ஞாயிறு, 11 மே, 2014

பிரம்மஹத்தி தோஷம் விளைவும் பரிகாரமும்





                                       பிரம்மஹத்தி தோஷம் என்பது ஆசிரியர்களுக்கு உத்தம குருவுக்கு பிராமணர்களுக்கு எந்த வழியிலேனும் துரோகம் செய்வதாலும், பலரின் சொத்துக்களை நேர்மையற்ற வழியில் அபகரித்ததாலும், கன்னி பெண்ணை ஏமாற்றி கற்பை சூரையாடிவிட்டு பின் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பிறரை இம்சித்ததாலும், நல்ல பாம்பை வெள்ளிக்கிழமை தினம் அடித்து கொன்ற பாவத்தினாலும் ஏற்படுகிறது, இந்த தோஷம் சென்ற பிறவியில் உண்டானதா, இந்த பிறவியில் உண்டானதா என்பதை உங்கள் பிறப்பு ஜாதகம் மூலம் கண்டறியலாம்.
       ஜோதிட சாஸ்த்திரத்தின் படி குருவை சனியை எந்த  விதத்தில் தொடர்பு கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டு, குரு சனி சேர்க்கை, பார்வை, குரு சனி சாரம் பெறுதல், சனி குரு சாரம் பெறுவது, குரு சனி பரிவர்த்தனை பெறுவது முதலிய அம்சங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கான  கிரக நிலைகள் ஆகும்.


         இந்த பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவுகளாவன :-
                                                                                                                       தீராத நோய்கள் உடலில் ஏற்பட்டு வாட்டும், மணவாழ்கையில், புத்திர பாக்யம் உண்டாவதில், மாங்கல்ய பாக்யத்தில் பாதிப்புகள் உண்டாகும்.  தொழில் பாதிப்பு, தீராத கடன்கள் ஏற்பட்டு வாட்டும். செய்யாத தவறுகளுக்கு தண்டனை அடைவது, மன நிம்மதியின்மை, புத்தி சுவாதீனம் இல்லாமல் போவது என இதன் பாதிப்புகள் தோன்றி வாழ்வை சீர்குலைக்கும்.
       

          பரிகாரம் :
                             தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோவில் சென்று தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்யவும் . கோவை மாவட்டம் பாலமலை சென்று குளத்தில் நீட்டி செங்கோதை, பூங்கோதை அம்மன்    சமேத அரங்கநாதரையும் வணங்க தோஷம்  நீங்கும். இராமேஷ்வரம்  சென்றும் பரிகாரம் செய்து  கொள்ளலாம்.                              

பிரேத சாபம் ஜோதிட பார்வை




                                      ஒரு ஜாதகத்தில் பிரேத சாபத்தினை மாந்தியை கொண்டு  தெரிந்துகொள்ளலாம். மாந்தியின் பார்வை பெற்ற கிரகங்களும், மாந்தியுடன் சேர்ந்த கிரகங்களும் பிரேத சாபத்தினை பெறும். பிரேத சாப்பத்தை பற்றி முன்பே எழுதியுள்ளேன். எனவே அதை ஜாதகத்தில் தெரிந்துகொள்வது எப்படி என பார்ப்போம்.
          உங்களின் ஜாதகத்தில் நான்காம் பாவத்தில் மாந்தியும் பாதகாதிபதியும் சேர்ந்திருந்தாலோ, நான்காம் அதிபதி வேறு எந்த பாவத்திலாவது மாந்தியுடன், பாதகாதிபதியுடன் சேர்ந்தாலோ உங்களுக்கு பிரேத சாபம் உண்டு. அந்த பிரேதம் எவ்வகையில் இறந்து சாபத்தை உண்டாக்கியது என்பதையும் ஜாதகத்தில் அறியலாம்.
        மாந்தியுடன் செவ்வாய் சேர்ந்து தோஷம் ஏற்பட்டால் அந்த மரணம் நெருப்பு, ஆயுதம் அல்லது விபத்தால் இறந்தது., மாந்தி சனியுடன் சேர்ந்து தோஷம் ஏற்பட்டால் தூக்கில் அல்லது நோயில் இறந்தது. மாந்தியும் இராகுவும் சேர்ந்து தோஷத்தை தருமானால் பிரேதம் விஷத்தால் இறந்தது.

       இவ்வகை பிரேத சாபம் நீங்க நீங்கள் வசிக்கும் வீட்டில் மகா ம்ருத்யுஞ்ச  யாகம் செய்து யாக கும்ப நீரை குடும்பத்தினர் அனைவரும் தலையில் தெளித்துக்கொள்ள பிரேத சாபம் நீங்கும். 

சனி, 10 மே, 2014

அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்

                 


                           சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த கிழமைகளில் அந்த காரியங்களை செய்ய ஆரம்பித்தால்  உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு கிழமையில் மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்  பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.




