சனி, 23 ஆகஸ்ட், 2014

ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை


             

                                             ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை பற்றி இங்கு காணலாம். உலகிலேயே மாந்திரீக முறையில் ஜாம்பவான்கள் மட்டுமே உபயோகித்து இன்று மறைந்து போன முறைகளில் ஒன்று மோடி வித்தை. இத்தகைய மாந்திரீக முறையை செய்பவர்களை மோடி மஸ்தான் என்பார்கள்.


                                                       ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தை என்பது ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் சரி அவர்கள் மந்திரீகரிடம் நேரில் வராமலேயே அவர்களுக்கு உண்டான ஏவல் பில்லி சூனியத்தை நீக்குவதாகும்.



                                                        ஏவல் பில்லி சூனியம் நீக்கும் மோடி வித்தையில் சுடுகாட்டு மண்ணை கொண்டு ஒரு பாவை செய்து அதில் ஏவலை நீக்குவதற்கு உண்டான எந்திரத்தை எழுதி அந்த பாவையின் ஆசன வாயில் சொருகி ஏவலால் பாதிக்கப் பட்டவரின் கைவிரலில் வெட்டப்பட்ட நகங்களை பாவையின் நகங்களில் பொருத்தி, பின் ஏவலால் பாதிக்கப் பட்டவரின் உச்சந்தலை முடியை பாவையின் உச்சந்தலையில் பொருத்தி, பாவையின் கண்களுக்கு சிவப்பு நிற கற்களை வைத்து பாவை உருவாக்கப்படும்.


                                                   அந்த ஏவல் பாவையை ஓரிடத்தில் நிற்க வைத்து அதன் அருகிலே ஏவல் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவரின் போட்டோவை வைத்து ஏவல் பாவையையும் போட்டோவையும் தனித்தனியாக ஒன்பது முறை நூலால் சுற்றி சுற்றியது போக மீதமுள்ள நூல் கண்டை வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு ஏவல் இறக்கும் மந்திரத்தை தினம் ஒன்றுக்கு 108 உரு வீதம் மூன்று நாட்களும் உருவேற்றவேண்டும்.


                                             அந்த ஏவல் பாவைக்கு படையலாக இறைச்சி வகைகளும், பழவகைகள், இனிப்பு வகைகள் அவல் கடலை மதுபானம் சுருட்டு முதலியன படைக்கவேண்டும் . ஒரு நாள் ஏவலுக்கு படைத்ததை மறுநாள் மாற்றி மீண்டும் புதிதாக படைக்க வேண்டும். இப்படி மூன்று நாட்களும் படையல் படைக்க வேண்டும்.


                                              மூன்று நாட்கள் முடிந்தவுடன் அந்த ஏவல் பாவையை ஒரு மண் சட்டியில் வைத்து பூமியில் புதைக்க ஏவல் பில்லி சூனிய பாதிப்பு நீங்கி அந்த நபர் குணமடைவர். இப்படி ஆளே நேரில் வராமல் ஏவலை நீக்குவது மோடி வித்தை ஆகும்.

அமானுஷ்யம் மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல்

            அமானுஷ்யம் மோகினி பிசாசை வைத்து உருவேற்றிய ஏவல் 



                                           கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து ............. என்ற நபர் சர்வ சக்தி விருட்ச பீடம் வந்து என்னை சந்தித்தார். பார்பதற்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அவர் முகம் மட்டும் களையிழந்து சோகம் படர்ந்து காணப்பட்டது. சிறிது நேரத்தில் அவரே தனக்கு நடந்து கொண்டிருக்கும் அமானுஷ்ய விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.


