திங்கள், 23 பிப்ரவரி, 2015

மூல நோயிக்கு அற்புத மருந்து

                                      
                                                           மூல நோய்


                                                    மனிதனுக்கு உண்டாகக் கூடிய பலவகையான நோய்களில் மூல நோய் ஒன்றாகும். சரியாக சிகிச்சை மேற்கொள்ளாமல் விடப்படும் மூல நோய் - புற்று நோயாக மாறும் வாய்ப்புகள் அதிகம். ஆசன வாய் பகுதியில் உள்ள இரத்தக் குழாய்கள் தடிமன் ஆவது தான் மூல நோய்.



மூல நோய் - அறிகுறிகள் :


1. ஆசன வாயில் ( மலம் வெளியேறும் பாதையில் ) அரிப்பு உண்டாகுதல்.

2. மலசிக்கல் ஏற்படுதல், மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறுதல்,

3. ஆசனவாயில் தொடர்ந்து உண்டாகும் வலி, எரிச்சல், அரிப்பு.

4.ஆசன வாயின் உள்பகுதி வீங்கி, மலம் கழிக்க சிரமப்படுதல் (உள் மூலம்).

5. ஆசன வாயின் வெளிப்பகுதியில் முளை போல் சதை வீங்கி தள்ளி உட்கார, படுக்க, மலம் கழிக்க முடியாத அளவுக்கு வலி, வேதனை சிரமத்தை உண்டாக்குதல். ( இதுவே வெளி மூலம் ஆகும் ).

6. மலவாய் எரிச்சல், விந்து கெடுதல், வயிற்று இரைச்சல், வயிறு நொந்து மலம் கழிதல், பசியின்மை, புளி ஏப்பம், நீர் வேட்கை, உடல் மெலிதல், உடல் பலம் குறைதல்,

7. மூல நோயானது மன ரீதியாகவும் பாதிப்படைய செய்யும், மனம் தளரும், நம்மை எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ள செய்யும்.




மூல நோய் - உண்டாக காரணங்கள் :


1. தொடர்ந்து உண்டாகும் மலசிக்கல்,

2. உடல் எடை ( தொந்தி ) யால் ஏற்படும் வயிற்று அழுத்தம்,

3. பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கரு வளர்ச்சியால் உண்டாகும் வயிற்று அழுத்தம்,

4. பரம்பரை மற்றும் அதிக உடல் உஷ்ணம்,

5. கிழங்கு வகைகள் ( கருணை கிழங்கு தவிர ), மாமிச உணவுகள், உணவில் அதிகப்படியான காரம் சேர்த்து உண்பதாலும்,

6. தொடர்ந்து உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு, 

7. வேளைக்கு உணவு உட்கொள்ளாமல் ( பட்டினி ) இருப்பதால் மூலாதாரத்தில் வெப்பம் அதிகமாவதால்,



                                             இன்றைய ஆங்கில மருத்துவத்தில் மூல நோயிக்கு அறுவை சிகிச்சை (ஆபரேசன் ) ஒன்று தான் தீர்வாக உள்ளது, அப்படியே அறுவை சிகிச்சை செய்து கொண்டாலும் மீண்டும் மீண்டும் மூல நோய் வந்து நம்மை தீராத துன்பத்தில் ஆழ்த்துகிறது என்பதே உண்மை, இந்த முறையில் அறுவை சிகிச்சை ஒரு முறை செய்ய ஆகும் செலவு ஏறத்தாழ ரூபாய் 15000 முதல் 20000 வரை. நிரந்தரமாக குணப்படுத்த முடியாத சிகிச்சைக்கு இப்படி செலவு செய்ய வேண்டுமா சற்றே சிந்தியுங்கள்...





                                                       நமது கிராமங்கள் தோறும் விளைந்துகிடக்கும் தொட்டற்சினுங்கி மூலிகையை நாம் அனைவரும் அறிவோம். இந்த தொட்டற்சினுங்கி இலையை ஒரு கைப்பிடி அளவு காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் இருந்த இடம் தெரியாமல் பறந்தோடும் மீண்டும் வராது. 


சாப்பிடும் முறை :

காலை - வெறும்வயிற்றில்,

மதியம் - உணவுக்கு பின்,

இரவு - உணவுக்கு பின். 


பத்தியம் - அசைவ உணவுகள்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

மரகத லிங்கம்

கேட்ட வரங்களை தரும் மரகத லிங்கம் 


                                                     நவகிரகங்களில் புதனுக்கு உரிய ரத்தினமாக மரகதம் கருதப்படுகிறது. எனவே, மரகத லிங்கத்தை வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தை, கேட்டவுடன் பெற முடியும் என சில ஆன்மிக நூல்களில் கூறப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட ரத்தினங்களுக்கு ஆக்ரஷ்ன சக்தி உண்டு. அந்த வகையில் புதனுக்கு உரிய மரகதத்தை, லிங்க வடிவில் வழிபடுவதன் மூலம் கேட்ட வரத்தைப் பெறலாம். கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை மரகத லிங்கம் தரக்கூடிய வல்லமை படைத்தது. இதுமட்டுமின்றி வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் மரகத லிங்கத்தை வணங்கலாம். இவற்றையெல்லாம் விட முக்கியமான விசயம், மரகத லிங்கத்தை வணங்குவதன் மூலம் சகல விதமான தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

                                             இந்த மரகத கல்லை லிங்கமாக செய்து வழிபடலாம் .புதனுக்கு உரிய மரகதத்தை லிங்கவடிவில் வழிபடுவது மிக சிறந்தபலனை அளிக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.

                                         மரகத லிங்கத்தை இந்திரன் வழிப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்வாறு மரகதலிங்கத்தை வழிபட்டால் தீராத வியாதிகள் குணமடையும் என்பது முன்னோர் வாக்கு.

                                                                             மரகதலிங்கத்தை வணங்குவதால் கல்வி,பதவி,போன்றவற்றில் சிறந்து விளங்கலாம் .சகல தோஷங்களும் இவ்வழிபாட்டினால் நீங்கும் .மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால்அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. ஏழு மரகதலிங்கங்கள் இந்திரன் மூலம் முசுகுந்த சோழச்சக்ரவர்த்திக்குக் கிடைத்தாக சொல்லப்படுகிறது. இந்த மரகதலிங்கங்களை இந்திரனே பூஜித்து வந்தாராம். முசுகுந்த சக்ரவர்த்தி 12 ஆம் நூற்றாண்டில் வேதாரண்யம்,திருக்குவளை,திருக்கரவாசல், திருவாரூர்,திருநள்ளாறு, நாகப்பட்டினம்,திருவாயுமூர் ஆகிய ஏழு இடங்களில்உள்ள சிவன் கோவில்களுக்கு (சப்த விடங்க தலங்கள்) விலைமதிப்பில்லாத மரகதலிங்கங்களை மக்கள் வழிப்பாட்டிற்காக அமைத்துக் கொடுத்துள்ளார்.சப்தவிடங்கத தியாகத் தலங்களில் மரகதலிங்களுக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் மிகச்சிறந்த மருத்துவ சக்தியைக் கொண்டது. இரவில் மரகதலிங்களின் மேல் சாற்றி காலையில் வழங்கப்படும் சந்தனமும் மிகச்சிறந்த மருத்துவ சக்தி வாய்ந்தது.

                                                                 அரிய வகை மரகத லிங்கங்கள், மாணிக்க லிங்கங்கள், கருநீல லிங்கங்கள், கனக புஷ்பராக லிங்கங்கள் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்தில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் தொடர்புகொள்ளவும்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க