புதன், 24 ஜூன், 2015

மூன்று வித பஞ்சாட்சரம்

                                                மூன்று  வித பஞ்சாட்சரம்
                           
                      


                                        நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம் 
                                        சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம் 
                                        சிவ சிவ - காரணபஞ்சாட்சரம்


ஸ்தூல பஞ்சாட்சரம் 

                                         "நமசிவய" எனும் ஸ்தூல பஞ்சாட்சர மந்திரம் ஓம் என்னும் பிரணவத்துடன் சேர்த்து "ஓம் நமசிவய" என்று உச்சரிப்பதே சாஸ்திர மரபு ஆகும். இம்மந்திரம் பஞ்சபூதங்களின் ஆற்றலை குறிப்பதும் கட்டுப்படுத்துவதும் ஆகும். இந்த மந்திரத்தை சித்தி செய்வதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு, நம் ஐம்புலன்களும் கட்டுப்படும். பஞ்சபூதங்களில் இம் மந்திர ஆற்றல் 



ந – நிலம் (மஞ்சள் நிறம்) - கிழக்கு நோக்கிய முகம்,தத்புருஷம் 
ம – நீர் (கருப்பு நிறம்) - தெற்கு நோக்கிய முகம், அகோரம். 
சி – நெருப்பு (புகை நிறம்) - மேற்கு நோக்கிய முகம், சத்யோஜாதம். 
வ – காற்று (பொன் நிறம்) - வடக்கு நோக்கிய முகம், வாமதேவம். 
ய – ஆகாயம் (சிவப்பு நிறம்) - ஆகாய நோக்கிய முகம், ஈசானம். 


                                          பஞ்ச பூதங்களையும் குறிக்கும் ஐந்து நிறங்களால் ஆனா பஞ்ச லிங்கங்களும் + பாதாள லிங்கமும் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் விரைவில் பிரதிஷ்ட்டை செய்ய பணிகள் நடை பெற்று வருகிறது 



சூட்சும பஞ்சாட்சரம்


                                    "சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.



அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”
“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”
திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”


காரண பஞ்சாட்சரம்


                                       சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும். சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

“சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவ கதி தானே”


மச்சம் யோக பலன்கள்

                  

                                             மச்சம் யோக பலன்கள்


1. இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.

2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

5. வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

6. வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

7. இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

11. இடது கண்ணின் வலப்புறத்தில் மச்சமிருந்தால் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

12 இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

13 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.

14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

17. மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

18. நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

19. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

20. மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

21. மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

22. மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

23. வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

24. இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

25. வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

26. இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

27. இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

28. தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

29. கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

30. கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

31. இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

32. வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

33. மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

34. வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

35. வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

36. வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

37. தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

38. வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

39. வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

40. இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள் 
41. முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

42. முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

43. முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.


ஞாயிறு, 21 ஜூன், 2015

வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்

                         
                               வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்


                                 ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று வீடு, மனை(காலி இடம்), பூமீ, வாகனம் ஆகியவை. இந்த அத்யாவஸ்ய தேவைகளை அடைய வாழ்வில் பல போராட்டங்களை சந்திக்கிறான். வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் ஆகியவற்றை அடைந்திட தன் வாழ்நாளில் ஒரு பகுதியை உழைப்பிலேயே கழிக்கிறான். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தும் வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் வாங்க முடியாமல் தன் ஆசை வெறும் கனவாய், கைக்கு எட்டா கனியாய் போகிறது என்று மனம் நொந்து வாழ்பவர்கள் எத்தனை பேர்? வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் எனக்கும் கிடைக்க என்ன பரிகாரம் செய்வது? என கேட்டு ஜோதிடர்களை நாடுபவர்கள் எத்தனை பேர்? உன்னையே நம்பி தினமும் உருகி தொழுது வழிபடுகிறேனே எனக்கு ஏன் வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் வாங்கும் யோகத்தை தர மறுக்கிறாய் உன்னையே கதி என்னும் என்னை சோதிக்கலாமா என்று தெய்வத்திடம் முறையிடுபவர்கள் எத்தனை பேர்?