நான் இரவில் நிம்மதியாக தூங்கி பத்து வருட காலம் ஆகிவிட்டது, எனது படுக்கை அறையில் சென்று மின்விசிறியை ஆன் செய்தால் அந்த மின்விசிறியில் ஒரு ஆணும் பெண்ணும் (அமானுஷ்ய உருவங்கள்) நிர்வாணமாக வந்து பாட்டுப்படி என்னை கேலி செய்கிறது. மின்விசிறியை அணைத்துவிட்டு சுவற்றை பார்த்தல் அதே அமானுஷ்ய ஆண் பெண் உருவங்கள் சுவற்றில் வந்து நிர்வாணமாக நடனமாடுகிறது, நானும் எனது மனைவியும் படுக்கையில் இருந்ததை சொல்லி கேலி செய்கிறது. பகலில் காரை ஓட்டிச் சென்றால் எதிரில் வரும் வாகனதில் இதே அமானுஷ்ய உருவங்கள் நிர்வாணமாக வந்து நடனமாடி கேலி செய்கிறது, இதனை ஒருகணம் பார்த்தல் உடனே விபத்து ஏற்பட்டு விடுகிறது. இதுவரை கடந்த பத்து வருடத்தில் சுமார் இருபது முறை விபத்து உண்டாகி அதில் தப்பிதிருகிறேன், அதேபோல் வியாபாரத்திலும் இந்த பத்து வருடத்தில் கையில் இருந்த 22 கோடி ரூபாயை இழந்து மேலும் 3 கோடி கடனுமாகி அந்த கடனுக்கு மதம் 6 இலட்சம் ரூபாய் வரை வட்டி கட்டி வருவதாகவும், இப்படி தனக்கு நடக்கும் அமானுஷ்ய விஷயங்களை பிறரிடம் சொன்னால் என்னை பைத்தியகாரன் என்று முத்திரை குத்துகிறார்கள். கட்டிய மனைவியும் பெற்ற மகளும் கூட நான் சொல்வதை நம்பவில்லை மாறாக என்னை கேலி செய்கின்றனர். இந்த தர்ம சங்கடத்தில் இருந்து என்னை காப்பாற்றி என் வியாபாரங்கள் மீண்டும் செழித்து கடன்கள் அடைந்து நிமதியாக நான் வாழ வழிகாட்ட வேண்டும் என்று கெஞ்சினார்.


இதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு பூஜையில் அமர்ந்து இவருக்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கு என்ன காரணம், அதை எப்படி நீக்குவது என்பதை என் அன்னையிடம் கேட்டேன். என் அன்னை எனக்கு தெளிவுபடுத்தினாள். பின் அவருக்கு விஷயங்களை தெளிவாக விளக்கினேன்.


உங்கள் முதல் மனைவி என்ன செய்தார் என்றேன்? அவளுக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை வரவில்லை, அவளுடன் வாழ விருப்பமில்லை எனவே விவாகரத்து கொடுத்துவிட்டேன் என்றார். பின் இரண்டு வருடம் கழிந்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன், இப்போது என் மகளுக்கு 22 வயதாகிறது. அடுத்த மாதம் மகளுக்கு திருமணம் என்றார்.


உங்கள் முதல் மனைவி தான் நீங்கள் நிம்மதியுடன் வாழவே கூடாது என்று திறமையான ஒரு மந்திரீகரை அழைத்து மோகினிகளை வைத்து உருவேற்றி ஏவலை செய்து வைத்துள்ளார். அந்த மோகினி உருவங்களே வந்து உங்களுக்கு துன்பம் தருகிறது. அந்த ஏவல் தான் உங்கள் குடும்பமும், வியாபாரமும் சீர் குலைந்ததற்கு காரணம் என்று சொன்னேன்.


இந்த ஏவலை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் போக்க முடியும். மிகவும் கடுமையான விஷயம் தான் கவனமாக நீக்க வேண்டும் இதில் கரணம் தப்பினால் இதை போக்கும் எனக்கு மரணம் தான் என்றேன். இருந்தாலும் உங்களை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது நாளை வாருங்கள் உங்களுக்கான பரிகாரங்களை துவக்கி விடுகிறேன் என்றேன்.


மறுநாள் அவரும் வந்தார் சில கடினமான பரிகார முறைகளை மேற்கொண்டு அவருக்கு செய்து வைத்த ஏவலை நீக்கி அவரை அனுப்பிவைத்தேன். இப்பொழுது அவருக்கு அந்த அமானுஷ்ய சம்பவங்கள் ஏதும் நடப்பதில்லை, மிகவும் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார். அவரின் வியாபாரங்களும் நன்றாக நடைபெற்று வருகிறது. அமானுஷ்ய உண்மை சம்பவங்கள் தொடரும்....