அஷ்ட கர்ம பெயர்                கிழமைகள் 




1. வசியம்                            -      ஞாயறு 



2. தம்பனம்                         -       புதன் 



3. மோகனம்                       -       திங்கள் 



4.  உச்சாடனம்                   -       வியாழன்  



5. பேதனம்                           -       செவ்வாய்  



6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  



7. வித்வேஷனம்               -       செவ்வாய் 



8. மாரணம்                           -       சனி  



          மேலே சொல்லிய கிழமைகளில்  அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய ஆரம்பித்தால் அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம் என்று சித்தர்கள் சொல்லி சென்றனர்.

வெள்ளி, 9 மே, 2014

அஷ்ட கர்மங்களுக்கு உண்டான திசைகள்

                 


                         சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த திசையை நோக்கி அமர்ந்து அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு திசையை பார்த்து அமர்ந்து மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான திசைகள் பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                திசைகள் 



1. வசியம்                            -      கிழக்கு 



2. தம்பனம்                         -       தென்மேற்கு 



3. மோகனம்                       -       தெற்கு 



4.  உச்சாடனம்                   -       மேற்கு 



5. பேதனம்                           -        வடக்கு 



6. ஆகர்ஷணம்                  -        வடமேற்கு 



7. வித்வேஷனம்               -        தென்மேற்கு 



8. மாரணம்                           -        தெற்கு 



          மேலே சொல்லிய திசைகளை நோக்கி அமர்ந்து கொண்டு அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

புதன், 30 ஏப்ரல், 2014

யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை!



                                                                 மகான்களும் யோகிகளும் ஒருபோதும் மறைவதில்லை, தமது உடலை ஆடைகளை களைவதை போல களைந்து சூக்கும உடலோடு சிவனுடன் ஒன்றி வாழ்கின்றனர். இதனையே திருமூலர் "யோக சமாதி உகந்தவர் சித்தரே" என்கிறார். இன்றைய காலகட்டத்தில் பல பேர் தனது பெயருக்கு முன்பு ஸ்ரீ, ஸ்ரீலஸ்ரீ, வாலை என்றும், பெயருக்கு பின்னால் சித்தர் என்றும் பட்டங்களை போட்டுக்கொண்டு அலைவதை மக்களை ஏமாற்றி பிழைப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.

                                                                   அவர்களுக்கே தெரியுமோ தெரியாதோ வாலையை சித்தி செய்த ஒருவன் ஒரு மஹா சித்தர் ஆகிவிடலாம். நாம் போற்றி வணங்கும் பதினென் சித்தர், நவ நாத சித்தர் தொட்டு கடந்த நூற்றாண்டு தோன்றிய கடைப்பிள்ளை சித்தர் வரை வாலை சித்தி செய்துதான் பல சித்துக்களை உலகத்துக்கு செய்து கட்டினர். வாலை சித்தி பெற்ற தவசீலர்கள் அடையாத பலன்கள் உலகில் எதுவுமில்லை, சகல காரிய சித்தி, ரசம், ரசாயனம், அஞ்சனம், பாதுகா சாதனம், மூலிகை, குளிகை, கட்சம், சரஸ்வதம், முதலிய சித்துகளும் அணிமா, மகிமா, லகிமா, கிரிமா, ஈஸித்வம், வசித்வம், பகுரூப சித்தி, சுரூப சித்தி என்னும் அஷ்ட மஹா சித்தி பெற்று சித்தனுக்கு சித்தனாய் பெரும் புகழ் பெற்று இம்மை இன்பத்தை அனுபவித்து தேவி சயுச்யம் அடைவார் என சாஸ்திரங்கள் உரைக்கின்றன. இன்று பெயருக்கு முன் வாலை என்றும் சித்தர் என்றும் போட்டு கொள்ளும் நபர்கள் மேலே சாஸ்திரம் சொல்லும் ஒரு சித்தினையாவது செய்து காட்ட இயலுமா? இவையெல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரம் என்று வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடனேயே தற்கலத்தில் வாழ்ந்த ரமண மகரிஷி, யோகிராம் சுரத் குமார், ஓஷோ, யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி, சச்சிதானந்த சுவாமிகள் முதல் இன்று வரை வாழ்ந்து வரும் பல சித்திகளை பெற்ற மஹா புருஷர்களும் கூட தன் பெயருக்கு முன்னால் வாலை என்றோ சித்தர் என்றோ அடைமொழிகளை போட்டுக் கொண்டதில்லை என அறியவும். ஏன் சிவனே ஆதிசங்கரராக அவதரித்தும் தன் பெயரை இன்றுவரை ஆதிசங்கரர் என்றே நிலைப்பெற செய்தார் எனவும் அறிக. சித்தர்கள் தமக்காக வாழாதவர்கள், தமக்காக காசு பணம் தேடாதவர்கள், என்றும் இறைவனுக்காகவும், இன்னலுற்ற மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள்.

