷ்டம், கடன், பழி மற்றும் அவமானங்களை சந்தித்தல் போன்ற அவதிகளை அடைய நேரிடும். இதே முற்பிறவியில் நல்முறையில் தொழில் செய்திருந்தால் இப்பிறவியில் தொழில் இடையூறு இல்லாமல் வாழலாம். கடந்த பிறவியில் தம்பதியருக்குள் பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் அவர்கள் மூலமே துன்ப துயரங்கள் மிகுந்திருக்கும். இவ்வாறே உடலில் உண்டாகும் தீராத வியாதிகளும் கூட கர்ம வினையினால் உண்டான தொந்தரவே! இதன்மூலம் நம்முடைய சுகதுக்கங்கள் தீர்மானிக்கப்படுவது கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களினால் எழுந்த கர்மவினையே என்பது உறுதியாகிறது.
கர்மாவும் பிரபஞ்சமும் ஜோதிடமும் :

கர்மா :
நம் வேதங்களில் "கர்மா" என்ற சொல்லுக்கு நாம் செய்யும் "செயல்" என்பது பொதுவான பொருளாகும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உலகத்தில் உண்டு. இதனை நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஆங்கிலத்தில் "To Every Action There is an Equal and Opposite Reaction" என்று சொல்வார்கள். நம் நம்பிக்கைகளிலும் நாம் செய்த வினைகளைக் குறிக்க கர்மா என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. கர்மவினை என்றும் வினைப்பயன் என்றும் நாம் புழக்கத்தில் சொல்வது இந்த நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான்.
"ஒருவன் எப்படி செயல்படுகிறானோ அவனும் அதைப்போலவே ஆகின்றான்"
யஜூர் வேதம்: பிரகதாரண்ய உபநிஷத் 4.4.5
கர்மா என்பது ஒருவனுக்கு இறைவனால் எழுதப்பட்ட தலையெழுத்து இல்லை, முற்பிறவிகளில் அவரவர் செய்த வினைகளின் (செயல்களின்) பதிவு ஆகும். முற்பிறவிகளில் நல்ல கர்மங்களை (செயல்களை) செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் நல்ல எதிர்வினை உருவாகி அதன் பயனாக நனமை தரும் பலன்கள் கிடைக்கும். இதே ஒருவர் முற்பிறவியில் கெட்ட கர்மங்கள் கூடிய செயல்களை செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் துன்பமும் துக்கமும் அடைந்திருக்கும் நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனின் நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பே கர்மா எனப்படும், இது பிறவிதோறும் தொடரும் மற்றும் கணக்கிடப்படும் அதாவது மிகச்சரியாக கணிக்கப்பட்டு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். பின்வரும் பாடலில் இது புரியும்.
"கருவமைப்பின் வழிவந்த வினைப்பதிவு சஞ்சிதமாம்
உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு பிராப்தமாம்
இருவினையும் கூடியெழும் புகுவினையே ஆகாமியமாம் - இங்கே
ஒருவினையும் வீண்போகா, உள்ளடங்கிப் பின்விளைவாம்"
-யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
மேற்கண்ட பாடலின்படி மனிதன் தன் பிறப்புகள் தோறும் மூன்று வகையான கர்மவினைப் பயன்களைப் பெற்று அனுபவிக்கிறான், அவை முறையே
சஞ்சித கர்மம்
பிராப்த கர்மம்
ஆகாமிய கர்மம்
இவற்றில் முதலாவதான "சஞ்சித கர்மா" எனப்படுவது நாம் கருவில் உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது முன் ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணிய வித்து, இந்த ஜென்மத்தில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்மவினை இதுவாகும். இந்த வினைப்பயனாவது தொடர்ந்து வரும் பிறவிகளிலும் செயல்படும். அதாவது இந்த சஞ்சிதகர்மாவினால் உண்டாகும் வினைப்பயன் முழுதும் இப்பிறவியில் செயல்படாமல் அனைத்து பிறவிகலுக்குமானதாய் இது இருக்கும்.
இரண்டாவதான "பிராப்த கர்மா" எனப்படுவது இப்பிறவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும். அதாவது நாம் இப்பிறவியில் உடலெடுத்து வாழுங்காலத்தில் நம் ஜீவிதத்திற்க்காக நாம் செய்யும் வினையின் காரணமாக பிறருக்கு ஏற்படும் நன்மை தீமைகளால் உண்டாகப்போகின்ற கர்மவினை, இந்த கர்மாவால் விளையும் பலனையும் நாம் இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டி வரும்.