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

அஷ்ட கர்மங்களுக்கான மந்திரங்கள்

                                   
                                     அஷ்ட கர்மங்களுக்கான மந்திரங்கள்


1. வசியம் :
ஓம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஓம் யங் ய ந ம சி வ சர்வ லோக வசி வசி ஸ்வாஹா !


2.மோகனம் :
ஓம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ஓம் சங் ம சி வ ய ந மோகனாய ஸ்வாஹா !

3. உச்சாடனம் :
ஓம் ரங் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் க்லீம் ஐம் வ ய ந ம சி ஓம் ஸ்வாஹா !
4. ஸ்தம்பனம் :
ஓம் ஐம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ந ம சி வ ய ஓம் ஸ்வாஹா !


5. ஆக்ருஷ்ணம் :
ஓம் ஐம் சௌம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஐம் ந சி ய ம வ ஓம் ஆக்ருஷ்ணாயா நமஹா ஓம் ஸ்வாஹா !


6. பேதனம் :
ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் க்லீம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் ந ய வ சி ம ஓம் ஸ்வாஹா !


7. வித்வேஷனம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஐம் க்லீம் க்லீம் ஐம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் ய வ சி ந ம ஓம் ஸ்வாஹா !



8. மாரணம் : 
ஓம் சௌம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் க்லீம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் ஓம் சி வ ய ந ம ஹா ஓம் ஸ்வாஹா !

சாபங்கள் பலிக்குமா ?

                                                    சாபங்கள் பலிக்குமா ?



                                                                        இந்த கேள்விக்கு பதில் பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. எல்லோரும் நினைத்த நேரத்தில் கண்ட கண்ட காரணங்களுக்காக நியாயமே இல்லாமல் கொடுக்கும் சாபங்கள் எல்லாம் பலிக்காது, நியாயமான காரணங்களுக்காக மனம் நொந்து சபித்தால் மட்டுமே சாபங்கள் பலிக்கும். இப்படி மனிதனுக்கு வாழ்வில் வரும் சாபங்கள் மற்ற மனிதர்கள் கொடுக்கும் சாபம் மட்டுமல்ல, இவையன்றி பல வகைகளிலும் சாபங்கள் உண்டாகின்றன, அப்படிப்பட்ட சாபங்கள் பலவகைப்படும். அவை பெண் சாபம், பிரேத சாபம், பித்ருசாபம், சர்ப்பசாபம், கோசாபம், பூசாபம் (பூமி சாபம்), கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், முனி சாபம், பிரம்ம சாபம் மற்றும் குல தெய்வ சாபம்.


1.பெண் சாபம் : 


பெண்களை ஏமாற்றுதல், சகோதரிகளை, தாயை ஆதரிக்காமல் கைவிடுவது, மனைவியை கைவிடுவது ஏமாற்றுவது மனம் நோகும்படி செய்வது இந்த காரணங்களால் பெண் சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வம்சம் நாசமாகும்.



2.பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாக பேசுவது, பிணத்தை தாண்டுவது, இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பது, இறந்தவரின் உடலை உறவினர்கள் பார்க்கவிடாமல் தடுப்பது, சாவு நடந்த வீட்டில் இருந்து 98 அடி வரை தீட்டு உண்டு அந்த எல்லைக்குள் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் உடலை அடக்கம் செய்யும் முன்பு உணவு உண்பது, தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது போன்ற காரணங்களால் பிரேத சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வியாதிகள், அவமானங்கள், கடன்கள், அற்ப ஆயுள், ஆயுள் குறைவு உண்டாகிறது.


3.பிரம்ம சாபம் :

வித்தை கற்று தந்த குருவை மறப்பது, நிந்திப்பது, தவறாக பேசுவது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, கற்ற வித்தையை பிறருக்கு சொல்லிக்கொடுக்காமல் மறைப்பது போன்ற காரணங்களால் பிரம்ம சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வித்யா நட்டம் என்னும் கல்வியில் குறைபாடு உண்டாகிறது.


4. சர்ப்ப சாபம் :

பாம்புகளை தேவையின்றி கொல்வது, அவற்றின் இருப்பிடங்களை தேவையின்றி அழிப்பது போன்ற காரணங்களால் சர்ப்ப சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக திருமண தடை, செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் முதலியன உண்டாகிறது.


