புதன், 20 ஆகஸ்ட், 2014

நவகிரக மந்திரங்கள்

நவகிரக மந்திரங்கள் 

சூரியன் : 

"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி 
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்"


"ஓம் ரவயே நம: 
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:


"பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்"


ஸ்லோகம் :


ஜபாகுஸும ஸங்காசம்
காஷ்ய பேயம் மஹத்துதிம்!
தமோரிம் ஸர்வபாபக்னம்
ப்ரனதொஷ்மின் திவாகரம்!!


                                                              ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தாமரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் - தாமிரம்.



சந்திரன் :


சந்திர காயத்ரி மந்திரம் :

"ஓம் பத்ம த்வஜாய வித்மகே 
ஹேம ரூபாய தீமஹி 
தன்னோ ஸோம பிரசோதயாத்"


ஸ்லோகம் :

ததிசங்க துஷாராபம்
க்ஷீரொர்தார்னவ ஸம்பவம்!
நமாமி ஸசிநம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!


                                             திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜனம் அளிப்பது விசேஷம். சந்திரனுக்குரிய தேவதை – துர்க்கா தேவி, தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ளரளி, ரத்தினம் – முத்து, உலோகம் - ஈயம்.


அங்காரகன் :



அங்காரக காயத்ரி மந்திரம் :

ஓம் வீர த்வஜாய வித்மஹே : 
விக்ன ஹஸ்தாய தீமஹி! 
தந்நோ பௌம ப்ரசோதயாத்! 


ஸ்லோகம் :

தரனி ஹர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காஞ்சன ஸந்நிபம் 
குமாரம் சக்தி ஹஸ்தஞ்ச மங்களம் ப்ரணமாம்யகம்


                                                           செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடு க்கலாம். செவ்வாய்க்குரிய தேவதை – முருகன், தானி யம் – துவரை, வஸ்திரம் – சிவப்பு, புஷ்பம் – சண்பகம், ரத்தினம் – பவழம்,உலோகம் – செம்பு.


புதன் :


ஸ்லோகம் :

ப்ரியங்குகளிகாஷ்யாமம்
ரூபேனா ப்ரதிமம் புதம்!
ஸௌமியம் ஸௌமிய குணோபேதம்
தம் புதம் ப்ரனமாம்யகம்!!



புத காயத்ரி மந்திரம் :

ஓம் கஜ த்வஜாய வித்மஹே: 
சுக ஹஸ்தாய தீமஹி 
தந்நோ புத ப்ரசோதயாத்.


                                                            புதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெருகும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரி – கட லை நிவேதனம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதை – விஷ்ணு, தானியம் – பச்சைப் பயிறு, வஸ்திரம் – பச்சைப்பட்டு, புஷ்பம் – வெண் காந்தள், ரத்தினம் -பச்சை, உலோகம் – பித்தளை.



குரு பகவான் 



குரு காயத்ரி மந்திரம் :

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே 
க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குரு ப்ரசோதயாத்.


ஸ்லோகம் :

தேவாநாஞ்ச ரிஷி நாஞ்ச
குரும் காஞ்சந ஸன்நிபம்!
புத்தி பூதம் திரிலோகாநாம
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

                                                       வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்தநாள் இந்நாளில் விரதம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தியாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக் கும். குரு பகவானின் தேவதை – ருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானியம் – கொண்டை கடலை, வஸ்திரம் – மஞ்சள், புஷ்பம் – முல்லை, ரத்தினம்– புஷ்பராகம்.



சுக்கிர பகவான்


சுக்ர காயத்ரி மந்திரம் :

ஓம் அச்வத்வஜாய வித்மஹே: 
தநுர்ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சுக்கிர ப்ரசோதயாத்.


ஸ்லோகம் :


ஹிமகுந்த மிருனாலாபம்
தைத்யாணாம் பரமம் குரும்!
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யகம்!!


                                                         வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படு கிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான்தொல்லை கள் நீங்கி, நல்லவை நடக்கும்.வெள்ளிக் கிழமை யன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய் வது நல்லபலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதை – வள்ளி, தானியம் – வெள்ளை மொச்சை, வஸ்திரம் – வெண்பட்டு, புஷ்பம் – வெண்தாமரை, உலோகம் – வெள்ளி, ரத்தினம் – வைரம்.




