வியாழன், 24 அக்டோபர், 2013

அமானுஷ்யம் வீட்டால் வந்த வேதனை



                             கடந்த இரண்டு மதங்களுக்கு முன்பு  நமது ஸ்ரீ விருட்ச பீடத்துக்கு ஒரு கணவனும் மனைவியும் வந்திருந்தனர் பெயர் திரு/திருமதி. சுந்தரம் (பகத்தூர் கிராமம், சிறுமுகை, கோவை மாவட்டம் ), வந்திருந்த தம்பதிகளுக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் அவர்களின் முகத்தில் சந்தோஷ களையே இல்லை. எதோ ஒரு தீராத சிக்கலில் சிக்கி தவிப்பது மட்டும் எனக்கு தெரிந்தது. சரி பூஜையில்  தெய்வத்தின்  வாயிலாகவே தெரிந்து கொள்வோம் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் வேறு எதுவும் அவர்களிடம் கேட்கவில்லை விறு விறுவென பூஜையில் அமர்ந்தேன். பூஜையில்  அவர்கள் குடியிருக்கும் வீட்டில் சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாகவும் அதனால் மன குழப்பமும், வேதனையும், விரக்தியும் அடைந்திருப்பதும் எனக்கு தெரிந்தது. அவர்கள் குடியிருக்கும் இல்லத்துக்கு சென்று பூஜித்து பார்க்க எனக்கு கட்டளையை தெய்வம் சொன்னது .  விஷத்தை அவர்களிடம் சொன்னேன் அவர்களும் உடனே வாருங்கள் எங்கள் இல்லத்துக்கு செல்வோம் என்றனர். உடனே நானும் எனது சகாக்களுடன் புறப்பட்டோம்.
              
                      அவர்கள் இல்லம் களையே இல்லாமல் இருந்தது. வீட்டில் இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு வித அச்சம் இருப்பதை என்னால் உணர முடிந்தது.சிறிது நேரத்தில் அந்த தம்பதியினர் சில விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். ஒரு நாள் கூட இந்த வீட்டில் இரவு நிம்மதியாக உறங்க முடியவில்லை. எதோ ஒரு உருவம் காலில் கொலுசு அணிந்துக் கொண்டு நடமாடும் சத்தம் வீட்டில் உள்ள அனைவருக்கும் கேட்பதாகவும், ராட்சச உருவங்கள் அனைவரின் கனவிலும் வந்து பயமுறுத்துவதாகவும் இது போன்ற பாதிப்பு தொடர்ந்து வீடு வாங்கிய நாளில் இருந்து தொடர்ந்து எழு வருடமாக தினம் தினம் நடைபெறும் சம்பவங்கள் என்றும் இதுவரை யாரும் இரவில் நிம்மதியாக உறங்கியதில்லை என்றும், சிறு குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் உடலிலும் முகத்தினை தவிர அறாத புண்கள் உண்டாகியுள்ளது இதுவரை பலப் பல மருத்துவ நிபுணர்களிடம் சிகிச்சை பெற்றும் பலனில்லை என்றும் சொல்லிமுடிதனர். இனி நீங்கள் தான் எங்களுக்கு நல்ல வழியை காட்ட வேண்டும் என்று கண்ணீர் மல்க சொன்னனர்.
                       அந்த வீட்டின் பூஜை அறையை கேட்டு அங்கு அமர்ந்து என் இஷ்ட தெய்வத்தை பூஜித்து இவர்களின் நல்வாழ்வுக்கு நல்வழி கட்ட வேண்டும் என்று பிராத்தித்து வேண்டினேன். ''இந்த இல்லத்தில் இதற்க்கு முன் வாசித்தவருக்கு ஆகாத சிலர் வைத்த ஏவல் இந்த வீட்டில் இருப்பதாகவும், அது மட்டும் இல்லாமல் நிறைவேறாத ஆசைகளுடன் இறந்த ஒரு கற்பஸ்திரியின் ஆவியும் அங்கு உலவுவதாகவும்'' என் தெய்வம் எனக்கு சொன்னது. பூஜையில் தெரிந்ததை  அவர்களிடம் சொன்னேன். அவர்களும் பல மாந்திரீகர்களை அழைத்துவந்து பலப்பல பரிகாரங்களை செய்தோம் இலட்சங்கள் கரைந்ததே தவிர பலன் ஒன்றும் இல்லை நீங்கள் தான் இந்த பிரச்சனையில் இருந்து மீள வழிகாட்ட வேண்டும் என்று மன்றாடினார்.
                           
