புதன், 16 ஏப்ரல், 2014

பரிகார ஹோமங்களும் அதன் பயன்களும்

           

மனிதனின் வாழ்வை அவனுடைய விதி அமைப்பை நிர்ணயம் செய்வதில் அவன் பிறக்கும் போது உண்டாகும் கோள்களின் (நவ கிரகங்கள்) அவனுடைய ஜாதகத்தில் நிற்க்கும் நிலையும், அதன் பார்வை பலமும், அவைகள் உண்டாக்கும் ஜாதக தோஷங்களும், அதனுடைய கோச்சார (கிரகங்களின் சுழற்ச்சி) பலமும் தான் ஒரு மனிதனுடைய விதி அமைப்பை நிர்ணயம் செய்கின்றன இந்த விதி அமைப்பால் அவனுக்கு நல்ல பலன்களோ அல்லது கெடுபலன்களோ உண்டாகின்றன, பிறப்புக்கள் ஏழு என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன, நாம் முற்பிறவிகளில் செய்த நல்ல காரியங்களால் அதற்க்கு தக்க யோகங்களும், முற்பிறவிகளில் செய்த பாவங்களால் அதற்க்கு தகுந்த தோஷங்களும் நமக்கு இப்பிறவியில் வந்து ஜாதகத்தில் அமைகிறது, அதற்க்கு தகுந்த பலன்கள் கிரகங்களின் கோச்சாரத்திலோ அல்லது கிரகங்களின் திசைகளிலோ நமக்கு வந்து அமைகிறது.






இந்த தோஷங்கள் பலவகைப்படும். அவை செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் - இந்த தோஷங்களால் திருமணம் ஆவதில் கால தாமதமும், திருமணதிற்கு பின்பு கணவன் - மனைவி இடையே ஒற்றுமை குறைவும், வருமான குறைவும், சண்டை சச்சரவு உண்டாதல், விவாக ரத்தாதல் முதலிய கேடு பலன்களும் உண்டாகும். புத்திர தோஷம் - இந்த தோஷத்தால் குழந்தைகள் பிறக்காமல் போகும், அல்லது குழந்தைகள் பிறக்க காலதாமதம் ஆகுதல், அல்லது உனமுற்ற குழந்தைகள் பிறந்து நம் ஆயுள் வரை மன வேதனையை உண்டாக்குதல்., குடும்ப தோஷம் - இந்த தோஷத்தால் ஜாதகர் உரிய பருவத்தில் திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, பெற்றோர்களுடன் சந்தோஷமாக வாழ்வது இயலாது, திருமண தடை, புத்திரதடை, குடும்ப உறுப்பினர்கள் பிரிவு, ஒற்றுமை குறைவு, சிலருக்கு குடும்பமே இல்லாமல் போகும், குடும்ப வளர்ச்சி இருக்காது, ஜாதகருக்கு மகிழ்ச்சி என்பதே இருக்காது வீண் விரக்தியும் வீண் விரயமும் ஏற்படும்.


                                                                        மனை தோஷம் - இந்த தோஷத்தால் சொந்த மனை (வீடு) எளிதில் அமையாது, குடியிருக்கும் வீட்டில் சண்டை சச்சரவுகள் உண்டகிக்கொண்டே இருக்கும், அடிக்கடி விபத்து, நோய் அதனால் மருத்துவ செலவுகள் உண்டாகும், தூக்கம் சரியாக இருக்காது, கெட்ட கனவுகள் உண்டாகும், பணம் கையில் தங்காது, உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்காது, கடன்கள் உண்டாகி வருத்தும், செல்லப்பிராணிகள் வீட்டில் வளராது, துக்க சம்பவங்கள் அடிக்கடி உண்டாகும்.


                                                                        மேலும் பிரேத தோஷம், குல தெய்வ தோஷம், மாந்தி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், காக வந்தியா தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம், பூர்வ கர்ம தோஷம், பாவ கத்தாரி தோஷம், பிதுர் தோஷம், மதுர் தோஷம், பிராமண தோஷம், வாக்கு தோஷம், உன்மத்த (பைத்தியம்) தோஷம், சத்ரு தோஷம், செய்வினை தோஷம், திருஷ்டி தோஷம், ஆயுள் தோஷம், பூர்வீக தோஷம், பிரேத பிண்ட சாப தோஷம் இப்படி தோஷங்களை பற்றி சொன்னால் இன்னும் பட்டியல் நீண்டுகொண்டே போகும், இத்தகைய சாபங்களும் தோஷங்களும் நாம் முன்பிறப்பில் பிறருக்கு செய்த பாவங்களால் நமக்கு உண்டானவை, அப்படி தோஷங்கள் வரும் அளவுக்கு யாருக்கு பாவங்கள் எவ்வழியில் செய்தோம் என்று நாம் ஜாதகத்தில் ஆராய்ந்து கண்டறிய முடியும், இவ்வகை பாவங்கள் நம்மை படைத்த இறைவனுக்கு நாம் செய்தது, இதனை நீக்க நாம் ஒரு உபயம் செய்தால் மட்டுமே நாம் தோஷங்களில் இருந்து தப்பி, இப்போது நாம் படும் துயரங்களில் இருந்து தப்பி நல்ல வாழ்வினை வாழ முடியும், அப்படி பட்ட ஒரு பரிகாரம் தான் தோஷங்களுக்கு உண்டான யாகங்களை (பரிகார ஹோமங்களை) செய்துகொள்வது.


