புதன், 28 மே, 2014

பாவங்களும் தோஷங்களும் நீக்கும் தானம்


                              தானங்கள் செய்வது என்பது நமது பாவங்களையும் தோஷங்களையும் நீக்கி நம்மை காப்பது என்று நமது சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன, தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் என்பது உண்மையே, நம் வாழ்வில் வரும் துன்பங்களை போக்கிக்கொள்ள அதற்க்கு உண்டான தானங்களை சாஸ்திரங்கள் வழிகாட்டுகிறது, அவையாவன,


அன்னதானம் செய்வதால் ஏற்படும் பலன் - வறுமையும் கடன்களும் நீங்கும்,

பூமிதானம் - பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் தரும்,

கோதானம் - ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக் கடன் ஆகியவற்றைப் போக்கக் கூடிய து,

வஸ்திரதானம் - ஆயுளை விருத்தியாக்கும். 

தீபதானம் - கண்பார்வையை தீர்க்கமாக்கும், பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.

தேன் தானம் - புத்திரபாக்கியம் உண்டாகும். 

அரிசி தானம் செய்வதால் - பாவங்கள் தீரும், 

தயிர் தானம் - இந்திரிய விருத்தி ஏற்படும், 

நெய் தானம் - நோய் நிவர்த்தி உண்டாகும்,

நெல்லிக்கனி தானம் - ஞானம் உண்டாகும். 

பால் தானம் - துக்கம் நீங்கும். 

தேங்காய் தானம் - பூரண நலன் உண்டாகும், நினைத்த காரியம் வெற்றி பெறும்.

தங்க தானம் - குடும்ப தோஷ நிவர்த்தி,

வெள்ளி தானம் - மனக்கவலை நீங்கும்,

பழங்கள் தானம் - புத்தியும் சித்தியும் உண்டாகும்.


                                        இப்படி நமக்கு உண்டாகும் பலவித இன்னல்களை அதற்குரிய தானங்களை செய்வதன் மூலம் நீக்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட மிக சிறந்த ஒரு தானம் உண்டு, அதுதான் ஆலயங்களை கட்டுவது, இது ஒரு தனி மனிதன் செய்ய இயலுமா? இயலாது ஆகையால் நம்மால் இயன்ற சிறு தொகையினை ஆலயம் கட்டும் பணிக்காக தானமாக தரலாம், இவ்விதம் தருவதால் நம்மை வாட்டும் தோஷங்கள், நோய்கள் நம்மை விட்டு விலகி ஓடும், நம்மை சூழ்ந்த கஷ்டங்கள் விலகி இனிமையான சந்தோஷமான வளமையான வாழ்க்கை உருவாகும்.




செவ்வாய், 27 மே, 2014

அற்புத வசிய மூலிகை அழுகண்ணி தொழுகண்ணி



அழுகண்ணி மூலிகைக்கு வடமொழியில் சாவல்யகரணி என்றும் தொழுகண்ணிக்கு சல்லிய கரணி என்றும் பெயர் இம்மூலிகைகள் இரண்டும் காயகற்ப மூலிகைகள் ஆகும். மிகப்பெரியதொரு வசிய மூலிகைகள் உண்டு என்று சொன்னால் அவை அழுகண்ணி மற்றும் தொழுகண்ணி ஆகும்.

        அழுகண்ணி ஒரு அடி நீளம் வளரும் ஒரு குத்து செடியாகும்.இதன் இலை தடிமனாகவும் வழுவழுப்பாக கடலை இலையினை போல் இருக்கும். இந்த இலையின் நுனியில் இருந்து பனித்துளி போல் நீர் கசிந்து பூமியில் கொட்டும், எனவே இந்த செடிக்கு அடியில் பூமியில் இரப்பதம் இருக்கும். இந்த நீர் இனிப்பு சுவை உடையதால் எப்போதும் எறும்பு மொய்துக்கொண்டே இருக்கும். இது ஒரு ஜீவ சக்தி உடைய மூலிகை, இதனை முறைப்படி காப்பு கட்டி சாபம் நீக்கி இந்த மூலிகையை எடுத்து உபயோகப்படுத்த வேண்டும். அழுகண்ணியின் வடக்கு போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல காரியங்களும் வெற்றியாகும், லக்ஷ்மி தேவி நமக்கு வசியமாகி லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும், தொழில் வியாபாரங்களில் மிகப் பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

            தொழுகண்ணி இலை பார்ப்பதற்கு சனப்ப இலை போல இருக்கும், இதை தொட்ட உடன் பக்க இலையுடன் இலை சேர்ந்து கைகூப்புவது போல் இருக்கும், ஒரு முழ நீளம் வரை வளரும், அந்தி மல்லி செடியின் தோற்றத்தை ஒத்து இருக்கும். தொழுகண்ணியின் வடக்கே போகும் வேரை எடுத்து தங்கம் அல்லது வெள்ளியில் காப்பு அல்லது தாயத்து செய்து அதனுள் வேரை வைத்து வலது கரத்தில் அணிந்து கொண்டால் சகல ஜன வசியம், சகல காரிய வெற்றி, குபேர அந்தஸ்து லக்ஷ்மி கடாட்சம் உண்டாக்கும்.

     இவ்விரு காயகற்ப மூலிகைகளை முறைப்படி உண்டுவந்தால் உடலில் வெட்டுப்பட்ட பாகங்களை உடனே இணைக்கும் என்று சித்தர் பாடல்கள் குறிப்பிடுகின்றன.


