வியாழன், 18 ஆகஸ்ட், 2022

கர்மவினையை வெல்ல

  




கர்மவினை :

நம் அனைவரின் மனதிலும் அடிக்கடி தோன்றும் ஆயிரமாயிரம் அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமில்லா கேள்விகள் ???
நான் தினமும் கடவுளை வழிபடாமல் இருந்தது இல்லை....
நான் தெய்வீக யாத்திரை சென்று புனித ஸ்தலங்களையும், புனித மலைகளையும் தொடர்ந்து தரிசித்து வருகிறேன்....
என்னால் இயன்ற அளவு தான தருமங்கள் செய்துவருகிறேன்....
நான் குறிப்பிட்ட சித்தரையோ ஞானியையோ குருமார்களையோ குருவாக ஏற்று வழிபட்டு வருகிறேன்....
யோகா தியானம் முதல் வாசியோகம் வரை எல்லாம் முறையாக செய்து வருகிறேன்...
மந்திர உபதேஷங்களைப் பெற்று வருடக்கணக்காக மந்திரங்கள் உச்சாடனம் செய்து வருகிறேன்
இத்தனை நான் செய்தும் இந்த கடவுளுக்கு என்மேல் கருணையே இல்லையா ?
என்னுடைய கண் முன்னே பல கொடியவர்கள் கூட நன்றாக வாழ்கிறார்களே...


இவ்வாறு இத்தனை நற்காரியங்களை புண்ணியங்களை நான் செய்தும் என் வாழ்வில் பல இன்னல்களை தினம்தோறும் சந்தித்து வருகிறேன், உதாரணமாக சரியான உத்தியோகமோ இல்லை வியாபரமோ அமைவதில்லை,போதிய வருமானம் கிடைக்கவில்லை,சீராக குடும்பத்தை நடத்த முடியாமல் திண்டாடுகிறேன், தீராத வியாதிகளால் துன்பப்படுகிறேன், மருத்துவ செலவுகள் உண்டாகி வாட்டுகிறது. கடனாளியாகிறேன், குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து பிரிவினைகள் உண்டாகி பிரிந்து வாழும் சூழ்நிலை,


நானும் பல ஜோதிடர்களை அணுகி அவர்கள் சொல்லும் தோஷங்களுக்கு உரிய பரிகாரங்களும் செய்தேன். ஏழரை சனி, கண்டக சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று விடாமல் ஜோதிடர் சொன்ன அனைத்து விதமான பரிகார நிவர்த்தியும் செய்தாகிவிட்டது, ஆனாலும் இன்றுவரை ஒரு சிறு முன்னேற்றமும் நம்வாழ்வில் வரவில்லையே. துன்பங்களே போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனவே, என இப்படி நம் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடைதான் என்ன ???




கடவுளும் பிரபஞ்சமும் கர்மவினையும் :


இங்கு நாம் அனைவரும் முதலில் கடவுள் தன்மையையும் பிரபஞ்ச இயக்கத்தையும், கிரகங்களின் சஞ்சாரத்தையும் முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. இந்த பூவுலகத்தில் எத்தனை கோடி பிறப்புகள் உயிர்வாழ்கின்றன, அத்துனை கோடி ஜீவராசிகளுக்கும் இந்தந்த விநாடியில் இந்த பலன் தான் நிகழ வேண்டுமென்று படைத்த பிரம்மாவோ காக்கும் விஷ்ணுவோ உட்கார்ந்து தீர்மானித்துக் கொண்டிருக்க இயலுமா.?

இயலாது என்பதே உணமை. சரி அப்படியென்றால் நமக்கு உண்டாகும் இன்பமோ துன்பமோ எப்படி நம்மை வந்தடைகிறது. ஒன்று புரிந்து கொள்ளவும், நம் முன்னோர்களும், சித்தர் பெருமக்களும் மற்றும் ஞானிகளும் முட்டள்தனமாக எந்த விஷயத்தையும் சொல்லிச் செல்லவில்லை, நாம் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

"நன்மையும் தீமையும் பிறர்தர வாரா"

உங்களுக்கு உண்டாகும் நல்ல பலன்களும், தீய பலன்களும் பிறரால் உங்களுக்கு வந்ததல்ல, இவை அனைத்துமே நீங்கள் உண்டாக்கியது தான். புரியும்படி சொன்னால் கடந்த பிறவிகளில் நீங்கள் செய்த பாவ புண்ணியங்களின் வித்தே இப்பிறவியில் கர்மவினை என்ற பெயரில் வினைப்பயன் எனும் விருட்சமாக வளர்ந்து உங்களை வந்தடைகிறது.

இன்னும் சற்றே விளக்கமாக பார்தோமேயானால், கடந்த பிறவிகளில் செய்த தொழிலில் நீங்கள் செய்த பாவம் அல்லது புண்ணியம் இருக்குமானால் இப்பிறவியில் தொழிலின் வாயிலாக அந்த பலனை திரும்ப பெறுவீர்கள். அதாவது முற்பிறவியில் தொழில் வஞ்சம் புரிந்திருந்தால் இப்பிறவியில் தொழில் அமையாமை, தொழிலில் விருப்பமில்லாமை, தொழிலில் நஷ்டம், கடன், பழி மற்றும் அவமானங்களை சந்தித்தல் போன்ற அவதிகளை அடைய நேரிடும். இதே முற்பிறவியில் நல்முறையில் தொழில் செய்திருந்தால் இப்பிறவியில் தொழில் இடையூறு இல்லாமல் வாழலாம். கடந்த பிறவியில் தம்பதியருக்குள் பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் அவர்கள் மூலமே துன்ப துயரங்கள் மிகுந்திருக்கும். இவ்வாறே உடலில் உண்டாகும் தீராத வியாதிகளும் கூட கர்ம வினையினால் உண்டான தொந்தரவே! இதன்மூலம் நம்முடைய சுகதுக்கங்கள் தீர்மானிக்கப்படுவது கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களினால் எழுந்த கர்மவினையே என்பது உறுதியாகிறது.