                                                                   தோஷ பரிகாரங்களில் மிகவும் சிறந்தவையாக விளங்குபவை ஹோமங்கள் ஆகும். புராண காலத்தில் தெய்வங்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அரசர்களும் தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய ஹோமங்கள் செய்து தமது இஷ்ட காரியங்களை சித்தி செய்து கொண்டதனை நாம் அறிவோம், இன்றும் நாடாள்பவர்களும், அரசியல்வாதிகளும், வசதிபடைத்தோரும் ஹோமங்கள் செய்து பலன்பெருவதை பத்திரிக்கை வாயிலாக நாம் அறிகிறோம்.


                                                                          ஹோமத்தின் போது கும்பங்கள் அமைத்து அதில் புனித நீரினை நிரப்பி, புனித பொருட்களை போட்டு அதன் மேல் மாவிலை தேங்காய் வைத்து நூல் சுற்றி சந்தனம் குங்குமம் பூக்கள் மாலைகளால் கும்பத்தை அலங்கரித்து அந்த கும்பத்தில் தெய்வங்களை ஆவாகனம் செய்து, குத்து விளக்கை அலங்கரித்து அதில் அஷ்ட இலட்சுமிகளை ஆவாகனம் செய்து, ஹோம நெருப்பில் தெய்வங்களை வசியம் செய்து வரவழைத்து பால், பழம், தேன், நெய் இவைகளை உணவாக கொடுத்து தெய்வங்களை திருப்திபடுத்தி அந்தந்த தெய்வங்களுக்கு உறிய மந்திரங்கள் ஓதி, நம்முடைய தோஷங்கள் நீங்கவேண்டும், நாம் வேண்டிய காரியங்கள் வெற்றி அடைய வேண்டும் என்று நம் தேவைகளை அந்த தெய்வங்களிடம் கூறும்போது தெய்வங்கள் நம் தோஷங்களை போக்கி நம் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. எனவே ஹோமங்கள் செய்வது நம் இன்னல்களை நீக்கி நம்மை வளமுடன் வாழ வைக்கும் சிறந்த பரிகாரங்கள் ஆகும்.

ஹோமங்களும் அதன் பயன்களும் :

1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும்.

2. சண்டி ஹோமம் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும்.

3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும்.

4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும்.

5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும்.


6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும், பிரேத சாபம் நீக்கும்.


7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும்.


8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.


9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும்.


10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும், பொருளாதார பெருக்கம் ஏற்படும்.


11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும், இறந்தவர்களின் சாபங்களை நீக்கும்.


12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹோமம் : நோய்கள் நீங்கும், எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

13. ஸ்ரீ பிரம்மஹத்தி ஹோமம் : எதிரிகளின் சூழ்ச்சிகள் தொல்லைகள் நீங்கி, வெற்றி மேல் வெற்றி உண்டாகும்.

14. கண்திருஷ்டி ஹோமம் : திருஷ்டி தோஷங்கள் விலகும், காரிய தடைகள் நீக்கும்.


15. கால சர்ப்ப ஹோமம் : திருமண தடை உத்தியோக தடை நீங்கும், வாழ்வில் சோதனைகள் நீங்கி சாதனைகள் மலரும்.