சனிஸ்வரர்



சனீஸ்வர காயத்ரி மந்திரம் :

ஓம் காக த்வஜாய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.


ஸ்லோகம் :

நீலாஞ்சன ஸமாபாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்!
சாயா மார்த்தான்ட ஸம்பூதம் 
தம் நமாமி சனீஸ்வரம்!!

                                                 சனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரை யாண்டு சனி இருந்தாலும், சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானை வணங்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனி பகவானுக்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம் – எள், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், ரத்தினம் – நீலம், புஷ்பம் – கருங்குவளை, உலோகம் – இரும்பு.



ராகு பகவான்




இராகு காயத்ரி மந்திரம் :

ஓம் நாக த்வஜாய வித்மஹே: 
 பத்ம ஹஸ்தாய தீமஹி 
தந்நோ ராக ப்ரசோதயாத்.


ஸ்லோகம் :

அர்த்தகாயம் மகாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்த்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம்ராஹும் ப்ரனமாம்யகம்!!


                                           ராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப்பயோகம் உள்ளவர்களும் ராகு விரதத்தை அனுஷ் டிக்கலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு இலு ப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதை – பத்ரகாளி, தானியம் – உளுந்து, ரத்தினம் – கோமேதகம், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், உலோகம் – கருங்கல், புஷ்பம் – மந்தாரை மலர்.



கேது பகவான்



"ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்"



பலாஷ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம்கேதும் ப்ரணமாம்யகம்!!


                                               கேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களு ம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக் கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேது விற்குரிய தேவதை – விநாயகர், தானியம் – கொள்ளு, வஸ்திரம் – பலகலர் கலந்த வஸ்திர ம், ரத்தினம்–வைடூரியம், புஷ்பம் – செவ்வல்லி, உலோகம் – துருக்கல்.



நவகிரக மந்திரம் :

"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹா".