                                இவ்வாறு வாழ்வில் தான் நினைக்கும் வசதியில் வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் வாங்கவைக்கும் அற்புத எந்திரம் தான் நம் முன்னோர்கள் அருளிச் சென்ற வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம். எவ்வளவு ஏழ்மை நிலையில் இருப்பவரையும் ஒரே வருடத்திற்குள் வீடு, மனை (காலி இடம்), பூமீ, வாகனம் வாங்க வைக்கும் அற்புத எந்திரம் தான் வீடு மனை வாகன யோகம் தரும் எந்திரம். நமது சர்வ சக்தி விருட்ச பீடம் ஐயா ஸ்ரீ லக்ஷ்மி தாச ஸ்வாமிகள் திருக்கரங்களால் உருவாக்கி பூஜையில் உருவேற்றிய சக்தி மிக்க எந்திரம் தான் வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம். வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம் வாங்க இன்றே முன்பதிவு செய்து பயன் பெறுங்கள்

சனி, 23 மே, 2015

வினாயகர் அகவல்


                                        சமய குரவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் இப்பூவுலகிற்கு வந்த நோக்கம் முடிந்து கயிலாயத்திலிருந்து வந்த வெள்ளை யானையில் ஏறி கயிலாயம் செல்லலானார். இதனையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் என்ற சுந்தரரின் உற்ற தோழர் தானும் சுந்தரருடன் கயிலை செல்ல விரும்பி தனது குதிரையில் ஏறி அதன் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஓதி சுந்தரரை பின்பற்றி அவருடன் கயிலாயம் செல்லலானார்.

                             இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட அவ்வையார் தானும் அவர்களுடன் கயிலாயம் செல்ல விரும்பினார். இதற்காக தான் செய்து கொண்டிருந்த வினாயகர் பூசையை அவசர அவசரமாக செய்யலானார். அப்பொழுது வினாயகர் பெருமான் நேரில் தோன்றி “அவ்வையே ! நீ அவசரப்படாமல் எப்பொழுதும் போல் நிதானமாக உனது பூசைகளைச் செய். அவர்களிற்கு முன்னே உன்னை நான் கயிலாயத்திற்கு கொண்டு சென்று சேர்க்கிறன் ” என்று கூறினார். அவ்வையாரும் நிதானமாக பூசைகளைச் செய்து வினாயகர் அகவலையும் பாடினார். வினாயகரும் தான் கூறியபடி அவ்வையாரை தனது தும்பிக்கையினால் தூக்கி சுந்தரரிற்கும்,சேரமானிற்கும் முன்பாக கயிலாயத்தில் சேர்ப்பித்தார்.

                                        வினாயகர் அகவல் வினாயகப் பெருமானின் அழகையும் பெருமைகளையும் அற்புதமாக விளக்குவதுடன், யோக முறைகளில் ஒன்றான குண்டலிணி யோகம் பற்றியும் சிறப்பாக விளக்குகிறது. அகவுதல் என்றால் மனம் ஒடுங்கிய நிலையில் ஓதுதல் ஆகும். வினாயகர் அகவலின் மொழி எளிமையும், இசைப் பண்பும், மந்திர ஆற்றலும் மிகவும் சிறப்பானதாகும். மொழி எளிமைக்கு எடுத்துக்காட்டாக அகவலின் முதல்வர் வினாயகரை மனம் ஒன்றி இந்த அகவலை ஓதினால் அவரின் தோற்றத்தை நம் கண் முன்னே கொண்டு வரக் கூடிய அளவிற்கு தற்காலத்தில் வழக்கத்தில் உள்ள சொற்கள் கையாளப்பட்டிருக்கிறது. தனக்கு தெரிந்த மொழியில் ஓதுகின்ற பக்தனின் உள்ளத்துடன் ஒன்றி சொற்கள் சொல்லப் பட வாய்ப்புகள் அதிகம். இதனால் மன ஒருமுகப்பாடு சுலபமாக கிடைக்கிறது. இதனையே மாணிக்கவாசகர் “சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

                              இப்பாடலின் இசைப்பண்பானது அகவலை இசையுடன் ஓதும் போது உள்ளத்தின் உணர்ச்சி அலைகளை தட்டி அலை அலையாக எழுந்து பெருகச் செய்கிறது. இந்த அலைகள் நம்மைச் சுற்றியுள்ள வான் மண்டலத்திலுள்ள அதே அதிர்வினையுடைய அலைகளை அசைக்கத் தொடங்குகிறது. இதனால் அகமும் புறமும் இசைந்து ஒலிக்கத் தொடங்குகிறது. இப்படி அகமும் புறமும் இசைந்து ஒலிப்பதே சித்தர்கள் காட்டிய ஞான வழியாகும். ஒரே அதிர்வெண்ணைக் கொண்ட இரண்டு பொருட்களில் ஒன்று அதிரும் போது மற்றது தானகவே அதிரும் என தற்கால விஞ்ஞானம் ஏற்றுக்கொள்கிறது.