ஞாயிறு, 18 மே, 2014

அஷ்ட கர்ம செயல்களுக்கான உலோகங்கள்

                 

                                             சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த உலோகங்களில் எந்திரங்கள் எழுதி அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு உலோகங்களில் எந்திரங்களை எழுதி மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான எந்திரங்களை எந்த உலோகங்களில் எழுதினால் ஜெயம்தரும் என்று பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                எந்திரங்கள் எழுதவேண்டிய உலோகங்கள்  



1. வசியம்                            -      காரீயம்  




2. தம்பனம்                         -      செம்பு   




3. மோகனம்                       -     வங்கம்  




4.  உச்சாடனம்                   -     வெள்ளீயம் 




5. பேதனம்                           -     இரும்பு  




6. ஆகர்ஷணம்                  -     தங்கம்  




7. வித்வேஷனம்               -    குருத்து ஓலை 




8. மாரணம்                           -    வெள்ளி 




          மேலே சொல்லிய உலோகங்களில் அந்தந்த காரியங்களுக்கு உண்டான எந்திரங்களை வரைந்து மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.


அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகள்


                    

                                             சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த எண்ணையில் எந்தவிதமான திரிகளை போட்டு விளக்கேற்றி அந்த காரியங்களை செய்தால் உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு எண்ணெயில் ஏதோவொரு திரி போட்டு விளக்கேற்றி மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான எண்ணைகள் மற்றும் திரி வகைகளை  பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அஷ்ட கர்ம பெயர்                எண்ணெய் & திரி 



1. வசியம்                            -      காராம் பசு நெய் & தாமரை நூல் திரி 




2. தம்பனம்                         -       ஆதளைக்கொட்டை எண்ணெய் & பஞ்சுத்திரி  




3. மோகனம்                       -       நல்லெண்ணெய் & கன்னி நூல் திரி 




4.  உச்சாடனம்                   -       புங்கெண்ணெய் & இலவம்பஞ்சு திரி 




5. பேதனம்                           -       புன்னைக்கொட்டை எண்ணெய் & துணித்திரி 




6. ஆகர்ஷணம்                  -       எரண்டத்து எண்ணெய் & வெள்ளெருக்கன் திரி 




7. வித்வேஷனம்               -        பசு+ஆடு+பன்றி நெய் & தாமரை நூல்திரி   




8. மாரணம்                           -        வேப்பெண்ணெய் & வேலிப்பருத்தி திரி 




          மேலே சொல்லிய எண்ணெய் மற்றும் திரி வகைகளை போட்டு விளக்கேற்றி அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.



அஷ்ட கர்மங்களுக்கு உண்டான நூல் இலைகளின் எண்ணிக்கை


"தருவர வக்கர சக்கர சக்தி 
பருவ முதிராத பாலிகை கன்னி 
இருவின நூலால் ஏற்கும் வினைக்கு 
மருவிய கருமம் வகைவகை தானே" 

அஷ்ட கர்ம செயல்கள் என்னும் வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய செயல்களை செய்யும் போது அதற்க்கு உண்டான எந்திரங்களை எழுதி அதற்க்கு உரிய வண்ணங்களில் நூல் இழைகளால் பிணைத்து கட்ட வேண்டும் என்பதை சித்தர்கள் குறிப்பிட்டு சென்றுள்ளனர். அந்த நூல்கள் எப்படி யாரால் நூற்க்கப்பட வேண்டும், அந்த நூல்கள் எத்தனை இழைகள் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியம், இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் எந்திரங்களை எழுதி அதனை தாயத்தில் அடைத்து தருவதால் எந்த பலனையும் நாம் அடைய முடியாது, மேலே சொல்லப்பட்ட பாடலின் படி வரங்களை தருகின்ற எந்திரங்களை இறுத்தி கட்டும் நூலானது வயதுக்கு வராத கன்னிப் பெண் நூற்று அந்த நூலை அஷ்ட கர்ம செயல்களுக்கு ஏற்ற இழை கணக்கு அறிந்து கட்டுவதால் அஷ்ட கர்ம காரியங்கள் ஜெயமடையும் என்பதனை குறிப்பிடுகிறது.

"வகையாகும் வசியம் ஆகருணைக்குத் 
தொகையா மிரண்டிழை சொற்ற மோகனம் 
பகையாகும் ஏடனை பற்றுநூல் மூன்றாம் 
புகையாகும் தம்பனம் போக்குநால் நூல்தானே.
நூலஞ்சு பேதனம் ஆறிழை மாரணம் 
காலோன்றைக் கட்டி கருத்தொக்கச் சூழ்ந்தபின்  
பாலொன்று மென்மொழிப் பங்கயச்சத்திக்கு
சேலொன்று  மோமங்கள் செய்மந்திரமே".

மேற்கண்ட பாடலின் படி அஷ்ட கர்ம செயல்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் 
 ஆகிய காரியங்களுக்கான நூல் இழை கணக்கினை நாம் தெளிவாக அறியமுடிகிறது. அவையாவது :

வசியம் - 2 இழை, மோகனம் - 3 இழை, தம்பனம் - 4 இழை, உச்சாடனம் - 4 இழை, ஆகர்ஷணம் - 2 இழை, வித்வேஷனம் - 3 இழை, பேதனம் - 5 இழை, மாரணம் - 6 இழை  இவற்றை தெளிவாக கவனத்தில் கொண்டு அந்தந்த எந்திரங்கள் எழுதும்போது அதற்குரிய இழை கணக்கில் அதற்குரிய வண்ண நூலால் கட்டி மந்திரங்களை உருவேற்றினால் அந்த காரியங்கள் ஜெயமுடன் முடியும்.