மூன்றாவதாக "ஆகாமிய கர்மா" எனப்படுவது இப்பிறவியில் நாம் வாழுங்காலத்தில் நம் ஆசைகளால் (காம, குரோத, லோப, மத மற்றும் மாச்சர்யங்களால்) பிற உயிர்களுக்கு நேரடியாக செய்யும் அல்லது மறைமுகமாக செய்யும் நன்மை தீமைகளின் தொகுப்பாகும். இந்த வினைகளின் பலனை இப்பிறவியிலேயே அடையலாம் அல்லது நமது சஞ்சித கர்மத்தோடு சேர்க்கப்பட்டு எதிர்வரும் பிறவிகளிலும் அனுபவிக்க நேரிடலாம்.
இவ்விதமாக மூன்று விதமான கர்மங்களும் அதற்குண்டான வினைகளும் நம்மை என்றும் சூழ்ந்துள்ளன என்பதை மறவாதீர். இந்த கர்மவினை சங்கிலிப் பிணைப்பிலிருந்து யாரும் தப்பிவிட இயலாது. அனைத்து உயிர்களும் ஆத்மாக்களும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான்.
நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், முடக்கங்கள், நோய்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள். அதேபோல சந்தோசங்களும், இன்பமும், செல்வமும், நல்தொழிலும், ஆரோக்கியமும், நல்வாழ்வும் என இவையனைத்துமே மேற்குறிப்பிட்ட கர்மவினைகளின் பலன்களாகும். இந்த கர்மாவை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்று பலவிதமான பரிகார நிவர்த்திகளை செய்தும் வினைப்பலன் மாறவில்லை, நம் வேதனை தீரவில்லை, கடன்களும் குறையவில்லை. அப்படியென்றால் நம் கர்மவினையை தீர்க்க வழியே இல்லையா.?
சரி ஜோதிடத்தின் வாயிலாக சற்றே கர்ம ஸ்தானகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாட்டையும் அலசுவோம். ஜோதிட சாஸ்த்திரத்தில் சஞ்சித கர்மாவைக் குறிக்கும் ஸ்தானங்கள் 1, 5 ,9 ஆகிய திரிகோண இராசிகளாகும். இந்த சஞ்சித கர்மத்தின் பலனை தேவாதி தேவர்கள் கூட அனுபவித்தே தீர வேண்டுமென்கிறது கர்ம சாஸ்த்திரம். ஏனென்றால் 1ம் இடம் லக்கினம், ஒருவருடைய உருவ அமைப்பு, குணாதிசயம், செயல்படும் திறன், தலைமைப் பண்புகள் இவைகளை குறிப்பிடும் இடம் லக்கினமாகும். இதை விளக்கி கூறினால் யாரொருவரும் பிறக்கும் போதே விஞ்ஞானியாகவோ, கண்டுபிடிப்பாளராகவோ அல்லது உலக பெரும் பணக்காரனாகவோ பிறக்க இயலாது, விரும்பிய உடலமைப்போ முக அமைப்போ தீர்மானித்து பிறக்க இயாலாதல்லவா, எனவே சஞ்சித கர்மாவையும் மாற்ற இயலாது, பிறப்பிடம், தாய் தந்தை, உடலழகு இவையனைத்தையும் இதுவே தீர்மானிக்கும். அதேபோல 5ம் இடமென்பது புத்திர மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம், இதை சொல்ல வேண்டுமெனில் யாராலும் தனக்கு விரும்பிய நிறம், குணம், மனம் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதல்லவா, அதுபோலவே அதிர்ஷ்டமென்பதும் நம் கையில் இல்லை தானே. இவ்விரண்டு இடங்களைப் போலவே 9ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானமாகும் நம் பரம்பரையை குறிப்பிடுவதாகும், இதை எடுத்துக் கொண்டோமானால் எந்தவொரு ஆன்மாவாவது இன்னார்க்கு மகனாக இன்னாருடைய வம்சத்தில் பிறக்க வேண்டுமென்று தீர்மானித்து பிறக்க இயலுகிறதா, இல்லவே இல்லைதானே. அதனாலே தான் இந்த 1, 5, 9ம் பாவங்கள் (சஞ்சித கர்மா) தரும் பலன்களை தேவாதி தேவர்களும் மாற்ற இயலாது என்கின்றனர். இதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
