ஞாயிறு, 11 மே, 2014

நாக தோஷம் ஜோதிட பார்வை





               நாக தோஷம் என்ற பெயரை கேட்ட உடனே அச்சப்படுகின்றனர் பலர். இது  தேவையற்ற பயமாகும். சரியான பரிகாரம் மூலம் இந்த தோஷத்தை நீக்கி கொள்ளலாம். ஜோதிட ரீதியாக இராகு மற்றும் கேது லக்னம் அல்லது இராசிக்கு 1,2,4,5,7,8,10,12 ம் இடங்களில் அமர்ந்தால் நாக தோஷம் என்று பொருள். இந்த நிலை உங்களுக்கு ஜாதகத்தில் இருந்தால் கோட்சார ரீதியில் அந்த இடங்களுக்கு இராகு, கேது வரும் காலங்களில் கெடு பலன்கள் நடைபெறுவதை காணலாம்.
              நாக தோஷம் தரும் கெடுபலன்களை இனி பார்ப்போம். குடும்ப வாழ்வில் சிக்கல்கள் தொடரும், கல்வி கெடும், நாணயம் தவறும், குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கும், சேமிப்பு இருக்காது, தயார் சுகம் கெடும், தொழிலாளர் ஒத்துழைப்பு இருக்காது, திருமணம் தடைபடும், புத்திர பாக்கியம் கெடும், பெண்களின் ஜதகமாயின்  கற்பிக்கு சோதனை வரும்.
             
                                  இத்தகைய பலன் உள்ளவர்கள் உடனே சர்ப்ப தோஷ பரிகாரம் செய்தல் கெடு பலன்கள் நீங்கி வாழ்வு சுகம் பெரும்.

கருடனை வணங்குவதால் உண்டாகும் பலன்கள்


         


                               கருடனுக்கு ( பருந்து ) கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள்.    கருடன் மகா விஷ்ணுவின் வாகனமும் ஆகும். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தல் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். அவையாவன.
                                                     ஞாயிறு   -  நோய் நீங்கும்
                                                      திங்கள்    -  குடும்பம் செழிக்கும்
                                                      செவ்வாய் - உடல் பலம் கூடும்
                                                       புதன்           - எதிரிகளின் தொல்லை நீங்கும்
                                                       வியாழன்   -  நீண்ட ஆயுள் பெறலாம்
                                                       வெள்ளி  - லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
                                                       சனி       - மோட்சம் கிடைக்கும்
        ஆகையால் கோவிலுக்கு செல்வோர்களும், வீட்டில் இருப்போர்களும்  தினமும் கருடனை பார்த்தல் வணங்கி துதிக்கவும், நன்மை பெறலாம்.




கிரகணம் ஜோதிட பார்வை



                                                      கிரகணம் என்றாலே மக்களின் அச்சம் இன்னும் தீரவில்லை. இதனை பற்றி பல நேயர்கள் என்னை எழுதும்படி கேட்டார்கள். சூரிய கிரகணம் தோன்றினால் மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா உயிர்னங்கள் மீதும் உடல் ரீதியான மாற்றங்கள் உண்டாகின்றன. அதே போல் சந்திர கிரகணத்தின் போது உயிரினங்களின் மனநிலை பதிக்கப்படுகிறது. கிரகண காலம் நமக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும், நம் முன்னோர்களான பிதுருக்களுக்கும் மிக முக்கியமான புன்னியகலமாகும்.

         
            இந்த கிரகண நேரத்தில் மனிதன் செய்யக் கூடாதவை என சாஸ்த்திரம் சொல்பவை. உணவு சாப்பிட கூடாது, உடலுறவு வைத்துக் கொள்ள இந்த நேரத்தில் மனிதனின் இந்திரியங்கள் பாதிக்கும். அகவே இதனை தவிர்ப்பது நல்லது. சூரிய கிரகணத்தை நேருக்கு நேர் கண்களால் பார்க்க கூடாது. கர்பிணி பெண்கள் கிரகணம் படும்படி வீட்டை விட்டு வெளிவர கூடாது. அப்படி வந்தால் பிறக்கும் குழந்தையின் உடலில் ஊனங்கள் உண்டாகும்.
        
                   இந்த கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை என்னவென்றால், சூரிய கிரகணம் பிடிக்கும் நேரமும், சந்திர கிரகணம் விடும் நேரமும் புனித நீராடி இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இதன் பலன் உடனே நம் பித்ருக்களை சென்றடைந்து, நம் பித்ரு தோஷங்கள் நீங்கும். கிரகணம் விலகும் நேரம் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யலாம்.
          

பிரம்மஹத்தி தோஷம் விளைவும் பரிகாரமும்





                                       பிரம்மஹத்தி தோஷம் என்பது ஆசிரியர்களுக்கு உத்தம குருவுக்கு பிராமணர்களுக்கு எந்த வழியிலேனும் துரோகம் செய்வதாலும், பலரின் சொத்துக்களை நேர்மையற்ற வழியில் அபகரித்ததாலும், கன்னி பெண்ணை ஏமாற்றி கற்பை சூரையாடிவிட்டு பின் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பிறரை இம்சித்ததாலும், நல்ல பாம்பை வெள்ளிக்கிழமை தினம் அடித்து கொன்ற பாவத்தினாலும் ஏற்படுகிறது, இந்த தோஷம் சென்ற பிறவியில் உண்டானதா, இந்த பிறவியில் உண்டானதா என்பதை உங்கள் பிறப்பு ஜாதகம் மூலம் கண்டறியலாம்.
       ஜோதிட சாஸ்த்திரத்தின் படி குருவை சனியை எந்த  விதத்தில் தொடர்பு கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டு, குரு சனி சேர்க்கை, பார்வை, குரு சனி சாரம் பெறுதல், சனி குரு சாரம் பெறுவது, குரு சனி பரிவர்த்தனை பெறுவது முதலிய அம்சங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கான  கிரக நிலைகள் ஆகும்.