சனி, 17 மே, 2014

புத்திர பாக்கியம் தரும் விருட்சம்



                                                  புத்திர பாக்கியம் வேண்டி ஏங்கி தவிக்கும் தம்பதியினர் பலர், இவர்களின் புத்திர பாக்கிய வேண்டுதலை உடனே நிறைவேற்றும் ஒரு பரிகார மரம் ஒன்று உண்டு என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. இம்மரம் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்திலும் நட்டு சாஸ்திர முறைப்படி வளர்க்கப்பட்டும் வருகிறது. உலக மக்களின் புத்திர பாக்ய வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக புத்திர தோஷ பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த அபூர்வ சக்தி கொண்ட தெய்வீக விருட்சம் இலந்தை மரம் எனும் முட்கள் நிறைந்த சிறு மரம். இம்மரத்தில் சந்தான கணபதியும், மகாலட்சுமியும் ஒருங்கே வாசம் செய்வதால் இம்மரத்தை வணங்கும் போது புத்திரபாக்கியத்தில் உண்டாகும் வினைகளை விநாயகர் தீர்த்து அருள, லட்சுமியும் தனது அம்சங்களை பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாக அருள்பாலிக்கிறார்.










இந்த மரத்தினை அதிகாலையில் சந்தன லட்சுமி மந்திரத்தை 16 முறை சொல்லி வலம்வந்து, அதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து அத்துடன் 10 மிளகு சேர்த்து அரைத்து, பெண்கள் மாத விலக்கான மூன்று நாட்களும் சாப்பிட கருவறையை சுத்தப்படுத்தி கரு உண்டாக செய்கிறது.


ஆல மரம் :


இந்த தெய்வீக சக்தி உடைய விருட்சம் சிவ பெருமானின் அம்சம் ஆகும். இந்த மரத்தில் இருந்து சாத்வீக கந்த அதிர்வுகள் வேளியறுகின்றன. இந்த விருட்சத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும். இந்த விருட்சம் ஆண்மையை அதிகரிக்க செய்யும். குழந்தை பாக்கியம் இல்லாத ஆண்கள் இம்மரத்தை முறைப்படி பூஜித்து வணங்கினால் புத்திரபாக்கியம் உடனே கிடைக்கும். கணவன் - மனைவி சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்யவும்.




ஒரு வியாழக்கிழமையை தேர்வு செய்து அன்று சர்வ சக்தி விருட்ச பீடத்தில் உள்ள ஆல விருட்சதிக்கு புத்திர தோஷ பரிகாரம் செய்யவும் . பரிகாரம் செய்வதற்கு முதல் நாள் இரவே நவ தானியத்தை வாங்கி தண்ணீரில் ஊறவைத்து பரிகாரம் செய்யும் நாள் ஊறவைத்த தண்ணீரை விருட்சதிக்கு ஊற்றி பரிகாரம் செய்து கொண்டு, ஊறவைத்த தானியத்தை வெல்லம் சேர்த்து அரைத்து பசுவுக்கு கோபூஜை செய்து உண்ண கொடுத்தல் உங்கள் கர்ம விணைகள் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும். இம்மரம் வெளியிடும் காந்த அலைகள் உடலுக்கு நல்ல வலிமை தரும். இம்மரம் வெளியிடும் கற்றை சுவாசம் செய்தாலே உடல் நோய்கள் நீங்கும்.





வியாழன், 15 மே, 2014

ஜோதிடம் கால புருஷ இராசிகள்



             
                                                 காலப் புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம, மோட்ச இராசிகள் என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்கள் எந்த வகையில் யாருக்கு செய்தோம். அதன் விளைவாக இந்த பிறவியில் நாம் என்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்க போகிறோம் என்பதனை இந்த காலப்புருஷ இராசிகளை கொண்டு நாம் அறிய முடியும். இதில் எந்த இராசிகள் எந்த தத்துவத்தை குறிக்கும் என்பதை கீழே உள்ள படத்தில் காணலாம்.


தர்ம இராசிகள் : மேஷம்,சிம்மம்,தனுசு இராசிகள் 

தர்மத்தில் இருவகை உண்டு. அவை நல்ல தர்மம், கெட்ட தர்மம். உதாரணமாக ஒரு கோவிலில் திருவிழா நடக்கிறது, அந்த விழாவில் ஒருவர் அன்ன தானம் செய்தார் இது நல்ல தர்மம். ஒருவர் ஆபாச நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார் இது கெட்ட தர்மம். அதாவது நாம் செய்யும் தர்மம் ஒருவரை வாழ வைப்பதாக, நல்வழி படுத்துவதாக அமைந்தால் அது நல்தர்மம் அதனால் அவர் நல்ல பலன்களையும் ஜாதகத்தில் யோகங்களையும் பெற்று வாழ்வார். அதேபோல் மற்றவரை தீய வழியில் செலுத்தும் ஆபாச நடனம் நடத்தியவர் அதன் பலனாக கெடு பலன்களையும் ஜாதகத்தில் அதற்குரிய தோஷங்களையும் பெற்று வாழ்வில் துன்பப்படுவார்.

கர்ம இராசிகள் : ரிஷபம், கன்னி, மகரம் இராசிகள் 

கர்மம் என்பது நாம் செய்யும் தொழிலை குறிக்கும், பிறருக்கு தீங்கு தராத வண்ணம் நமது தொழிலை செய்தால், நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு நன்மைகள் செய்தால், நாம் செய்யும் தொழிலை நியாய தர்மத்துடன் செய்தால் அதன் பலனாக நல்ல ஜாதக யோகத்தினையும், அதனால் நல்ல பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வினையும் அடையலாம். அதேபோல் தர்ம நியாங்களை மறந்து நாம் செய்யும் தொழிலால் பிறருக்கு தீமைகளை செய்து பணம் ஈட்டினால் அதன் விளைவாக கெடு பலன்களையும், ஜாதக ரீதியில் கொடிய தோஷங்களையும் பெற்று துன்பப்பட்டு வாழவேண்டி நேரும்.

காம இராசிகள் : மிதுனம், துலாம், கும்பம் இராசிகள் 

காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். நம் ஆசைகளிலே நல்லதும் உண்டு, தீய ஆசைகளும் உண்டு. நான் நியாயமான வழியில் தர்ம வழியில் உழைத்து பெரும் செல்வம் ஈட்டி என் குடும்பத்தை நல்ல விதமாக வாழ வைப்பேன் என்பது நல்ல காமம் (ஆசை). நான் எப்பாடு பட்டாவது அடுத்தவன் மனைவியை அடைந்தே தீருவேன் இது கெட்ட காமம் (ஆசை).