திங்கள், 17 மார்ச், 2014

எந்திரத்தின் வகைகள்



                                                              எந்திரம் என்பது இயக்குதல்-கருவி, பொறி என பொருள்படும். அதாவது வரைகளும் (கோடுகளும்), பீஜம் (எழுத்துக்கள்) முதலியவற்றை முறைப்படி வரையப்பட்டு வழிபடப்படும் சக்கரம் எந்திரம் எனப்படும். இறைவனது அருட்சக்தி பதிந்து விளங்கி நின்ற ஜாதகர் விழைந்த பொருளையும், வினையையும் இயக்குவதற்கு நிலைகலன் ஆக விளங்குவதால் எந்திரம் என்று பெயர்பெற்றது. மந்திரம் உயிர் போன்றது, எந்திரம் பிராணனை போன்றது, பிம்பம் உடலினை போன்றது. இத்தகைய எந்திரங்கள் பொதுவாக 1.மூல எந்திரம், 2.பூஜா எந்திரம், 3.தாபன எந்திரம், 4.தாரண எந்திரம், 5.ரட்சா எந்திரம், 6.பிரயோக எந்திரம், 7.பிரயோகார்த்த பூசன எந்திரம், 8.சித்திப் பிரத எந்திரம், 9.முத்தொழில் சக்கரம், 10. ஐந்தொழில் சக்கரம், 11.ஐம்பூத சக்கரம், 12.ஏரொளி சக்கரம், 13. சட்கர்ம சக்கரம், 14.அஷ்டகர்ம சக்கரம், 15.அறாதாரா சக்கரம், 16.சிவ சக்கரம், 17.சிவகோணம், 18.சக்தி சக்கரம், 19.சக்திகோணம், 20.கால சக்கரம், 21.ராசி சக்கரம், 22.சர்வதோபத்ர சக்கரம், 23.கசபுட சக்கரம், 24.முக்கோண சக்கரம், 25.சதுரசிர சக்கரம், 26.ஐங்கோண சக்கரம், 27.அறுகோண சக்கரம், 28.எண்கோண சக்கரம், 29.நவகோண சக்கரம், 30.விந்துவட்ட சக்கரம், 31.ரவி சக்கரம், 32.பிறைமதி சக்கரம், 33.நாற்பத்து முக்கோண சக்கரம், 34.சம்மேளன சக்கரம், 35.திருவம்பல சிதம்பர சக்கரம், 36.பதினாறு பத சக்கரம், 37.இருபத்தைந்து பத சக்கரம், 38.முப்பத்தாறு பத சக்கரம், 39.என்பதொரு பத சக்கரம், 40.அறுபத்தி நான்கு பத சக்கரம், முதலான பல சக்கரங்களும் அதுமட்டும் அன்றி ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே சிறப்பான சக்கரங்கள் பல உள்ளன.அவை 41.வாலை சக்கரம், 42.புவனை சக்கரம், 43.திரிபுரை சக்கரம், 44.புவனாபதி சக்கரம்,45.சாம்பவி மண்டல சக்கரம், 46.வயிரவ சக்கரம், 47.நவாக்கரி சக்கரம், 48.நவகிரக சக்கரம், 49.சுதர்சன சக்கரம், 50.விஷ்ணு சக்கரம், 51.நரசிம்ம சக்கரம், 52.சரப சாளுவ சக்கரம், 53.விநாயக சக்கரம், 54.வீரபத்திர சக்கரம், 55.சண்முக சக்கரம், 56.மிருத்யுஞ்சய சக்கரம், 57.நீலகண்ட சக்கரம், 58.சண்டி சக்கரம் 59. துர்க்கை சக்கரம் 60.இராமர் சக்கரம் 61.சீதா சக்கரம் 62.லக்ஷ்மி சக்கரம், 63.அனுமார் சக்கரம், 64.ஸ்ரீ சக்கரம்  முதலிய பல சக்கரங்களும் உள்ளன.

வெள்ளி, 7 மார்ச், 2014

செய்வினையும் அதன் ஏழு வகைகளும்




                                                   பொதுவாக செய்வினைகள் ஏழு வகைகளில் செய்யப்படுகின்றன. அவை 1, பந்தனம், 2. ஸ்தம்பனம், 3. மோகனம், 4. ஆகர்ஷனம், 5. உச்சாடனம், 6. உன்மத்தனம், 7. மாரணம் என்ற ஏழு முறைகளில் செய்யப்படுகின்றன இனி இந்த முறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1. பந்தனம் :
                       பந்தனம் என்பது ஒருவர் செய்யும் செய்வினை செய்பவரை பாதிக்காமல் தன்னை சுற்றி கட்டு போட்டு கொள்வது.

2. ஸ்தம்பனம் :
                            ஒருவர் செய்யும் நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் எதுவாயினும் அதை நடைபெற விடாமல் தடுப்பதாகும். ஸ்தம்பனம் - இயக்கத்தை நடைபெற விடாமல் நிறுத்துதல், ஸ்தம்பிக்க செய்தல்.

3. மோகனம் :
                          ஒருவர் தன்னை பற்றியே நினைத்து உடலும் உள்ளமும் உருகும்படி செய்துவிடுதல். மோகனம் மூலமாக செய்வினையால் பாதிக்கப்பட்டவர் உறங்கும்போது கெட்ட கனவுகள் கண்டு உறக்கத்திலேயே விந்து கழியும், நாளடைவில் உடல் நலம் கெட்டு அவதிப்படுவார்.

4. ஆகர்ஷனம் :
                             ஒருவரை வசிகரித்து யாருக்காக வசீகரப்படுத்தப் படுகிறாரோ அவருக்காக எதையும் செய்ய தயாராக மாறுதல்.  இதை வசியம் என்றும் சொல்லுவார்கள்.

5. உச்சாடனம் :
                             ஒருவரை மற்றொருவர் மேல் பைத்தியம் பிடித்தது போல் ஆக்கி விடுவது, ஒருவரின் முன்னேற்றத்தை தடுப்பது, வீட்டில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல் சண்டையிடும்படி செய்தல், பண விரயங்களை உண்டாக செய்தல், இன்னும் பல கஷ்டங்களை உண்டாக்க முடியும்.

6. உன்மத்தனம் :
                               ஒருவரை பைத்தியமாக்கி விடுதல், கணவன் - மனைவி இடையே சந்தேகத்தை உண்டாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி பிரித்து விடுதல்.