யார் சித்தர் ? சித்தர்கள் சொன்னவை!

"சித்தியெனில் கண்கட்டு வித்தையல்ல
சில்லறையாம் கருமத்துச் செய்கையல்ல

மித்தையெனும் சூனியமாம் மாயமல்ல

மின்னணுவாம் விஞ்ஞான வியப்புமல்ல

சித்தியெனில் ஈசனுடன் ஒன்றாம்சித்தி

சிவனாவானவனேதான் சித்தன் சித்தன்!"




"தானான காயத்தை நிறுத்த வேண்டும்

சதாகாலம் சுக்கிலத்தைக் கட்டவேண்டும்

வேனான மும்மலத்தை யறுக்க வேண்டும்

வெளியான சிதாபாசம் நீக்கவேண்டும்

பானாக முச்சுடரை யறுக்க வேண்டும்

பாழான துலமதை வெறுக்கவேண்டும்

மானான பராபரியை நிர்த்தனம் செய்து

மானிலத்தில் வாழ்பவனே சித்தனாமே"



"பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்டு

பிதமுற்ற பாசஇருளைத் துறந்து

மதமற் றெனதியான் மாற்றிவிட்டாங்கே

திதமுற் றவர்கள் சிவசித்தர் தாமே"




"நாணயமாய் நடப்பவரே ஞானி

யோகியமாய் நடப்பவரே யோகி

சகலமும் தள்ளியவரே சந்நியாசி

ஆண்டவனை அறிந்தவரே ஆண்டி

ஒழுக்கம் உடையவரே துறவி

சிந்தை தெளிந்திருப்பவன் அவனே சித்தன்

செகமெல்லாஞ் சிவமென்று அறிந்தோன் சித்தன்"





வாழ்க சித்தர்கள்!                                                    வணங்குவோம் சித்தர் மலரடி!

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்

       


                          இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில்  பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.

       சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும்.

புதன், 16 ஏப்ரல், 2014

பரிகார ஹோமங்களும் அதன் பயன்களும்

           

மனிதனின் வாழ்வை அவனுடைய விதி அமைப்பை நிர்ணயம் செய்வதில் அவன் பிறக்கும் போது உண்டாகும் கோள்களின் (நவ கிரகங்கள்) அவனுடைய ஜாதகத்தில் நிற்க்கும் நிலையும், அதன் பார்வை பலமும், அவைகள் உண்டாக்கும் ஜாதக தோஷங்களும், அதனுடைய கோச்சார (கிரகங்களின் சுழற்ச்சி) பலமும் தான் ஒரு மனிதனுடைய விதி அமைப்பை நிர்ணயம் செய்கின்றன இந்த விதி அமைப்பால் அவனுக்கு நல்ல பலன்களோ அல்லது கெடுபலன்களோ உண்டாகின்றன, பிறப்புக்கள் ஏழு என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன, நாம் முற்பிறவிகளில் செய்த நல்ல காரியங்களால் அதற்க்கு தக்க யோகங்களும், முற்பிறவிகளில் செய்த பாவங்களால் அதற்க்கு தகுந்த தோஷங்களும் நமக்கு இப்பிறவியில் வந்து ஜாதகத்தில் அமைகிறது, அதற்க்கு தகுந்த பலன்கள் கிரகங்களின் கோச்சாரத்திலோ அல்லது கிரகங்களின் திசைகளிலோ நமக்கு வந்து அமைகிறது.






இந்த தோஷங்கள் பலவகைப்படும். அவை செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் - இந்த தோஷங்களால் திருமணம் ஆவதில் கால தாமதமும், திருமணதிற்கு பின்பு கணவன் - மனைவி இடையே ஒற்றுமை குறைவும், வருமான குறைவும், சண்டை சச்சரவு உண்டாதல், விவாக ரத்தாதல் முதலிய கேடு பலன்களும் உண்டாகும். புத்திர தோஷம் - இந்த தோஷத்தால் குழந்தைகள் பிறக்காமல் போகும், அல்லது குழந்தைகள் பிறக்க காலதாமதம் ஆகுதல், அல்லது உனமுற்ற குழந்தைகள் பிறந்து நம் ஆயுள் வரை மன வேதனையை உண்டாக்குதல்., குடும்ப தோஷம் - இந்த தோஷத்தால் ஜாதகர் உரிய பருவத்தில் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, பெற்றோர்களுடன் சந்தோஷமாக வாழ்வது இயலாது, திருமண தடை, புத்திரதடை, குடும்ப உறுப்பினர்கள் பிரிவு, ஒற்றுமை குறைவு, சிலருக்கு குடும்பமே இல்லாமல் போகும், குடும்ப வளர்ச்சி இருக்காது, ஜாதகருக்கு மகிழ்ச்சி என்பதே இருக்காது வீண் விரக்தியும் வீண் விரயமும் ஏற்படும்.