ஜோதிட சாஸ்த்திரத்தில் பிராப்த கர்மாவிற்குரிய ஸ்தானகளாக 4, 7, 10 ம் பாவங்கள் ஆகிய கேந்திர இராசிகளாகும். இதில் 4ம் இடம் சுகஸ்தானம், அதாவது ஒருவர் நன்றாக சாப்பிட்டேன், நிம்மதியாக தூங்கினேன் என்பதில் ஆரம்பித்து வீடு, வாசல், வாகனம், செல்வம், சொத்துபத்து எனும் வாழ்வில் அடையும் அனைத்து இன்பங்களுக்கும் காரணம் சுகஸ்தானமே ஆகும். 7ம் இடம் என்பது களத்த்திர ஸ்தானம், இதுதான் உங்களின் வாழ்க்கைத்துணை அவரால் அடையும் இன்பம் முதலியவற்றைக் குறிக்கும். 10ம் இடமானது கர்ம ஸ்தானம் ஆகும், அதாவது தொழில் ஸ்தானம், இது உங்களின் தொழில் வியாபாரம் அதனால் உண்டாகக் கூடிய வருமானம் சுகம் முதலியவற்றைக் குறிக்கும். ஜோதிட சாஸ்த்திரப்படி இந்த பிராப்த கர்மா ஸ்தானங்களில் ஏற்படும் கர்மரீதியான கெடுபலன்களை சரியான பரிகாரங்களை செய்வதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இவற்றைப் போலவே ஆகாமிய கர்மாவிற்க்குரிய ஸ்தானங்களாக ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடுவது 2, 8, 11ம் பாவங்களான கர்ம இராசிகளாகும். இதில் 2ம் இடம் தன, குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானமாகும். 8ம் இடம் யோகஸ்தானம் எனவே இது புதையல், அதிர்ஷ்டம், லாட்டரி, ரேஸ் போன்ற எதிர்பாராத நிலையில் அடையும் நன்மைகளாகும். 11ம் இடம் லாபஸ்தானமாகும். இந்த மூன்று பாவங்களும் ஒருவரின் செல்வ செழிப்பை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவை. இவற்றில் ஏதேனும் கர்மவினை பாதிப்புகள் இருந்தால் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வதினால் பலன் உண்டாகுமென ஜோதிடம் சொல்கிறது.
கர்மாவும் தெய்வமும் :
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் கர்மவினையை இயக்கும் கர்மதெய்வம் ஒன்று உண்டு. அந்த கர்ம தெய்வத்தின் தாள் பற்றி தொழுது வந்தாலே கர்மவினையால் விளையும் கெடுபலன் குறைந்து நன்மைகள் நடக்கத் துவங்கும். நமக்கு வரும் கர்மவினை பலங்கள் நம்முடைய எந்த தவறினால் வந்தது யாருக்கு எந்த வகை தீமை செய்ததால் வந்தது என்றறிந்து அதற்கு இப்பிறவியில் எந்த வகையான பூஜைகள், தானங்கள், பரிகார நிவர்த்திகள் செய்ய வேண்டுமென்பதையும் எப்படி செய்ய வேண்டுமென்பதையும் பற்றி இனி விரிவாக காண்போம்.
கால புருஷ தத்துவமும் கர்மாவும் :
கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச இராசிகளென வகை படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்களை எந்த வகையில் யாருக்கு செய்தோம் அதன் விளைவாக இப்பிறப்பில் நாம் என்னென்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்கிறோம் என்பதை எல்லாம் இந்த கால புருஷ தத்துவ இராசிகளை கொண்டு நாம் கணித்து அறிய முடியும். இதில் இராசி நிலைகள் குறிக்கும் தத்துவ நிலைகளை பின்வரும் படம் விளக்கும்.

தர்ம இராசிகள்: மேஷம், சிம்மம், தனுசு.
தர்மத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகையுண்டு. உதாரணத்திற்கு கோவில் திருவிழாவில் அன்ன தானமிடுவதையும், ஆபாச நடன கச்சேரி வைப்பததையும் சொல்லாம், நாம் செய்யும் தர்மம் பிறரை வாழ வைக்கவும் நல்வழிப்படுத்தவும் அமையுமானல் அது நல்ல தர்மமாகும். அதுவே நம் தர்மம் பிறரை கெடுத்தால் அது பாவக் கணக்காகவே நம்மிடம் சேர்ந்துக் கொள்ளும்.
கர்ம இராசிகள்: ரிஷபம், கன்னி, மகரம்.
கர்மம் என்பது தொழிலை குறிக்கும். பிறருக்கு தீங்கு நேரா வண்ணமும் நன்மை தரும்படியும் நம் தொழில் அமைந்தால் அதன் பலனாக யோகத்தையும், நற்பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வும் அமையும். இதே நியாய தர்மங்களை புறந்தள்ளி விட்டு நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு தீமை செய்தால் அதன் விளைவாக கெடுபலன்களையும், கொடிய தோஷங்களையும் பெற்று துன்பகரமான வாழ்வு அமையும்.