5. பித்ரு சாபம் :

தாய் - தந்தை, தாத்தா - பாட்டி ஆகியோர்களுக்கு செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்யாமல் இறுதி காலத்தில் அவர்களை தவிக்கவிடுவது, உதாசீனப்படுத்துவது, ஒதுக்கிவைப்பது, அவர்கள் இறந்த பின்பு செய்ய வேண்டிய திதி பரிகாரங்களை செய்யாமல் இருப்பது போன்ற காரணங்களால் பித்ரு சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக ஆண்வாரிசுகள் இல்லாமல் போகும், பலரிஷ்ட்ட தோஷத்தால் குழந்தைகள் இறக்கும்.


6. கோ சாபம் :

பசுவை வதைப்பது, பால் வற்றிய பசுவை இறைசிக்காக வெட்ட கொடுப்பது, கன்றையும் - பசுவையும் பிரிப்பது, தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்க மறுப்பது, பசுவுக்கு போதிய உணவளிக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் வளர்சிகள் இல்லாமல் தொட்டதெல்லாம் தோல்வியில் முடியும்.


7. பூ (பூமி) சாபம் :

ஆத்திரத்தால் பூமியை சதா காலால் உதைப்பது, பூமியை பாழ்படுத்துவது, பூமியை சீர் கேடாக்கும் பொருட்களை பூமியில் புதைப்பது, தேவையற்ற பள்ளங்களை உண்டாக்குவது, பிறரின் பூமியை அபகரிப்பது போன்ற காரணங்களால் பூ ( பூமி ) சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் நரக வேதனை அடைய நேரிடும்.


8. கங்கா சாபம் :

பலர் அருந்தக்கூடிய நீரை பாழாக்குவது, நீரை தேவைக்கு அதிகம் வீணாக்குவது, ஓடும் நதியை அசுத்தம் செய்வது போன்ற காரணங்களால் கங்கா சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக உடலில் நீர் சம்பந்தமான நோய்கள் உண்டாகி வாட்டும், நம் தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும்.


9. விருட்ச சாபம் :

பசும் மரத்தை வெட்டுவது, கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போக செய்வது, மரங்களை எரிப்பது, மரங்கள் சூழ்ந்த இடங்களை கட்டிடங்கள் கட்ட அழிப்பது, வனங்களை அழிப்பது போன்ற காரணங்களால் விருட்ச சாபம் உண்டாகிறது. இதன் விளைவாக வாழ்வில் தீரா கடன்கள், நோய்கள், வாகன விபத்துக்கள் உண்டாகி வாட்டும்.


10. தேவ சாபம் :

முன்னோர்கள் பூஜித்து வந்த தெய்வங்களின் பூஜையை செய்யாமல் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்ந்து பேசுவது, தெய்வ காரியங்களுக்கு உதவாமல் ஏளனம் செய்வது போன்ற காரணங்களால் தேவ சாபம் உண்டாகிறது. 


ரிஷி சாபம் :

. உண்மையான ஆசார்ய புருஷர்களை, பக்த்தர்களை, ஆன்மீக வாதிகளை மதிக்காமல் அவமதிப்பது போன்ற காரணங்களால் ரிஷி சாபம் உண்டாகிறது.


முனி சாபம் :

காவல் மற்றும் எல்லை தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும், பூஜைகளையும் செய்யாமல் உதாசீனப்படுத்துவது ஆகிய காரணங்களால் முனி சாபம் உண்டாகிறது.


குல தெய்வ சாபம் :

குல தெய்வங்களுக்கு உண்டான பூஜைகளையும் மரியாதைகளையும் செய்யாமல் அவமதிப்பதால் குல தெய்வ சாபம் உண்டாகும்.


                                             மேலே குறிப்பிட்ட தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குல தெய்வ சாபம் முதலியவற்றால் நமது வாழ்வில் உறவினர் பிரிவு, வம்ச அழிவு, செய்வினை, ஏவல், பில்லி, சூன்ய பாதிப்புகள் ஏற்பட்டு நமது குடும்பம் சீர்கெட்டு போகும்.



