சனி, 21 மார்ச், 2015

செல்வவளம் பெருகி நிலைக்க

                                           செல்வவளம் பெருகி நிலைக்க
                                                  இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய செல்வவளம் பெருகி நிலைக்க தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.
1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.

2. செல்வவளம் பெருகி நிலைக்க பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும். ( பணவருவாய் பலவகையிலும் பெருகும் ).

3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.

4. செல்வவளம் பெருகி நிலைக்க ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ).

5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.

6. செல்வவளம் பெருகி நிலைக்க எந்த விசயத்திற்காக பணத்தினை செலவிட்டாலும், செலவிடும் பணத்தினை கையில் வைத்து நெஞ்சிற்கு நேராக பிடித்து பிறர் அறியாதவாறு "ஓம் ஸ்ரீம் நமஹ இலட்சமாக திரும்பிவா வசி வசி" என்று ஐந்து முறை கூறி செலவிடவும்.

7. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.

8. செல்வவளம் பெருகி நிலைக்க மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.

9.பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும்.

10. செல்வவளம் பெருகி நிலைக்க பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.

11. மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணை, நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.

12. செல்வவளம் பெருகி நிலைக்க குழந்தைகள் வளரும்போது விழும் முதல் பல்லை பால் பற்கள் என்கிறோம், அவ்வாறான பால் பற்களில் ஏதேனும் ஒன்று பையிலோ பணப்பெட்டியிலோ வைத்தால் செல்வம் பெருகும்.

13. வடகிழக்கு மூலையில் குடிக்கும் நீரைவைத்து அதில் எலுமிச்சை ஒன்றை போட்டு வைக்கவும், தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்து வந்தால் பற்றாக்குறை நீங்கி செல்வம் கொழிக்கும்.

14. செல்வவளம் பெருகி நிலைக்க கல் உப்பை வீட்டில் வியாபார ஸ்தலங்களில் எல்லா மூலைகளிலும் சிறிது போட்டு வைத்தால் தீய சக்திகள் ஓடும், பணம் பெருகும்.

15. பணப்பெட்டி சந்தனப்பெட்டியாக இருந்தால் அதிர்ஷ்டம் பெருகும். வசதி இல்லையேல் பச்சை நிற பட்டுத்துணியில் பணப்பை செய்து அதனுள் சிறிய சந்தனக்கட்டை ஒன்றை அதனுள் போட்டு வைக்கவும், சந்தனம் இருப்பதை வளர்க்கும் சக்தி உடையது.

16. செல்வவளம் பெருகி நிலைக்க வருமானத்தில் ஐந்து சதவீதத்தை தானதிற்கென போட்டு வையுங்கள், மாதம் ஒருநாள் அதை தானமாக கொடுங்கள், கொடுப்பது பெருகும்.

17. முக்கியகாரியமாக தொழில் விஷயமாக வெளியே செல்லும்போது அருகம்புல் நுனி ஒன்றையோ, திருநீற்றுப்பச்சிலை ஒன்றையோ பறித்து பையில் வைத்துச்செல்ல சென்ற காரியம் நிச்சயம் வெற்றியே.

18. செல்வவளம் பெருகி நிலைக்க சாம்பிராணியும், மருதாணி விதையும், வெண்கடுகும் கலந்து வீட்டில், வியாபார ஸ்தலத்தில் தூபமிட தீய சக்திகள், கண்திருஷ்டி, தோஷங்கள் நீங்கி தொழில் முன்னேற்றம் அடையும், மகாலக்ஷ்மி நம்மிடத்தில் நடமாடுவாள்.











திங்கள், 16 மார்ச், 2015

பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்

                 பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள்



                                                               ஒவ்வொரு மனிதனும் பூமியில் ஜனனம் ஆகும் காலத்தின் அடிப்படையில் அவன் எந்த நட்சத்திர ஆதிக்கத்தில் பிறக்கிறான். அந்த நட்சத்திரம் எந்த இராசியில் அமைகிறது என்பதை பொறுத்து அந்த மனிதனின் குண நலன்களும், புத்தி சாதுர்யமும், உடல் அமைப்பும், செயல் ஆற்றும் திறனும், மற்றும் அந்த மனிதனின் விதி அமைப்பும் அதனால் வாழ்வில் அவன் அடையும் இன்ப துன்பங்களும் கணக்கிடப்படுகின்றன.


                                                          இன்று பலரும் வாழ்வில் இன்னல்களை அனுபவித்துக் கொண்டு, அந்த துன்பத்தை தாங்க முடியாமல் பல தெய்வீக திருத்தலங்கள் சென்று வழிபடுவதும், பரிகாரங்கள் செய்து கொள்வதும் நாம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வாகும். அப்படி வழிபாடும் பரிகாரங்களும் செய்தும் பலனின்றி புலம்பி தவிப்பவர்கள் ஏராளம். இந்த நிலை மாறவே ஒரு எளிய பரிகார முறையை ( பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் ) இங்கே தெளிவுபடுத்த இருக்கிறேன்.