7. மாரணம் :
                        ஒருவரை வியாதியால் உழல வைத்து நடமாட முடியாதபடி செய்து மரணமடைய செய்தல்,  கற்பத்தில் உள்ள கருவை அழித்தல், வீட்டில் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களை ஏற்படுத்துதல்.

          ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டால் அதனால் அவருக்கு 12 வருட காலம் பாதிப்புகள் ஏற்படும், ஆனால் செய்தவருக்கோ அதனால் 98 வருடங்கள் பாதிப்புகள் ஏற்படும். அவரும் அவருடைய சந்ததியினரும் செழித்து வாழ முடியாது குல நாசமடையும். ஆகையால் தீய காரியங்களை செய்யாமல் இருப்பதே நாமும் நம் வம்சமும் செழித்து நீடூடி வாழ வகை செய்யும்.


புதன், 5 மார்ச், 2014

மந்திர வகைகள்




மந்திரம் என்ற சொல்  நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். இத்தகைய மந்திரமானது பொதுவாக 1. மூல மந்திரம், 2. பீச மந்திரம், 3. பஞ்ச மந்திரம், 4. சடங்க மந்திரம், 5. சங்கிதா மந்திரம், 6. பத மந்திரம், 7. மாலா மந்திரம், 8. சம்மேளன மந்திரம், 9. காயத்திரி மந்திரம், 10. அசபா மந்திரம், 11. பிரணாப்பிரதிட்டா மந்திரம், 12. மாதிருகா மந்திரம், 13. மோன மந்திரம், 14. சாத்திய மந்திரம், 15. நாம மந்திரம், 16. பிரயோக மந்திரம், 17. அத்திர மந்திரம், 18. விஞ்சை மந்திரம், 19. பசிநீக்கு மந்திரம், 20. விண்ணியக்க மந்திரம், 21. வேற்றுரு மந்திரம், 22. துயில் மந்திரம், 23. திரஸ்கரிணீ மந்திரம், 24. சட்கர்ம மந்திரம், 25. அஷ்ட கர்ம மந்திரம், 26. பஞ்சகிருத்திய மந்திரம், 27. அகமருடண மந்திரம், 28. எகாஷர மந்திரம், 29. திரயஷரி மந்திரம், 30. பட்சாஷார மந்திரம், 31. சடஷர மந்திரம், 32. அஷ்டாஷர மந்திரம், 33. நவாக்கரி மந்திரம், 34. தசாஷர மந்திரம், 35. துவாதசநாம மந்திரம், 36. பஞ்சதசாக்கரி மந்திரம், 37. சோடஷாஷரி மந்திரம், 38. தடை மந்திரம், 39. விடை மந்திரம், 40. பிரசாத மந்திரம், 41. உருத்திர மந்திரம், 42. சூக்த மந்திரம், 43. ஆயுள் மந்திரம், 44. இருதய மந்திரம், 45. கவச மந்திரம், 46. நியாச மந்திரம், 47. துதி மந்திரம், 48. உபதேச மந்திரம், 49. தாரக மந்திரம், 50. ஜெபசமர்பண மந்திரம், 51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
                 இவையன்றி 52. நீலகண்ட மந்திரம் , 53. மிருத்யுஞ்சய மந்திரம் , 54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 55. சரப மந்திரம் , 56. வீரபத்ர மந்திரம் , 57. பைரவ மந்திரம் , 58. விநாயக மந்திரம் , 59. சண்முக மந்திரம் , 60. நரசிங்க மந்திரம் , 61. நவகிரக மந்திரம் , 62. வாலை மந்திரம் , 63. புவனை மந்திரம் , 64. திரிபுரை மந்திரம் , 65. துர்க்கை மந்திரம், 66. அசுவாரூடி மந்திரம், 67. சப்தமாதர் மந்திரம், 68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 69. பதினெண் கண மந்திரம், 70. யோகினியர் மந்திரம், 71. காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில்  ( நமது பாரத தேசத்தில் )  உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
              இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள். அவையாவன 1. நம, 2. சுவதா, 3. சுவாகா, 4. வௌஷடு, 5. வஷடு, 6. உம், 7. படு என்பனவாம். இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது.

வியாழன், 30 ஜனவரி, 2014

தீராத நோய்களை போக்கும் நவபாஷான பஞ்சகவ்ய சிகிச்சை


நவபாஷானம் :
     
                                   நவபாஷானம்  என்பது ஒன்பது பாஷானம் (ஒன்பது விஷம் ) அவை வீரம்,பூரம்,சாதிலிங்கம்,கௌரி,வெள்ளை பாஷானம்,தாளகம்,மனோசிலை,அரிதாரம் முதலிய பாஷானங்கள்  ஆகும். இந்த ஒன்பது பாஷானங்களை (விஷங்களை ) சுத்தி செய்து மனிதனுக்கு உட்கொள்ளும் மருந்தாக  மாற்றம் செய்யப்படுகிறது. நவபாஷானம் என்றல் நமது நினைவுக்கு வருவது பழனி மலையில் உள்ள முருகன் சிலைதான். நவபாஷான சிலை உடையாது, வளையாது, நெருப்பில் போட்டாலும் உருகாது. இதற்க்கு விலைமதிப்பே கிடையாது.நவபாஷானத்தின் சக்திகளை அளவிட முடியாது. தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்தது. நவபாஷானத்தை நேரடியாக சாப்பிட கூடாது என்பதற்காக சித்தர்கள் நவபாஷான சிலைகளை பால் தேன் பஞ்சாமிருத அபிஷேகம் செய்து அபிஷேக பொருட்களை மக்கள் சாப்பிடும் வண்ணம் செய்தனர். தீராத நோய்களை உடையவர்கள் காலையும் மாலையும் நவபாஷான தீர்த்தம் உட்கொண்டு வந்தால் தீராத நோய்கள்  தீரும். தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) உட்கொண்டால் தீராத நோய்களும் தீரும். உடல் மற்றும் மன சுத்தியும் உண்டாகும்.