கர்மாவும் பிரபஞ்சமும் ஜோதிடமும் :



கர்மா :

நம் வேதங்களில் "கர்மா" என்ற சொல்லுக்கு நாம் செய்யும் "செயல்" என்பது பொதுவான பொருளாகும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உலகத்தில் உண்டு. இதனை நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஆங்கிலத்தில் "To Every Action There is an Equal and Opposite Reaction" என்று சொல்வார்கள். நம் நம்பிக்கைகளிலும் நாம் செய்த வினைகளைக் குறிக்க கர்மா என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. கர்மவினை என்றும் வினைப்பயன் என்றும் நாம் புழக்கத்தில் சொல்வது இந்த நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான்.

"ஒருவன் எப்படி செயல்படுகிறானோ அவனும் அதைப்போலவே ஆகின்றான்"

யஜூர் வேதம்: பிரகதாரண்ய உபநிஷத் 4.4.5

கர்மா என்பது ஒருவனுக்கு இறைவனால் எழுதப்பட்ட தலையெழுத்து இல்லை, முற்பிறவிகளில் அவரவர் செய்த வினைகளின் (செயல்களின்) பதிவு ஆகும். முற்பிறவிகளில் நல்ல கர்மங்களை (செயல்களை) செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் நல்ல எதிர்வினை உருவாகி அதன் பயனாக நனமை தரும் பலன்கள் கிடைக்கும். இதே ஒருவர் முற்பிறவியில் கெட்ட கர்மங்கள் கூடிய செயல்களை செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் துன்பமும் துக்கமும் அடைந்திருக்கும் நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனின் நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பே கர்மா எனப்படும், இது பிறவிதோறும் தொடரும் மற்றும் கணக்கிடப்படும் அதாவது மிகச்சரியாக கணிக்கப்பட்டு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். பின்வரும் பாடலில் இது புரியும்.

"கருவமைப்பின் வழிவந்த வினைப்பதிவு சஞ்சிதமாம்

உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு பிராப்தமாம்

இருவினையும் கூடியெழும் புகுவினையே ஆகாமியமாம் - இங்கே

ஒருவினையும் வீண்போகா, உள்ளடங்கிப் பின்விளைவாம்"

                                                                                                                              -யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

மேற்கண்ட பாடலின்படி மனிதன் தன் பிறப்புகள் தோறும் மூன்று வகையான கர்மவினைப் பயன்களைப் பெற்று அனுபவிக்கிறான், அவை முறையே

சஞ்சித கர்மம்
பிராப்த கர்மம்
ஆகாமிய கர்மம்


இவற்றில் முதலாவதான "சஞ்சித கர்மா" எனப்படுவது நாம் கருவில் உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது முன் ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணிய வித்து, இந்த ஜென்மத்தில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்மவினை இதுவாகும். இந்த வினைப்பயனாவது தொடர்ந்து வரும் பிறவிகளிலும் செயல்படும். அதாவது இந்த சஞ்சிதகர்மாவினால் உண்டாகும் வினைப்பயன் முழுதும் இப்பிறவியில் செயல்படாமல் அனைத்து பிறவிகலுக்குமானதாய் இது இருக்கும்.

இரண்டாவதான "பிராப்த கர்மா" எனப்படுவது இப்பிறவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும். அதாவது நாம் இப்பிறவியில் உடலெடுத்து வாழுங்காலத்தில் நம் ஜீவிதத்திற்க்காக நாம் செய்யும் வினையின் காரணமாக பிறருக்கு ஏற்படும் நன்மை தீமைகளால் உண்டாகப்போகின்ற கர்மவினை, இந்த கர்மாவால் விளையும் பலனையும் நாம் இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டி வரும்.

மூன்றாவதாக "ஆகாமிய கர்மா" எனப்படுவது இப்பிறவியில் நாம் வாழுங்காலத்தில் நம் ஆசைகளால் (காம, குரோத, லோப, மத மற்றும் மாச்சர்யங்களால்) பிற உயிர்களுக்கு நேரடியாக செய்யும் அல்லது மறைமுகமாக செய்யும் நன்மை தீமைகளின் தொகுப்பாகும். இந்த வினைகளின் பலனை இப்பிறவியிலேயே அடையலாம் அல்லது நமது சஞ்சித கர்மத்தோடு சேர்க்கப்பட்டு எதிர்வரும் பிறவிகளிலும் அனுபவிக்க நேரிடலாம்.

இவ்விதமாக மூன்று விதமான கர்மங்களும் அதற்குண்டான வினைகளும் நம்மை என்றும் சூழ்ந்துள்ளன என்பதை மறவாதீர். இந்த கர்மவினை சங்கிலிப் பிணைப்பிலிருந்து யாரும் தப்பிவிட இயலாது. அனைத்து உயிர்களும் ஆத்மாக்களும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான்.

நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், முடக்கங்கள், நோய்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள். அதேபோல சந்தோசங்களும், இன்பமும், செல்வமும், நல்தொழிலும், ஆரோக்கியமும், நல்வாழ்வும் என இவையனைத்துமே மேற்குறிப்பிட்ட கர்மவினைகளின் பலன்களாகும். இந்த கர்மாவை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்று பலவிதமான பரிகார நிவர்த்திகளை செய்தும் வினைப்பலன் மாறவில்லை, நம் வேதனை தீரவில்லை, கடன்களும் குறையவில்லை. அப்படியென்றால் நம் கர்மவினையை தீர்க்க வழியே இல்லையா.?

சரி ஜோதிடத்தின் வாயிலாக சற்றே கர்ம ஸ்தானகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாட்டையும் அலசுவோம். ஜோதிட சாஸ்த்திரத்தில் சஞ்சித கர்மாவைக் குறிக்கும் ஸ்தானங்கள் 1, 5 ,9 ஆகிய திரிகோண இராசிகளாகும். இந்த சஞ்சித கர்மத்தின் பலனை தேவாதி தேவர்கள் கூட அனுபவித்தே தீர வேண்டுமென்கிறது கர்ம சாஸ்த்திரம். ஏனென்றால் 1ம் இடம் லக்கினம், ஒருவருடைய உருவ அமைப்பு, குணாதிசயம், செயல்படும் திறன், தலைமைப் பண்புகள் இவைகளை குறிப்பிடும் இடம் லக்கினமாகும். இதை விளக்கி கூறினால் யாரொருவரும் பிறக்கும் போதே விஞ்ஞானியாகவோ, கண்டுபிடிப்பாளராகவோ அல்லது உலக பெரும் பணக்காரனாகவோ பிறக்க இயலாது, விரும்பிய உடலமைப்போ முக அமைப்போ தீர்மானித்து பிறக்க இயாலாதல்லவா, எனவே சஞ்சித கர்மாவையும் மாற்ற இயலாது, பிறப்பிடம், தாய் தந்தை, உடலழகு இவையனைத்தையும் இதுவே தீர்மானிக்கும். அதேபோல 5ம் இடமென்பது புத்திர மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம், இதை சொல்ல வேண்டுமெனில் யாராலும் தனக்கு விரும்பிய நிறம், குணம், மனம் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதல்லவா, அதுபோலவே அதிர்ஷ்டமென்பதும் நம் கையில் இல்லை தானே. இவ்விரண்டு இடங்களைப் போலவே 9ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானமாகும் நம் பரம்பரையை குறிப்பிடுவதாகும், இதை எடுத்துக் கொண்டோமானால் எந்தவொரு ஆன்மாவாவது இன்னார்க்கு மகனாக இன்னாருடைய வம்சத்தில் பிறக்க வேண்டுமென்று தீர்மானித்து பிறக்க இயலுகிறதா, இல்லவே இல்லைதானே. அதனாலே தான் இந்த 1, 5, 9ம் பாவங்கள் (சஞ்சித கர்மா) தரும் பலன்களை தேவாதி தேவர்களும் மாற்ற இயலாது என்கின்றனர். இதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.

ஜோதிட சாஸ்த்திரத்தில் பிராப்த கர்மாவிற்குரிய ஸ்தானகளாக 4, 7, 10 ம் பாவங்கள் ஆகிய கேந்திர இராசிகளாகும். இதில் 4ம் இடம் சுகஸ்தானம், அதாவது ஒருவர் நன்றாக சாப்பிட்டேன், நிம்மதியாக தூங்கினேன் என்பதில் ஆரம்பித்து வீடு, வாசல், வாகனம், செல்வம், சொத்துபத்து எனும் வாழ்வில் அடையும் அனைத்து இன்பங்களுக்கும் காரணம் சுகஸ்தானமே ஆகும். 7ம் இடம் என்பது களத்த்திர ஸ்தானம், இதுதான் உங்களின் வாழ்க்கைத்துணை அவரால் அடையும் இன்பம் முதலியவற்றைக் குறிக்கும். 10ம் இடமானது கர்ம ஸ்தானம் ஆகும், அதாவது தொழில் ஸ்தானம், இது உங்களின் தொழில் வியாபாரம் அதனால் உண்டாகக் கூடிய வருமானம் சுகம் முதலியவற்றைக் குறிக்கும். ஜோதிட சாஸ்த்திரப்படி இந்த பிராப்த கர்மா ஸ்தானங்களில் ஏற்படும் கர்மரீதியான கெடுபலன்களை சரியான பரிகாரங்களை செய்வதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.

இவற்றைப் போலவே ஆகாமிய கர்மாவிற்க்குரிய ஸ்தானங்களாக ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடுவது 2, 8, 11ம் பாவங்களான கர்ம இராசிகளாகும். இதில் 2ம் இடம் தன, குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானமாகும். 8ம் இடம் யோகஸ்தானம் எனவே இது புதையல், அதிர்ஷ்டம், லாட்டரி, ரேஸ் போன்ற எதிர்பாராத நிலையில் அடையும் நன்மைகளாகும். 11ம் இடம் லாபஸ்தானமாகும். இந்த மூன்று பாவங்களும் ஒருவரின் செல்வ செழிப்பை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவை. இவற்றில் ஏதேனும் கர்மவினை பாதிப்புகள் இருந்தால் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வதினால் பலன் உண்டாகுமென ஜோதிடம் சொல்கிறது.
கர்மாவும் தெய்வமும் :


உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் கர்மவினையை இயக்கும் கர்மதெய்வம் ஒன்று உண்டு. அந்த கர்ம தெய்வத்தின் தாள் பற்றி தொழுது வந்தாலே கர்மவினையால் விளையும் கெடுபலன் குறைந்து நன்மைகள் நடக்கத் துவங்கும். நமக்கு வரும் கர்மவினை பலங்கள் நம்முடைய எந்த தவறினால் வந்தது யாருக்கு எந்த வகை தீமை செய்ததால் வந்தது என்றறிந்து அதற்கு இப்பிறவியில் எந்த வகையான பூஜைகள், தானங்கள், பரிகார நிவர்த்திகள் செய்ய வேண்டுமென்பதையும் எப்படி செய்ய வேண்டுமென்பதையும் பற்றி இனி விரிவாக காண்போம்.