         இந்த பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவுகளாவன :-
                                                                                                                       தீராத நோய்கள் உடலில் ஏற்பட்டு வாட்டும், மணவாழ்கையில், புத்திர பாக்யம் உண்டாவதில், மாங்கல்ய பாக்யத்தில் பாதிப்புகள் உண்டாகும்.  தொழில் பாதிப்பு, தீராத கடன்கள் ஏற்பட்டு வாட்டும். செய்யாத தவறுகளுக்கு தண்டனை அடைவது, மன நிம்மதியின்மை, புத்தி சுவாதீனம் இல்லாமல் போவது என இதன் பாதிப்புகள் தோன்றி வாழ்வை சீர்குலைக்கும்.
       

          பரிகாரம் :
                             தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோவில் சென்று தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்யவும் . கோவை மாவட்டம் பாலமலை சென்று குளத்தில் நீட்டி செங்கோதை, பூங்கோதை அம்மன்    சமேத அரங்கநாதரையும் வணங்க தோஷம்  நீங்கும். இராமேஷ்வரம்  சென்றும் பரிகாரம் செய்து  கொள்ளலாம்.                              

பிரேத சாபம் ஜோதிட பார்வை




                                      ஒரு ஜாதகத்தில் பிரேத சாபத்தினை மாந்தியை கொண்டு  தெரிந்துகொள்ளலாம். மாந்தியின் பார்வை பெற்ற கிரகங்களும், மாந்தியுடன் சேர்ந்த கிரகங்களும் பிரேத சாபத்தினை பெறும். பிரேத சாப்பத்தை பற்றி முன்பே எழுதியுள்ளேன். எனவே அதை ஜாதகத்தில் தெரிந்துகொள்வது எப்படி என பார்ப்போம்.
          உங்களின் ஜாதகத்தில் நான்காம் பாவத்தில் மாந்தியும் பாதகாதிபதியும் சேர்ந்திருந்தாலோ, நான்காம் அதிபதி வேறு எந்த பாவத்திலாவது மாந்தியுடன், பாதகாதிபதியுடன் சேர்ந்தாலோ உங்களுக்கு பிரேத சாபம் உண்டு. அந்த பிரேதம் எவ்வகையில் இறந்து சாபத்தை உண்டாக்கியது என்பதையும் ஜாதகத்தில் அறியலாம்.
        மாந்தியுடன் செவ்வாய் சேர்ந்து தோஷம் ஏற்பட்டால் அந்த மரணம் நெருப்பு, ஆயுதம் அல்லது விபத்தால் இறந்தது., மாந்தி சனியுடன் சேர்ந்து தோஷம் ஏற்பட்டால் தூக்கில் அல்லது நோயில் இறந்தது. மாந்தியும் இராகுவும் சேர்ந்து தோஷத்தை தருமானால் பிரேதம் விஷத்தால் இறந்தது.

       இவ்வகை பிரேத சாபம் நீங்க நீங்கள் வசிக்கும் வீட்டில் மகா ம்ருத்யுஞ்ச  யாகம் செய்து யாக கும்ப நீரை குடும்பத்தினர் அனைவரும் தலையில் தெளித்துக்கொள்ள பிரேத சாபம் நீங்கும். 

சனி, 10 மே, 2014

அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்

                 


                           சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த கிழமைகளில் அந்த காரியங்களை செய்ய ஆரம்பித்தால்  உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு கிழமையில் மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்  பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.




அஷ்ட கர்ம பெயர்                கிழமைகள் 




1. வசியம்                            -      ஞாயறு 



2. தம்பனம்                         -       புதன் 



3. மோகனம்                       -       திங்கள் 



4.  உச்சாடனம்                   -       வியாழன்  



5. பேதனம்                           -       செவ்வாய்  



6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  



7. வித்வேஷனம்               -       செவ்வாய் 



8. மாரணம்                           -       சனி  



          மேலே சொல்லிய கிழமைகளில்  அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய ஆரம்பித்தால் அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம் என்று சித்தர்கள் சொல்லி சென்றனர்.

வெள்ளி, 9 மே, 2014

அஷ்ட கர்மங்களுக்கு உண்டான திசைகள்

                 


                         சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த திசையை நோக்கி அமர்ந்து அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு திசையை பார்த்து அமர்ந்து மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான திசைகள் பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                திசைகள் 



1. வசியம்                            -      கிழக்கு 



2. தம்பனம்                         -       தென்மேற்கு 



3. மோகனம்                       -       தெற்கு 



4.  உச்சாடனம்                   -       மேற்கு 



5. பேதனம்                           -        வடக்கு 



6. ஆகர்ஷணம்                  -        வடமேற்கு 



7. வித்வேஷனம்               -        தென்மேற்கு 



8. மாரணம்                           -        தெற்கு 



          மேலே சொல்லிய திசைகளை நோக்கி அமர்ந்து கொண்டு அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க