மோட்ச இராசிகள் : கடகம், விருச்சிகம், மீனம் இராசிகள் 

நம்மை பெற்றெடுத்த தாய் - தந்தை, பாட்டன் - பாட்டி போன்ற பெரியோர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்ல விதமாக வாழவைத்து, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்து, அவர்கள் இறந்த பிறகும் செய்ய வேண்டிய திதி தர்ப்பணம் முதலிய காரியங்களை செய்வது அவர்கள் மோட்சமடைய வழிவகையான நல்மோட்சம். அதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும் போது அவர்களை உதாசீனப் படுத்துவது, உன்ன உணவுஇன்றி தவிக்கவிடுவது, அவர்களுக்கு உண்டான மருத்துவ செலவுகளை செய்யாமல் நோயால் துன்பமடைய செய்வது, அவர்கள் இறக்கும் போது உரிய இறுதி சடங்குகளை செய்யாமல் விடுவது, இறப்புக்கு பின்பு திதி தர்ப்பணங்களை செய்யாமல் விடுவது போன்ற செயல்களை செய்வதால் நம் முன்னோர்களின் ஆன்மா மோட்சமடையாமல் இருக்க வழிவகை செய்வதாகும் இதனால் நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி வாட்டும் இதுவே துர்மோட்சம் ஆகும்.

மேலே கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் கடந்த பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். இந்த பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் நாம் கடந்த பிறவியில் அந்த இராசிகளின் காரக பலனில் நாம் செய்த பாவம் என்று அறிக. அந்த பாவங்களால் உண்டாகி நம்மை வாட்டும் தோஷங்களை தகுந்த பரிகாரங்கள் செய்து சரிப்படுத்தி கொள்ளலாம்.


ஜோதிடம் கால புருஷ தத்துவம்




                                               ஜோதிட சாஸ்திரப்படி மிகப் பெரிய பங்கு வகிப்பது காலப்புருஷ தத்துவம் ஆகும். நாம் முன் பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களே இந்த பிறவியில் நாம் அடையும் நன்மை தீமைகளுக்கு காரணம். நான் கடந்த பிறவிகளில் யாருக்கு எந்த விதத்தில் பாவங்களையோ, இல்லை புன்னியங்களையோ செய்தோம், அதன் வாயிலாக இந்த பிறவியில் நாம் அந்த வினைப்பயனை எவ்விதத்தில் அனுபவிக்க போகிறோம் என்பதனை நமக்கு ஜோதிடத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக கண்ணாடி போல காட்டுவது காலப்புருஷ தத்துவம் ஆகும்.

             ஜோதிட சாஸ்திரம் 12 இராசிகளையும் சர, ஸ்திர, உபய இராசிகள் என்று வகுத்துள்ளது. இதில் சர இராசிகள் - மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகும். ஸ்திர இராசிகள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகும். உபய இராசிகள் - மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகும். இதில் சர இராசி இந்த பிறவியின் தன்மையை காட்டும், ஸ்திர இராசிகள் சென்ற பிறவியில் நாம் செய்த நன்மை தீமைகளை காட்டும். உபய இராசிகள் அடுத்த பிறவியில் நாம் அனுபவிக்க இருக்கும் நன்மை தீமைகளை காட்டும். ஒரு ஜாதகர் தான் பிறந்த லக்னத்தை கொண்டு தனக்கு நடக்கும் பலன்களை எடை போட முடியும். சர லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த பிறவியில் செய்யும் நன்மை தீமைகளின் பலனை இந்த பிறவியிலேயே அனுபவிப்பர், ஸ்திர லக்னத்தில் பிறந்தவர்கள் போன பிறவியில் செய்த பாவ புண்ணியங்களின் பலனை இந்த பிறவியில் அனுபவிப்பர், உபய லக்னத்தில் பிறந்தவர்கள் இந்த பிறவியில் செய்யும் பாவ புண்ணியங்களின் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பர், என்று காலப் புருஷ தத்துவத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது, இதனால் தான் நல்லவர்களுக்கு கேட்ட பலனும், துன்பமான வாழ்வும், அதுபோல கேட்டவர்களுக்கு நல்லபலனும் இன்பமான வாழ்வும் அமைந்துவிடுகிறது. இந்த காலப்புருஷ தத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவானது மாற்ற இயலாத ஒன்றாகும். காலப்புருஷ தத்துவப்படி நமது ஜாதகத்தினை ஆராய்ந்து நாம் அடைய உள்ள நல்ல தீய பலன்களை அறிந்து கொள்ளலாம். நாம் காலப்புருஷ தத்துவப்படி கேடுப்பலனை அடையவேண்டி வந்தால் அதற்க்கான பரிகாரங்களை செய்துகொள்வதன் வாயிலாக நம் கஷ்டங்களை சிரமங்களை போக்கிக்கொள்ளலாம், நல்ல பலன்களை அதிகப்படுத்தி கொள்ளலாம், இந்த காலப்புருஷ தத்துவத்தினை மாற்றும் பரிகாரங்கள் ஒருநாளில் செய்துகொள்வதல்ல, தகுந்த குருவின் ஆலோசனைப்படி நீங்கள் தொடர்ந்து செய்துவந்தால் மட்டுமே இதன் பலனை அடைய முடியும்.