                                                                            இவ்வாறு நமக்கு வாழ்வில் பல வழிகளில் சாபங்கள் தோன்றி நம் வாழ்வினை பாதிக்கும் நிலைகள் உண்டு. இத்தகைய பாதிப்புகளால் அவதிப்பட்டு வருபவர்கள், என்ன காரணத்தினால் நம் வாழ்வில் துன்பங்கள் வருகிறது என்றே தெரியாமல் வாழ்வில் கஷ்டமும் வேதனையும் அடைந்து வருபவர்கள் நமது ஸ்ரீ விருக்ஷ பீடத்தினை அணுகி ஸ்ரீ லக்ஷ்மி தாச சுவாமிகளை சந்தித்து உரிய பரிகார முறைகளை தெரிந்துகொண்டு அதனை முறைப்படி செய்து வாழ்வில் வழம் பெற்று வாழ வாழ்த்துகிறோம். நேரில் வர இயலாதவர்கள் தொலைப்பேசி, இ மெயில் வாயிலாகவும் தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம்.



புதன், 20 ஆகஸ்ட், 2014

அஷ்டமா சித்திகளும் மூலாதார சக்கரங்களும்

அஷ்டமா சித்திகளும் மூலாதார சக்கரங்களும்



                                 மனித உடலில் 7 வகையான சக்கரங்கள் உள்ளன அவையாவன, மூலாதாரம், சுவதிஷ்ட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்காரம். மனிதனுக்கு ஆறறிவு படைத்த இறைவன் மனித உடலிலும் ஆறு சக்கரங்களையே படைத்தான் - 7 வது சக்கரமான சகஸ்காரம் என்பது மனித உடலை தாண்டியே அமைந்துள்ளது, ஆறு சக்கரங்களை அடைந்தாலே மனிதன் நினைத்ததை எல்லாம் அடைய முடியும், இந்த ஆறு சக்கரங்களை அடைவதே மிகவும் கடினம், இந்த ஆறு அல்ல எட்டு சக்கரங்களை அடைவதே அஷ்டமா சித்தி இதனை சித்தர்கள் மட்டுமே எட்டியுள்ளனர். இதில் எட்டாவது சக்கரம் எனப்படுவது அண்டவெளி ஆகும்.


                               இந்த சக்கரங்களின் மகிமையை அறியாமல் தான் என்ன பாடுபட்டேன் என்பதை பட்டினத்தார் அழகாக எழுதி உள்ள பாடலின் வாயிலாக காண்போம்.


மூலத்து உதித்து எழுந்த முக்கோண சக்கரத்துள் 

வாலை தன்னை போற்றாமல் மதிமறந்தேன் பூரணமே !

உந்தி கமலத்தில் உதித்து நின்ற பிரம்மாவை 

சந்தித்து காணாமல் நட்டழிந்தேன் பூரணமே !

நாபிக் கமல நடு நெடுமால் காணாமல் 

ஆவிகெட்டு நானும் அறிவழிந்தேன் பூரணமே !

உருத்திரன் இருதயத்தை உண்மையுடன் பாராமல் 

கருத்து அழிந்து நானும் கலங்கினேன் பூரணமே !

விசுத்தி மகேசுரனை விழிதிறந்து பாராமல் 

பசித்து உருகி நெஞ்சம் பதறினேன் பூரணமே !

நெற்றி விழிஉடைய நிர்மல சதாசிவத்தை 

புத்தியுடன் பாராமல் பொறி அழிந்தேன் பூரணமே !

நாத விந்து தன்னை நயம் உடனே பாராமல் 

போதை மயக்கிப் பொறி அழிந்தேன் பூரணமே !

உச்சி வெளியை உறுதியுடன் பாராமல் 

அச்சமுடன் நானும் அறிவு அழிந்தேன் பூரணமே !

இடைபிங்கலை இனிய இயல்பு அறியமாட்டாமல் 

தடை உடனே நானும் தயங்கினேன் பூரணமே !

ஊனுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல் 

நான் என்று இருந்து நலம் அழிந்தேன் பூரணமே !

உடலுக்குள் நீ நின்று உலாவினதை காணாமல் 

காடுமலை தோறும் திரிந்து காலுழந்தேன் பூரணமே !

என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க 

உன்னை அறியாமல் உடல் அழிந்தேன் பூரணமே !

ஐந்து பொறியை அடக்கி உன்னை போற்றாமல் 

நயந்து உருகி நெஞ்சம் நடுங்கினேன் பூரணமே !