காம இராசிகள்: மிதுனம், துலாம், கும்பம்.
இங்கு காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். ஆசைகளிலே நல்லதுமுண்டு, தீயதுமுண்டு. நல்வழியில் பொருளீட்டி செல்வந்தனாகி குடும்பத்தை காப்பற்ற வேண்டுமென்பது நல்ல வகைப்பட்ட காமம். பிறன் மனையாளை தீண்டியே தீர வேண்டுமென்ற ஆசை கெட்ட காமமாகிறது. இதன் படியே நம் வாழ்வின் அனைத்து பலாபலன்களும் உருவாகின்றன.
மோட்ச இராசிகள்: கடகம், விருச்சிகம், மீனம்.
நம் மூதாதையர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்லவிதமாக வாழவைத்து அவர்கள் இறந்தால் உரிய சடங்குகள் செய்து வருடந்தோறும் திதி தர்ப்பணம் முதலியவற்றை செய்து வாழ்வது நல்மோட்சமாகும். இதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்துவதும், உணவளிக்காமலிருப்பதும், மருத்துவம் பார்க்கமல் நோயால் தவிக்க விடுவதும், இறுதி சடங்குகள் செய்யாததும், திதி தர்ப்பணம் தராததும் நம் முன்னோர்களை மோட்சமடையாமல் தடுக்கும். இதுவே நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி நம்மை வாட்ட ஏதுவான துர்மோட்சமாகும்.
மேற்கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த கட்டங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் அது நம் முற்பிறவியில் நாம் செய்த பாவம் என்று அறிக. தகுந்த பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
"எழாமல் வாசனையை கொன்றோன் ஞானி
ஏகாமல் வாசனையை அடித்தோனே சித்தன்"
-சட்டை முனி நாதர்
இங்கு வாசனை என்பது கர்மவினை, இதன் இயல்பாவது பிறவிதோறும் தொடர்ந்து வருவது. ஞானியானவன் இப்பிறவியில் இக்கர்மவினை ஆன்மாவை பற்றா வண்ணம் தடுத்துக்கொள்பவன். ஆனால் சித்தனானவன் எப்பிறப்பிலும் தன்னை கர்மவினை அனுகாத வண்ணம் விரட்டியடிப்பவன் ஆவான்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் நம்மில். பாபா, சாய் பாபா, ரமண மகரிஷி, வேதத்திரி மகரிஷி, யோகி ராம்சுரத்குமார், பகவான் ரஜனீஷ் (ஓஷோ), சுவாமி விவேகானந்தர் ஆகிய அனைவருமே ஞானிகள் என கொண்டாடப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் இப்பிறப்பில் தங்களுடைய கர்மாவின் சூட்சுமத்தை அறிந்து கர்மவினையானது தன்னை பற்றிக் கொள்ளா வண்ணம் தடுத்துக் கொண்டவர்கள். இதை போல நம் சித்தர்கள் கர்மவினை எக்காலத்திலும் எப்பிறப்பிலும் தன்னை பற்றிக்கொள்ள முடியாதபடி விரட்டியவர்கள்.
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல கர்மாவை இயக்கும் தெய்வம் உண்டு, அதை பற்றிக் கொண்டோமானால் கர்மாவில் இருந்து விடுபடலாம், இங்கு ஓர் மிகப்பெரும் உண்மையினை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு புரியும். கோவில்கள் நிறைந்த கேரளாவில் பிறந்த ஆதி சங்கரர் எதற்காக தமிழகத்தில் காஞ்சிபுரம் வந்து காமட்சியை பற்றினார், சிவ ஸ்தலங்கள் நிறைந்த திருச்சுழியில் பிறந்த ரமண மகரிஷி எதற்காக திருவண்ணாமலை ஈசனை பற்றினார், விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ணர் எதற்காக பத்ரகாளியை பற்றினார். இவர்கள் எல்லாம் யாரை நாம் பற்றிக்கொண்டால் நம் கர்மாவை கட்ட முடியும் என்று உணர்ந்த மகா ஞானிகள். பிறவிப்பயனை அடைந்து விடவும் இன்னல்களை தீரவும் தொழ வேண்டிய தெய்வ இரகசியத்தை தெரிந்து கொண்டவர்கள். ஆனால் இவர்கள் அறிந்து கையாண்ட உண்மையை இவர்களின் வழிவந்த சீடர்களுக்கோ பக்தர்களுக்கோ சொல்லித்தரவில்லை. தற்போதுள்ள ஞானிகளும் இந்த உண்மையினை உணர்ந்து தான் தங்களின் கர்ம அதிதெய்வம் உள்ள இடங்களில் பீடம் அமைத்து பூஜித்து வாழ்வில் வளமடைகின்றனர். பக்தர்கள் மேலும் மேலும் அங்கு சென்று பூஜைகள் யாகங்கள் செய்வதால் சக்தி பலமடங்கு பெருகி அவ்விடம் சிறக்கிறது. அவர்களும் உயர்கிறார்கள். ஆனால் அங்கு வழிபட்ட உங்கள் கர்மா மறியதா.?