கால புருஷ தத்துவமும் கர்மாவும் :


கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச இராசிகளென வகை படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்களை எந்த வகையில் யாருக்கு செய்தோம் அதன் விளைவாக இப்பிறப்பில் நாம் என்னென்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்கிறோம் என்பதை எல்லாம் இந்த கால புருஷ தத்துவ இராசிகளை கொண்டு நாம் கணித்து அறிய முடியும். இதில் இராசி நிலைகள் குறிக்கும் தத்துவ நிலைகளை பின்வரும் படம் விளக்கும்.







தர்ம இராசிகள்: மேஷம், சிம்மம், தனுசு.

தர்மத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகையுண்டு. உதாரணத்திற்கு கோவில் திருவிழாவில் அன்ன தானமிடுவதையும், ஆபாச நடன கச்சேரி வைப்பததையும் சொல்லாம், நாம் செய்யும் தர்மம் பிறரை வாழ வைக்கவும் நல்வழிப்படுத்தவும் அமையுமானல் அது நல்ல தர்மமாகும். அதுவே நம் தர்மம் பிறரை கெடுத்தால் அது பாவக் கணக்காகவே நம்மிடம் சேர்ந்துக் கொள்ளும்.


கர்ம இராசிகள்: ரிஷபம், கன்னி, மகரம்.

கர்மம் என்பது தொழிலை குறிக்கும். பிறருக்கு தீங்கு நேரா வண்ணமும் நன்மை தரும்படியும் நம் தொழில் அமைந்தால் அதன் பலனாக யோகத்தையும், நற்பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வும் அமையும். இதே நியாய தர்மங்களை புறந்தள்ளி விட்டு நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு தீமை செய்தால் அதன் விளைவாக கெடுபலன்களையும், கொடிய தோஷங்களையும் பெற்று துன்பகரமான வாழ்வு அமையும்.


காம இராசிகள்: மிதுனம், துலாம், கும்பம்.

இங்கு காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். ஆசைகளிலே நல்லதுமுண்டு, தீயதுமுண்டு. நல்வழியில் பொருளீட்டி செல்வந்தனாகி குடும்பத்தை காப்பற்ற வேண்டுமென்பது நல்ல வகைப்பட்ட காமம். பிறன் மனையாளை தீண்டியே தீர வேண்டுமென்ற ஆசை கெட்ட காமமாகிறது. இதன் படியே நம் வாழ்வின் அனைத்து பலாபலன்களும் உருவாகின்றன.


மோட்ச இராசிகள்: கடகம், விருச்சிகம், மீனம்.
நம் மூதாதையர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்லவிதமாக வாழவைத்து அவர்கள் இறந்தால் உரிய சடங்குகள் செய்து வருடந்தோறும் திதி தர்ப்பணம் முதலியவற்றை செய்து வாழ்வது நல்மோட்சமாகும். இதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்துவதும், உணவளிக்காமலிருப்பதும், மருத்துவம் பார்க்கமல் நோயால் தவிக்க விடுவதும், இறுதி சடங்குகள் செய்யாததும், திதி தர்ப்பணம் தராததும் நம் முன்னோர்களை மோட்சமடையாமல் தடுக்கும். இதுவே நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி நம்மை வாட்ட ஏதுவான துர்மோட்சமாகும்.

மேற்கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த கட்டங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் அது நம் முற்பிறவியில் நாம் செய்த பாவம் என்று அறிக. தகுந்த பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

"எழாமல் வாசனையை கொன்றோன் ஞானி

ஏகாமல் வாசனையை அடித்தோனே சித்தன்"

                                                                                   -சட்டை முனி நாதர்

இங்கு வாசனை என்பது கர்மவினை, இதன் இயல்பாவது பிறவிதோறும் தொடர்ந்து வருவது. ஞானியானவன் இப்பிறவியில் இக்கர்மவினை ஆன்மாவை பற்றா வண்ணம் தடுத்துக்கொள்பவன். ஆனால் சித்தனானவன் எப்பிறப்பிலும் தன்னை கர்மவினை அனுகாத வண்ணம் விரட்டியடிப்பவன் ஆவான்.

இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் நம்மில். பாபா, சாய் பாபா, ரமண மகரிஷி, வேதத்திரி மகரிஷி, யோகி ராம்சுரத்குமார், பகவான் ரஜனீஷ் (ஓஷோ), சுவாமி விவேகானந்தர் ஆகிய அனைவருமே ஞானிகள் என கொண்டாடப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் இப்பிறப்பில் தங்களுடைய கர்மாவின் சூட்சுமத்தை அறிந்து கர்மவினையானது தன்னை பற்றிக் கொள்ளா வண்ணம் தடுத்துக் கொண்டவர்கள். இதை போல நம் சித்தர்கள் கர்மவினை எக்காலத்திலும் எப்பிறப்பிலும் தன்னை பற்றிக்கொள்ள முடியாதபடி விரட்டியவர்கள்.

கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல கர்மாவை இயக்கும் தெய்வம் உண்டு, அதை பற்றிக் கொண்டோமானால் கர்மாவில் இருந்து விடுபடலாம், இங்கு ஓர் மிகப்பெரும் உண்மையினை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு புரியும். கோவில்கள் நிறைந்த கேரளாவில் பிறந்த ஆதி சங்கரர் எதற்காக தமிழகத்தில் காஞ்சிபுரம் வந்து காமட்சியை பற்றினார், சிவ ஸ்தலங்கள் நிறைந்த திருச்சுழியில் பிறந்த ரமண மகரிஷி எதற்காக திருவண்ணாமலை ஈசனை பற்றினார், விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ணர் எதற்காக பத்ரகாளியை பற்றினார். இவர்கள் எல்லாம் யாரை நாம் பற்றிக்கொண்டால் நம் கர்மாவை கட்ட முடியும் என்று உணர்ந்த மகா ஞானிகள். பிறவிப்பயனை அடைந்து விடவும் இன்னல்களை தீரவும் தொழ வேண்டிய தெய்வ இரகசியத்தை தெரிந்து கொண்டவர்கள். ஆனால் இவர்கள் அறிந்து கையாண்ட உண்மையை இவர்களின் வழிவந்த சீடர்களுக்கோ பக்தர்களுக்கோ சொல்லித்தரவில்லை. தற்போதுள்ள ஞானிகளும் இந்த உண்மையினை உணர்ந்து தான் தங்களின் கர்ம அதிதெய்வம் உள்ள இடங்களில் பீடம் அமைத்து பூஜித்து வாழ்வில் வளமடைகின்றனர். பக்தர்கள் மேலும் மேலும் அங்கு சென்று பூஜைகள் யாகங்கள் செய்வதால் சக்தி பலமடங்கு பெருகி அவ்விடம் சிறக்கிறது. அவர்களும் உயர்கிறார்கள். ஆனால் அங்கு வழிபட்ட உங்கள் கர்மா மறியதா.?

கர்ம தெய்வத்தினை பற்றி இன்னும் புரியும்படி சொன்னால், நம் நண்பர்களின் அன்னையரை நாம் அன்னையாகவே பாவிப்போம், வயது முதிர்ந்த பெண்களை அம்மா என்றே அழைப்போம். நண்பனின் இல்லம் சென்றால் ஒருவேளை உணவும் தேனீரும் நிச்சயம் கிடைக்கும், விஷேச நாட்கள் எனில் இரண்டொரு நாட்கள் கூட கிடைக்கும். ஆனால் தினந்தோறும் நண்பனது அம்மாவிடம் உணவு கிடைத்து விடுமா?. நீயும் எனக்கொரு பிள்ளை மாதிரி என்றுகூட சொல்லி இருப்பார்கள், ஆயினும் நிரந்தரமில்லை. ஏதேது விட்டால் ஆஸ்தியில் பங்கு கேட்பான் போல என்று துரத்தப்படுவோம். மாறாக நம்மை பெற்ற அன்னையிடம் அதை நாம் எதிர்பார்க்கலாம், தன் குருதியை பாலாக்கி தந்தவள் அல்லவா அவளது அனைத்துமே நாம் தானே. அது போலவே நாம் வழிபடும் தெய்வங்களும் அந்த நாளைக்கோ அந்த வேளைக்கோ பலன் தரலாம் ஆயுள் முழுவதும் நிரந்தர பலன் தர இயலாது, அந்த நற்பலன்களை தருவது இப்பிறவியில் உங்களது கர்மாவினை இயக்கி ஆளும், மேலும் ஈன்ற அன்னையை போல உங்களை படைத்து வழி நடத்தக்கூடிய கர்ம அதிதெய்வம் மட்டுமே.

நண்பர்களே, கர்மாவை பற்றியும் கர்மவினையின் இயக்கங்களை பற்றியும் ஜோதிட ரீதியில் கர்மவினைகளை எவ்வாறு கண்டுணர முடியும் என்பதெல்லாம் விரிவாக பார்த்தோம். இருப்பினும் "குரு தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது" மற்றும் "குருவருள் இன்றி திருவருள் வாய்க்காது" என்பதனை உணர்ந்து குருவின் ஆலோசனை பெற்று கர்ம வினை பரிகார நிவர்த்தி செய்து கொள்வது நலம். இதைபற்றி மேலும் அறியவும் தகுந்த ஆலோசனைகளை பெறவும் "ஸ்ரீ விருக்ஷ பீடம்" ஐயா லக்ஷ்மி தாச ஸ்வாமிகளை தொடர்பு கொள்ளவும்.

கர்மவினை பலன்களை கொடுக்கும் பணியை நவ கிரகங்கள் செய்கின்றன, நவ கிரங்களையும் இயக்கும் அதிதெய்வங்கள் உண்டு, நவ கிரகங்களை வழிபடுவதால் எந்த பலனையும் நவ கிரகங்கள் தாமாக மாற்றிவிட இயலாது, நவ கிரகங்களை இயக்கும் அதிதெய்வங்கள் மட்டுமே உங்கள் கர்ம பலனை மற்ற இயலும். இங்கு ஒரு உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எந்த சித்தர்களும், ஞானிகளும் வந்து நவ கிரகங்களை வழிபடவில்லை என்பது உண்மைதானே.