வாசி தன்னைப் பார்த்து மகிழ்ந்து உனைதான் போற்றாமல் 

காசிவரை போய் திரிந்து காலுழந்தேன் பூரணமே !


எனக்குள்ளே நீ இருக்க உனக்குள்ளே நான் இருக்க 


மனக்கவலை தீர வரம் அருள்வாய் பூரணமே !






                                       பட்டினத்தார் பாடிய இந்த பாடலில் உடலில் உள்ள சக்கரங்கள் பற்றியும், அதில் உறையும் தெய்வங்களை பற்றியும் அதை அறியாமல் தான் அனுபவித்த துன்பங்களை பற்றியும் விரிவாக சொல்லியுள்ளார். மனிதர்களாகி துன்ப கடலில் சிக்கி உழலும் நாம் இனியாவது இறைவன் நம் உள்ளே தான் இருக்கிறார் என்பதனை உணர்ந்து அவரை கண்டு உணரும் பாக்கியத்தையும், இன்ப பெரு வாழ்வு என்னும் பேற்றையும் பெற்று உயவோம்மாக...


                                                   இனி கடவுளை தேடி கோவில் கோவிலாக அலைவதை விட்டு விட்டு நம்முள்ளே கடவுளை தேடுவோமாக... 



வாழ்க !                                                வளர்க !                                                 வணக்கம்!

நவகிரக மந்திரங்கள்

நவகிரக மந்திரங்கள் 

சூரியன் : 

"ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாசஹஸ்தாய தீமஹி 
தன்னோ சூர்ய ப்ரசோதயாத்"


"ஓம் ரவயே நம: 
ஓம் சூர்யாய நம:
ஓம் பானவே நம:
ஓம் ககாய நம:
ஓம் பூஷ்ணே நம:
ஓம் ஹிரண்ய கர்ப்பாய நம:
ஓம் மரீசய நம:
ஓம் ஆதித்யாய நம:
ஓம் ஸவித்ரே நம:
ஓம் அர்க்காய நம:
ஓம் பாஸ்கராய நம:


"பாஸ்கராய வித்மஹே
மஹத் யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத்"


ஸ்லோகம் :


ஜபாகுஸும ஸங்காசம்
காஷ்ய பேயம் மஹத்துதிம்!
தமோரிம் ஸர்வபாபக்னம்
ப்ரனதொஷ்மின் திவாகரம்!!


                                                              ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹ்ருதயம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தாமரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் - தாமிரம்.



சந்திரன் :


சந்திர காயத்ரி மந்திரம் :

"ஓம் பத்ம த்வஜாய வித்மகே 
ஹேம ரூபாய தீமஹி 
தன்னோ ஸோம பிரசோதயாத்"


ஸ்லோகம் :

ததிசங்க துஷாராபம்
க்ஷீரொர்தார்னவ ஸம்பவம்!
நமாமி ஸசிநம் ஸோமம்
சம்போர் மகுடபூஷணம்!!


                                             திங்கள்கிழமை அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜனம் அளிப்பது விசேஷம். சந்திரனுக்குரிய தேவதை – துர்க்கா தேவி, தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ளரளி, ரத்தினம் – முத்து, உலோகம் - ஈயம்.


அங்காரகன் :



அங்காரக காயத்ரி மந்திரம் :

ஓம் வீர த்வஜாய வித்மஹே : 
விக்ன ஹஸ்தாய தீமஹி! 
தந்நோ பௌம ப்ரசோதயாத்! 


ஸ்லோகம் :

தரனி ஹர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காஞ்சன ஸந்நிபம் 
குமாரம் சக்தி ஹஸ்தஞ்ச மங்களம் ப்ரணமாம்யகம்


                                                           செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க்கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சுமங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடு க்கலாம். செவ்வாய்க்குரிய தேவதை – முருகன், தானி யம் – துவரை, வஸ்திரம் – சிவப்பு, புஷ்பம் – சண்பகம், ரத்தினம் – பவழம்,உலோகம் – செம்பு.


புதன் :


ஸ்லோகம் :

ப்ரியங்குகளிகாஷ்யாமம்
ரூபேனா ப்ரதிமம் புதம்!
ஸௌமியம் ஸௌமிய குணோபேதம்
தம் புதம் ப்ரனமாம்யகம்!!



