புதன், 29 ஏப்ரல், 2015

விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை

                             விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை
                                                          நவகிரகங்களால் உண்டாகும் பாவங்களையும், தோஷங்களையும், அவயோகங்களையும், வாழ்வில் தோன்றும் துன்பங்களையும், துயரங்களையும், தரிதிரங்களையும் நீக்கி நவகிரகங்களின் ஆசியை பெற்று வாழ்வில் எந்நேரமும் சுபிட்சமாகவும் வளமுடனும், மன நிம்மதியுடனும், உடல் நலமுடனும் வாழ வைக்கும் ஒரு அபூர்வ பூஜை தான் விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை.

நவகிரக தாந்த்ரீக பூஜை செய்ய தேவையான பொருள்கள் :
1. பஞ்சமுக குத்து விளக்கு ஒன்று,

2. ஐந்து விதமான எண்ணெய் கலவை (நெய், விளக்கெண்ணை , இல்லுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்)

3. ஐந்து திரிகள்,

4. பல வண்ண உதிரி மலர்கள்,

5.ஐந்து விதமான வாசனை உடைய ஊதுபத்திகள்,

6. தூபமிட சாம்பிராணி,

7. வெண்பொங்கல்,

8. சர்க்கரை பொங்கல்,

9. மனைப்பலகை ஒன்று,

ஆரஞ்சு நிற கதர் துணி ஒரு மீட்டர்.


                                           வளர்பிறை ஞாயற்றுக்கிழமை அன்று விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜையை செய்ய வேண்டும். கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜைகள் செய்ய வேண்டும். காலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் பூஜையை முடிக்க வேண்டும். குத்து விளக்கை மனைப்பலகையில் வடக்கு நோக்கி வைத்து எண்ணெய் உற்றி தீபமிடவும். தீபத்தின் முன் ஆரஞ்சு வண்ண துணியை விரித்து வைக்கவும். சாம்பிராணி, ஊதுபத்தி தீபமிடவும். தீபத்தின் முன் வாழை இலை விரித்து சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல் படையலிடவும். கிழக்கு நோக்கி அமர்ந்து கிழ்கண்ட மந்திரங்களை சொல்லவும். மந்திரங்களை சொல்லும் போது கொஞ்சம் மலர்களை எடுத்து கையில் வைத்துக்கொண்டு மந்திரம் சொல்லி ஆரஞ்சு வண்ண துணியில் சமர்பிக்கவும். நவகிரகத்துக்கும் இவ்விதமாக பூஜை செய்யவும்.


1. சூரியன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சூர்யாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

2. சந்திரன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சந்த்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

3. செவ்வாய் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ பொளமாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

4. புதன் :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ புதாய நமஹ" - 21 முறை சொல்லவும்.

5. குரு :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ குருவே நமஹ" - 21 முறை சொல்லவும்.

6. சுக்கிரன் :

"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சுக்ராய நமஹ" - 21 முறை சொல்லவும்.

7. சனி :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ சனியே நமஹ" - 21 முறை சொல்லவும்.


8. இராகு :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ இராகுவே நமஹ" - 21 முறை சொல்லவும்.


9. கேது :
"ஓம் ஹ்ரைங் ஹ்ரீங் ஹ்ருங்சஹ கேதுவே நமஹ" - 21 முறை சொல்லவும்.



                               விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை முடிந்தபின் பிரசாதத்தை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மட்டுமே சாப்பிடவேண்டும். வேறு யாருக்கும் கொடுக்க கூடாது. பூஜை செய்த மலர்களை ஆரஞ்சு வண்ண துணியில் மூட்டை போல் கட்டி பூஜை அறையில் வைத்து கொள்ளவும். நவகிரக ஆசிகள் எப்போதும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் துணை நிற்கும். தாந்த்ரீக பூஜைகள் செய்யும் முன் முன்பயிர்ச்சிகள் (ஒய்வு பயிற்சி, முத்திரை பயிற்சி, மூச்சு பயிற்சி) கட்டாயம் செய்ய வேண்டும்.