                                                                        மனை தோஷம் - இந்த தோஷத்தால் சொந்த மனை (வீடு) எளிதில் அமையாது, குடியிருக்கும் வீட்டில் சண்டை சச்சரவுகள் உண்டகிக்கொண்டே இருக்கும், அடிக்கடி விபத்து, நோய் அதனால் மருத்துவ செலவுகள் உண்டாகும், தூக்கம் சரியாக இருக்காது, கெட்ட கனவுகள் உண்டாகும், பணம் கையில் தங்காது, உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்காது, கடன்கள் உண்டாகி வருத்தும், செல்லப்பிராணிகள் வீட்டில் வளராது, துக்க சம்பவங்கள் அடிக்கடி உண்டாகும்.


                                                                        மேலும் பிரேத தோஷம், குல தெய்வ தோஷம், மாந்தி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், காக வந்தியா தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், பூர்வ கர்ம தோஷம், பாவ கத்தாரி தோஷம், பிதுர் தோஷம், மதுர் தோஷம், பிராமண தோஷம், வாக்கு தோஷம், உன்மத்த (பைத்தியம்) தோஷம், சத்ரு தோஷம், செய்வினை தோஷம், திருஷ்டி தோஷம், ஆயுள் தோஷம், பூர்வீக தோஷம், பிரேத பிண்ட சாப தோஷம் இப்படி தோஷங்களை பற்றி சொன்னால் இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும், இத்தகைய சாபங்களும் தோஷங்களும் நாம் முன்பிறப்பில் பிறருக்கு செய்த பாவங்களால் நமக்கு உண்டானவை, அப்படி தோஷங்கள் வரும் அளவுக்கு யாருக்கு பாவங்கள் எவ்வழியில் செய்தோம் என்று நாம் ஜாதகத்தில் ஆராய்ந்து கண்டறிய முடியும், இவ்வகை பாவங்கள் நம்மை படைத்த இறைவனுக்கு நாம் செய்தது, இதனை நீக்க நாம் ஒரு உபயம் செய்தால் மட்டுமே நாம் தோஷங்களில் இருந்து தப்பி, இப்போது நாம் படும் துயரங்களில் இருந்து தப்பி நல்ல வாழ்வினை வாழ முடியும், அப்படி பட்ட ஒரு பரிகாரம் தான் தோஷங்களுக்கு உண்டான யாகங்களை (பரிகார ஹோமங்களை) செய்துகொள்வது.


                                                                   தோஷ பரிகாரங்களில் மிகவும் சிறந்தவையாக விளங்குபவை ஹோமங்கள் ஆகும். புராண காலத்தில் தெய்வங்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அரசர்களும் தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய ஹோமங்கள் செய்து தமது இஷ்ட காரியங்களை சித்தி செய்து கொண்டதனை நாம் அறிவோம், இன்றும் நாடாள்பவர்களும், அரசியல்வாதிகளும், வசதிபடைத்தோரும் ஹோமங்கள் செய்து பலன்பெருவதை பத்திரிக்கை வாயிலாக நாம் அறிகிறோம்.


                                                                          ஹோமத்தின் போது கும்பங்கள் அமைத்து அதில் புனித நீரினை நிரப்பி, புனித பொருட்களை போட்டு அதன் மேல் மாவிலை தேங்காய் வைத்து நூல் சுற்றி சந்தனம் குங்குமம் பூக்கள் மாலைகளால் கும்பத்தை அலங்கரித்து அந்த கும்பத்தில் தெய்வங்களை ஆவாகனம் செய்து, குத்து விளக்கை அலங்கரித்து அதில் அஷ்ட இலட்சுமிகளை ஆவாகனம் செய்து, ஹோம நெருப்பில் தெய்வங்களை வசியம் செய்து வரவழைத்து பால், பழம், தேன், நெய் இவைகளை உணவாக கொடுத்து தெய்வங்களை திருப்திபடுத்தி அந்தந்த தெய்வங்களுக்கு உறிய மந்திரங்கள் ஓதி, நம்முடைய தோஷங்கள் நீங்கவேண்டும், நாம் வேண்டிய காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று நம் தேவைகளை அந்த தெய்வங்களிடம் கூறும்போது தெய்வங்கள் நம் தோஷங்களை போக்கி நம் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. எனவே ஹோமங்கள் செய்வது நம் இன்னல்களை நீக்கி நம்மை வளமுடன் வாழ வைக்கும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

ஹோமங்களும் அதன் பயன்களும் :

1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.


6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.


7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.


8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.


9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.


10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.


11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.


12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.


15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.


தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க