ஞாயிறு, 11 மே, 2014

விளக்கேற்றும் பெண்ணின் பெருமை




                           திருமணமாகி கணவன் இல்லம் வரும் பெண்ணை குத்து விளக்கேற்ற சொல்வது நமது முன்னோர் வைத்து சென்ற மரபு காரணம் என்னெவன்றால் குத்து விளக்கில் ஐந்து முகங்கள் உண்டு. ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்துகிறது.அவை அன்பு, மனஉறுதி, சகிப்பு தன்மை, நிதானம், சமேயாஐித புத்தி ஆகும். இந்த தன்மையை உணர்த்தும் குத்து விளக்கை ஏற்றும் பெண்ணும் அந்த ஐந்து தத்துவங்கைள புரிந்து கொண்டு தானும் தான் சார்ந்துள்ள தனது குடும்பத்தையும் குலவிருத்தி செய்ய வேண்டும் என்பதே அதன் பொருள்.

பிறப்பு திதி தோஷம்




                                              ஒரு குழந்தை பிறந்தால் அதனால் குடும்பத்தினருக்கு உண்டாகும் தீட்டு விபரங்களை முன்பே எழுதியுள்ளோம். இப்பொழுது ஒரு குழந்தை ஜனனமாகும் நாளில் இருக்கும் திதியால் உண்டாகும் ஜனனதோஷத்தை இங்கு பார்ப்போம்.

1.ஞாயறு - துவாதசி திதி, சப்தமி திதி.
2.திங்கள் - ஏகாதசி திதி, சஷ்டி திதி.
3.செவ்வாய் - பஞ்சமி திதி, சப்தமி திதி.
4.புதன் - துதியை திதி, அஷ்டமி திதி.
5.வியாழன் - சஷ்டி திதி, நவமி திதி.
6.வெள்ளி - அஷ்டமி திதி, தசமி திதி.
7.சனி - நவமி திதி, ஏகாதசி திதி.
                    
                          நீங்கள் மேற்கூறிய நாளும், திதியும் கூடிய நாளில் பிறந்திருந்தால் இது பிறப்பு திதி தோஷமாகும். இதனால் உங்கள் வாழ்வில் பல இன்னல்களை நீங்கள் அடைவீர்கள். அந்த துன்பங்களை நீக்க சரியான பரிகாரங்களை செய்யவேண்டியது அவசியம்.

பிறப்புதோஷம் (ஜனன தீட்டு)




                                              ஒருவருக்கு குழந்தை பிறந்தால் அந்த குழந்தையை பெற்றவர்களுக்கு தீட்டு உண்டாகிறது. இந்த தீட்டு ஷத்திரியர்களுக்கு 12 நாட்களும், வைசியர்களுக்கு 15 நாட்களும் தீட்டு உண்டு, இந்த காலங்களில் கோவில்களுக்கு செல்வதும், பூஜை புனஸ்காரங்கள் செய்வதும், இறப்பு வீடுகளுக்கு செல்வதும் கூடாது. சிலருக்கு கருகலைவதும் உண்டு. அவ்வாறு கருகலைந்தால் கலைந்த கருவுக்கு எத்தனை நாட்களோ அத்தனை நாட்களுக்கு தீட்டு உண்டு.
        
                         பிரசவித்த பெண்ணை தொட்டலோ அல்லது பிரசவமான வீட்டில் உணவு சாப்பிட்டாலோ அவர்களுக்கும் பத்து நாட்களுக்கு தீட்டு உண்டாகும், அவர்களும் தீட்டு கடைபிடிக்க வேண்டும்.குழந்தை பிறந்த வீட்டில் ஜன்மதை என்னும் தேவதை வந்து குடிகொள்ளும் அந்த தேவதைக்கு குழந்தை பிறந்த மூன்று, ஆறு அல்லது பத்தாவது நாளில் தீட்டு கழித்து பூஜைகள் செய்யவேண்டும்.
       
                                       ஆண்குழந்தைகளுக்கு அன்னமூட்ட ஆறாவது மாதமும், பெண்குழந்தைகளுக்கு அன்னமூட்ட ஐந்தாவது மாதமும் சிறப்பானது.


பிறப்புதோஷம் உண்டாக்கும் கிழமையும், நட்சத்திரங்களும் :



கீழ்வரும் கிழமைகளில் குறிப்பிட்டிருக்கும் நட்சத்திரங்கள் அமைந்தால் பிறப்புதோஷமாகும்.
                
1.ஞாயறு - அனுஷம், அஸ்வினி, விசாகம், மகம், பூசம்.
2.திங்கள் - உத்திராடம், அனுஷம், பூராடம், பூசம், ஆயில்யம்.
3.செவ்வாய் - சதயம், உத்திராடம், அவிட்டம், கிருத்திகை, அனுஷம்.
4.புதன் - அஸ்வினி, அவிட்டம், ரேவதி, உத்திராடம், கேட்டை.
5.வியாழன் - மிருகசீரிஷம், உத்திரம், ரோகிணி, மூலம், ரேவதி.
6. வெள்ளி - சுவாதி, கேட்டை, பூரம், ரோஹிணி.
7. சனி - அஸ்தம், ரேவதி, உத்திரம், திருவோணம், அவிட்டம்

         பிறப்புதோஷம் நீங்க நீங்கள் பிறந்த நட்சத்திர அதிபதிகளையும், பிறந்த நட்சதிரதிக்கு உண்டான விருட்சங்களையும் சாஸ்திர முறைப்படி வாழ்நாள் முழுதும் வணங்கி வர நன்மை உண்டாகும்.

மாந்தி இராசியில் இருப்பதினால் உண்டாகும் பலன்கள்




                                         12 இராசிகளிலும் ஜனன ஜாதகத்தில் மாந்தி அமரும்போது உண்டாகும் பலன்களை பொதுவாக காணலாம்.

1.மேஷம் :
                     மேஷத்தில் மாந்தி அமர்ந்திருப்பது ஜாதகரின் புத்தியை கெடுத்துவிடும், தீய வழிகளில் செல்ல துணைபுரியும், இது தீமையை உண்டாக்கும், முரட்டு சுபாவமும், தந்தை சொல்லை மதிக்க மாட்டார்கள்.

