ஞாயிறு, 11 மே, 2014

பிறப்பு திதி தோஷம்




                                              ஒரு குழந்தை பிறந்தால் அதனால் குடும்பத்தினருக்கு உண்டாகும் தீட்டு விபரங்களை முன்பே எழுதியுள்ளோம். இப்பொழுது ஒரு குழந்தை ஜனனமாகும் நாளில் இருக்கும் திதியால் உண்டாகும் ஜனனதோஷத்தை இங்கு பார்ப்போம்.

1.ஞாயறு - துவாதசி திதி, சப்தமி திதி.
2.திங்கள் - ஏகாதசி திதி, சஷ்டி திதி.
3.செவ்வாய் - பஞ்சமி திதி, சப்தமி திதி.
4.புதன் - துதியை திதி, அஷ்டமி திதி.
5.வியாழன் - சஷ்டி திதி, நவமி திதி.
6.வெள்ளி - அஷ்டமி திதி, தசமி திதி.
7.சனி - நவமி திதி, ஏகாதசி திதி.
                    
                          நீங்கள் மேற்கூறிய நாளும், திதியும் கூடிய நாளில் பிறந்திருந்தால் இது பிறப்பு திதி தோஷமாகும். இதனால் உங்கள் வாழ்வில் பல இன்னல்களை நீங்கள் அடைவீர்கள். அந்த துன்பங்களை நீக்க சரியான பரிகாரங்களை செய்யவேண்டியது அவசியம்.

பிறப்புதோஷம் (ஜனன தீட்டு)




                                              ஒருவருக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு தீட்டு உண்டாகிறது. இந்த தீட்டு ஷத்திரியர்களுக்கு 12 நாட்களும், வைசியர்களுக்கு 15 நாட்களும் தீட்டு உண்டு, இந்த காலங்களில் கோவில்களுக்கு செல்வதும், பூஜை புனஸ்காரங்கள் செய்வதும், இறப்பு வீடுகளுக்கு செல்வதும் கூடாது. சிலருக்கு கருகலைவதும் உண்டு. அவ்வாறு கருகலைந்தால் கலைந்த கருவுக்கு எத்தனை நாட்களோ அத்தனை நாட்களுக்கு தீட்டு உண்டு.
        
                         பிரசவித்த பெண்ணை தொட்டலோ அல்லது பிரசவமான வீட்டில் உணவு சாப்பிட்டாலோ அவர்களுக்கும் பத்து நாட்களுக்கு தீட்டு உண்டாகும், அவர்களும் தீட்டு கடைபிடிக்க வேண்டும்.குழந்தை பிறந்த வீட்டில் ஜன்மதை என்னும் தேவதை வந்து குடிகொள்ளும் அந்த தேவதைக்கு குழந்தை பிறந்த மூன்று, ஆறு அல்லது பத்தாவது நாளில் தீட்டு கழித்து பூஜைகள் செய்யவேண்டும்.
       
                                       ஆண்குழந்தைகளுக்கு அன்னமூட்ட ஆறாவது மாதமும், பெண்குழந்தைகளுக்கு அன்னமூட்ட ஐந்தாவது மாதமும் சிறப்பானது.


பிறப்புதோஷம் உண்டாக்கும் கிழமையும், நட்சத்திரங்களும் :



கீழ்வரும் கிழமைகளில் குறிப்பிட்டிருக்கும் நட்சத்திரங்கள் அமைந்தால் பிறப்புதோஷமாகும்.
                
1.ஞாயறு - அனுஷம், அஸ்வினி, விசாகம், மகம், பூசம்.
2.திங்கள் - உத்திராடம், அனுஷம், பூராடம், பூசம், ஆயில்யம்.
3.செவ்வாய் - சதயம், உத்திராடம், அவிட்டம், கிருத்திகை, அனுஷம்.
4.புதன் - அஸ்வினி, அவிட்டம், ரேவதி, உத்திராடம், கேட்டை.
5.வியாழன் - மிருகசீரிஷம், உத்திரம், ரோகிணி, மூலம், ரேவதி.
6. வெள்ளி - சுவாதி, கேட்டை, பூரம், ரோஹிணி.
7. சனி - அஸ்தம், ரேவதி, உத்திரம், திருவோணம், அவிட்டம்

         பிறப்புதோஷம் நீங்க நீங்கள் பிறந்த நட்சத்திர அதிபதிகளையும், பிறந்த நட்சதிரதிக்கு உண்டான விருட்சங்களையும் சாஸ்திர முறைப்படி வாழ்நாள் முழுதும் வணங்கி வர நன்மை உண்டாகும்.

மாந்தி இராசியில் இருப்பதினால் உண்டாகும் பலன்கள்




                                         12 இராசிகளிலும் ஜனன ஜாதகத்தில் மாந்தி அமரும்போது உண்டாகும் பலன்களை பொதுவாக காணலாம்.

1.மேஷம் :
                     மேஷத்தில் மாந்தி அமர்ந்திருப்பது ஜாதகரின் புத்தியை கெடுத்துவிடும், தீய வழிகளில் செல்ல துணைபுரியும், இது தீமையை உண்டாக்கும், முரட்டு சுபாவமும், தந்தை சொல்லை மதிக்க மாட்டார்கள்.