                                               மனித சமுதாயம் இன்புற்று வாழ்வதற்காகவே தம்மையும் தம்வாழ்வையும் அற்பணித்து கொண்டவர்கள் சித்தர்கள். தெய்வங்களுக்கு அடுத்தபடியாக நாம் போற்றித் தொழுவது சித்தர்களையே ஏனென்றால் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற படிநிலையை முன்னோர்கள் சொல்லி சென்றுள்ளனர். அதன்படி பார்த்தோம் என்றால் முதலில் நம்மை பெற்றெடுத்து பூமியில் அறிமுகபடுத்தியது தாய், இரண்டாவதாக நம்மை காத்து உலக அறிவையும், நல்ல கல்வியையும் பெற செய்வது தந்தை, முன்றாவதாக நல்ல கல்வியையும், அறிவையும், ஞானத்தையும், மோட்சத்தையும் நாம் அடைய வழிகாட்டுவது குரு (ஆசிரியர்கள், குருமார்கள்,சித்தர்கள்,ஞானிகள்,யோகிகள்) இவர்களின் வழிகாட்டுதலின் படியே, இவர்களின் ஆசி அனுகிரகம் பெற்றே நாம் நான்காம் நிலையில் உள்ள தெய்வத்தை அடைய முடியும்.


                                                          எனவே பல வழிபாடுகள் செய்து, பல பரிகாரங்கள் செய்து தெய்வத்தின் அனுகிரகத்தினை பெறுவது சற்று கடினமான காரியமே, ஆனால் நமக்காகவே வாழ்ந்து நமக்காகவே இன்றும் அரூபமாய் சூட்சுமமாய் வாழ்ந்துகொண்டு அருள்பாலித்துக் கொண்டிருப்பவர்கள் சித்தர்களே இவர்களின் அருளை பெறுவது மிகவும் எளிமையானது. உங்கள் பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் ஜெபம் செய்து வருவதும், அந்த சித்தர்கள் ஜீவசமாதி ஆன தலங்களுக்கு சென்று பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் சொல்லி வழிபட்டு வருவதும் நம் வாழ்வில் வரும் துன்பங்களை போக்கி, நம் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத் தரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கீழே உங்களின் பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அந்த மந்திரங்களை ஜெபம் செய்து பலன் அடைவீர்களாக.


பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் :



1. அஸ்வினி நட்சத்திரம் - மேஷ இராசி :
                                  ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம :


2. பரணி நட்சத்திரம் - மேஷ இராசி :
                  ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம :


3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் - மேஷ இராசி :
                                                    ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம :



4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - ரிஷப இராசி :
                                                        ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம :


5. ரோகிணி நட்சத்திரம் - ரிஷப இராசி :
                                                                 ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ வான்மீகரே நம :


6. மிருகசீரிடம் நட்சத்திரம் 1ம் பாதம் - ரிஷப இராசி :
                                                               ஓம் ஸ்ரீம் ருங் குருங் ஸ்ரீ மச்ச முனிவரே நம :


7. மிருகசீரிடம் நட்சத்திரம் 2ம் பாதம் - ரிஷப இராசி :
                                                                    ஸ்ரீம் ஸம் அம் உம் ஸ்ரீ சட்டை நாதரே நம :


8. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி :
                                           ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :



9. மிருகசீரிடம் நட்சத்திரம் 3ம் பாதம் - ரிஷப இராசி :
                                                                 ஸ்ரீம் றம் ஹ்ரீங் ஸ்ரீ பாம்பாட்டி சித்தரே நம :



10. திருவாதிரை நட்சத்திரம் - மிதுன இராசி :
                                                 ஸ்ரீம் குரு - துரு - குரு - வசி ஸ்ரீ திருமூலதேவரே நம :


11. புனர்பூசம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - மிதுன இராசி :
                                                 ஸ்ரீம் ஸம் அம் உம் - ஜீம் ஸ்ரீ தன்வந்திரி சித்தரே நம :


12. புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் - கடக இராசி :
                                                  ஸ்ரீ தம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ தன்வந்திரி பகவான் நம :


13. பூசம் - நட்சத்திரம் கடக இராசி :
                                                 ஓம் ஸ்ரீம் - குங் -குருங் குரிங் -ஸ்ரீ கமலமுனியே நம :


14. ஆயில்யம் நட்சத்திரம் - கடக இராசி :
                                              ஓம் ஸ்ரீம் ம் -அம் - உம் ஸ்ரீ அகத்தியப் பெருமானே நம :