2.ரிஷபம் :
                     அதிக கோபத்தை உண்டாக்கும், கண், காது இவைகளில் வியாதிகளை உண்டாக்கும். பேச்சு ஏட்டிக்கு போட்டியாக இருக்கும். பற்களை அடிக்கடி நறநறவென கடிக்கும் பழக்கம் உண்டாகும்.

3.மிதுனம் :
                      வாய், தொண்டை பகுதிகளில் நோய்கள் ஏற்படும். மன கோளாறுகளை உண்டாக்கும், மனதைரியத்தை குறைக்கும், கலைத்துறையினருக்கு நல்லது.

4.கடகம் :
                    சுய ஒழுக்கத்தையும் கெடுக்கும், வாக்கு சுத்தம் இருக்காது, கடன்தொல்லைகளை உண்டாக்கும், எல்லாம் தெரிந்தவர்கள் போல் வேசமிடும் போலிமனிதர்கள் இவர்களே.

5.சிம்மம் :
                    வீண் ஜம்பங்களை உடைய மனிதர்.வயிற்றுக் கோளறுகளையும், நுரையீரல் மற்றும் இருதய கோளாறுகளையும், பெண்களுக்கு யோனியில் நோய்களையும் தரும்.

6.கன்னி :
                    கல்வியில் தடையை கொடுக்கும், தாம்பத்ய வாழ்வு சரியாக இருக்காது, குடும்பத்தாருடன் சண்டை, சச்சரவு பிரிவினைகளை உண்டாக்கும். கெட்ட வழியில் நடத்தையை உண்டாக்கும்.

7.துலாம் :
                    கெட்ட நடத்தை உள்ள பெண்களின் தொடர்பு உண்டாகும், வாழ்வில் ஏற்ற தாழ்வுகளும், கெட்ட பெயரையும் உண்டாக்கும், வீண்கர்வம் இருக்கும்.

8. விருச்சிகம் :
                              வாழ்வே போராட்டமாகும், கடன், நோய், எதிரிகளின் தொல்லைகளை கொடுக்கும்.

9.தனுசு :
                  இந்த இராசியில் மாந்தி அதிக கெடுதலை தருவதில்லை.

10. மகரம் :
                     இந்த இராசியில் மாந்தி நிற்க வாழ்வில் அதிகமான கஷ்டங்களை உண்டாக்கும். கெட்டவழி நடத்தைகளை உண்டாக்கி வாழ்வினை பாழாக்கும்.

11.கும்பம் :
                      மாந்திரீக பதிப்புகளை உண்டாக்கும், ஏவல், பில்லி, சூனியம், செய்வினை பதிப்புகளால் வாழ்வில் சீர்கேடு உண்டு.

12.மீனம் :
                   வெளிநாடு சென்று வேலைசெய்யவும், வியாபாரம் செய்யவும் நல்லது, அதிக தனவரவினையும் உண்டாக்கும். பெண்களால் வாழ்வில் துன்பங்கள் வரும்.

               மாந்தி 2,7,12 ம் இடங்களை பார்க்கும் தன்மை உடையது. மாந்தி இருக்கும் வீடும், பார்க்கும் வீடுகளும் பாதகத்தை உண்டாக்கும். இந்த மாந்தியை குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் பார்த்தால் கெடுபலன்கள் குறையும், உங்கள் ஜனன ஜாதகத்தில் மாந்தி கெடுபலன்களை உண்டாக்கும் வண்ணம் அமர்ந்திருந்தால் உடனே மாந்திகுரிய பரிகாரங்களை செய்துகொள்ள நல்ல பலன்களை உடனே பெறலாம்.

மாந்தி ஜோதிட பார்வை




                                  ஜோதிடத்தில் மாந்தி கிரகம் சனியின் உபகிரகமாகவும், சனி பகவானின் மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்தி எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த ஸ்தானம் பாதக  ஸ்தானமாகும். அந்த ஸ்தான அதிபதியும் பாதகாதிபதி ஆகும். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகும். மாந்தி தான் இருக்கும் வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களை பார்க்கும். மாந்தியின் பார்வை பதியும் வீடுகளும் தோஷத்தை உண்டாக்கும்.
          
                         உதரணமாக மாந்தி லக்னத்திற்கு நான்காம் வீட்டில் இருந்தால் ஜாதகருக்கு மனை தோஷம் ஆகும். வீட்டில் தெய்வம் குடியிருக்காது. வீடு களையிழந்து இருக்கும். சுக ஜீவனம் அமையாது. தொடர்ந்து வழக்குகளோ மருத்துவ செலவுகளோ வந்து கொண்டிருக்கும். குடும்பம், தொழில்,அந்தஸ்து முதலியவற்றில் பாதிப்பு இருக்கும்.
           
                    ஐந்தில் மாந்தி இருந்தால் பிரேத சாபம் ஆகும். ஆறில் மாந்தி தீராத கடன் உண்டாகும். எழலில் மாந்தி கணவன் - மனைவி உறவினை பாதிக்கும். ஒன்பதில் மாந்தி கடந்த ஜென்ம பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் தோஷங்களை குறிக்கும்.
          
                   இது மட்டுமல்லாது மாந்தியல் வரும் கெடுபலன்கள் ஏராளம். அதை சொல்ல வார்த்தையில் அடங்காது. மாந்தியல் வரும் கேடுப்பலன்களை நீக்க நீங்கள் வசிக்கும் இடத்திலோ அல்லது ஆலயத்திலோ மஹா ம்ருத்யுஞ்ச யாகம், சுதர்சன யாகம் செய்து யாக கும்ப நீரில் ஸ்தானம் செய்வித்தல் நீங்கும். மேலும் நல்லதொரு கனக புஷ்பராக கல்லை அணியவும்.