பஞ்சகவ்யம் :

                              பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் பால்,தயிர்,நெய்,கோமியம்,சாணம் என்ற ஐந்து பொருட்களை சரியான விகிதத்தில் கலந்து தயாரிக்கப்படுவது பஞ்சகவ்யம் ஆகும். இதில் பால் 5 பங்கும், தயிர் 3 பங்கும்,நெய் 2 பங்கும், கோ மூத்திரம் 1 பங்கும், பசுஞ்சாணம் கை பெருவிரல் அளவும் கலந்து பஞ்சகவ்யம் தயாரிக்கப்படுகிறது. சுத்தமான முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மனித மருத்துவதிற்கும்  மற்றும் விவசாய பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படுகிறது. மருத்துவத்திற்காக சரியான முறையில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யம் மட்டுமே மருத்துவத்தில் நோய்களை தீர்க்க உபயோகப்படுத்தவேண்டும். குறிப்பு :- உதரணமாக பஞ்சகவ்யம் தயாரிக்க பயன்படும் சாணம் பூமியில் விழும் முன்பே தாமரை இலையில் பிடிக்கவேண்டும். ஒரு ஈ அந்த சாணத்தில் அமர்ந்தால் கூட அந்த சாணம் பஞ்சகவ்யம் தயாரிக்க உபயோகப்படாது. பஞ்சகவ்யம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தீராத பல வியாதிகளை தீர்க்கும் தன்மை பஞ்சகவ்யதிற்கு உண்டு. என்னுடைய குருவின் அனுபவத்தில் கேன்சர், எயிட்ஸ் போன்ற நோய்களும் குணமடைந்தது. தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ஓலைச்சுவடி பிரிவில் பஞ்சகவ்யம் பற்றி அரிய தகவல்கள் உள்ளன. கொமூத்திரதிற்கு வருணனும், சாணத்திற்கு அக்னியும், பாலுக்கு சந்திரனும், தயிருக்கு வாயுவும், நெய்க்கு விஷ்ணுவும் அதிபதிகள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பஞ்சகவ்யத்தில் சிவனுக்கு அபிஷேகம் செய்தல் பாவங்கள் விலகும். 


வெள்ளி, 3 ஜனவரி, 2014

உண்மைத் துறவியின் அடையாளம்

                    























                                                                  போ
லியாக தவவேடமிட்டு, மக்களை ஏமாற்றுபவர்கள் இந்த பூமிக்கே அவமானச் சின்னங்கள் என்று திருமூலர் வன்மையாகக் கண்டித்தார். உண்மையான துறவிகளின் அடையாளங்கள், பண்புகள் என்ன? போலித் துறவிகளின் பண்புகள், அடையாளங்கள் என்ன? சில திருமந்திரப் பாடல்களைக் காணலாம்.



""ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார்

ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்


ஞான் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்


ஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''


-திருமந்திரம் பாடல் எண்: 1652.


உண்மையான "ஞானமே' துறவின் சிறப்பு அம்சம். சிவஞானம் (மெய்ஞானம்) கைவரப் பெற்றவர்களே துறவறத்திற்குத் தகுதி உடையவர்கள். கடுமையான தவம், தந்திரயோகப் பயிற்சிகள் ஆகியவற்றின் மூலம் மெய்ஞானத்தை உணர்ந்த பின்னரே துறவு வேடம் தரிக்க வேண்டும். உண்மையான ஞானநிலையை அடைந்தவர்களுக்கு எந்த வேடமும் தேவையில்லை என்பதையே இந்தப் பாடல் வலியுறுத்துகிறது.




"ஞானம் இல்லார் வேடம் பூண்டும் நரகத்தார்' 


உண்மையான மெய்ஞானம் இல்லாத வர்கள் துறவிகளுக்குரிய வேடங்களை அணிந்து கொண்டாலும் அவர்களால் வீடுபேற்றினை அடைய முடியாது. அவர் களுக்கு விதிக்கப்பட்டது நரகமே!


""ஞானம் உள்ளார் வேடம் இன்று எனினும் நன்முத்தர்''


சிவஞானத்தை உணர்ந்தவர்கள் எத்தகைய துறவு வேடத்தையும் அணியவில்லை எனினும், அவர்களே உண்மையான துறவிகள். அவர்களுக்கே வீடுபேறு எனும் பெரும் பாக்கியம் கிடைக்கும். (நன்முத்தர்).