வினாயகர் அகவல் :-

சீதக்களபச் செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வண்ண மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும் பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடி கொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிறு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி நூல் திகழொளி மார்பும்


                                                  குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின்நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமானஇசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண்கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும்அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியானதந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப்பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்தபுயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால்உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்துசெய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்றமார்பும்




சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுதென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்தே
திருந்திய முதல் ஐந்தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் னுளந் தன்னில் புகுந்து
குருவடிவாகிக் குவலயந்தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளி
கோடாயுதத்தால் கொடு வினை களைந்தே


                             சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும்நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகியமூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினைவாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ளவேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே,மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்துஎறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்துஎழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சரமந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடையஉள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சைமுறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையானநிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல்என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்குஅருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளைஅகற்றி




உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டா ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்து அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக்கு அருளி
மலமொரு மூன்றின மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறு ஆதாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்தி பேச்சுரை அறுத்தே



                         வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனதுகாதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாதஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனியகருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்துபொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினைஇனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும்ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்றஇரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளைநீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்குதலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்றமூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து,உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும்ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2)சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞைஎன்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாகபேச்சில்லா மோன நிலையை அளித்து,




இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையில் சுழுமுனை கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலணி அதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டி


                  இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்கநாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியானசுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக்காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்றுமண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழுபாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசாமந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி,மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால்எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ளசகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின்நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின்இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமானவிசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில்உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி,



சண்முக தூலமும் சதுர்முக சூக்குமமும்
எண்முகமாக இனிதெனக்கு அருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்கு
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி யென் செவியில்


                            உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்குஎளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம்வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன்மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபாலவாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாகஎனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாதபக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களைதெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றேஅடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்தஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி




எல்லையில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள் வழிகாட்டி
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலிற்கும் அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடும் மெய்த் தெண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையை தந்து எனை ஆண்ட
வித்தக வினாயக விரை கழல் சரணே!

                                                 அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி அருள்வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி,சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம்பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என்உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும்நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன்என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையானபொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையைஎனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப்பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.



எல்லாம் வல்ல வினாயகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் சகல வளமும் சகல நலமும் பெறுவோமாக!

புதன், 29 ஏப்ரல், 2015

விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை

                             விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை
                                                          நவகிரகங்களால் உண்டாகும் பாவங்களையும், தோஷங்களையும், அவயோகங்களையும், வாழ்வில் தோன்றும் துன்பங்களையும், துயரங்களையும், தரிதிரங்களையும் நீக்கி நவகிரகங்களின் ஆசியை பெற்று வாழ்வில் எந்நேரமும் சுபிட்சமாகவும் வளமுடனும், மன நிம்மதியுடனும், உடல் நலமுடனும் வாழ வைக்கும் ஒரு அபூர்வ பூஜை தான் விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை.

நவகிரக தாந்த்ரீக பூஜை செய்ய தேவையான பொருள்கள் :
1. பஞ்சமுக குத்து விளக்கு ஒன்று,

2. ஐந்து விதமான எண்ணெய் கலவை (நெய், விளக்கெண்ணை , இல்லுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்)

3. ஐந்து திரிகள்,

4. பல வண்ண உதிரி மலர்கள்,

5.ஐந்து விதமான வாசனை உடைய ஊதுபத்திகள்,

6. தூபமிட சாம்பிராணி,

7. வெண்பொங்கல்,

8. சர்க்கரை பொங்கல்,

9. மனைப்பலகை ஒன்று,

ஆரஞ்சு நிற கதர் துணி ஒரு மீட்டர்.