                             அந்த தம்பதியிடம் மறுநாள் வாருங்கள் வழி சொல்கிறேன் என்று சொல்லி கிளம்பினேன். ஸ்ரீ விருட்ச பீடம் வந்து இவர்களின் துயரை தீர்க்க நீயே உடனிருந்து வழிநடத்த வேண்டும் என்று என் இஷ்ட தெய்வம் ஸ்ரீ மகா லக்ஷ்மியையும் சித்தர்களையும் வேண்டிக்கொண்டேன். என் தெய்வமும் நீ செய் என்று உத்தரவு தந்தது மகிழ்வுடன் உறங்கச் சென்றேன்.
                           
                     மறுநாள்  அந்த தம்பதியினர் வந்தனர் அவர்களிடம் செய்ய வேண்டிய பூஜை முறைகளை விளக்கினேன். அதன் படி மூன்று நாட்கள் பூஜித்து அவர்களின் வீட்டில் இருந்த ஏவலை போக்கினேன். அவர்களுக்கு 15 நாள் உருவேற்றி ஒரு வராகி எந்திரத்தை உரிய மூலிகையை உடன் வைத்து பிரேம் செய்து அவர்கள் வீட்டில் தலை வாசலுக்கு மேலே பூஜித்து மாட்டினேன்.



பறந்து வந்த எந்திர தகடு :
                                                   

                                                            அன்று எந்திரதகடை மாலை ஐந்து மணிக்கு மாட்டி பூஜித்து கிளம்பினேன். சுமார் இரவு 11 மணி இருக்கும் நானும் எனது சாகவும் வேறு ஒரு வீட்டில் பூஜைக்கு புறப்பட்டு வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம். சுந்தரம் செல்போனில் அழைத்தார் குரலில் ஒரு பதட்டம் தெரிந்தது என்ன நடந்தது என்று விசாரித்தேன். இரவு 10.45 க்கு அனைவரும் உறங்கச் சென்றோம்.கதவுகள் அனைத்தும் தாழிட்டு விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தது. இரவு விளக்கு ஒன்று மட்டும் எரிந்தது. அனைவரும் டிவியில் ஒலிக்கும் படலை கேட்டுக்கொண்டே உறங்கிக் கொண்டிருந்தோம். உறங்கிய இடம் ஹால் சுமார் 10 அடி துரத்தில் வாசலில் நீங்கள் மாட்டிய வாராகி எந்திரம் எங்கள் அருகில் பறந்து வந்து விழுந்தது. இது எப்படி சத்தியம் எங்களுக்கு பயமாக உள்ளது உடனே நீங்கள் வாருங்கள் என்றார். நான் வேறு ஒரு நபரின் ஏவலை தீர்க்க பயணப்பட்டு சென்று கொண்டிருப்பதை சொன்னேன். எந்த பயமும் பட தேவையில்லை எந்திரத்தை எடுத்து மீண்டும் மாட்டிவிட்டு பயப்படாமல் துங்கும்படி சொன்னேன். பேசி முடித்து 2 நிமிடம் கூட இருக்காது மீண்டும் செல்போனில் அழைத்தார். என்ன நடந்தது என்றேன் எந்திர தகடு மாட்டியஉடன் தகடு சுவற்றில் டமார் டமார் என்று தட்டி மோதிக்கொள்கிறது  எங்களுக்கு பயமாக உள்ளது பயணத்தை முடித்துக் கொண்டு உடனே வரவேண்டும் என்று கெஞ்சினார். எந்த பயமும் வேண்டாம் எல்லாம் வாராகி அம்மன் செயல் பயப்படாது தூங்குங்கள் என்று சொல்லி வைத்தேன். மீண்டும் ஒரு 5 நிமிடம் கடந்திருக்கும் மீண்டும் அழைத்தார். ஆன் செய்து பேசினேன் வீட்டில் உள்ள அனைவரின் கைகளும் இழுப்பது போல் உள்ளது உடனே வரவேண்டும் என்று சொல்லி அவரின் குரல் கம்மியது. அவரிடம் சொன்னேன் நான் கொடுத்து வைத்த விபூதியை கொஞ்சம் எடுத்து அனைவரும் பூசிக்கொள்ளும் படி சொன்னேன் அவ்வாறே செய்தார். இனி எந்த தொந்தரவும் உங்களுக்கு வராது நிம்மதியுடன் உறங்குங்கள் காலையில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லி போனை வைத்தேன்.
                         