15. மகம் நட்சத்திரம் - சிம்ம இராசி :
                                                         ஓம் ஹம் - ஸம் - ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :


16. பூரம் நட்சத்திரம் - சிம்ம இராசி :
                                       ஓம் ஸ்ரீம் - ஸ்ரீம் -ஸ்ரீம் ஹ்ரீம் - ஹ்ரீம் ஸ்ரீ ராமதேவரே நம :


17. உத்திரம் நட்சத்திரம் 1ம் பாதம் - சிம்ம இராசி :
                                                             ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் -றீம் - ஸ்ரீ இராம தேவரே நம :


18. உத்திரம் நட்சத்திரம் 2ம் பாதம் - கன்னி இராசி :
                                                            ஓம் ஐம் கிளீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :


19. உத்திரம் நட்சத்திரம் 3ம் பாதம் - கன்னி இராசி :
                                                                             ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் ரீம் கருவூராரே நம :


20. உத்திரம் நட்சத்திரம் 4ம் பாதம் - கன்னி இராசி :
                                          ஓம் ஹ்ரீம் ஐயுஞ் சவ்வும் க்லீயும் கருவூர் சித்தரே நம :


21. அஸ்தம் நட்சத்திரம் - கன்னி இராசி :
                                                        ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கரூர்தேவ நம :

22. சித்திரை நட்சத்திரம் 1,2ம் பாதம் - கன்னி இராசி :
                                                            ஸ்ரீம் ஸம் அம் ஐம் க்ளீம் ஸ்ரீ கரூர் சித்தரே நம :


23. சித்திரை நட்சத்திரம் 3,4ம் பாதம் - துலாம் இராசி :
                                   ஸ்ரீம் -ஹ்ரீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :


24. சுவாதி நட்சத்திரம் - துலாம் இராசி :
                                                              ஓம் க்ளீம் ஸ்ரீம் றீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :


25. விசாகம் நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - துலாம் இராசி :
                                          ஓம் ஸ்ரீம் ருங் அங் சிங் ஹ்ரீம் ஸ்ரீ குதம்பை சித்தரே நம :



26. விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் - விருச்சிக இராசி :
                                            ஓம் ஹ்ரீம் ஹ்ராம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :


27. அனுஷம் நட்சத்திரம் - விருச்சிக இராசி :
                                                           ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஸ்ரீ வான்மீகரே நம :



28. கேட்டை நட்சத்திரம் - விருச்சிக இராசி :
                                                                            ஓம் ஸ்ரீம் ரீம் ஹ்ரீம் வான்மீகரே நம :


29. மூலம் நட்சத்திரம் - தனுசு இராசி :
ஓம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ஹ்ரீம் ஹ்ராங் ருங் - குருங் ஸ்ரீ பதஞ்சலி மகரிஷியே நம :


30. பூராடம் நட்சத்திரம் - தனுசு இராசி :
                          ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ பதஞ்சலி மமுனிவரே நம :


31. உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதம் - தனுசு இராசி :
                   ஓம் ஸ்ரீம் க்ளீம் ஐம் ஸம் அம் ஓம் ஜூம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :


32. உத்திராடம் நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - மகர இராசி :
                          ஓம் ஐம் க்ளீம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :


33. திருவோணம் நட்சத்திரம் - மகர இராசி :
                ஓம் ஐம் சௌம் க்ளீம் ஹம் ஸ்ரீம் றம் டம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :


34. அவிட்டம் நட்சத்திரம் 1,2ம் பாதம் - மகர இராசி :
                             ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கொங்கணச் சித்தரே நம :


35. அவிட்டம் நட்சத்திரம் 3,4ம் பாதம் - கும்ப இராசி :
                                                             ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ திருமூலரே நம :


36. சதயம் நட்சத்திரம் - கும்ப இராசி :
                 ஓம் ஸ்ரீம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீம் ருங் ஸ்ரீம் ஸம் ஸ்ரீ சட்டைநாதரே நம :


37. பூரட்டாதி நட்சத்திரம் 1,2,3ம் பாதம் - கும்ப இராசி :
                        ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் க்ளீம் சௌம் ஸ்ரீ கமலமுனிவரே நம :


38. பூரட்டாதி நட்சத்திரம் 4ம் பாதம் - மீன இராசி :
ஓம் க்ளீம் ஐம் சௌம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஸ்ரீ சிவப்பிரபாகர சித்தயோகி பாம்பாட்டி சித்தரே நம :


39. உத்திரட்டாதி நட்சத்திரம் - மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் றீம் ஐம் க்ளீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :


40. ரேவதி நட்சத்திரம் - மீன இராசி :
ஓம் ஸ்ரீம் ஸம் அம் உம் ஐம் ஜீம் ஓம் சுந்தரானந்தர் என்ற வல்லபச் சித்தரே நம :







தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க