புத காயத்ரி மந்திரம் :

ஓம் கஜ த்வஜாய வித்மஹே: 
சுக ஹஸ்தாய தீமஹி 
தந்நோ புத ப்ரசோதயாத்.


                                                            புதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெருகும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரி – கட லை நிவேதனம் செய்து விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதை – விஷ்ணு, தானியம் – பச்சைப் பயிறு, வஸ்திரம் – பச்சைப்பட்டு, புஷ்பம் – வெண் காந்தள், ரத்தினம் -பச்சை, உலோகம் – பித்தளை.



குரு பகவான் 



குரு காயத்ரி மந்திரம் :

ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே 
க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குரு ப்ரசோதயாத்.


ஸ்லோகம் :

தேவாநாஞ்ச ரிஷி நாஞ்ச
குரும் காஞ்சந ஸன்நிபம்!
புத்தி பூதம் திரிலோகாநாம
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்!!

                                                       வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்தநாள் இந்நாளில் விரதம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தியாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடும்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக் கும். குரு பகவானின் தேவதை – ருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானியம் – கொண்டை கடலை, வஸ்திரம் – மஞ்சள், புஷ்பம் – முல்லை, ரத்தினம்– புஷ்பராகம்.



சுக்கிர பகவான்


சுக்ர காயத்ரி மந்திரம் :

ஓம் அச்வத்வஜாய வித்மஹே: 
தநுர்ஹஸ்தாய தீமஹி 
தந்நோ சுக்கிர ப்ரசோதயாத்.


ஸ்லோகம் :


ஹிமகுந்த மிருனாலாபம்
தைத்யாணாம் பரமம் குரும்!
ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்க்கவம் ப்ரணமாம்யகம்!!


                                                         வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படு கிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான்தொல்லை கள் நீங்கி, நல்லவை நடக்கும்.வெள்ளிக் கிழமை யன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய் வது நல்லபலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதை – வள்ளி, தானியம் – வெள்ளை மொச்சை, வஸ்திரம் – வெண்பட்டு, புஷ்பம் – வெண்தாமரை, உலோகம் – வெள்ளி, ரத்தினம் – வைரம்.




சனிஸ்வரர்



சனீஸ்வர காயத்ரி மந்திரம் :

ஓம் காக த்வஜாய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்.


ஸ்லோகம் :

நீலாஞ்சன ஸமாபாஸம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்!
சாயா மார்த்தான்ட ஸம்பூதம் 
தம் நமாமி சனீஸ்வரம்!!

                                                 சனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரை யாண்டு சனி இருந்தாலும், சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானை வணங்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனி பகவானுக்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம் – எள், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், ரத்தினம் – நீலம், புஷ்பம் – கருங்குவளை, உலோகம் – இரும்பு.



ராகு பகவான்




இராகு காயத்ரி மந்திரம் :

ஓம் நாக த்வஜாய வித்மஹே: 
 பத்ம ஹஸ்தாய தீமஹி 
தந்நோ ராக ப்ரசோதயாத்.


ஸ்லோகம் :

அர்த்தகாயம் மகாவீர்யம்
சந்த்ராதித்ய விமர்த்தனம்!
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம்ராஹும் ப்ரனமாம்யகம்!!


                                           ராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப்பயோகம் உள்ளவர்களும் ராகு விரதத்தை அனுஷ் டிக்கலாம். செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு இலு ப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தாரை மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதை – பத்ரகாளி, தானியம் – உளுந்து, ரத்தினம் – கோமேதகம், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், உலோகம் – கருங்கல், புஷ்பம் – மந்தாரை மலர்.



கேது பகவான்



"ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாயை தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்"



பலாஷ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரஹ மஸ்தகம்!
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம்கேதும் ப்ரணமாம்யகம்!!


                                               கேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களு ம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக் கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழிபட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேது விற்குரிய தேவதை – விநாயகர், தானியம் – கொள்ளு, வஸ்திரம் – பலகலர் கலந்த வஸ்திர ம், ரத்தினம்–வைடூரியம், புஷ்பம் – செவ்வல்லி, உலோகம் – துருக்கல்.



நவகிரக மந்திரம் :

"ஓம் ஹரீம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யச்ச ராஹவே கேதவே நமஹா".



தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க