2.ரிஷபம் :
                     அதிக கோபத்தை உண்டாக்கும், கண், காது இவைகளில் வியாதிகளை உண்டாக்கும். பேச்சு ஏட்டிக்கு போட்டியாக இருக்கும். பற்களை அடிக்கடி நறநறவென கடிக்கும் பழக்கம் உண்டாகும்.

3.மிதுனம் :
                      வாய், தொண்டை பகுதிகளில் நோய்கள் ஏற்படும். மன கோளாறுகளை உண்டாக்கும், மனதைரியத்தை குறைக்கும், கலைத்துறையினருக்கு நல்லது.

4.கடகம் :
                    சுய ஒழுக்கத்தையும் கெடுக்கும், வாக்கு சுத்தம் இருக்காது, கடன்தொல்லைகளை உண்டாக்கும், எல்லாம் தெரிந்தவர்கள் போல் வேசமிடும் போலிமனிதர்கள் இவர்களே.

5.சிம்மம் :
                    வீண் ஜம்பங்களை உடைய மனிதர்.வயிற்றுக் கோளறுகளையும், நுரையீரல் மற்றும் இருதய கோளாறுகளையும், பெண்களுக்கு யோனியில் நோய்களையும் தரும்.

6.கன்னி :
                    கல்வியில் தடையை கொடுக்கும், தாம்பத்ய வாழ்வு சரியாக இருக்காது, குடும்பத்தாருடன் சண்டை, சச்சரவு பிரிவினைகளை உண்டாக்கும். கெட்ட வழியில் நடத்தையை உண்டாக்கும்.

7.துலாம் :
                    கெட்ட நடத்தை உள்ள பெண்களின் தொடர்பு உண்டாகும், வாழ்வில் ஏற்ற தாழ்வுகளும், கெட்ட பெயரையும் உண்டாக்கும், வீண்கர்வம் இருக்கும்.

8. விருச்சிகம் :
                              வாழ்வே போராட்டமாகும், கடன், நோய், எதிரிகளின் தொல்லைகளை கொடுக்கும்.

9.தனுசு :
                  இந்த இராசியில் மாந்தி அதிக கெடுதலை தருவதில்லை.

10. மகரம் :
                     இந்த இராசியில் மாந்தி நிற்க வாழ்வில் அதிகமான கஷ்டங்களை உண்டாக்கும். கெட்டவழி நடத்தைகளை உண்டாக்கி வாழ்வினை பாழாக்கும்.

11.கும்பம் :
                      மாந்திரீக பதிப்புகளை உண்டாக்கும், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை பதிப்புகளால் வாழ்வில் சீர்கேடு உண்டு.

12.மீனம் :
                   வெளிநாடு சென்று வேலைசெய்யவும், வியாபாரம் செய்யவும் நல்லது, அதிக தனவரவினையும் உண்டாக்கும். பெண்களால் வாழ்வில் துன்பங்கள் வரும்.

               மாந்தி 2,7,12 ம் இடங்களை பார்க்கும் தன்மை உடையது. மாந்தி இருக்கும் வீடும், பார்க்கும் வீடுகளும் பாதகத்தை உண்டாக்கும். இந்த மாந்தியை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் பார்த்தால் கெடுபலன்கள் குறையும், உங்கள் ஜனன ஜாதகத்தில் மாந்தி கெடுபலன்களை உண்டாக்கும் வண்ணம் அமர்ந்திருந்தால் உடனே மாந்திகுரிய பரிகாரங்களை செய்துகொள்ள நல்ல பலன்களை உடனே பெறலாம்.

மாந்தி ஜோதிட பார்வை




                                  ஜோதிடத்தில் மாந்தி கிரகம் சனியின் உபகிரகமாகவும், சனி பகவானின் மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்தி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த ஸ்தானம் பாதக  ஸ்தானமாகும். அந்த ஸ்தான அதிபதியும் பாதகாதிபதி ஆகும். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகும். மாந்தி தான் இருக்கும் வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களை பார்க்கும். மாந்தியின் பார்வை பதியும் வீடுகளும் தோஷத்தை உண்டாக்கும்.
          
                         உதரணமாக மாந்தி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு மனை தோஷம் ஆகும். வீட்டில் தெய்வம் குடியிருக்காது. வீடு களையிழந்து இருக்கும். சுக ஜீவனம் அமையாது. தொடர்ந்து வழக்குகளோ மருத்துவ செலவுகளோ வந்து கொண்டிருக்கும். குடும்பம், தொழில்,அந்தஸ்து முதலியவற்றில் பாதிப்பு இருக்கும்.
           
                    ஐந்தில் மாந்தி இருந்தால் பிரேத சாபம் ஆகும். ஆறில் மாந்தி தீராத கடன் உண்டாகும். எழலில் மாந்தி கணவன் - மனைவி உறவினை பாதிக்கும். ஒன்பதில் மாந்தி கடந்த ஜென்ம பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் தோஷங்களை குறிக்கும்.
          