நாக தோஷம் ஜோதிட பார்வை





               நாக தோஷம் என்ற பெயரை கேட்ட உடனே அச்சப்படுகின்றனர் பலர். இது  தேவையற்ற பயமாகும். சரியான பரிகாரம் மூலம் இந்த தோஷத்தை நீக்கி கொள்ளலாம். ஜோதிட ரீதியாக இராகு மற்றும் கேது லக்னம் அல்லது இராசிக்கு 1,2,4,5,7,8,10,12 ம் இடங்களில் அமர்ந்தால் நாக தோஷம் என்று பொருள். இந்த நிலை உங்களுக்கு ஜாதகத்தில் இருந்தால் கோட்சார ரீதியில் அந்த இடங்களுக்கு இராகு, கேது வரும் காலங்களில் கெடு பலன்கள் நடைபெறுவதை காணலாம்.
              நாக தோஷம் தரும் கெடுபலன்களை இனி பார்ப்போம். குடும்ப வாழ்வில் சிக்கல்கள் தொடரும், கல்வி கெடும், நாணயம் தவறும், குடும்பத்தை விட்டு விலக்கி வைக்கும், சேமிப்பு இருக்காது, தயார் சுகம் கெடும், தொழிலாளர் ஒத்துழைப்பு இருக்காது, திருமணம் தடைபடும், புத்திர பாக்கியம் கெடும், பெண்களின் ஜதகமாயின்  கற்பிக்கு சோதனை வரும்.
             
                                  இத்தகைய பலன் உள்ளவர்கள் உடனே சர்ப்ப தோஷ பரிகாரம் செய்தல் கெடு பலன்கள் நீங்கி வாழ்வு சுகம் பெரும்.

கருடனை வணங்குவதால் உண்டாகும் பலன்கள்


         


                               கருடனுக்கு ( பருந்து ) கருடாழ்வார் என்று சிறப்பு தருகிறது புராணங்கள்.    கருடன் மகா விஷ்ணுவின் வாகனமும் ஆகும். இந்த கருட பகவானை குறிப்பிட்ட நாட்களில் பார்த்தல் குறிப்பிட்ட பலன்களை பெறலாம். அவையாவன.
                                                     ஞாயிறு   -  நோய் நீங்கும்
                                                      திங்கள்    -  குடும்பம் செழிக்கும்
                                                      செவ்வாய் - உடல் பலம் கூடும்
                                                       புதன்           - எதிரிகளின் தொல்லை நீங்கும்
                                                       வியாழன்   -  நீண்ட ஆயுள் பெறலாம்
                                                       வெள்ளி  - லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்
                                                       சனி       - மோட்சம் கிடைக்கும்
        ஆகையால் கோவிலுக்கு செல்வோர்களும், வீட்டில் இருப்போர்களும்  தினமும் கருடனை பார்த்தல் வணங்கி துதிக்கவும், நன்மை பெறலாம்.




கிரகணம் ஜோதிட பார்வை



                                                      கிரகணம் என்றாலே மக்களின் அச்சம் இன்னும் தீரவில்லை. இதனை பற்றி பல நேயர்கள் என்னை எழுதும்படி கேட்டார்கள். சூரிய கிரகணம் தோன்றினால் மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா உயிர்னங்கள் மீதும் உடல் ரீதியான மாற்றங்கள் உண்டாகின்றன. அதே போல் சந்திர கிரகணத்தின் போது உயிரினங்களின் மனநிலை பதிக்கப்படுகிறது. கிரகண காலம் நமக்கு மட்டுமின்றி தேவர்களுக்கும், நம் முன்னோர்களான பிதுருக்களுக்கும் மிக முக்கியமான புன்னியகலமாகும்.

         
            இந்த கிரகண நேரத்தில் மனிதன் செய்யக் கூடாதவை என சாஸ்த்திரம் சொல்பவை. உணவு சாப்பிட கூடாது, உடலுறவு வைத்துக் கொள்ள இந்த நேரத்தில் மனிதனின் இந்திரியங்கள் பாதிக்கும். அகவே இதனை தவிர்ப்பது நல்லது. சூரிய கிரகணத்தை நேருக்கு நேர் கண்களால் பார்க்க கூடாது. கர்பிணி பெண்கள் கிரகணம் படும்படி வீட்டை விட்டு வெளிவர கூடாது. அப்படி வந்தால் பிறக்கும் குழந்தையின் உடலில் ஊனங்கள் உண்டாகும்.
        
                   இந்த கிரகண காலத்தில் செய்ய வேண்டியவை என்னவென்றால், சூரிய கிரகணம் பிடிக்கும் நேரமும், சந்திர கிரகணம் விடும் நேரமும் புனித நீராடி இறந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இதன் பலன் உடனே நம் பித்ருக்களை சென்றடைந்து, நம் பித்ரு தோஷங்கள் நீங்கும். கிரகணம் விலகும் நேரம் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யலாம்.
          

பிரம்மஹத்தி தோஷம் விளைவும் பரிகாரமும்





                                       பிரம்மஹத்தி தோஷம் என்பது ஆசிரியர்களுக்கு உத்தம குருவுக்கு பிராமணர்களுக்கு எந்த வழியிலேனும் துரோகம் செய்வதாலும், பலரின் சொத்துக்களை நேர்மையற்ற வழியில் அபகரித்ததாலும், கன்னி பெண்ணை ஏமாற்றி கற்பை சூரையாடிவிட்டு பின் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாலும், தன்னுடைய பதவி அதிகாரத்தை பயன்படுத்தி பிறரை இம்சித்ததாலும், நல்ல பாம்பை வெள்ளிக்கிழமை தினம் அடித்து கொன்ற பாவத்தினாலும் ஏற்படுகிறது, இந்த தோஷம் சென்ற பிறவியில் உண்டானதா, இந்த பிறவியில் உண்டானதா என்பதை உங்கள் பிறப்பு ஜாதகம் மூலம் கண்டறியலாம்.
       ஜோதிட சாஸ்த்திரத்தின் படி குருவை சனியை எந்த  விதத்தில் தொடர்பு கொண்டாலும் பிரம்மஹத்தி தோஷம் உண்டு, குரு சனி சேர்க்கை, பார்வை, குரு சனி சாரம் பெறுதல், சனி குரு சாரம் பெறுவது, குரு சனி பரிவர்த்தனை பெறுவது முதலிய அம்சங்கள் பிரம்மஹத்தி தோஷத்திற்கான  கிரக நிலைகள் ஆகும்.