""ஞானம் உளதாக வேண்டுவோர் நக்கன்பால்


ஞானம் உளவேடம் நண்ணி நிற்போரே''


தனக்கு உண்மையான சிவஞானம் சித்திக்க வேண்டும் என்று நினைக்கும் துறவிகள் சிவனையே தனது சிந்தனையில் நிறுத்தி அவனே கதியெனக் கிடப்பர். புறவேடங்கள் எதுவும் அவர்களிடம் இருந்தாலும் அவர் களது உள்ளம் உண்மையான துறவு நிலையில் இருக்கும்.


சிவனுக்குரிய பல பெயர்களில் ஒன்று "தக்கன்' என்பது. அதுவே இப்பாடலில் "நக்கன்' எனக் குறிப்பிடப்படுகிறது.


ஆக, துறவு என்பது காவி உடை, கமண்டலம் போன்ற வெளிஅடையாளங்களில் (வேடங்களில்) இல்லை. துறவு நிலை என்பது மனம், எண்ணம் சார்ந்த நிலை. ஞானத் தின் பயனாக மனம் பற்றற்ற நிலையை அடைவதே உண்மையான துறவிக்கு அடையாளம்.

"புன்ஞானத்தோர் வேடம் பூண்டும் பயனில்லை


நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள்நண்ணித்


துன்ஞானத்தோர் சமயத் துரிசு உள்ளோர்


பின்ஞானத்தோர் என்றும் பேச கில்லாரே''


-திருமந்திரம் பாடல் எண்: 1653.


இதற்கு முந்தைய பாடலின் கருத்தே இப்பாடலிலும் ஏறக்குறைய வலியுறுத்தப்படுகிறது.


""புன்ஞானத்தார் வேடம் பூண்டும் பயனில்லை''


உண்மையான ஞானம் இல்லாத மூடர்கள் (புன்ஞானத்தார்) தவவேடம் பூணுவதால் எந்தப் பயனும் இல்லை.


""நன்ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித்''


உண்மையான சிவஞானம் பெற்றவர்களே நன்ஞானத் தார். இவர்கள் இறைவனது அருளை வேண்டி, அவனையே விரும்பி (நண்ணி) அவனிடத்தில் சரணாகதி அடைந்துவிடுவர். இவர்கள் எந்த வேடமும் பூணும் அவசியம் இல்லை.


""துன்ஞானத்தோர் சமயத்துரிசு உள்ளோர்''


"துரிசு' என்ற சொல்லுக்கு அழுக்கு, அழுக்காறு, பொறாமை என்ற அர்த்தங்கள் உள்ளது. பிற சமயங்களின் மீதும் பொறாமையும், கசப்பும் உள்ளவர்கள் ஞானமுடையவர்களாக இருந்தாலும் அது தீய ஞானம். எனவே அவர்களும் தீயவர்களே (துன்ஞானத்தோர்).

""பின்ஞானத்தோர் என்றும் பேச இல்லாரே''


உண்மையான ஞானிகள் இத்தகையே துன்ஞானத்தாரோடு வாக்கு வாதங்களில் ஈடுபட மாட்டார்கள் (பேச இல்லாரே). திருமூலர் வாழ்ந்த கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் சைவமும், வைணவமும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டிருந்தன.


சைவம் பெரியதா, வைணவம் பெரியதா என்ற சர்ச்சைகளும், வாக்கு வாதங்களும், தர்க்கங்களும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், "பிற சமயங்களின்மேல் வெறுப்பு உள்ளவர்கள் துன்ஞானத் தோர்- உண்மையான ஞானம் பெற்ற வர்கள் இவர்களோடு தர்க்கங்களிலும் வாக்குவாதங்களிலும் ஈடுபட மாட்டார்கள் என்று ஒரே போடாகப் போட்டு விட்டார் திருமூலர்.


இதுவே சித்தர்களை பிற துறவி களிடமிருந்தும், சமயக் குரவர்களிட மிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு முக்கியமான பண்பு. சித்தம் தெளிந்து சித்தர் நிலையை அடைந்தவர்களிடம் பேச்சு இராது. ஆரவாரங்களோ, ஆர்ப்பரிப்புகளோ இராது. உடலில் உயிர் இருந்தாலும் அவர்கள் "செத்த சவம்போல்' எதிலும் பற்றின்றித் திரிவர்! இறைவனது திருவடிகள் மட்டுமே அவர்கள் மனதை நிறைத்திருக்கும். வேறு எதற்கும் அங்கு இடமிராது. இந்த கருத்தை விளக்கும் ஒரு திருமந்திரம் பாடலைக் காணலாம்.


""கத்தித் திரிவர் கழுவடி நாய் போல்


கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்


ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே


செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே''


-திருமந்திரம் பாடல் எண்: 1655.

மிகக் கொடிய பாதகச் செயலைச் செய்தவர்களைத் தூக்கிலிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு தூக்கிலிட்டுக் கொல்லுவதையே "கழுவேற்றுதல்' என்று அக்காலத்தில் அழைத்தார்கள். தூக்குமரம்- கழுமரம்- இதையே கழுவடி என்கிறார் திருமூலர்.