நவகிரகங்களுக்கு உரிய அதிதெய்வங்கள் :

சூரியன் - சிவன்,
சந்திரன் - பார்வதி,
செவ்வாய் - சுப்பிரமணியர்,
புதன் - விஷ்ணு,
வியாழன் - பிரம்மா,
சுக்கிரன் - மஹா லக்ஷ்மி,
சனி - எமன்,
ராகு - பத்ரகாளி,
கேது - இந்திரன்.

   நமது ஜாதக நிலைகளை நன்கு ஆராய்ந்து நமது கர்ம அதிதெய்வங்களை கண்டறிந்து முறையாக வழிபட்டு வந்தால் நமக்கு கர்ம வினையினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து தப்பி நல்வாழ்வினை அடைய முடியும்.

அஷ்ட கர்ம மூலிகைகள்

   

 

அஷ்ட கர்ம மூலிகைகள்


                                  

                                      


       பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம் தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பல காரியங்களில் வெற்றியடைந்துள்ளனர். அதன்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகள் அஷ்டகர்மங்கள் (எட்டு சித்திகள்) செய்ய ஒரு சித்திக்கு எட்டு மூலிகைகள் என அஷ்ட சித்திக்கு அறுபத்தி நான்கு மூலிகைகள் ஆகும். அஷ்ட கர்மம் என்பது ஆகர்ஷனம், உச்சாடனம், தம்பனம்,பேதனம், மாரணம், மோகனம், வசியம், வித்வேஷனம் ஆகும். இந்த அஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம். 
          
ஆகர்ஷனம் 

                       நமக்கு தேவையானதை இருக்கும் இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும் வித்தையாகும்.இதற்கு உதவும் மூலிகைகள் வேளை, உள்ளொட்டி, புறவொட்டி, சிறு  முன்னை, குப்பைமேனி, அழுகண்ணி, சிறியாநங்கை, எருக்கு என எட்டு மூலிகைகளாகும். இதில் 
                
                 மிருகங்களை அழைப்பதற்கு - வேளை, குப்பைமேனி.
                 பெண்களை அழைப்பதற்கு - உள்ளொட்டி, அழுகண்ணி.
                 அரசர் பிரபுக்களை அழைப்பதற்க்கு - சிறுமுன்னை.
                 துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
                 தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
                 அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.
                 

உச்சாடனம் 
     
                 பேய், பிசாசு, கெட்ட ஆவிகள், நோய்கள், தீமைகளை விரட்டியடித்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் - பேய்மிரட்டி, மான்செவிகள்ளி, தேள்கொடுக்கி, கொட்டைக்கரந்தை, வெள்ளை கண்டாங்கத்திரி, மருதோன்றி, பிரம்மதண்டு, புல்லுருவி ஆகும். இதில் 
                           
                           மிருகங்களை விரட்ட - பேய் மிரட்டி.
                           எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
                           உடலில் ஏறிய விஷங்களை விரட்ட- தேள்கொடுக்கி.
                           நீர்வாழ் உயிரினங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
                           கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்திரி.
                           பூத பைசாசங்களை விரட்ட -மருதோன்றி, புல்லுருவி.
                           பிறர் நமக்கு சியும் தீமைகளை விரட்ட - பிரம்மத்தண்டு.    
                 

  பேதனம் :

                   ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல்,அதாவது ஒரு விஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பை வேறுபட்டு போக்கும்படி செய்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள் வட்டதுத்தி, செம்பசலை, மாவிலங்கு, பாதிரி, கோழியாவரை, சீந்தில்கொடி, புடலங்கொடி, ஆகாயத்தாமரை ஆகும்.


                          நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி, 
                          மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசலை,
                          பூத,பிசாசுகளை பேதிக்க - மாவிலங்கு, 
பாதிரி, 
                          துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை, 
                          எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி, 
                          பெண்களை பேதிக்க - புடலங்கொடி, 
                          வியாதிகளை பேதிக்க - ஆகாயத்தாமரை.

                        

  மாரணம்  : 

                                       கொல்வது அல்லது மாற்றுவது.உலோகங்களை அதன் தன்மையில் இருந்து மாற்றுவது. எதிரிகளுக்கு நோயை உண்டாக்கி கொல்வது, இதற்கு பயன்படும் மூலிகைகள் - நச்சுப்புல், நிர்விஷம், சித்ரமூலம், அம்மன் பச்சரிசி, கார்த்திகை கிழங்கு, மருதோன்றி, கருஞ்சூரி, நாவி ஆகும்.
                  
                  மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல், நிர்விஷம்.
                  வியாதிகளை மாரணம் செய்ய - சித்திரமூலம், கருஞ்சூரை.
                  கண்ணாடிகளை மாரணம் செய்ய - அம்மன் பச்சரிசி.
                  மிருகங்களை மாரணம் செய்ய - மருதோன்றி, கார்திகை கிழங்கு.                  

மோகனம் 
                                      
    பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது. இதற்கு பயன்படும் மூலிகைகள் பொன்னூமத்தை, கஞ்சா வேர், வெண்ணூமத்தை, கோரைக்கிழங்கு, மருளூமத்தை, ஆலமர விழுது, நன்னாரி, கிராம்பு ஆகும்.    
                   
                      பெண்களை மோகிக்க - பொன்னூமத்தை.
                      பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்.
                      உலகத்தை மோகிக்க -வெண்ணூமத்தை.
                      விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு.
                      தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை.
                      அரசர்களை மோகிக்க -கிராம்பு.
                      எல்லாவற்றையும் மோகிக்க -நன்னாரி.