சனி, 19 ஜூலை, 2014

அகத்தியர் திருவடிகள் 108 போற்றி

அகத்தியர் திருவடிகள் 108 போற்றி 
ஸ்ரீலஸ்ரீ அகத்திய மகரிஷி 


'ஓம் அகத்தீசப் பெருமானே போற்றி 
ஓம் அகிலம் போற்றும் அறிவுக்கடலே போற்றி
ஓம் அட்டமா சித்துகள் பெற்றவரே போற்றி 
ஓம் அகத்தியர் மலை மீது அமர்ந்தவரே போற்றி 
ஓம் தமிழ் முனியே போற்றி 
ஓம் இறைவனிடம் தமிழ் கற்றவரே போற்றி 
ஓம் தமிழின் முதல் தொண்டரே போற்றி 
ஓம் தமிழின் முதல் முனைவரே போற்றி 
ஓம் பொதிகைமலை மாமுனியே போற்றி 
ஓம் தவ சீலரே போற்றி 
ஓம் சிவ சீடரே போற்றி 
ஓம் கும்ப சம்பவரே போற்றி 
ஓம் நந்தீஸ்வரரின் சீடரே போற்றி 
ஓம் தன்வந்திரியிடம் மருத்துவம் பயின்றவரே போற்றி 
ஓம் தேரையருக்கு மருத்துவம் பயிற்றுவித்தவரே போற்றி
ஓம் காமேஸ்வரி மந்திர உபதேசம் பெற்றவரே போற்றி 
ஓம் வயதில் எல்லையில்லா சித்தரே போற்றி 
ஓம் குருவுக்கெல்லாம் மகா குருவே போற்றி 
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே போற்றி 
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 
ஓம் நவராத்திரி பூஜை கல்பம் இயற்றியவரே போற்றி 
ஓம் நயனவிதி என்ற கண் மருத்துவ நூல் எழுதியவரே போற்றி
ஓம் விட ஆருட நூல் தந்தவரே போற்றி 
ஓம் மூலிகை அகராதி அருளியவரே போற்றி 
ஓம் அகத்தியம் தந்த அருளாளரே போற்றி 
ஓம் அகத்தியர் காவியம் தந்தவரே போற்றி
ஓம் அகத்தியர் வெண்பா அருளியவரே போற்றி 
ஓம் அகத்திய நாடி அருளியவரே போற்றி 
ஓம் வைத்திய சிந்தாமணி தந்தவரே போற்றி 
ஓம் அகத்தியர் பஷிணி அருளாளரே போற்றி 
ஓம் அகத்திய சூத்திரம் படைத்தவரே போற்றி 
ஓம் அகத்திய ஞானம் தந்தவரே போற்றி 
ஓம் அகத்திய சம்ஹிதை அருளியவரே போற்றி 
ஓம் ஐந்து சாஸ்திரம் தந்தவரே போற்றி 
ஓம் கிரியை யோகம் படைத்தவரே போற்றி 
ஓம் ஆறெழுத்து அந்தாதி அருளியவரே போற்றி 
ஓம் வைத்திய கௌமி எழுதியவரே போற்றி 
ஓம் வைத்திய ரத்னாகரம் எழுதியவரே போற்றி 
ஓம் வைத்திய கண்ணாடி தந்தவரே போற்றி 
ஓம் வைத்திய ரத்ன சுருக்கம் அளித்தவரே போற்றி 40
ஓம் வாகட வெண்பா அருளியவரே போற்றி 
ஓம் சிவா சாலம் தந்தவரே போற்றி 
ஓம் சக்தி சாலம் தந்தவரே போற்றி 
ஓம் சண்முக சாலம் தந்தவரே போற்றி 
ஓம் சமரசநிலை ஞானம் போதிதவரே போற்றி 
ஓம் சக்தி சூத்திரம் சமைத்தவரே போற்றி 
ஓம் இராமனுக்கு சிவகீதை அருளியவரே போற்றி 
ஓம் ஆதித்ய ஹிருதயம் அருளியவரே போற்றி 
ஓம் வாதாபியை வதம் செய்தவரே போற்றி
ஓம் சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி 
ஓம் இடும்பனை காவடி எடுக்க வைத்தவரே போற்றி 
ஓம் தொல் காப்பியரின் குருவே போற்றி
ஓம் கடல் நீரைக் குடித்து வற்றச் செய்தவரே போற்றி 
ஓம் நீரின் மேலே தவமிருந்தவரே போற்றி 
ஓம் விந்திய மலையின் அகந்தையடக்கியவரே போற்றி 
ஓம் அசுராசுரர்களை அழித்தவரே போற்றி 
ஓம் காவிரியைப் பெருக்கியவரே போற்றி 
ஓம் தாமிரபரணியை உருவாக்கியவரே போற்றி 
ஓம் ராவணனை இசையால் வென்றவரே போற்றி 
ஓம் அகஸ்தீஸ்வரம் அமைத்தவரே போற்றி 
ஓம் தேவாதி தேவர்களை காத்தவரே போற்றி 
ஓம் சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி 
ஓம் சித்த வைத்திய சிகரமே போற்றி 
ஓம் அகத்திய பூஜாவிதி தொகுத்தவரே போற்றி 
ஓம் நான்கு யுகங்களையும் கடந்தவரே போற்றி 
ஓம் முத்தமிழால் உலகை ஆண்டவரே போற்றி 
ஓம் தமிழ்ச் சங்கங்களின் தலைவனே போற்றி 
ஓம் சிவசூரிய வழிபாட்டைத் துவக்கியவரே போற்றி
ஓம் கும்பத்தி லுதித்த குறுமுனியே போற்றி 
ஓம் வடதென் திசையை சமப்படுத்தியவரே போற்றி 
ஓம் உலோபமுத்திரையின் மணாளா போற்றி 
ஓம் அம்பையில் கோயில் கொண்டவரே போற்றி 
ஓம் அரும் மருந்துகள் அறிந்தவரே போற்றி 
ஓம் அனைத்தும் கற்றுத் தெளிந்தவரே போற்றி 
ஓம் முக்காலமும் உணர்ந்தவரே போற்றி 
ஓம் முத்தமிழும் வளர்த்தவரே போற்றி 
ஓம் ஆஷா சுவாஸினி மைந்தரே போற்றி 
ஓம் நெல்மணிகளின் தலைவனே போற்றி 
ஓம் சிவன் அம்சமே போற்றி 
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி
ஓம் சர்வ சக்திகளும் தருபவரே போற்றி 
ஓம் சகல கலைகளும் சித்தியாக அருள்பவரே போற்றி 
ஓம் பிறவா வரம் தரும் பெருமானே போற்றி 
ஓம் தேவி உபாசகரே போற்றி 
ஓம் இசையிலும் கவிதையிலும் மேன்மை தருபவரே போற்றி 
ஓம் கல்வித் தடை நீக்குபவரே போற்றி 
ஓம் புத பகவானின் தோஷம் நீக்குபவரே போற்றி 
ஓம் முன் தீவினைப் பாவங்கள் தீர்ப்பவரே போற்றி 
ஓம் பேரும் புகழும் மதிப்பும் உண்டாக அருள்பவரே போற்றி 
ஓம் பூர்விக சொத்துக்கள் கிடைக்க அருள்பவரே போற்றி 
ஓம் சகலவித நோய்களையும் தீர்ப்பவரே போற்றி 
ஓம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவச் செய்பவரே போற்றி 
ஓம் பித்ரு சாபம் நீக்கி ஆசி பெற அருள்பவரே போற்றி 
ஓம் சத்ருக்களின் மனம் மாற்றி அன்புரச் செய்பவரே போற்றி 
ஓம் சித்திகள் பெற்று உயரச் செய்பவரே போற்றி 
ஓம் நல் குருவாகி மனதார வாழ்த்து பவரே போற்றி 
ஓம் அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால் போற்றி 
ஓம் அகண்டம் பரி பூரணத்தின் அருளே போற்றி 
ஓம் மண்டலஞ் சூழ் இரவிமதி சுடரே போற்றி 
ஓம் மதுரத் தமிழோதும் அகத்தீசரே போற்றி 
ஓம் எண்திசையும் புகழும் என் குருவே போற்றி
ஓம் இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி 
ஓம் குண்டலியில் அமர்ந்தருளும் குகனே போற்றி 
ஓம் மேன்மை கொள் சைவநீதி விளங்க செய்பவரே போற்றி
ஓம் கும்பேஸ்வரன் கோயில் முக்தி அடைந்தவரே போற்றி 
ஓம் குருவாய் நின்று இன்றும் ஆசிகள் அளிப்பவரே போற்றி 
ஓம் குருமுனியின் திருவடிகள் எப்போதும் போற்றி 
ஓம் இன்னல்கள் நீக்கி இன்பம் தரும் அகத்தீசப் பெருமானே 
உமது திருவடிகள் சரணம் போற்றி.... போற்றியே ..... 



