எந்திரம் என்பது இயக்குதல்-கருவி, பொறி என பொருள்படும். அதாவது வரைகளும் (கோடுகளும்), பீஜம் (எழுத்துக்கள்) முதலியவற்றை முறைப்படி வரையப்பட்டு வழிபடப்படும் சக்கரம் எந்திரம் எனப்படும். இறைவனது அருட்சக்தி பதிந்து விளங்கி நின்ற ஜாதகர் விழைந்த பொருளையும், வினையையும் இயக்குவதற்கு நிலைகலன் ஆக விளங்குவதால் எந்திரம் என்று பெயர்பெற்றது. மந்திரம் உயிர் போன்றது, எந்திரம் பிராணனை போன்றது, பிம்பம் உடலினை போன்றது. இத்தகைய எந்திரங்கள் பொதுவாக 1.மூல எந்திரம், 2.பூஜா எந்திரம், 3.தாபன எந்திரம், 4.தாரண எந்திரம், 5.ரட்சா எந்திரம், 6.பிரயோக எந்திரம், 7.பிரயோகார்த்த பூசன எந்திரம், 8.சித்திப் பிரத எந்திரம், 9.முத்தொழில் சக்கரம், 10. ஐந்தொழில் சக்கரம், 11.ஐம்பூத சக்கரம், 12.ஏரொளி சக்கரம், 13. சட்கர்ம சக்கரம், 14.அஷ்டகர்ம சக்கரம், 15.அறாதாரா சக்கரம், 16.சிவ சக்கரம், 17.சிவகோணம், 18.சக்தி சக்கரம், 19.சக்திகோணம், 20.கால சக்கரம், 21.ராசி சக்கரம், 22.சர்வதோபத்ர சக்கரம், 23.கசபுட சக்கரம், 24.முக்கோண சக்கரம், 25.சதுரசிர சக்கரம், 26.ஐங்கோண சக்கரம், 27.அறுகோண சக்கரம், 28.எண்கோண சக்கரம், 29.நவகோண சக்கரம், 30.விந்துவட்ட சக்கரம், 31.ரவி சக்கரம், 32.பிறைமதி சக்கரம், 33.நாற்பத்து முக்கோண சக்கரம், 34.சம்மேளன சக்கரம், 35.திருவம்பல சிதம்பர சக்கரம், 36.பதினாறு பத சக்கரம், 37.இருபத்தைந்து பத சக்கரம், 38.முப்பத்தாறு பத சக்கரம், 39.என்பதொரு பத சக்கரம், 40.அறுபத்தி நான்கு பத சக்கரம், முதலான பல சக்கரங்களும் அதுமட்டும் அன்றி ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே சிறப்பான சக்கரங்கள் பல உள்ளன.அவை 41.வாலை சக்கரம், 42.புவனை சக்கரம், 43.திரிபுரை சக்கரம், 44.புவனாபதி சக்கரம்,45.சாம்பவி மண்டல சக்கரம், 46.வயிரவ சக்கரம், 47.நவாக்கரி சக்கரம், 48.நவகிரக சக்கரம், 49.சுதர்சன சக்கரம், 50.விஷ்ணு சக்கரம், 51.நரசிம்ம சக்கரம், 52.சரப சாளுவ சக்கரம், 53.விநாயக சக்கரம், 54.வீரபத்திர சக்கரம், 55.சண்முக சக்கரம், 56.மிருத்யுஞ்சய சக்கரம், 57.நீலகண்ட சக்கரம், 58.சண்டி சக்கரம் 59. துர்க்கை சக்கரம் 60.இராமர் சக்கரம் 61.சீதா சக்கரம் 62.லக்ஷ்மி சக்கரம், 63.அனுமார் சக்கரம், 64.ஸ்ரீ சக்கரம் முதலிய பல சக்கரங்களும் உள்ளன.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கினையும் நன்கறிந்து மக்கள் நலம்பெற சுவடிகளாக்கி உலக மக்கள் நலம்பெற வழிவகை செய்தவர்கள் சித்தர்கள். அத்தகைய சித்தர்களின் வழியினை மக்களுக்கு பறைசாற்றுவதே இந்த தளம்.