  வசியம் :                     

                     எல்லவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாகவும் இருக்க வைத்தல். இதற்கு பயன்படும் மூலிகைகள்  சீதேவிச்செங்கழுநீர், நிலவூமத்தை, வெள்ளை விஷ்ணுகிரந்தி, கருஞ்செம்பை, வெள்ளை குன்றி மணி, பொண்ணாங்கண்ணி, செந்நாயுருவி, வெள்ளெருக்கு ஆகும்.

                          இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
                          பெண்வசியத்திற்கு - நிலவூமத்தை,
                          லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
                          ஜனவசியத்திற்கு - கருஞ்செம்பை, விஷ்ணுகிரந்தி,
                          விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றிமணி,
                          சாபம், வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.


வித்துவேஷனம் : 
                                                            பகையை உண்டாக்குதல். இதற்கு பயன்படும் மூலிகைகள் கருங்காக்கணம், வெள்ளை காக்கணம், திருகு கள்ளி, ஆடுதின்னாப்பாளை, பூனைக்காலி, கீழாநெல்லி, ஏறண்டம், சிற்றாமணக்கு ஆகும்.
                        அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
                        தேவர்களுக்கு - வெள்ளை காக்கணம், திருகுகள்ளி,
                        பூத பைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
                        பெண்களுக்கு நோய் உண்டாக்க - பூனைக்காலி,
                        எதிரிகளால் உண்டாகும் ஆபத்தை தடுக்க - கீழாநெல்லி,
                         உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு. 

தம்பனம் : 
                                              தடுத்து நிறுத்துதல், விலங்குகளின் வாயை கட்டுதல். இதற்கு பயன்படும் மூலிகைகள் - கட்டுக்கொடி, பால்புரண்டி, பரட்டை, நீர்முள்ளி, நத்தைசூரி, சக்தி சாரணை, பூமிச்சக்கரை, குதிரைவாலி ஆகும்.
                        
                        விந்துவை கட்ட - கட்டுக்கொடி, பால்புரண்டி, நீர்முள்ளி,
                        தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர - கட்டுக்கொடி,
                        பெண்களின் முலைப்பாலை கட்ட - பால்புரண்டி,
                        வயிற்றைப் போக்கை நிறுத்த - பரட்டை,
                        கற்களை கரைக்க - நத்தைச்சூரி,
                        செயல்களை செயல்படாமல் கட்ட - சக்தி சாரணை,
                        திரவத்தை கட்டி திடமாக்க - பூமிச்சர்கரை கிழங்கு,
                        கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி.

       
                          மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி, சாப நிவர்த்தி செய்து, பிராண மந்திரமும் மூல மந்திரமும் உருவேற்றி பறித்து வந்து அஷ்டகர்ம செயல்களை செய்ய அனைத்து காரியங்களும் ஜெயமாகும். 
                          

                                                     

ஏவல் பில்லி சூன்யம் செய்வினை

     



ஏவல் பில்லி சூன்யம் செய்வினை  




                                                                ஏவல், பில்லி, சூனியம், செய்வினை எந்திர தகடுகள் மூலம் உங்களுக்கு செய்து வைக்கப்பட்டிருப்பின் அதை அறிய மருதாணி செடியின் காய்ந்த விதைகளை பொடி செய்து அதனுடன் சாம்பிராணி கலந்து வீடு முழுவதும் புகை போட்டு வரவும் அவ்வாறு மூன்று நாட்கள் புகை போடவும். அப்படி புகைப் போட்டு வரும் நாளில் உங்களுக்கோ உங்களின் குடும்பத்தினருக்கோ உடல்நிலையில் தொந்தரவுகள் ஏற்பட்டால் உங்களுக்கு ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை மூலம் பதிப்பு இருப்பது உறுதி. ஏவல், பில்லி, சூனியம், செய்வினை வாயிலாக ஏவப்பட்ட துஷ்ட ஆவிகள் இருப்பது உறுதி,


                                                                    அதேபோல் தின்பண்டங்கள், ஊணவின் மூலம் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை மருந்து உடலில் கொடுக்கப்பட்டு அதனால் உங்களுக்கு பாதிப்பு இருப்பின் அதை உறுதி படுத்த முருங்கை இலையை சாறு எடுத்து உள்ளங்கையில் விட சாறு உறைந்து கெட்டி பட்டால் உடலில் மருந்து இருக்கிறது என அறியவும். அதுபோல் பாதிப்பு இருப்பின் உடனே பீடத்தினை தொடர்பு கொள்ளவும்.


                                                                    கண்திருஷ்டியால் பாதிப்படைந்தால் ஐந்து கற்பூரத்தை இரவு நேரத்தில் தலையை வலம், இடமாக மூன்றுமுறை சுற்றி முச்சந்தியில் ஏற்றி விட்டு திரும்பி பார்க்காமல் வீடு போக முறியும்.



                                                                      இவைகள் ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, கண் திருஷ்டி நீக்கும் எளிதான முறைகள் தான் என்றாலும் குருவால் தொட்டு காட்டப்படாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது என்பது மூத்தோர் வாக்கு ஆகவே சரியான குருவின் நல் துணை கொண்டு அவரின் தாள் வணங்கி தீட்சை பெற்று செய்தால் மட்டுமே பலன் தரும் என்பதை அறியவும். தானே முயன்று பின் விளைவை அனுபவித்தோர் பலர் எனவே குருவின் துணை நாடுவதே நலமும், வளமும் தரும்.

GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம்

   

GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் 

                                      


               GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் மூன்று ருத்திராட்சங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து உருவாவது கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் ஆகும்.  GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் இந்த ருத்திராட்சத்தை கழுத்தில் அணியலாம், GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் கோவிலிலும் வைக்கலாம். GAURI SHANKAR PARVATHI RUDRAKSH - கௌரி சங்கர் பார்வதி ருத்திராட்சம் இதனை  பயன்படுத்துபவர்களுக்கு  நல்ல அதிர்ஷ்டம், செல்வம், நல்ல அறிவாற்றல், ஆன்மீக சக்தி மற்றும் வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அளிக்கிறது.

GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம்

   

GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் 

                                                  

                                                     GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் என்பது இரண்டு ருத்ராட்சங்கள் ஒன்றாக இணைந்து உருவாவது. GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் இது இறைவன் சிவன் மற்றும் பார்வதி எனப்படுகிறது. GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் இதனை வீட்டில் வைத்தே பூஜிக்க வேண்டும். GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் கழுத்தில் அணியக்கூடாது. GAURI SHANKAR RUDRAKSH - கௌரி சங்கர் ருத்ராட்சம் வைத்திருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம், செல்வம், நல்ல அறிவாற்றல் மற்றும் வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் வழங்குகிறது.

ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய்

   

ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் 

                                               


                 ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் என்பது செல்வத்தின் சின்னமாகும். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் மஹாலக்ஷ்மியின் கடாச்சம் கொண்டது. ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் இது அரிதாகவே காணப்படுகிறது. பல லட்சம் தேங்காய்களில் ஒன்று கிடைப்பது அதிசயம். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் தீபாவளி தினத்தில் பல தாந்த்ரீக வேலைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் இதனை சித்தி செய்த பிறகு இதன் மூலம் ஒருவர் எல்லாவற்றையும் பெற முடியும். கனகதாரா மஹாலக்ஷ்மி மந்திரத்தை உருவேற்றிய  மூலம் வியாபாரONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் வளர்ச்சி, செல்வம், குடும்பத்தில் செழிப்பு மற்றும் வளம், அபரிமிதமான செல்வ பெருக்கம் உண்டாகும். ONE EYE COCONUT - ஒரு கண் தேங்காய் வியாபாரிகள் இதனை பணப்பெட்டியில் வைப்பதன் மூலம் நல்ல வியாபார வளர்ச்சியும் அபரிமிதமான செல்வத்தையும் அடையலாம்.

ஆண் பெண் வசிய விளக்கம்

 


   

 

                                                     ஆண் பெண் வசிய விளக்கம்




                        சில குடும்பங்களில் கணவன் - மனைவியிடையே ஒற்றுமையே இருக்காது. ஏனென்றால் நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் எனும்படி கணவன் சொல் கேளாமல், கணவன் வார்த்தைகளை மதியாமல் நடக்கும் மனைவிகள் ஏராளம். இதனால் வாழ்வில் நிம்மதியின்றி தவிக்கும் கணவர்களின் தவிப்பு வர்ணிக்க இயலாது.

                              விரும்பிய கன்னிகைகளை மயக்கி காதலில் விழ வைக்க ஏங்கி தவிக்கும் காளையர் பலர். அலுவலகங்களில் நமக்கு மேலே உயர் பதவி வகிக்கும் பெண்களால் அடையும் துன்பங்கள் பல...


                    இப்படி பிறந்தது முதல் இறக்கும் வரை தாய், தாரம், சகோதரி, உடன் பணிபுரிவோர், உயரதிகாரி, காதலி, நண்பர்கள் என சந்தித்து பழக வேண்டிய சூழல்கள் பல, இதனால் இவர்களால் அடையும் இன்னல்கள் பல..


                         இச்சூழலில் செல்லும் இடமெல்லாம் எந்த பெண்களை கண்டாலும் அவர்கள் நமக்கு வசியப்பட்டால் நமக்கு வேண்டிய உதவிகளை செய்தால் நம் வாழ்க்கை இனிமையாக மாறும். இதற்கு நல்ல வசியம் ஒன்றை சொல்லும்படி வாசகர்கள் கேட்டதால் இதனை விரிவாக சொல்கிற்றேன்.


ஆண் பெண் வசிய விளக்கம் : ஆடை வசியம்


வசியம் செய்ய வேண்டிய நபர் உபயோகப்படுத்திய ஆடைகளை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் பெண் வசிய விளக்கம் : தலைமுடி வசியம்

வசியமாக்க வேண்டியவரின் தலைமுடியினை கொண்டு வசியம் செய்யும் முறை.





ஆண் பெண் வசிய விளக்கம் : எண்ணெய் வசியம்


ஐவகை எண்ணையை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் பெண் வசிய விளக்கம் : ஐவகை வேர் வசியம்



ஐவகை வேர்களை கொண்டு வசியம் செய்யும் முறை.





ஆண் பெண் வசிய விளக்கம் : சிறுநீர் வசியம்



சிறுநீரை கொண்டு வசியம் செய்யும் முறை.


ஆண் பெண் வசிய விளக்கம் : தாலிப்பனை ஓலை வசியம்


தாலிப்பனை ஓலையை கொண்டு வசியம் செய்யும் முறை.



ஆண் - பெண் வசியத்தில் இன்னும் பல முறைகள் உள்ளன. இருப்பினும் வாசகர்களின் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக சில முறைகளை மட்டும் இங்கே விளக்கியிருக்கிறேன். இது தவறான முறையில் பயன்பட்டு விட கூடாது என்பதால் தான் இங்கு வசிய முறைகளை தெளிவாக எழுதவில்லை.





                                                                                                    
                                             ஆண் பெண் வசிய விளக்கம்

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க