                                 மீண்டும் காலையில் செல்போனில் அழைத்தார். இரவு நடந்த மர்மங்களை விளக்கும் படி கேட்டார். நானும் சொன்னேன். 3 நாள் பூஜையில் உங்கள் வீட்டில் இருந்த ஏவலையும், ஆவியையும்  விரட்டினேன். ஆனாலும் நிறைவேறாத ஆசையுடன் இறந்த அந்த பெண்ணின் ஆவி மீண்டும் உங்கள் வீட்டில் நுழைய முயற்சி செய்தது அதை தடுத்து அடித்துக் கொல்லவே வாராகி எந்திரம் பறந்து வந்து விழுந்தது. ஏனென்றால் அந்த எந்திரத்தின் பின்புறம் ஒரு துஷ்ட சக்திகளை ஒடுக்கும் சக்தி வாய்ந்த மூலிகை வேர் வைத்து பிரேம் செய்திருப்பதை சொன்னேன். சரி மீண்டும் சுவற்றில் மாட்டிய பிறகு தானாக டமார் டமார் என்று அடித்து கொண்டது எதனால் என்றார். எந்திரம் பறந்து வந்து அந்த கெட்ட ஆவியை அடித்து விழுந்ததும் அதில் வைத்திருந்த வேர் அந்த கெட்ட ஆவியை பிடித்துக் கொண்டது அதை அடித்து விரட்டவே  தானாக சுவற்றில் அடித்துக் கொண்டது என்றேன். மீண்டும் ஒரு கேள்வியை கேட்டார் எங்களின் கைகள் பிடித்து இழுப்பது போல் இருந்தது எதனால் என்றார். அந்த எந்திரத்தை மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றி விடுங்கள் நான் வாழ்ந்த வீட்டில் நான் இருந்துகொள்கிறேன் என்று அந்த ஆவி உங்களின் கைகளை பிடித்து கெஞ்சியது.அதை அங்கிருந்து உங்களை தொந்தரவு செய்யாமல் விரட்டவே நான் மந்திரித்து கொடுத்து சென்ற விபூதியை அனைவரும் வைத்துக்கொள்ளும்படி சொன்னேன் என்றேன். அப்போது தான் அவருக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது. மீண்டும் அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்.....



திங்கள், 14 அக்டோபர், 2013

சாதாரண மனிதனையும் குபேரனாக்கும் மூலிகை வேர்




                 

                                                                   பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம் மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.
                                                                           பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடிய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். அதற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடியமுடியவில்லை.

                                                                              சாக வாரத்தை தரும் சஞ்சீவியையே (சஞ்ஜீவி) நம் சித்தர்கள் கண்டறிந்து நமக்கு வழிகாட்டி இருக்கின்றனர். அந்த சஞ்சீவி மூலிகைகளில் (சஞ்ஜீவி) பல வகைகள் உண்டு. அதில் ஒன்று லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) ஆகும். மனிதன் வாடையோ காலடியோ படும் இடங்களில் இது வளராது. இத்தகைய ஒரு சஞ்சீவியை நான் அரும்பாடு பட்டு தேடி கண்டுபிடித்து கொண்டுவந்து இன்று சாதாரண மனிதர்கள் பலரை குபேர அந்தஸ்தில் திளைக்க வைத்திருக்கிறேன்.

                                                                     இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். இந்த அற்புத லட்சுமி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) உங்கள் கைகளில் இருந்தால் போதும் உங்கள் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.