                   இது மட்டுமல்லாது மாந்தியல் வரும் கெடுபலன்கள் ஏராளம். அதை சொல்ல வார்த்தையில் அடங்காது. மாந்தியல் வரும் கேடுப்பலன்களை நீக்க நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது ஆலயத்திலோ மஹா ம்ருத்யுஞ்ச யாகம், சுதர்சன யாகம் செய்து யாக கும்ப நீரில் ஸ்தானம் செய்வித்தல் நீங்கும். மேலும் நல்லதொரு கனக புஷ்பராக கல்லை அணியவும்.

நாக தோஷம் ஜோதிட பார்வை





               நாக தோஷம் என்ற பெயரை கேட்ட உடனே அச்சப்படுகின்றனர் பலர். இது  தேவையற்ற பயமாகும். சரியான பரிகாரம் மூலம் இந்த தோஷத்தை நீக்கி கொள்ளலாம். ஜோதிட ரீதியாக இராகு மற்றும் கேது லக்னம் அல்லது இராசிக்கு 1,2,4,5,7,8,10,12 ம் இடங்களில் அமர்ந்தால் நாக தோஷம் என்று பொருள். இந்த நிலை உங்களுக்கு ஜாதகத்தில் இருந்தால் கோட்சார ரீதியில் அந்த இடங்களுக்கு இராகு, கேது வரும் காலங்களில் கெடு பலன்கள் நடைபெறுவதை காணலாம்.
              நாக தோஷம் தரும் கெடுபலன்களை இனி பார்ப்போம். குடும்ப வாழ்வில் சிக்கல்கள் தொடரும், கல்வி கெடும், நாணயம் தவறும், குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கும், சேமிப்பு இருக்காது, தயார் சுகம் கெடும், தொழிலாளர் ஒத்துழைப்பு இருக்காது, திருமணம் தடைபடும், புத்திர பாக்கியம் கெடும், பெண்களின் ஜதகமாயின்  கற்பிக்கு சோதனை வரும்.
             
                                  இத்தகைய பலன் உள்ளவர்கள் உடனே சர்ப்ப தோஷ பரிகாரம் செய்தல் கெடு பலன்கள் நீங்கி வாழ்வு சுகம் பெரும்.

கருடனை வணங்குவதால் உண்டாகும் பலன்கள்


         


                               கருடனுக்கு ( பருந்து ) கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள்.    கருடன் மகா விஷ்ணுவின் வாகனமும் ஆகும். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தல் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். அவையாவன.
                                                     ஞாயிறு   -  நோய் நீங்கும்
                                                      திங்கள்    -  குடும்பம் செழிக்கும்
                                                      செவ்வாய் - உடல் பலம் கூடும்
                                                       புதன்           - எதிரிகளின் தொல்லை நீங்கும்
                                                       வியாழன்   -  நீண்ட ஆயுள் பெறலாம்
                                                       வெள்ளி  - லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
                                                       சனி       - மோட்சம் கிடைக்கும்
        ஆகையால் கோவிலுக்கு செல்வோர்களும், வீட்டில் இருப்போர்களும்  தினமும் கருடனை பார்த்தல் வணங்கி துதிக்கவும், நன்மை பெறலாம்.




கிரகணம் ஜோதிட பார்வை



                                                      கிரகணம் என்றாலே மக்களின் அச்சம் இன்னும் தீரவில்லை. இதனை பற்றி பல நேயர்கள் என்னை எழுதும்படி கேட்டார்கள். சூரிய கிரகணம் தோன்றினால் மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா உயிர்னங்கள் மீதும் உடல் ரீதியான மாற்றங்கள் உண்டாகின்றன. அதே போல் சந்திர கிரகணத்தின் போது உயிரினங்களின் மனநிலை பதிக்கப்படுகிறது. கிரகண காலம் நமக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும், நம் முன்னோர்களான பிதுருக்களுக்கும் மிக முக்கியமான புன்னியகலமாகும்.

         
            இந்த கிரகண நேரத்தில் மனிதன் செய்யக் கூடாதவை என சாஸ்த்திரம் சொல்பவை. உணவு சாப்பிட கூடாது, உடலுறவு வைத்துக் கொள்ள இந்த நேரத்தில் மனிதனின் இந்திரியங்கள் பாதிக்கும். அகவே இதனை தவிர்ப்பது நல்லது. சூரிய கிரகணத்தை நேருக்கு நேர் கண்களால் பார்க்க கூடாது. கர்பிணி பெண்கள் கிரகணம் படும்படி வீட்டை விட்டு வெளிவர கூடாது. அப்படி வந்தால் பிறக்கும் குழந்தையின் உடலில் ஊனங்கள் உண்டாகும்.
        
                   இந்த கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை என்னவென்றால், சூரிய கிரகணம் பிடிக்கும் நேரமும், சந்திர கிரகணம் விடும் நேரமும் புனித நீராடி இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இதன் பலன் உடனே நம் பித்ருக்களை சென்றடைந்து, நம் பித்ரு தோஷங்கள் நீங்கும். கிரகணம் விலகும் நேரம் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யலாம்.
          

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க