                                           வளர்பிறை ஞாயற்றுக்கிழமை அன்று விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜையை செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பூஜையை முடிக்க வேண்டும். குத்து விளக்கை மனைப்பலகையில் வடக்கு நோக்கி வைத்து எண்ணெய் உற்றி தீபமிடவும். தீபத்தின் முன் ஆரஞ்சு வண்ண துணியை விரித்து வைக்கவும். சாம்பிராணி, ஊதுபத்தி தீபமிடவும். தீபத்தின் முன் வாழை இலை விரித்து சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் படையலிடவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கிழ்கண்ட மந்திரங்களை சொல்லவும். மந்திரங்களை சொல்லும் போது கொஞ்சம் மலர்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஆரஞ்சு வண்ண துணியில் சமர்பிக்கவும். நவகிரகத்துக்கும் இவ்விதமாக பூஜை செய்யவும்.


1. சூரியன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சூர்யாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

2. சந்திரன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சந்த்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

3. செவ்வாய் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ பொளமாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

4. புதன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ புதாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

5. குரு :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ குருவே நமஹ" - 21 முறை சொல்லவும்.

6. சுக்கிரன் :

"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சுக்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

7. சனி :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சனியே நமஹ" - 21 முறை சொல்லவும்.


8. இராகு :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ இராகுவே நமஹ" - 21 முறை சொல்லவும்.


9. கேது :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ கேதுவே நமஹ" - 21 முறை சொல்லவும்.



                               விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை முடிந்தபின் பிரசாதத்தை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மட்டுமே சாப்பிடவேண்டும். வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜை செய்த மலர்களை ஆரஞ்சு வண்ண துணியில் மூட்டை போல் கட்டி பூஜை அறையில் வைத்து கொள்ளவும். நவகிரக ஆசிகள் எப்போதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் துணை நிற்கும். தாந்த்ரீக பூஜைகள் செய்யும் முன் முன்பயிர்ச்சிகள் (ஒய்வு பயிற்சி, முத்திரை பயிற்சி, மூச்சு பயிற்சி) கட்டாயம் செய்ய வேண்டும்.





வியாழன், 16 ஏப்ரல், 2015

விதியை வெல்லும் தாந்த்ரீக முறை

                                      விதியை வெல்லும் தாந்த்ரீக முறை

                                   நமது முன்னோர்கள் நாம் வளமுடனும் நலமுடனும் சர்வ சித்திகளையும் பெற்று வாழ அரிய பல கலைகளை அருளிச் சென்றுள்ளனர். அந்த வகையில் மந்திர சாஸ்திரத்தின் ஒரு அங்கமாக விளங்குவது தாந்த்ரீக கலையாகும். மாந்த்ரீக கலையில் மந்திரங்களை ஆயிரம், இலட்சம், கோடி என்ற எண்ணிக்கைகளில் உருவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் நாம் நினைத்த காரியம் சித்தியடையும், ஆனால் தாந்த்ரீகம் என்பது மிகவும் எளிமையானது, ஒரு சில நாட்களிலேயே பலன் தரக்கூடியது, பொருள் செலவும் மிகவும் குறைவு, பூஜை செய்யும் நேரமும் மிகவும் குறைவு அதாவது பூஜை நேரம் நிமிடங்களில் அடங்கும். சிவன் - பார்வதியிடம் இருந்து ஞான பழத்தினை அடைவதற்காக முருகப்பெருமான் உலகையே வலம் வந்தார், ஆனால் விநாயக பெருமானோ தாய் - தந்தையே வலம் வந்து ஞான பழத்தினை எளிமையாக பெற்றார். இந்த புராணத்தை உற்று பார்த்தோமானால் முருகபெருமான் உலகையே வலம் வந்த செய்கையை போல கடினமானது மாந்த்ரீகம். ஆனால் தாய் - தந்தையையே வலம் வந்து விரைவாக எளிமையாக ஞான பழத்தினை பெற்றது போல எளிமையானது தந்த்ரீகம். இந்த தாந்த்ரீக முறையின் மூலமாக நம் வாழ்வில் தோன்றும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வினை காணலாம். இந்த தாந்த்ரீக முறைகளை தகுந்த தாந்த்ரீக குருவிடம் கேட்டறிந்து, தாந்த்ரீக குருவின் ஆசியும் பெற்று, நம் காரியங்களுக்கு உண்டான தாந்த்ரீக முறைகளை செய்து உடனடி பலன் பெறலாம், இந்த தாந்த்ரீக முறையின் மூலமாக எந்தெந்த காரியங்களை நாம் சாதித்து கொள்ள இயலும் என்ற பட்டியலை இங்கே விரிவாக காணலாம்.