                                                                                      இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) மூலிகை சித்தர்களால் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்த அறிய மூலிகையாகும் . இந்த அறிய மூலிகை உங்களுக்கு கிடைக்கவே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இம்மூலிகை குரு - சிஷ்ய பாரம்பரிய வழியாக மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும்.

                                                                                இந்த அற்புத லக்ஷ்மி குபேர சஞ்சீவி (சஞ்ஜீவி) மூலம் நீங்களும் குபேர அந்தஸ்து பெற்று உங்கள் வாழ்வு வளம்பெற, பணம், பதவி, அந்தஸ்து, பட்டம், புகழ் பெற்று நீங்கள் வெற்றியுடன் வாழ இன்றே தொடர்பு கொள்வீர்.
 




புதன், 9 அக்டோபர், 2013

ஏவல் பில்லி சூன்ய வகைகள்

                                          

  




                      ஏவல் பில்லி சூன்யம் செய்வதில்  பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.

1. காலடி மண் :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.

2.சுடுகாட்டு சாம்பல் :
                                            ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும்.  இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.

3.முட்டை :
                       ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.

4.எந்திர தகடு :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை  செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.

5.சுண்ணாம்பு :
                              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.

6.எலுமிச்சை :
                             ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.

7. மந்திர பாவை (பொம்மை) :
                                                          ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை  சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.

              ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.


செவ்வாய், 24 செப்டம்பர், 2013

காரிய வெற்றி அடைய யந்திரங்கள்





1.காதலர்கள் விரும்பியவரை மணந்துகொள்ள யந்திரம்,

2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க யந்திரம்,

3.விரைவில் திருமணம் நடக்க யந்திரம்,

4.பெண் ஆசை ஒழிய யந்திரம் ,

5.ஆண் ஆசை ஒழிய யந்திரம் ,

6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம்,

7.இடத்தை காலி செய்ய யந்திரம்,

8.எதிரியின் நாவினை கட்ட யந்திரம்,

9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர,

10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும்  பேசாமல் இருக்க ) யந்திரம்,