திங்கள், 17 மார்ச், 2014
வெள்ளி, 7 மார்ச், 2014
செய்வினையும் அதன் ஏழு வகைகளும்
பொதுவாக செய்வினைகள் ஏழு வகைகளில் செய்யப்படுகின்றன. அவை 1, பந்தனம், 2. ஸ்தம்பனம், 3. மோகனம், 4. ஆகர்ஷனம், 5. உச்சாடனம், 6. உன்மத்தனம், 7. மாரணம் என்ற ஏழு முறைகளில் செய்யப்படுகின்றன இனி இந்த முறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.
1. பந்தனம் :
பந்தனம் என்பது ஒருவர் செய்யும் செய்வினை செய்பவரை பாதிக்காமல் தன்னை சுற்றி கட்டு போட்டு கொள்வது.
2. ஸ்தம்பனம் :
ஒருவர் செய்யும் நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் எதுவாயினும் அதை நடைபெற விடாமல் தடுப்பதாகும். ஸ்தம்பனம் - இயக்கத்தை நடைபெற விடாமல் நிறுத்துதல், ஸ்தம்பிக்க செய்தல்.
3. மோகனம் :
ஒருவர் தன்னை பற்றியே நினைத்து உடலும் உள்ளமும் உருகும்படி செய்துவிடுதல். மோகனம் மூலமாக செய்வினையால் பாதிக்கப்பட்டவர் உறங்கும்போது கெட்ட கனவுகள் கண்டு உறக்கத்திலேயே விந்து கழியும், நாளடைவில் உடல் நலம் கெட்டு அவதிப்படுவார்.
4. ஆகர்ஷனம் :
ஒருவரை வசிகரித்து யாருக்காக வசீகரப்படுத்தப் படுகிறாரோ அவருக்காக எதையும் செய்ய தயாராக மாறுதல். இதை வசியம் என்றும் சொல்லுவார்கள்.
5. உச்சாடனம் :
ஒருவரை மற்றொருவர் மேல் பைத்தியம் பிடித்தது போல் ஆக்கி விடுவது, ஒருவரின் முன்னேற்றத்தை தடுப்பது, வீட்டில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல் சண்டையிடும்படி செய்தல், பண விரயங்களை உண்டாக செய்தல், இன்னும் பல கஷ்டங்களை உண்டாக்க முடியும்.
6. உன்மத்தனம் :
ஒருவரை பைத்தியமாக்கி விடுதல், கணவன் - மனைவி இடையே சந்தேகத்தை உண்டாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி பிரித்து விடுதல்.
7. மாரணம் :
ஒருவரை வியாதியால் உழல வைத்து நடமாட முடியாதபடி செய்து மரணமடைய செய்தல், கற்பத்தில் உள்ள கருவை அழித்தல், வீட்டில் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களை ஏற்படுத்துதல்.
ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டால் அதனால் அவருக்கு 12 வருட காலம் பாதிப்புகள் ஏற்படும், ஆனால் செய்தவருக்கோ அதனால் 98 வருடங்கள் பாதிப்புகள் ஏற்படும். அவரும் அவருடைய சந்ததியினரும் செழித்து வாழ முடியாது குல நாசமடையும். ஆகையால் தீய காரியங்களை செய்யாமல் இருப்பதே நாமும் நம் வம்சமும் செழித்து நீடூடி வாழ வகை செய்யும்.
