வெள்ளி, 24 மார்ச், 2017

இராமனுக்கு அஷ்டமாசித்தி தந்த பிரம்ம மை


"காட்டினார் இன்னுமொரு மார்கஞ்சொல்வேன்
கருவான கண்மணியே கழறக்கேழும்
பூட்டவே யெந்தனிரு மணிவிளக்கே
புகழான தெள்ளமுர்தக் கோவேகேண்மே
நீட்டமுடன் ஸ்ரீ ராம ராவணர்க்கு
நீடான யுத்தமது புரிவதற்கும்
வாட்டமுடன் ராவணனை செயிப்பதற்கும்
வளமான மையொன்று செய்தார்தாமே"


செய்துமே யஷ்டமா சித்துதாமும்
சிறப்புடனே ராமரென்ற பூபனுக்கு
மெய்தனிலே தனணிந்து யுத்தஞ்செய்ய
மேன்மையுடன் மையொன்று செய்தளித்தார்
பைவதம் பூண்டதொரு ராமர்தாமும்
பட்சமுடன் லாடமதி லணிந்துகொண்டு
மையதனால் தான்செபிக்க ராமர்தானும்
மாறட்டஞ் செய்யவல்லோ மைதந்தாரே



தந்தாரே யஷ்டமா சித்துதாமும்
தாரணியில் லங்கைபதி வேந்தன்தன்னால்
வந்ததொரு யுத்தமதைச் செயிக்கவென்று
வண்மையுள்ள மையதனை நிர்மித்தேதான்
சுந்தரமாம் ராமருக்குக் கொடுத்தாரங்கே
சூட்சமுடன் ராமனுத்தஞ் செய்யும்போது
அந்ததொரு யுத்தமத்தில் ராமர்தாமும்
அதிசயமாய்த் தோன்றிட்டார் திசைநாலெட்டே



எட்டான மையினது மகிமையாலே
எங்கெங்கும் ராமருட அவதாரந்தான்
அட்டான திசையெல்லாம் ராமர்போல
அங்கங்கு நிற்பதுபோல் சேர்வையுண்டு
மட்டான தன்பதியின் நின்றாப்போலும்
மார்க்கமுடன் யுத்தமதிற் சென்றப்போதும்
கட்டான மையினது பெருமைதன்னால்
காசினியில் மையினது வாதிதம்பாரே




பாரேதான் அஷ்டமா சித்தர்தன்னால்
பாருலகில் ராவணனார் சேனைதன்னை
நேரேதான் மையினது வசியத்தாலே
நேர்மையுடன் தான்செயித்தார் இலங்கைதன்னை
சீரேதான் சித்தருட பலத்தினாலே
சிறப்புடனே தான்செயித்தார் லங்கைதன்னை
தீரேதான் மையினுட போக்கைச் சொல்வேன்
திறமான மாண்பர்களே செப்பக்கேளே !


      

          

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க