அகத்தியர் மூல மந்திரம் :

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”



ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி :

"ஓம் அகதீஸ்வராய விதமஹே
பொதிகை சஞ்சராய தீமஹி
தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்"



அகத்தியர் மூல மந்திரம் :

"ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே 
சாப பாவ விமோட்சனம் 
ரோக அகங்கார துர் விமோட்சனம் 
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் 
சற்குருவே ஓம் அகஸ்திய 
கிரந்த கர்த்தாய நம:"


அகத்தியர் பதினாறு போற்றிகள்:


1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!


அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்க 
மந்திரம்:

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.

வெள்ளி, 18 ஜூலை, 2014

அமானுஷ்யம் வீட்டால் வந்த சோதனை


                                              ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு இருபத்தி எட்டு வயதுடைய இளம் பெண் மற்றும் அவளின் தந்தை என்னை தேடி ஸ்ரீ விருட்சபீடம் வந்திருந்தனர். பார்த்தால் நன்கு படித்து நல்ல உத்தியோகத்தில் இருப்பதும் பார்த்த உடனே தெய்வானுகிரகதால் எனக்கு புலப்பட்டது. ஆனால் அவளின் தந்தையோ எதோ எதற்கும் வழி இல்லாதவர் போல உடை பாவனைகள் இருந்தது, அவர்கள் இருவரின் முகமும் சோகமே படிந்திருந்தது அவர்கள் வந்த சமயம் நான் வேறு ஒருவருக்கு இருந்த ஏவலை நீக்கும் பணியில் மும்முரமாய் இருந்ததால் அவர்களை சிறிது நேரம் காத்திருக்க சொல்லிவிட்டு என் பணியை தொடரலானேன்.