11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் ,

12.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) யந்திரம் ,

13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க யந்திரம்,

14.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ),

15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம்,

16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம்,

17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ யந்திரம்,

18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம்,

19.கிரக மூலாதார யந்திரம்,

20.கர்ப்பம் தரிக்க யந்திரம்,

21.போட்டி தேர்வுகளில் வெற்றி பெற யந்திரம்,

22.பிரம்ம வாஸ்து யந்திரம்,

23.ஜோதிடம்,குறி சொல்பவர்களுக்கு வாக்கு பலிதமாக யந்திரம் ,

24.திசை கட்டு யந்திரம்,

25.பகைவர்கள் தேவதைகள் கட்டு அறுக்க யந்திரம்,

26.அஷ்ட திக்கு பந்தன யந்திரம்,

27.சத்ரு வசிய யந்திரம்,

28.வசிய சந்தனம்,

29.கடன் தொல்லை விலகிட அன்னபூரணி யந்திரம்,

30.மேலதிகரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக யந்திரம்,

31.தேவதைகளை கட்ட யந்திரம்,

32.சல்லியம் பிரிவு முறை யந்திரம்,

33.காதலில் வெற்றியடைய யந்திரம்,

34.கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ யந்திரம்,

35.வாஸ்து தோஷம் விலக யந்திரம்,

36.காணமல் போன பொருள் கிடைக்க யந்திரம்,

37.தீராத நோய்கள் தீர யந்திரம்,

38.அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற யந்திரம்,

39.பெண் ஆசை ஒழிய யந்திரம்,

40.பேராசை விலக யந்திரம்,

41.போதை குடி பீடி சிகரெட் விலக்கி நல்லவர் ஆக,

42.கற்பு அழியாது இருக்க யந்திரம்,

43.இல்வாழ்வு, தாம்பத்ய சுகம் நீக்க யந்திரம்  ,

44.பெண்கள் வலையில் அகப்படாமல் இருக்க யந்திரம் ,

45.வழக்கு வெற்றி பெற யந்திரம்,

46.பெண்களை தாயாக நினைக்க யந்திரம்,

47.உடல் வசீகரம் உண்டாக யந்திரம்,

48.கல்வியில் சிறக்க யந்திரம்,

49.மன வருத்தம் தீர யந்திரம்,

50.தன்னை அறிந்துகொள்ள யந்திரம்,

51.அவாவருக்க ( சந்தேகங்களை நீக்க ) யந்திரம்,

52.பஞ்ச பூதங்களை அறிய யந்திரம்,

53.பாச வலையில் அகப்படாது இருக்க யந்திரம்,

54.விதியை வெல்ல யந்திரம்,

55.புகழ் பெற யந்திரம்,

56.உலக நடை அறிய யந்திரம்,

57.எதிரிகள் ஒழிய யந்திரம்,

58.இழந்ததை திரும்ப பெற யந்திரம்,

59.விநாயகர் வசிய யந்திரம்,

60.குல தெய்வ வசிய யந்திரம்,

61.அகத்தியர் வசிய யந்திரம்,

62.உபாசனை தெய்வ வசிய யந்திரம்,

63.காளி வசிய யந்திரம்,

64.யட்சணி குடுவை,

65.கலசம் தயார் செய்ய,

66.பானகம் செய்ய,

67.கர்ண யட்சணி வசியம்,

68.பத்மாவதி யட்சணி வசியம்,

69.அனைத்து யட்சணி, தெய்வங்கள், தேவதைகளை வசியம் செய்ய ஒரே தாந்த்ரீக முறைகள்.

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

தன் வசிய எந்திரமும் நத்தைசூரியும்






                                    
                          இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், லட்சுமி வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள், தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.
        
              ஆனால் பழமையான சித்தர் முறைகளில் நான் கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் தன்வசிய எந்திரம். இத்துடன் சஞ்சீவி மூலிகைகளில் ஒன்றான நத்தைசூரி வைத்து எந்திரம் தயாரிக்கிறோம். எத்தைச் சொன்னாலும் அத்தை செய்யும் நத்தைசூரி என்பது சித்தர்வாக்கு.
           
                      இந்த தன் வசிய எந்திரத்தை அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை. தன் வசிய எந்திரத்தை தங்க தகட்டில் எழுதுவது அதிகமான பலன்தரும் . 


சிவப்பு நத்தைசூரி :



வசிய விபூதி செய்முறை




                                 கையாந்தகரை, நத்தைச்சூரி, குப்பைமேனி, சிறுசெருப்படி, கீழ்காய்நெல்லி, சீதேவி செங்கழுநீர், பரட்டை, வெள்ளருகு ஆகிய ஒன்பதும் சமூலம் பிடுங்கி கண்டங் கண்டமாய் நறுக்கி பசுவின் யீனாக்கிடாரி சாணம் கங்கிலே  விழுகும்  முன்னே யேந்தி யதில் ரோகித்து பிடமிட்டு நீராக்கி கொஞ்சம் கோரோசனை, புனுகு சேர்த்து வடிகொண்டு சுத்தமாய் வைத்துக்கொள்ளவும். இதற்கு மோகினி மந்திரம் உருவேற்றிக் கொள்ளவும். இதை நெற்றியில் வைத்துக் கொள்ள வசியமாம்.

செவ்வாய், 16 ஜூலை, 2013

குடியை மறக்க வைக்கும் மந்திரம்




                     இன்றைய நவீன உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு ஆண்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தன் உடலையும், மனதையும், நல்ல குடும்ப வாழ்வையும், பொருளாதார சூழலையும் கெடுத்துக்கொண்டு வாழ்வே சுன்யமாக்கி கொண்டு வாழ முடியாமல் அவதி படுவோர் பலர். அவர்களின் வாழ்வை வளமாக்கவே இதனை எழுதுகிறேன்.ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் ஓங்காரம் (ஓம்) வரைந்து அதன் நடுவில் சூலம் வரைந்து அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து " ஓம் மனோ விகார மனோ நாச குரூர சக்தி நாசய நாசய ஹூம் பட் சுவாக" - 1008 உரு செபித்து உள்ளுக்கு விபூதியை சாப்பிட கொடுக்க ஆயுள் உள்ளவரை குடியை மறந்து விடுவான்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க