         இந்த பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவுகளாவன :-
                                                                                                                       தீராத நோய்கள் உடலில் ஏற்பட்டு வாட்டும், மணவாழ்கையில், புத்திர பாக்யம் உண்டாவதில், மாங்கல்ய பாக்யத்தில் பாதிப்புகள் உண்டாகும்.  தொழில் பாதிப்பு, தீராத கடன்கள் ஏற்பட்டு வாட்டும். செய்யாத தவறுகளுக்கு தண்டனை அடைவது, மன நிம்மதியின்மை, புத்தி சுவாதீனம் இல்லாமல் போவது என இதன் பாதிப்புகள் தோன்றி வாழ்வை சீர்குலைக்கும்.
       

          பரிகாரம் :
                             தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் கோவில் சென்று தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்யவும் . கோவை மாவட்டம் பாலமலை சென்று குளத்தில் நீட்டி செங்கோதை, பூங்கோதை அம்மன்    சமேத அரங்கநாதரையும் வணங்க தோஷம்  நீங்கும். இராமேஷ்வரம்  சென்றும் பரிகாரம் செய்து  கொள்ளலாம்.                              

பிரேத சாபம் ஜோதிட பார்வை




                                      ஒரு ஜாதகத்தில் பிரேத சாபத்தினை மாந்தியை கொண்டு  தெரிந்துகொள்ளலாம். மாந்தியின் பார்வை பெற்ற கிரகங்களும், மாந்தியுடன் சேர்ந்த கிரகங்களும் பிரேத சாபத்தினை பெறும். பிரேத சாப்பத்தை பற்றி முன்பே எழுதியுள்ளேன். எனவே அதை ஜாதகத்தில் தெரிந்துகொள்வது எப்படி என பார்ப்போம்.
          உங்களின் ஜாதகத்தில் நான்காம் பாவத்தில் மாந்தியும் பாதகாதிபதியும் சேர்ந்திருந்தாலோ, நான்காம் அதிபதி வேறு எந்த பாவத்திலாவது மாந்தியுடன், பாதகாதிபதியுடன் சேர்ந்தாலோ உங்களுக்கு பிரேத சாபம் உண்டு. அந்த பிரேதம் எவ்வகையில் இறந்து சாபத்தை உண்டாக்கியது என்பதையும் ஜாதகத்தில் அறியலாம்.
        மாந்தியுடன் செவ்வாய் சேர்ந்து தோஷம் ஏற்பட்டால் அந்த மரணம் நெருப்பு, ஆயுதம் அல்லது விபத்தால் இறந்தது., மாந்தி சனியுடன் சேர்ந்து தோஷம் ஏற்பட்டால் தூக்கில் அல்லது நோயில் இறந்தது. மாந்தியும் இராகுவும் சேர்ந்து தோஷத்தை தருமானால் பிரேதம் விஷத்தால் இறந்தது.

       இவ்வகை பிரேத சாபம் நீங்க நீங்கள் வசிக்கும் வீட்டில் மகா ம்ருத்யுஞ்ச  யாகம் செய்து யாக கும்ப நீரை குடும்பத்தினர் அனைவரும் தலையில் தெளித்துக்கொள்ள பிரேத சாபம் நீங்கும். 

சனி, 10 மே, 2014

அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்

                 


                           சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம், வித்வேஷனம், மாரணம் ஆகிய எட்டு விதமான காரியங்களை செய்யும் போது, அந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை உருவேற்றும் போது நாம் எந்த கிழமைகளில் அந்த காரியங்களை செய்ய ஆரம்பித்தால்  உடனே பலிதமாகும் என்று சித்தர்கள் வரையறுத்து சொல்லி வைத்தனர். இன்று பலர் இதனை கவனத்தில் கொள்ளாமல் மனம் போனபடி ஏதாவது ஒரு கிழமையில் மந்திரங்களை சொல்லிவிட்டு பின்பு காரியங்கள் நடக்கவில்லையே என்று வருதப்படுகின்றனர். பின் சித்தர்கள் சொன்ன அஷ்ட கர்மங்கள் எல்லாம் இந்த காலத்துக்கு உதவாது என்றும் பொய் என்றும் வீணாக புலம்பி வருகின்றனர். நாம் போகவேண்டிய ஊருக்கு எதிர் திசையில் போனால் நாம் செல்ல வேண்டிய ஊரை அடைய முடியாது, அதுபோல் சித்தர்கள் சொன்ன கலைகளை முறையுடன் செய்தால் மட்டுமே அதனால் பலன் அடைய முடியும். சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களுக்கான கிழமைகள்  பலரும் அறியும் விதமாக இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.




அஷ்ட கர்ம பெயர்                கிழமைகள் 




1. வசியம்                            -      ஞாயறு 



2. தம்பனம்                         -       புதன் 



3. மோகனம்                       -       திங்கள் 



4.  உச்சாடனம்                   -       வியாழன்  



5. பேதனம்                           -       செவ்வாய்  



6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  



7. வித்வேஷனம்               -       செவ்வாய் 



8. மாரணம்                           -       சனி  



          மேலே சொல்லிய கிழமைகளில்  அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய ஆரம்பித்தால் அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம் என்று சித்தர்கள் சொல்லி சென்றனர்.

தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க