                                                       என் பணியை முடித்துவிட்டு அவர்களை அழைத்தேன், உங்களுக்கு என்ன பிரச்சனை எதற்க்காக என்னை தேடி வந்துள்ளீர்கள் என்றேன். அந்த பெண் பேச துவங்கினாள். எங்கள் வீட்டில் எதோ ஒரு அமானுஷ்யம் உள்ளது. இரவில் நிம்மதியாக தூங்க கூட முடிவதில்லை, படுத்தால் ஒரு கை மட்டும் அமானுஷ்யமாக வந்து முகத்தில் அடிக்கிறது. விட்டத்தின் மேல் அமானுஷ்யமாக ஒரு உருவம் உட்கார்ந்து பயமுறுத்துகிறது, அந்த வீட்டுக்கு சென்றதில் இருந்தே தொடர்ந்த விரைய செலவுகள் தான் வந்தது, மருத்துவ செலவுகள் வந்தது, என் தந்தை செய்து வந்த தொழிலும் நலிந்து விட்டது, தற்போது நன் மட்டும் BE முடித்துவிட்டு பெங்களூரில் வேலை பார்த்து வருகிறேன், என் தம்பி படித்துக் கொண்டு இருக்கிறான், தற்போது நான் சம்பாதிப்பது மட்டுமே மொத்த குடும்பதிக்கும் வருமானம், சரி வீடு மாறி வேறு வீடு சென்று விடலாம் என்றாலும் அந்த அமானுஷ்ய சக்தி விடுவதில்லை, சொந்த வீடு கூட கட்ட முயற்சிதோம் அது ஒரு பெருங்கதை அஸ்திவாரத்துடன் நின்று போயிற்று, இந்த அமானுஷ்ய பாதிப்பில் தப்பிக்க ஒரு நல்ல வழியினை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று சொல்லி முடித்தாள்.


                                                           நானும் என்னுடைய தெய்வத்தை வேண்டிக்கொண்டு அவர்கள் வீட்டில் என்ன அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்று பார்த்தேன், முன் ஒரு காலத்தில் வாழ்ந்த மாந்த்ரீகன் ஒருவன் துஷ்ட வேலைகளை செய்ய சுடுகாட்டு மாடன் என்ற தேவதையை அங்கு நிலைப்பெற செய்து வழிபட்டு வந்தான் அவன் இறந்த பல வருடங்களுக்கு பிறகு அந்த இடத்தை ஒருவர் வாங்கி வீடு கட்டினார், அந்த மந்த்ரீகன் இறந்து போயிருந்தாலும் அங்கு நிலைபெற்ற சுடுகாட்டு மாடன் அந்த இடத்தை விட்டு விலகவில்லை, சுடுகாட்டு மாடனுக்கு பல ஆண்டுகளாய் பலிகள் ஏதும் இல்லை, ஆகவே உங்கள் வீட்டில் அடிக்கடி உயிர் பலிகள் உண்டாவது உண்மையா என்றேன், ஆமாம் என்றனர், உங்கள் வீட்டில் நடை பிணமாக யாராவது இருக்க வேண்டுமே என்றேன், அதற்கும் ஆமாம் என்றனர், உங்களுக்கு மட்டுமல்ல சுற்றியிருக்கும் வீடுகளிலும் உங்களை போலவே நடக்கும் என்றேன், அதற்கும் ஆமாம் என்றனர். பிறகு சொன்னேன் இது அங்கு அந்த மந்த்ரீகன் நிலைபெற செய்துவிட்டு சென்ற சுடுகாட்டு மாடனின் திருவிளையாடல் என்று. பின் அதற்குரிய பரிகாரங்களை கூறி செய்து கொடுத்தேன், பின் ஒரு வரம் கழித்து போன் வந்தது இப்பொழுதெல்லாம் வீட்டில் அந்த அமானுஷ்யம் வருவதில்லை, நிம்மதியாக உறங்கினோம், உங்களுக்கும் உங்கள் பீடதிக்கும் என்றும் நாங்கள் கடமைப் பட்டவர்கள், உயிருள்ளவரை உங்களுக்கு நன்றி சொல்லுவோம். மீண்டும் அடுத்த அமானுஷ்யத்தில் சந்திப்போம் ...