1. செல்வவளம் பெருகி நிலைக்க,

2. எண்ணியதெல்லாம் கிடைக்க,

3. தேகசக்தி - ஆயுள் விருத்தி பெற,

4. விதியையும் சாதகமாக்க நவகிரக பூஜை,

5. சர்வ தெய்வ, தேவதை, யட்சணி வசியம்,

6. செல்வந்தராக்கும் மகாலட்சுமி உபாசனை,

7. வீடு வாகன யோகம் பெற,

8. நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற,

9. செல்வம் தரும் அதிர்ஷ்ட்ட மணிபர்ஸ்,

10. ஆண் - பெண் தகாத உறவுகளை துண்டிக்க,

11. விபத்து கண்திருஷ்ட்டியில் இருந்து பாதுகாப்பு பெற,

12. அதிர்ஷ்டம் பெருக,

13. சர்வ லோக வசியம்,

14. சர்வ லோக வசிய விபூதி,

15. காரிய சித்தி பெற விபூதி,

16. முகராசி பெற,

17. செய்தொழில், வியாபாரத்தில் பணம் கொழிக்க,

18. செய்தொழிலில் பணம் கொழிக்க தனவசிய பிரயோகம்,

19. சகல காரிய சித்திக்கும் சர்வ வசிய விபூதி,

20. செல்வ செழிப்புக்கு மணிப்ளாண்ட் முறை,

21. கண்திருஷ்டி, தீயசக்திகளை விரட்ட,

22. எதிரிகளை நம் வழிக்கே வராமல் விரட,

23. பகையான உறவை நட்பாக மாற்ற,

24. கொடிய எதிரிகளை அழிக்க,

25. கொடிய நோய்களில் இருந்து விடுபட,

26. தீய எதிரிகளை குடுவைக்குள் அடைக்க,

27. ஏவல், பில்லி, சூனியம், செய்வினைகளை வைத்தவர்களுக்கே திருப்பிவிட,

28. சத்ருவை தாந்த்ரீகத்தால் கட்ட,

29. பூத, பிரேத, ஏவல்களை விரட்ட,

30. அடகு நகையை மீட்க,

31. கல்வி, கேள்விகளில் அறியாததை உணர,

32. ராகு - கேது, காலசர்ப்ப தோஷம், நாக தோஷத்தில் இருந்து விடுபட,

33. புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் அடைய,

34. ஆண் - பெண் வசிய பெ,

35. கல்வியில், போட்டி தேர்வுகளில் வெற்றி அடைய,

36. திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடைபெற,

37. நினைத்தது நிறைவேற,

38. வாரக்கடனும் வர,

39. கணவன் - மனைவி வசியம் பெற்று வாழ,

40. நினைத்த வசதிகளை அடைய,

41. அதிர்ஷ்ட தேவதை வசிய தைலம்,

42. எண்ணியது கிடைக்க,

43. விரும்பிய ஆண் - பெண் வாரிசு பெற,

44. விவசாயத்தில் விளைச்சல் பெருக,

45. வழக்குகள் நமக்கே வெற்றியாக,

46. அரசியலில் வெற்றி அடைய,

47. அரசியலில் உயர்பதவி பெற,

48. பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர,

49. வசிய இடுமருந்தை முறிக்க,

50. போதை அடிமைகளை முற்றிலும் திருத்த,

51. நினைத்த நாட்டுக்கு வேலைக்கு செல்ல,

52. கடன் தொல்லையில் இருந்து விடுபட,

                           போன்ற நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாந்த்ரீக முறையில் எளிய தீர்வினை அடைய நமது ஸ்ரீ விருட்ச பீட குருஜி ஸ்ரீ லக்ஷ்மி தாச ஸ்வாமிகளை தொடர்பு கொள்ளவும்.

சனி, 21 மார்ச், 2015

செல்வவளம் பெருகி நிலைக்க

                                           செல்வவளம் பெருகி நிலைக்க
                                                  இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய செல்வவளம் பெருகி நிலைக்க தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.

2. செல்வவளம் பெருகி நிலைக்க பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).

3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

4. செல்வவளம் பெருகி நிலைக்க ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).

5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

6. செல்வவளம் பெருகி நிலைக்க எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.

7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

8. செல்வவளம் பெருகி நிலைக்க மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.

9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

10. செல்வவளம் பெருகி நிலைக்க பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

12. செல்வவளம் பெருகி நிலைக்க குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

14. செல்வவளம் பெருகி நிலைக்க கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.

15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.

16. செல்வவளம் பெருகி நிலைக்க வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.

17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.

18. செல்வவளம் பெருகி நிலைக்க சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.











தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க