சாதாரணமாக இறந்தவர்களுக்கு சமயச் சடங்குகள் செய்து புதைப்பார்கள். அல்லது எரியூட்டுவார்கள். ஆனால் கழுமரம் ஏற்றப்பட்ட வர்களுக்கு இது கிடையாது. தூக்கிலிடப்பட்ட உடல் நாய்களுக்கும், நரிகளுக்குமே இரையாகும். தமிழகத்தில் மட்டுமின்றி, கிரேக்க, ரோமானிய நாகரீகங்களிலும் தொன்று தொட்டு இதுவே வழக்கமாக இருந்திருக்கிறது.


"கத்தித்திரிவர் கழுவடி நாய் போல்'


ஒரு மனிதனை கழுவில் ஏற்றத் தயாராகும் போதே, எப்போது நமக்கு உணவு கிடைக்கும் என்ற தவிப்பில் நாய்கள் அந்த கழுமரத்தைச் ஊளையிட்டுக் கொண்டே சுற்றி வருமாம். அவற்றின் இலக்கு- உணவு.


அதுபோலவே போலித் துறவிகளும் "பணம்' ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆரவாரமான பேச்சுகளும் பிரசங்கங்கள் என்று கத்தித் திரிவார்களாம்.


அடுத்ததாக இந்த போலி வேடதாரித் துறவிகளை தெருவில் குரளி வித்தை காட்டு பவனுக்கு ஒப்பிடுகிறார் திருமூலர். குரளி வித்தை காட்டுபவன் தனது பேச்சு சாமர்த்தியத்தால் கூட்டத்தில் இருப்பவர்களைத் தன்வசப் படுத்திவிடுவான்.


தனது பேச்சுத் திறமையால் பல கண்கட்டி வித்தைகளைச் செய்து காட்டி கூட்டத்தினரை மகிழ்விப்பான். ஆனால் அவனது உண்மையான நோக்கம் கூட்டத்தில் இருப்பவர்களின் கைகளில் இருக்கும் பொருளை கொத்திக் கொள்வதே!


அதுபோலவே இந்த போலித் துறவிகளும் பேச்சு, கண்கட்டு வித்தைகள் என பலவற்றைச் செய்து பெருங்கூட்டத்தை தம்மிடம் ஈர்த்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களது உண்மையான நோக்கம் பிறரிடம் உள்ள பொருளையும், பணத்தையும் தனதாக்கிக் கொள்வதே! இதையே "கொத்தித் திரிவது' என்கிறார் திருமூலர்.

"கொத்தித் திரிவர்' என்ற சொற்களிலும் ஒரு நுட்பமான சூட்சுமம் உள்ளது. நம் கையிலுள்ள பொருளை ஒருவன் நேராக வந்து பறித்துக் கொள்ள முயற்சிக்கும்போது நாம் எதிர்த்து போராட முடியும். திறமையிருந்தால் நமது பொருளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.


பருந்து, காக்கை போன்றவையே கொத்திச் செல்லும். நமது தலைக்குமேல் பறந்து கொண்டிருக்கும் இவற்றை நம்மால் கவனிக்க முடியாது. நாம் சற்றே ஏமாந்த வேளையில் இவை சரேரென வந்து நம் கையில் உள்ளதைக் கொத்திக் கொண்டு பறந்துவிடும்.


போலித் துறவிகளும் தாங்கள் சராசரி மனிதர்களைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் (மேலே பறக்கும் பருந்துபோல) என்ற மாயத் தோற்றத்தை தங்களது பேச்சாலும், ஆரவாரங் களாலும், வேடங்களாலும் உருவாக்கி விடுகிறார் கள். நாம் அசந்து நிற்கும் வேளையில் "கொத்திச்' சென்று விடுகிறார்கள்.


பிடுங்கித் திரிவர் அல்லது களவாடுவர் என்ற சொற்களைப் பயன்படுத்தாது "கொத்தித் திரிவர்' என்ற சொற்களை திருமூலர் பயன்படுத்தி யிருப்பதன் சூட்சுமம் இதுதான்.


""ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே


செத்துத் திரிவர் சிவஞானியோர்களே''


உடலில் உயிர் இருக்கும். உடல் இயங்கிக் கொண்டிருக்கும். ஐம்புலன்களும் (பொறிகள்) வேலை செய்யும். ஆனாலும் உண்மையான சிவஞான நிலையை அடைந்த சித்தர்களும், துறவிகளும் செத்த பிணம்போலவே திரிந்து கொண்டிருப்பர் என்பதே இந்த இறுதி இரு அடிகளின் பொருளாகும்.


உயிர் இருந்தும் இல்லாததுபோல் எவ்வித உலக நாட்டமும் இன்றி, "சித்தன் போக்கு சிவன் போக்கு' என்று திரிவதே உண்மையான துறவிக்கு அடையாளம். அனைத்தையும் துறந்த- கடந்த இந்த நிலை ஒருவித "ஜீவசமாதி' நிலையாகும்.

""மயல் அற்று இருள்அற்று மாமனம் அற்றுக்


கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று 


தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்


செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'


-திருமந்திரம் பாடல் எண்: 1662.


"மெய்யான சிவஞானிகள் செயல் அற்று இருப்பர்' என்பதையே இந்தப் பாடலும் கூறு கிறது. ஒவ்வொரு அடியாகப் பொருள் காணலாம்.


"மயல் அற்று இருள் அற்று மாமனம் அற்றுக்'


"மயல்' என்பது மன மயக்கங்களைக் குறிக் கிறது. உண்மையான ஞானம் பெற்ற சிவனடி யாராகிய துறவிகளிடம் "மன மயக்கம்' என்பது அறவே இராது. உலக இச்சைகளிலும் ஆசா பாசங்களிலும் மனம் செல்லாது. தெளிந்த நீரோடை போன்ற மனநிலை இருக்கும்.


இறைவன் ஜோதி வடிவானவன். இறைவன் ஜோதி வடிவாக உடலினுள் குடிகொள்ளும் போதுதான் உண்மையான ஞானம் உருவாகும். இந்த ஜோதி உள்ளே இருப்பதால் உண்மையான துறவிகள் மனதில் இருள் என்பதே இராது. இதையே "இருள் அற்று' என்கிறார் திருமூலர். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல, அக இருள் அகலும்போது, முகமும், உடலும் பிரகாசமாகும். இதையே "தேஜஸ்' என்கிறோம். உண்மை யான துறவிகளிடம் இதைக் காணலாம்.


மனம் என்பதற்கும் மேலானது நமது "தான்' எனும் அகங்காரம். இதையே ஈகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறோம். இந்த அகங்காரமே ஞானப் பாதையின் மிகப் பெரிய தடைக்கல், மெய்ஞானம் அடைந்த ஞானிகளிடமும், துறவிகளிடமும் இந்த "மாமனம்' எனும் அகங்காரம் அழிந்து போகும்.


"கயல் உற்ற கண்ணியர் கைப்பிணக்கு அற்று'

மீன் போன்ற கண்களையுடைய பெண்களின் கைகளைத் தழுவி, அவரோடு உறவு கொள்ளும் செயலும் உண்மைத் துறவு நிலையில் அறுந்து போகும். துறவுக்கான முக்கியமான இலக்கணங்களில் இதுவும் ஒன்று. இந்த விஷயத்தில்தான் இன்று பல போலித் துறவிகள் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.


"தயல் உற்றவரோடும் தாமே தாமாகிச்'


"தையல்' என்பது பெண் என்பதைக் குறிக்கும். "தையல்' என்பதே இங்கு "தயல்' என்றாயிற்று. "தையல் உற்றவர்' என்றால் உமையை தனது உடலின் சரிபாகமாகக் கொண்ட சிவன்- உமையொரு பாகன்- அர்த்த நாரீஸ்வரன். உண்மைத் துறவிகள் "நான் என்ற அகங்காரம் அழிந்த நிலையில் சிவனோடு ஒன்றாகிவிடுவர். (தாமே தாமாகி). தான் வேறு; சிவன் வேறு என்றில்லாத இறை நிலையை அடைந்தவர்களே உண்மையான துறவிகள்.


"செயல் அற்று இருப்பார் சிவ வேடத்தாரே'


இறைவனோடு ஒன்றிய நிலையில் இருப்பவர்கள் செயல் அற்ற நிலைக்கு வந்து விடுவார்கள். ஆரவாரங்களோ, ஆர்ப்பாட்டங்களோ, பிரசங்கங்களோ இராது.


செயல் அற்று இருப்பது என்பது சும்மா சோம்பியிருப்பது அல்ல. "எல்லாம் அவன் செயல், ஆட்டுவிப்பவன் அவன்- இயங்குவது நான்' என்ற நிலை. எல்லையற்ற ஆனந்த நிலை! இதுவே உண்மைத் துறவியின் அடையாளம்!



புதன், 1 ஜனவரி, 2014

சிவலிங்கமும் மனிதனும் கோயில் அமைப்பும்


                                     உலகின் முதல் உருவமில்லா கடவுள் சிவன். அவர் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது.



லிங்கத்தின் சிறப்பு :

                                             உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.



அறிவியலும் இந்து மதமும் :

                                                                அறிவியலும் இந்து மதமும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.



கோவிலின் அமைப்பு :



                                       லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.

                                                 ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.





பிட்யூட்டரி சுரப்பி :



                                             மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பிட்யூட்டரி சுரப்பி. பிட்டியூட்டரி சுரப்பி முதன்மையான சுரப்பி. பிட்யூட்டரி சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.


                                                         பிட்யூட்டரி சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பிட்யூட்டரி சுரப்பி( pituitary gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.



பிட்யூட்டரி சுரப்பியின் வடிவம் :



பிட்யூட்டரியின் வடிவமும் சிவலிங்கமே 
பிட்யூட்டரியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப் போவதை உங்களால் காண முடியும்.





தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க