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும்

விநாயகருக்கு அர்ச்சனையும் பலனும் 


1. மாவிலை - அறம், நீதி காக்க


2. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க


3. வில்வம் - இன்பம் அடைய


4. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற


5. இலந்தை - கல்வி ஞானம் பெற


6. ஊமத்தை - பெருந்தன்மை உயர


7. வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய


8. நாயுருவி - வசீகரம் உண்டாக


9. கண்டங்கத்திரி - வீரம் உண்டாக


10. அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற


11. அரசு - உயர் பதவி கௌரவம் அடைய


12. எருக்கு - வம்ச விருத்தி அடைய


13. மருதம் - குழந்தை பேறு அடைய


14. துளசி - கூர்மையான அறிவினை பெற


15. மாதுளை - பெரும் புகழ் அடைய


16. தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற


17. மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற


18. ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற


19. நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக


20. அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட


21. தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட


விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்.

வியாழன், 17 ஜூலை, 2014

அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி


                                     அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி




கல்லை இளக்கி மெழுகாக்கும் 
கல்லில் பிறமி இதன்பெருமை 
சொல்லில் உணர்த்த முடியாது 
சொக்கர் அறிவார் யாரறிவார் 
பல்லு உதிர்ந்தது தான்முளைத்து 
பாலன் ஆவான் கொண்டவனும் 
நில்லா உடலும் நிலைத்துவிடும் 
நீண்டு ஆயுள் பெருகிடுமே 
                                                 - தேரையர். 


                                               இந்த அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி பற்றி தேரையர் பாடிய பாடல். அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி கல்லைக்கூட இளகவைத்து மெழுகின் பதமாக்க கூடியது என்றும் இந்த அபூர்வ மூலிகையின் சக்தியை வார்த்தைகளால் சொல்ல முடியாதது எனவும் அந்த சிவபெருமானை தவிர இதன் சக்தியை தெரிந்தவர் இந்த உலகில் யாரும் கிடையாது என்றும் இந்த அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமியை முறைப்படி உண்டுவந்தால் பல்லு உதிர்ந்த கிழவனும் மீண்டும் பல் முளைத்து வாலிபன் ஆகிவிடுவான் என்றும் அழிந்துப் போகக்கூடிய அழியாமல் காயகற்பம் ஆகி நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றும் தேரையர் குறிப்பிடுகிறார். இன்னும் சில சித்தர் பாடலின்படி நாக ரச மெழுகு, வெள்ளி ரச மெழுகு, வெள்வங்க ரச மெழுகு, அயகாந்த ரச மெழுகு முதலியவை உடலை காயகற்பம் ஆக்குவதற்கும் கௌரி பாஷாண மெழுகு, வெள்ளை பாஷாண மெழுகு, கார்முகில் பாஷாண மெழுகு, செம்புத்தொட்டி பாஷாண மெழுகு முதலியவை மூலம் இரசவாதம் என்னும் தங்கத்தை உருவாக்கும் வித்தையும் செய்யப்பட்டது என்று அறிய முடிகிறது. அபூர்வ காயகற்ப மூலிகை கல்பிறமி பற்றி வாசகர்கள் அறிந்துகொள்ளவே இங்கே புகைப்படத்துடன் விளக்கினேன்.

ஞாயிறு, 6 ஜூலை, 2014

கர்மா விதியை வெல்லும் சூட்சுமங்கள்

கர்மா விதியை வெல்லும் சூட்சுமங்கள்



"கருவமைப்பின் வழிவந்த வினைபதிவு சஞ்சிதமாம் 
உருவெடுத்த பின்கொண்ட வினைபதிவு பிராப்தம் 
இருவினையும் கூடி எழும் புகுவினையே ஆகாமியம் 
ஒருவினையும் வீண்போக உள்ளடங்கி பின்விளைவாம்" 
                                                                                    - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி 


                                                                மேற்கண்ட பாடலின் படி மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்ம வினைகளை பெற்று அனுபவிக்கிறான். அவை சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம். இதில் சஞ்சித கர்மம் என்பது நம் கரு உருவாகும் போதே உடன் உருவாவது, அதாவது முன்ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் வித்தாக இந்த பிறவியில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்ம வினையாகும். பிராப்த கர்மா என்பது நாம் இந்த பிறவியில் உடலெடுத்து வாழும் காலத்தில் நம் ஜீவனத்துக்காக நாம் செய்யும் தொழிலின் வாயிலாகா நாம் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் உண்டாகும் கர்ம வினை, இந்த கர்மாவால் வரும் பலனையும் நாம் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும், மூன்றாவதாக ஆகாமிய கர்மா என்பது இந்த பிறவியில் நாம் வாழும் காலத்தில் நம் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது, இவ்விதமாக மூன்று வகையான கர்மாக்கள் நம்மை சூழ்ந்துள்ளன.


                                                                  இந்த கர்மவினைகளில் இருந்து யாரும் தப்பிவிட இயலாது, அனைவரும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான், நாம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், முடக்கங்கள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் நான் மேலே குறிப்பிட்ட கர்ம வினைகளின் சாராம்சம் ஆகும். இந்த கர்ம வினைகளை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்றும், பலவிதமான பரிகாரங்களை மேற்கொண்டும் கைப்பணம் செலவானதுதான் மிச்சம், நம் கர்ம வினைப் பலன்கள் மட்டும் மாறிய பாடில்லை, நம் வேதனை தீர்ந்த பாடில்லை. அப்படியென்றால் நம் கர்ம வினைகளை தீர்க்க வழியே இல்லையா ?

                               ஏன் இல்லை. கர்ம வினைகளை நீக்க பரிகாரங்கள் உள்ளது, ஆனால் அதனை நமக்கு சரியாக விளக்கி சொல்ல ஆட்கள்தான் இல்லை. இங்கே என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய, நமது புராணங்களும், சாஸ்திரங்களும் பறைசாற்றுகின்ற கர்ம வினைகளை நீக்கும் உபாயங்களை விவரிக்கிறேன்.


பிரம்மா - எல்லா படைப்பு இயக்கங்களையும் செய்பவர். அவரின் படைப்புக்கு தேவையான ஞானத்தினை தருகிற சரஸ்வதி அவரின் மனைவி.

விஷ்ணு - காக்கும் கடவுள், எல்லா உயிர்களையும் இரட்சித்து காப்பவர். இவர் உலகினை காக்க செல்வம் வேண்டுமல்லவா? அதை அவருக்கு நல்க செல்வத்திற்கு அதிபதியான மஹா லக்ஷ்மி அவரின் மனைவி.

சிவம் - அழிக்கும் கடவுள். மனிதனின் அஞ்ஞான இருளை, கர்மவினைகளை, தீமைகளை அளித்து நன்மை தருபவர். இவருக்கு தீமைகளை அழிக்கின்ற சக்தியினை தருவதற்கு சக்தி தேவியே இவருக்கு துணைவியாக.


                                           அப்படியென்றால் நம் கர்ம வினைகள் நீங்க நாம் யாரை பற்ற வேண்டும்? நம் கர்ம வினைகளை யாரால் தீர்க்க முடியும்? தேவாதி தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் தேடிச்சென்று சரண் புகுந்தது யாரிடம்? அறியா பருவ குழந்தைகூட சொல்லிவிடும் அத்தகைய ஆற்றல் கொண்டவர் சிவபெருமான் ஒருவரே என்று. நாமும் நம் கர்ம வினைகள் நீங்க அவரையே பற்ற வேண்டும். சரி அவரை பற்றிவிட்டோம். நம் கர்ம வினைகள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்.


                                                  மனித உடல் இறைவனால் பஞ்சபூதத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, கற்று, ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாகும். சிவனே பஞ்சபூத பெருமையை சிறப்பிக்கும் விதமாக பஞ்சபூத தலங்களில் நாயகனாக நின்று அருள்பாலிக்கிறார். அவையாவன 1. காஞ்சிபுரம் - நிலம் - ஏகம்பநாதர், 2. திருவனைகாவல் - நீர் - ஜலகண்டீஸ்வரர், 3. திருவண்ணாமலை - நெருப்பு - அண்ணாமலைநாதர், 4. காளஹஸ்தி - வாயு - காளத்திநாதர், 5. சிதம்பரம் - ஆகாயம் - நடராஜர். அகவே பஞ்சபூத ஆற்றலில் உண்டாக்கப்பட்டு இயங்கும் மனிதன், தாம் வாழும் காலத்தில் பஞ்ச இந்திரியங்களால் (ஐந்து புலன்களால் - மெய், வாய், கண், காது, மூக்கு) ஆகியவற்றின் மூலியமாக தூண்டப்பட்டு தன் புலன்களால் இச்சைக்கு அடிமையாகி செய்யும் செயல்களால் பிறருக்கு தீங்கு நேரும் பொது பாவங்கள் - கர்மவினைகள் உண்டாகிறது. எவ்வகையில் பாவம் செய்தோமோ அவ்வகையில் தானே அதனை தீர்க்க முடியும். பஞ்ச பூதங்களால் - பஞ்ச இந்திரியங்களால் தோன்றிய பாவத்தை - பஞ்ச லிங்கங்கள் அல்லவா தீர்க்க முடியும். மேலும் ஒரு முக்கிய விஷயத்தை அலசுவோம்.


                           இறைவனுக்கு ஐந்து விதமான சேவைகள் மூலம் நம் பாவங்களை நாம் போக்கிக்கொள்ள முடியும். அவையாவன 


1.யாதனம் - கோயில் கட்டுதல், நந்தவனம் அமைத்தல், கோயில் திருப்பணிகள் செய்தல்.

2.சிரவணம் - இறைவனின் பெருமைகளை ஆன்மீகம் அறிந்தவர்களின் மூலமாக கேட்டல்.

3. கீர்த்தனம் - இறைவனை இசை கருவிகள் கொண்டு பாடி ஆடி மகிழ்வித்தல்.

4. பூஜார்தனம் - அபிஷேகம் செய்தல், அலங்காரம் செய்தல், அர்ச்சனை செய்தல், நைவேத்தியம் படைத்து பூஜை செய்தல்.

5. ஸ்துதி - இறைவனை புகழ்ந்து தோத்திர இசைப் பாடல்களை பாடுதல்.


                                 இந்த ஐந்த விதமான சேவைகளை நாம் செய்து வர நம் கர்ம வினைகளால் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் மாறி இன்பங்கள் நல்கும். 



சனி, 5 ஜூலை, 2014

விரும்பிய பெண்ணை அடைய எந்திரம்

விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் 
மோகினி வசிய எந்திரம் 


இன்றைய காலத்தில் பல ஆடவர்கள் தாங்கள் விரும்பும் அல்லது காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவதில்லை. இதற்க்கு பல காரணங்கள் உண்டு, ஒன்று நாம் விரும்பும் பெண் நம்மை விரும்புவதில்லை, இரண்டாவதாக பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காமல் போவது, மூன்றாவதாக நம் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் என பட்டியல் நீண்டுகொண்டே போகும். 


இந்த சூழ்நிலைகள் எப்படி இருந்த போதிலும் தான் விரும்பும் பெண்ணை மனைவியாய் அடைந்தே தீர வேண்டும், நான் விரும்பும் பெண் இல்லாமல் எனக்கு வாழ்கையே இல்லை என்று மனதில் வைராக்யதொடு உள்ள வாலிபர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைவது தான் விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் என்று மேலே சொல்லப்பட்ட மோகினி வசிய எந்திரம் ஆகும்.


இந்த எந்திரத்துடன் அஷ்ட கர்மத்தில் வசியம் செய்யும் மூலிகைகளை பற்றி சொல்லியிருந்தேன், அதில் ஸ்திரி வசியம் என்னும் பெண் வசியத்துக்கு உண்டான நில ஊமத்தை, வெள்ளை விஷ்ணு கிராந்தி, மிளகு சாரணை, நத்தைச் சூரி, அழுகண்ணி, தொழுகண்ணி என்னும் மிக சிறந்த வசிய மூலிகைகளை வைத்து (மூலிகைகளை அதற்க்கு உண்டான சரியான வேளையில் காப்பு கட்டி, சாபம் போக்கி, உயிர் கட்டு மந்திரம் சொல்லி பறித்தால் மட்டுமே பலன்தரும்) முறைப்படி 1,00,008 மந்திர உருவேற்றி அணிந்து கொள்ள நாம் விரும்பும் பெண் நம்முடன் வந்து சேருவாள், இந்த அற்புத பலன் தருவது விரும்பிய பெண்ணை அடைய எந்திரம் - மோகினி வசிய எந்திரம்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க