கர்ம தெய்வத்தினை பற்றி இன்னும் புரியும்படி சொன்னால், நம் நண்பர்களின் அன்னையரை நாம் அன்னையாகவே பாவிப்போம், வயது முதிர்ந்த பெண்களை அம்மா என்றே அழைப்போம். நண்பனின் இல்லம் சென்றால் ஒருவேளை உணவும் தேனீரும் நிச்சயம் கிடைக்கும், விஷேச நாட்கள் எனில் இரண்டொரு நாட்கள் கூட கிடைக்கும். ஆனால் தினந்தோறும் நண்பனது அம்மாவிடம் உணவு கிடைத்து விடுமா?. நீயும் எனக்கொரு பிள்ளை மாதிரி என்றுகூட சொல்லி இருப்பார்கள், ஆயினும் நிரந்தரமில்லை. ஏதேது விட்டால் ஆஸ்தியில் பங்கு கேட்பான் போல என்று துரத்தப்படுவோம். மாறாக நம்மை பெற்ற அன்னையிடம் அதை நாம் எதிர்பார்க்கலாம், தன் குருதியை பாலாக்கி தந்தவள் அல்லவா அவளது அனைத்துமே நாம் தானே. அது போலவே நாம் வழிபடும் தெய்வங்களும் அந்த நாளைக்கோ அந்த வேளைக்கோ பலன் தரலாம் ஆயுள் முழுவதும் நிரந்தர பலன் தர இயலாது, அந்த நற்பலன்களை தருவது இப்பிறவியில் உங்களது கர்மாவினை இயக்கி ஆளும், மேலும் ஈன்ற அன்னையை போல உங்களை படைத்து வழி நடத்தக்கூடிய கர்ம அதிதெய்வம் மட்டுமே.
நண்பர்களே, கர்மாவை பற்றியும் கர்மவினையின் இயக்கங்களை பற்றியும் ஜோதிட ரீதியில் கர்மவினைகளை எவ்வாறு கண்டுணர முடியும் என்பதெல்லாம் விரிவாக பார்த்தோம். இருப்பினும் "குரு தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது" மற்றும் "குருவருள் இன்றி திருவருள் வாய்க்காது" என்பதனை உணர்ந்து குருவின் ஆலோசனை பெற்று கர்ம வினை பரிகார நிவர்த்தி செய்து கொள்வது நலம். இதைபற்றி மேலும் அறியவும் தகுந்த ஆலோசனைகளை பெறவும் "ஸ்ரீ விருக்ஷ பீடம்" ஐயா லக்ஷ்மி தாச ஸ்வாமிகளை தொடர்பு கொள்ளவும்.
கர்மவினை பலன்களை கொடுக்கும் பணியை நவ கிரகங்கள் செய்கின்றன, நவ கிரங்களையும் இயக்கும் அதிதெய்வங்கள் உண்டு, நவ கிரகங்களை வழிபடுவதால் எந்த பலனையும் நவ கிரகங்கள் தாமாக மாற்றிவிட இயலாது, நவ கிரகங்களை இயக்கும் அதிதெய்வங்கள் மட்டுமே உங்கள் கர்ம பலனை மற்ற இயலும். இங்கு ஒரு உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எந்த சித்தர்களும், ஞானிகளும் வந்து நவ கிரகங்களை வழிபடவில்லை என்பது உண்மைதானே.
நவகிரகங்களுக்கு உரிய அதிதெய்வங்கள் :
சூரியன் - சிவன்,
சந்திரன் - பார்வதி,
செவ்வாய் - சுப்பிரமணியர்,
புதன் - விஷ்ணு,
வியாழன் - பிரம்மா,
சுக்கிரன் - மஹா லக்ஷ்மி,
சனி - எமன்,
ராகு - பத்ரகாளி,
கேது - இந்திரன்.
நமது ஜாதக நிலைகளை நன்கு ஆராய்ந்து நமது கர்ம அதிதெய்வங்களை கண்டறிந்து முறையாக வழிபட்டு வந்தால் நமக்கு கர்ம வினையினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து தப்பி நல்வாழ்வினை அடைய முடியும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
-
சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம...