வியாழன், 15 மே, 2014

ஜோதிடம் கால புருஷ இராசிகள்



             
                                                 காலப் புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம, மோட்ச இராசிகள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்கள் எந்த வகையில் யாருக்கு செய்தோம். அதன் விளைவாக இந்த பிறவியில் நாம் என்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்க போகிறோம் என்பதனை இந்த காலப்புருஷ இராசிகளை கொண்டு நாம் அறிய முடியும். இதில் எந்த இராசிகள் எந்த தத்துவத்தை குறிக்கும் என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.


தர்ம இராசிகள் : மேஷம்,சிம்மம்,தனுசு இராசிகள் 

தர்மத்தில் இருவகை உண்டு. அவை நல்ல தர்மம், கெட்ட தர்மம். உதாரணமாக ஒரு கோவிலில் திருவிழா நடக்கிறது, அந்த விழாவில் ஒருவர் அன்ன தானம் செய்தார் இது நல்ல தர்மம். ஒருவர் ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் இது கெட்ட தர்மம். அதாவது நாம் செய்யும் தர்மம் ஒருவரை வாழ வைப்பதாக, நல்வழி படுத்துவதாக அமைந்தால் அது நல்தர்மம் அதனால் அவர் நல்ல பலன்களையும் ஜாதகத்தில் யோகங்களையும் பெற்று வாழ்வார். அதேபோல் மற்றவரை தீய வழியில் செலுத்தும் ஆபாச நடனம் நடத்தியவர் அதன் பலனாக கெடு பலன்களையும் ஜாதகத்தில் அதற்குரிய தோஷங்களையும் பெற்று வாழ்வில் துன்பப்படுவார்.

கர்ம இராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம் இராசிகள் 

கர்மம் என்பது நாம் செய்யும் தொழிலை குறிக்கும், பிறருக்கு தீங்கு தராத வண்ணம் நமது தொழிலை செய்தால், நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு நன்மைகள் செய்தால், நாம் செய்யும் தொழிலை நியாய தர்மத்துடன் செய்தால் அதன் பலனாக நல்ல ஜாதக யோகத்தினையும், அதனால் நல்ல பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வினையும் அடையலாம். அதேபோல் தர்ம நியாங்களை மறந்து நாம் செய்யும் தொழிலால் பிறருக்கு தீமைகளை செய்து பணம் ஈட்டினால் அதன் விளைவாக கெடு பலன்களையும், ஜாதக ரீதியில் கொடிய தோஷங்களையும் பெற்று துன்பப்பட்டு வாழவேண்டி நேரும்.

காம இராசிகள் : மிதுனம், துலாம், கும்பம் இராசிகள் 

காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். நம் ஆசைகளிலே நல்லதும் உண்டு, தீய ஆசைகளும் உண்டு. நான் நியாயமான வழியில் தர்ம வழியில் உழைத்து பெரும் செல்வம் ஈட்டி என் குடும்பத்தை நல்ல விதமாக வாழ வைப்பேன் என்பது நல்ல காமம் (ஆசை). நான் எப்பாடு பட்டாவது அடுத்தவன் மனைவியை அடைந்தே தீருவேன் இது கெட்ட காமம் (ஆசை).

மோட்ச இராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம் இராசிகள் 

நம்மை பெற்றெடுத்த தாய் - தந்தை, பாட்டன் - பாட்டி போன்ற பெரியோர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்ல விதமாக வாழவைத்து, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்து, அவர்கள் இறந்த பிறகும் செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் முதலிய காரியங்களை செய்வது அவர்கள் மோட்சமடைய வழிவகையான நல்மோட்சம். அதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை உதாசீனப் படுத்துவது, உன்ன உணவுஇன்றி தவிக்கவிடுவது, அவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகளை செய்யாமல் நோயால் துன்பமடைய செய்வது, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்யாமல் விடுவது, இறப்புக்கு பின்பு திதி தர்ப்பணங்களை செய்யாமல் விடுவது போன்ற செயல்களை செய்வதால் நம் முன்னோர்களின் ஆன்மா மோட்சமடையாமல் இருக்க வழிவகை செய்வதாகும் இதனால் நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி வாட்டும் இதுவே துர்மோட்சம் ஆகும்.

மேலே கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் கடந்த பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இந்த பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் நாம் கடந்த பிறவியில் அந்த இராசிகளின் காரக பலனில் நாம் செய்த பாவம் என்று அறிக. அந்த பாவங்களால் உண்டாகி நம்மை வாட்டும் தோஷங்களை தகுந்த பரிகாரங்கள் செய்து சரிப்படுத்தி கொள்ளலாம்.


ஜோதிடம் கால புருஷ தத்துவம்




                                               ஜோதிட சாஸ்திரப்படி மிகப் பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்த பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்கு காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புன்னியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்க போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

             ஜோதிட சாஸ்திரம் 12 இராசிகளையும் சர, ஸ்திர, உபய இராசிகள் என்று வகுத்துள்ளது. இதில் சர இராசிகள் - மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகும். ஸ்திர இராசிகள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகும். உபய இராசிகள் - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகும். இதில் சர இராசி இந்த பிறவியின் தன்மையை காட்டும், ஸ்திர இராசிகள் சென்ற பிறவியில் நாம் செய்த நன்மை தீமைகளை காட்டும். உபய இராசிகள் அடுத்த பிறவியில் நாம் அனுபவிக்க இருக்கும் நன்மை தீமைகளை காட்டும். ஒரு ஜாதகர் தான் பிறந்த லக்னத்தை கொண்டு தனக்கு நடக்கும் பலன்களை எடை போட முடியும். சர லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமைகளின் பலனை இந்த பிறவியிலேயே அனுபவிப்பர், ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்கள் போன பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் பலனை இந்த பிறவியில் அனுபவிப்பர், உபய லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களின் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பர், என்று காலப் புருஷ தத்துவத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, இதனால் தான் நல்லவர்களுக்கு கேட்ட பலனும், துன்பமான வாழ்வும், அதுபோல கேட்டவர்களுக்கு நல்லபலனும் இன்பமான வாழ்வும் அமைந்துவிடுகிறது. இந்த காலப்புருஷ தத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவானது மாற்ற இயலாத ஒன்றாகும். காலப்புருஷ தத்துவப்படி நமது ஜாதகத்தினை ஆராய்ந்து நாம் அடைய உள்ள நல்ல தீய பலன்களை அறிந்து கொள்ளலாம். நாம் காலப்புருஷ தத்துவப்படி கேடுப்பலனை அடையவேண்டி வந்தால் அதற்க்கான பரிகாரங்களை செய்துகொள்வதன் வாயிலாக நம் கஷ்டங்களை சிரமங்களை போக்கிக்கொள்ளலாம், நல்ல பலன்களை அதிகப்படுத்தி கொள்ளலாம், இந்த காலப்புருஷ தத்துவத்தினை மாற்றும் பரிகாரங்கள் ஒருநாளில் செய்துகொள்வதல்ல, தகுந்த குருவின் ஆலோசனைப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் மட்டுமே இதன் பலனை அடைய முடியும்.

ஞாயிறு, 11 மே, 2014

விளக்கேற்றும் பெண்ணின் பெருமை




                           திருமணமாகி கணவன் இல்லம் வரும் பெண்ணை குத்து விளக்கேற்ற சொல்வது நமது முன்னோர் வைத்து சென்ற மரபு காரணம் என்னெவன்றால் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.அவை அன்பு, மனஉறுதி, சகிப்பு தன்மை, நிதானம், சமேயாஐித புத்தி ஆகும். இந்த தன்மையை உணர்த்தும் குத்து விளக்கை ஏற்றும் பெண்ணும் அந்த ஐந்து தத்துவங்கைள புரிந்து கொண்டு தானும் தான் சார்ந்துள்ள தனது குடும்பத்தையும் குலவிருத்தி செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

பிறப்பு திதி தோஷம்




                                              ஒரு குழந்தை பிறந்தால் அதனால் குடும்பத்தினருக்கு உண்டாகும் தீட்டு விபரங்களை முன்பே எழுதியுள்ளோம். இப்பொழுது ஒரு குழந்தை ஜனனமாகும் நாளில் இருக்கும் திதியால் உண்டாகும் ஜனனதோஷத்தை இங்கு பார்ப்போம்.

1.ஞாயறு - துவாதசி திதி, சப்தமி திதி.
2.திங்கள் - ஏகாதசி திதி, சஷ்டி திதி.
3.செவ்வாய் - பஞ்சமி திதி, சப்தமி திதி.
4.புதன் - துதியை திதி, அஷ்டமி திதி.
5.வியாழன் - சஷ்டி திதி, நவமி திதி.
6.வெள்ளி - அஷ்டமி திதி, தசமி திதி.
7.சனி - நவமி திதி, ஏகாதசி திதி.
                    
                          நீங்கள் மேற்கூறிய நாளும், திதியும் கூடிய நாளில் பிறந்திருந்தால் இது பிறப்பு திதி தோஷமாகும். இதனால் உங்கள் வாழ்வில் பல இன்னல்களை நீங்கள் அடைவீர்கள். அந்த துன்பங்களை நீக்க சரியான பரிகாரங்களை செய்யவேண்டியது அவசியம்.

பிறப்புதோஷம் (ஜனன தீட்டு)




                                              ஒருவருக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு தீட்டு உண்டாகிறது. இந்த தீட்டு ஷத்திரியர்களுக்கு 12 நாட்களும், வைசியர்களுக்கு 15 நாட்களும் தீட்டு உண்டு, இந்த காலங்களில் கோவில்களுக்கு செல்வதும், பூஜை புனஸ்காரங்கள் செய்வதும், இறப்பு வீடுகளுக்கு செல்வதும் கூடாது. சிலருக்கு கருகலைவதும் உண்டு. அவ்வாறு கருகலைந்தால் கலைந்த கருவுக்கு எத்தனை நாட்களோ அத்தனை நாட்களுக்கு தீட்டு உண்டு.
        
                         பிரசவித்த பெண்ணை தொட்டலோ அல்லது பிரசவமான வீட்டில் உணவு சாப்பிட்டாலோ அவர்களுக்கும் பத்து நாட்களுக்கு தீட்டு உண்டாகும், அவர்களும் தீட்டு கடைபிடிக்க வேண்டும்.குழந்தை பிறந்த வீட்டில் ஜன்மதை என்னும் தேவதை வந்து குடிகொள்ளும் அந்த தேவதைக்கு குழந்தை பிறந்த மூன்று, ஆறு அல்லது பத்தாவது நாளில் தீட்டு கழித்து பூஜைகள் செய்யவேண்டும்.
       
                                       ஆண்குழந்தைகளுக்கு அன்னமூட்ட ஆறாவது மாதமும், பெண்குழந்தைகளுக்கு அன்னமூட்ட ஐந்தாவது மாதமும் சிறப்பானது.


பிறப்புதோஷம் உண்டாக்கும் கிழமையும், நட்சத்திரங்களும் :



கீழ்வரும் கிழமைகளில் குறிப்பிட்டிருக்கும் நட்சத்திரங்கள் அமைந்தால் பிறப்புதோஷமாகும்.
                
1.ஞாயறு - அனுஷம், அஸ்வினி, விசாகம், மகம், பூசம்.
2.திங்கள் - உத்திராடம், அனுஷம், பூராடம், பூசம், ஆயில்யம்.
3.செவ்வாய் - சதயம், உத்திராடம், அவிட்டம், கிருத்திகை, அனுஷம்.
4.புதன் - அஸ்வினி, அவிட்டம், ரேவதி, உத்திராடம், கேட்டை.
5.வியாழன் - மிருகசீரிஷம், உத்திரம், ரோகிணி, மூலம், ரேவதி.
6. வெள்ளி - சுவாதி, கேட்டை, பூரம், ரோஹிணி.
7. சனி - அஸ்தம், ரேவதி, உத்திரம், திருவோணம், அவிட்டம்

         பிறப்புதோஷம் நீங்க நீங்கள் பிறந்த நட்சத்திர அதிபதிகளையும், பிறந்த நட்சதிரதிக்கு உண்டான விருட்சங்களையும் சாஸ்திர முறைப்படி வாழ்நாள் முழுதும் வணங்கி வர நன்மை உண்டாகும்.

மாந்தி இராசியில் இருப்பதினால் உண்டாகும் பலன்கள்




                                         12 இராசிகளிலும் ஜனன ஜாதகத்தில் மாந்தி அமரும்போது உண்டாகும் பலன்களை பொதுவாக காணலாம்.

1.மேஷம் :
                     மேஷத்தில் மாந்தி அமர்ந்திருப்பது ஜாதகரின் புத்தியை கெடுத்துவிடும், தீய வழிகளில் செல்ல துணைபுரியும், இது தீமையை உண்டாக்கும், முரட்டு சுபாவமும், தந்தை சொல்லை மதிக்க மாட்டார்கள்.

2.ரிஷபம் :
                     அதிக கோபத்தை உண்டாக்கும், கண், காது இவைகளில் வியாதிகளை உண்டாக்கும். பேச்சு ஏட்டிக்கு போட்டியாக இருக்கும். பற்களை அடிக்கடி நறநறவென கடிக்கும் பழக்கம் உண்டாகும்.

3.மிதுனம் :
                      வாய், தொண்டை பகுதிகளில் நோய்கள் ஏற்படும். மன கோளாறுகளை உண்டாக்கும், மனதைரியத்தை குறைக்கும், கலைத்துறையினருக்கு நல்லது.

4.கடகம் :
                    சுய ஒழுக்கத்தையும் கெடுக்கும், வாக்கு சுத்தம் இருக்காது, கடன்தொல்லைகளை உண்டாக்கும், எல்லாம் தெரிந்தவர்கள் போல் வேசமிடும் போலிமனிதர்கள் இவர்களே.

5.சிம்மம் :
                    வீண் ஜம்பங்களை உடைய மனிதர்.வயிற்றுக் கோளறுகளையும், நுரையீரல் மற்றும் இருதய கோளாறுகளையும், பெண்களுக்கு யோனியில் நோய்களையும் தரும்.

6.கன்னி :
                    கல்வியில் தடையை கொடுக்கும், தாம்பத்ய வாழ்வு சரியாக இருக்காது, குடும்பத்தாருடன் சண்டை, சச்சரவு பிரிவினைகளை உண்டாக்கும். கெட்ட வழியில் நடத்தையை உண்டாக்கும்.

7.துலாம் :
                    கெட்ட நடத்தை உள்ள பெண்களின் தொடர்பு உண்டாகும், வாழ்வில் ஏற்ற தாழ்வுகளும், கெட்ட பெயரையும் உண்டாக்கும், வீண்கர்வம் இருக்கும்.

8. விருச்சிகம் :
                              வாழ்வே போராட்டமாகும், கடன், நோய், எதிரிகளின் தொல்லைகளை கொடுக்கும்.

9.தனுசு :
                  இந்த இராசியில் மாந்தி அதிக கெடுதலை தருவதில்லை.

10. மகரம் :
                     இந்த இராசியில் மாந்தி நிற்க வாழ்வில் அதிகமான கஷ்டங்களை உண்டாக்கும். கெட்டவழி நடத்தைகளை உண்டாக்கி வாழ்வினை பாழாக்கும்.

11.கும்பம் :
                      மாந்திரீக பதிப்புகளை உண்டாக்கும், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை பதிப்புகளால் வாழ்வில் சீர்கேடு உண்டு.

12.மீனம் :
                   வெளிநாடு சென்று வேலைசெய்யவும், வியாபாரம் செய்யவும் நல்லது, அதிக தனவரவினையும் உண்டாக்கும். பெண்களால் வாழ்வில் துன்பங்கள் வரும்.

               மாந்தி 2,7,12 ம் இடங்களை பார்க்கும் தன்மை உடையது. மாந்தி இருக்கும் வீடும், பார்க்கும் வீடுகளும் பாதகத்தை உண்டாக்கும். இந்த மாந்தியை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் பார்த்தால் கெடுபலன்கள் குறையும், உங்கள் ஜனன ஜாதகத்தில் மாந்தி கெடுபலன்களை உண்டாக்கும் வண்ணம் அமர்ந்திருந்தால் உடனே மாந்திகுரிய பரிகாரங்களை செய்துகொள்ள நல்ல பலன்களை உடனே பெறலாம்.

மாந்தி ஜோதிட பார்வை




                                  ஜோதிடத்தில் மாந்தி கிரகம் சனியின் உபகிரகமாகவும், சனி பகவானின் மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்தி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த ஸ்தானம் பாதக  ஸ்தானமாகும். அந்த ஸ்தான அதிபதியும் பாதகாதிபதி ஆகும். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகும். மாந்தி தான் இருக்கும் வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களை பார்க்கும். மாந்தியின் பார்வை பதியும் வீடுகளும் தோஷத்தை உண்டாக்கும்.
          
                         உதரணமாக மாந்தி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு மனை தோஷம் ஆகும். வீட்டில் தெய்வம் குடியிருக்காது. வீடு களையிழந்து இருக்கும். சுக ஜீவனம் அமையாது. தொடர்ந்து வழக்குகளோ மருத்துவ செலவுகளோ வந்து கொண்டிருக்கும். குடும்பம், தொழில்,அந்தஸ்து முதலியவற்றில் பாதிப்பு இருக்கும்.
           
                    ஐந்தில் மாந்தி இருந்தால் பிரேத சாபம் ஆகும். ஆறில் மாந்தி தீராத கடன் உண்டாகும். எழலில் மாந்தி கணவன் - மனைவி உறவினை பாதிக்கும். ஒன்பதில் மாந்தி கடந்த ஜென்ம பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் தோஷங்களை குறிக்கும்.
          
                   இது மட்டுமல்லாது மாந்தியல் வரும் கெடுபலன்கள் ஏராளம். அதை சொல்ல வார்த்தையில் அடங்காது. மாந்தியல் வரும் கேடுப்பலன்களை நீக்க நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது ஆலயத்திலோ மஹா ம்ருத்யுஞ்ச யாகம், சுதர்சன யாகம் செய்து யாக கும்ப நீரில் ஸ்தானம் செய்வித்தல் நீங்கும். மேலும் நல்லதொரு கனக புஷ்பராக கல்லை அணியவும்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க