வெள்ளி, 29 ஜூலை, 2016

பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

                             
                  4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியின் தோற்றம் 
                                       


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 

ஆதி யுகம் 


4,600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பிராணவாயு இல்லாத வளிமண்டலம். 

3,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பூமியில் பெருங்கடல்கள் தோன்றுதல்.

3,400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - உயிரின் தோற்றம்.

2,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஒளிச்சேர்க்கையின் மூலம் ஆற்றலை உருவாக்கும் உயிரின் தோற்றம்.

2,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - வளிமண்டலத்தில் பிராணவாயு கிடைத்தல் .

1,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலின இனப்பெருக்கம், இதே காலகட்டத்தில் ஓசோன் படலமும் தோன்றியது.


...........................................................ஆதியுகத்தின்முடிவு...........................................................


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி 

முதல் யுகம்

700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பல செல்கள் கொண்ட உயிரினங்களின் தோற்றம்.

500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தாடையற்ற மீன்களின் தோற்றம்.

440 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - கட்டைத் தன்மை கொண்ட ஒளிசேர்க்கை செய்யும் தாவரங்களின் தோற்றம்.

425 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தாடையுள்ள மீன்களின் தோற்றம்.

355 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நீரோடு நிலத்திலும் வாழும் உயிரினங்களின் தோற்றம்.

350 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - விதையுடன் கூடிய பெரணித் தாவரங்களின் தோற்றம்.

320 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஊர்ந்துசெல்லும் விலங்குகள் மற்றும் இறக்கையுடன் கூடிய பூச்சிகளின் தோற்றம்.

300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலூட்டும் தன்மைக்கொண்ட ஊர்வனவற்றின் தோற்றம்.


......................உயிரினங்களின் பேரழிவு - முதல் யுகத்தின் முடிவு.......................




பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

இரண்டாவது யுகம்

220 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - தேவதாரு, மதனகாம மரங்களின் தோற்றம், இதே காலகட்டத்தில்தான் டைனோசர்களும் தோன்றி ஆதிக்கம் செலுத்தின.

144 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பாலூட்டிகளின் தோற்றம்.

134 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பறவைகளின் தோற்றம்.

115 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நஞ்சு கொடியுள்ள பாலூட்டிகளின் தோற்றம்.

110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனை குடும்பத் தாவரங்களின் தோற்றம்.

இரண்டாவது யுகத்தின் போது தான் பூமியின் நிலப்பகுதிகள் உடைந்து வெவ்வேறு திசையில் நகர்ந்து பல கண்டங்களாக பிரியத் தொடங்கின.

...................உயிரினங்களின் பேரழிவு இரண்டாவது யுகத்தின் முடிவு.......................




பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

மூன்றாவது யுகம்


56 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குரங்குகளின் முன்னோர்களின் தோற்றம்.

55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - புற்களின் தோற்றம்.


52 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - குதிரைகள், காண்டாமிருகங்கள் தோற்றம்.

35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - வாலற்ற குரங்குகளின் தோற்றம்.

2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - ஆதி மனிதனின் தோற்றம்.

மூன்றாவது யுகம் முடியும் தருவாயில் பூமி பல கண்டங்களாக முழுமையாக பிரிந்துவிட்டது.


...................உயிரினங்களின் பேரழிவு - மூன்றாவது யுகத்தின் முடிவு.......................


பூமி மற்றும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி

நான்காவது யுகம்

0.018 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - பனிக்கட்டிகள் உடைந்து, உருகி பூமியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

0.03 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் - நவீன கால மனிதனின் முன்னோர்கள் பூமியில் தோன்றினர்


                                           மேற்கண்ட நான்கு யுகங்களில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் ஆதி மனிதன் பூமியில் அவதரித்ததில் இருந்து இன்றுவரை வெறும் 20 இலட்சம் வருடங்களே ஆகிறது. ஆனால் நமது பூமி தோன்றி 460 கோடி வருடங்கள் ஆகிவிட்டது. பூமி உயிரினங்களை வழி நடத்திய காலமெல்லாம் மாறி, இன்று மனிதன் பூமியை அழிக்கும் நிலைக்கு வந்துவிட்டான். பூமியின் வளங்களை அழியாமல் காத்து, பூமியின் இயற்கை வளங்களை அளவோடு அனுபவித்து வந்தால் இன்னும் 100 கோடி ஆண்டுகள் நம் சந்ததிகள் இந்த பூமியில் செழித்து வாழும்...

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க