வியாழன், 16 ஏப்ரல், 2015

விதியை வெல்லும் தாந்த்ரீக முறை

                                      விதியை வெல்லும் தாந்த்ரீக முறை

                                   நமது முன்னோர்கள் நாம் வளமுடனும் நலமுடனும் சர்வ சித்திகளையும் பெற்று வாழ அரிய பல கலைகளை அருளிச் சென்றுள்ளனர். அந்த வகையில் மந்திர சாஸ்திரத்தின் ஒரு அங்கமாக விளங்குவது தாந்த்ரீக கலையாகும். மாந்த்ரீக கலையில் மந்திரங்களை ஆயிரம், இலட்சம், கோடி என்ற எண்ணிக்கைகளில் உருவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் நாம் நினைத்த காரியம் சித்தியடையும், ஆனால் தாந்த்ரீகம் என்பது மிகவும் எளிமையானது, ஒரு சில நாட்களிலேயே பலன் தரக்கூடியது, பொருள் செலவும் மிகவும் குறைவு, பூஜை செய்யும் நேரமும் மிகவும் குறைவு அதாவது பூஜை நேரம் நிமிடங்களில் அடங்கும். சிவன் - பார்வதியிடம் இருந்து ஞான பழத்தினை அடைவதற்காக முருகப்பெருமான் உலகையே வலம் வந்தார், ஆனால் விநாயக பெருமானோ தாய் - தந்தையே வலம் வந்து ஞான பழத்தினை எளிமையாக பெற்றார். இந்த புராணத்தை உற்று பார்த்தோமானால் முருகபெருமான் உலகையே வலம் வந்த செய்கையை போல கடினமானது மாந்த்ரீகம். ஆனால் தாய் - தந்தையையே வலம் வந்து விரைவாக எளிமையாக ஞான பழத்தினை பெற்றது போல எளிமையானது தந்த்ரீகம். இந்த தாந்த்ரீக முறையின் மூலமாக நம் வாழ்வில் தோன்றும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வினை காணலாம். இந்த தாந்த்ரீக முறைகளை தகுந்த தாந்த்ரீக குருவிடம் கேட்டறிந்து, தாந்த்ரீக குருவின் ஆசியும் பெற்று, நம் காரியங்களுக்கு உண்டான தாந்த்ரீக முறைகளை செய்து உடனடி பலன் பெறலாம், இந்த தாந்த்ரீக முறையின் மூலமாக எந்தெந்த காரியங்களை நாம் சாதித்து கொள்ள இயலும் என்ற பட்டியலை இங்கே விரிவாக காணலாம்.

1. செல்வவளம் பெருகி நிலைக்க,

2. எண்ணியதெல்லாம் கிடைக்க,

3. தேகசக்தி - ஆயுள் விருத்தி பெற,

4. விதியையும் சாதகமாக்க நவகிரக பூஜை,

5. சர்வ தெய்வ, தேவதை, யட்சணி வசியம்,

6. செல்வந்தராக்கும் மகாலட்சுமி உபாசனை,

7. வீடு வாகன யோகம் பெற,

8. நல்ல வேலை, பதவி உயர்வு, சம்பள உயர்வு பெற,

9. செல்வம் தரும் அதிர்ஷ்ட்ட மணிபர்ஸ்,

10. ஆண் - பெண் தகாத உறவுகளை துண்டிக்க,

11. விபத்து கண்திருஷ்ட்டியில் இருந்து பாதுகாப்பு பெற,

12. அதிர்ஷ்டம் பெருக,

13. சர்வ லோக வசியம்,

14. சர்வ லோக வசிய விபூதி,

15. காரிய சித்தி பெற விபூதி,

16. முகராசி பெற,

17. செய்தொழில், வியாபாரத்தில் பணம் கொழிக்க,

18. செய்தொழிலில் பணம் கொழிக்க தனவசிய பிரயோகம்,

19. சகல காரிய சித்திக்கும் சர்வ வசிய விபூதி,

20. செல்வ செழிப்புக்கு மணிப்ளாண்ட் முறை,

21. கண்திருஷ்டி, தீயசக்திகளை விரட்ட,

22. எதிரிகளை நம் வழிக்கே வராமல் விரட,

23. பகையான உறவை நட்பாக மாற்ற,

24. கொடிய எதிரிகளை அழிக்க,

25. கொடிய நோய்களில் இருந்து விடுபட,

26. தீய எதிரிகளை குடுவைக்குள் அடைக்க,

27. ஏவல், பில்லி, சூனியம், செய்வினைகளை வைத்தவர்களுக்கே திருப்பிவிட,

28. சத்ருவை தாந்த்ரீகத்தால் கட்ட,

29. பூத, பிரேத, ஏவல்களை விரட்ட,

30. அடகு நகையை மீட்க,

31. கல்வி, கேள்விகளில் அறியாததை உணர,

32. ராகு - கேது, காலசர்ப்ப தோஷம், நாக தோஷத்தில் இருந்து விடுபட,

33. புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் அடைய,

34. ஆண் - பெண் வசிய பெ,

35. கல்வியில், போட்டி தேர்வுகளில் வெற்றி அடைய,

36. திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடைபெற,

37. நினைத்தது நிறைவேற,

38. வாரக்கடனும் வர,

39. கணவன் - மனைவி வசியம் பெற்று வாழ,

40. நினைத்த வசதிகளை அடைய,

41. அதிர்ஷ்ட தேவதை வசிய தைலம்,

42. எண்ணியது கிடைக்க,

43. விரும்பிய ஆண் - பெண் வாரிசு பெற,

44. விவசாயத்தில் விளைச்சல் பெருக,

45. வழக்குகள் நமக்கே வெற்றியாக,

46. அரசியலில் வெற்றி அடைய,

47. அரசியலில் உயர்பதவி பெற,

48. பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர,

49. வசிய இடுமருந்தை முறிக்க,

50. போதை அடிமைகளை முற்றிலும் திருத்த,

51. நினைத்த நாட்டுக்கு வேலைக்கு செல்ல,

52. கடன் தொல்லையில் இருந்து விடுபட,

                           போன்ற நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தாந்த்ரீக முறையில் எளிய தீர்வினை அடைய நமது ஸ்ரீ விருட்ச பீட குருஜி ஸ்ரீ லக்ஷ்மி தாச ஸ்வாமிகளை தொடர்பு கொள்ளவும்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க