புதன், 5 மார்ச், 2014
மந்திர வகைகள்
மந்திரம் என்ற சொல் நினைபவனை காப்பது என்ற பொருள் தரும். மந் - என்றால் நினைதல், அறிதல் என்றும், திரம் - காத்தல் என்றும் பொருள்படும். எனவே மந்திரம் என்பது நினைப்பவனை காப்பது என்று பொருள்படும். இத்தகைய மந்திரமானது பொதுவாக 1. மூல மந்திரம், 2. பீச மந்திரம், 3. பஞ்ச மந்திரம், 4. சடங்க மந்திரம், 5. சங்கிதா மந்திரம், 6. பத மந்திரம், 7. மாலா மந்திரம், 8. சம்மேளன மந்திரம், 9. காயத்திரி மந்திரம், 10. அசபா மந்திரம், 11. பிரணாப்பிரதிட்டா மந்திரம், 12. மாதிருகா மந்திரம், 13. மோன மந்திரம், 14. சாத்திய மந்திரம், 15. நாம மந்திரம், 16. பிரயோக மந்திரம், 17. அத்திர மந்திரம், 18. விஞ்சை மந்திரம், 19. பசிநீக்கு மந்திரம், 20. விண்ணியக்க மந்திரம், 21. வேற்றுரு மந்திரம், 22. துயில் மந்திரம், 23. திரஸ்கரிணீ மந்திரம், 24. சட்கர்ம மந்திரம், 25. அஷ்ட கர்ம மந்திரம், 26. பஞ்சகிருத்திய மந்திரம், 27. அகமருடண மந்திரம், 28. எகாஷர மந்திரம், 29. திரயஷரி மந்திரம், 30. பட்சாஷார மந்திரம், 31. சடஷர மந்திரம், 32. அஷ்டாஷர மந்திரம், 33. நவாக்கரி மந்திரம், 34. தசாஷர மந்திரம், 35. துவாதசநாம மந்திரம், 36. பஞ்சதசாக்கரி மந்திரம், 37. சோடஷாஷரி மந்திரம், 38. தடை மந்திரம், 39. விடை மந்திரம், 40. பிரசாத மந்திரம், 41. உருத்திர மந்திரம், 42. சூக்த மந்திரம், 43. ஆயுள் மந்திரம், 44. இருதய மந்திரம், 45. கவச மந்திரம், 46. நியாச மந்திரம், 47. துதி மந்திரம், 48. உபதேச மந்திரம், 49. தாரக மந்திரம், 50. ஜெபசமர்பண மந்திரம், 51. ஜெப மந்திரம் என பலவகைப்படும்.
இவையன்றி 52. நீலகண்ட மந்திரம் , 53. மிருத்யுஞ்சய மந்திரம் , 54. தஷிணாமூர்த்தி மந்திரம் , 55. சரப மந்திரம் , 56. வீரபத்ர மந்திரம் , 57. பைரவ மந்திரம் , 58. விநாயக மந்திரம் , 59. சண்முக மந்திரம் , 60. நரசிங்க மந்திரம் , 61. நவகிரக மந்திரம் , 62. வாலை மந்திரம் , 63. புவனை மந்திரம் , 64. திரிபுரை மந்திரம் , 65. துர்க்கை மந்திரம், 66. அசுவாரூடி மந்திரம், 67. சப்தமாதர் மந்திரம், 68. முப்பத்துமுக்கோடி தேவர்கள் மந்திரம், 69. பதினெண் கண மந்திரம், 70. யோகினியர் மந்திரம், 71. காலக் கடவுளர் முதலாக உள்ள எல்லாக் கடவுளருக்கும் தனித் தனியே சிறப்பாய் உள்ள மந்திரங்களும், சல்லிய தந்திராதி சித்த மந்திரங்களும், திராவிடாதி லௌகீக தேசத்தில் ( நமது பாரத தேசத்தில் ) உள்ள பாஷைகளில் ( மொழிகளில் ) உள்ள மந்திரங்கள் என்று எண்ணிறைந்த கணக்கில் அடங்காத மந்திரங்கள் உள்ளன.
இவ்வாறு பல திறன் உள்ளதாகவும், எண்ணிரைந்ததாகவும் உள்ள மந்திரங்கள் அனைத்தும் ஏழுகோடி மந்திரங்களில் அடங்கும். இதனை வடநூலார் சப்த கோடி மகா மந்திரம் என்பர். ஏழு கோடி மந்திரம் - ஏழு வகையான முடிபினை உடைய மந்திரம் என்பது பொருள். அவையாவன 1. நம, 2. சுவதா, 3. சுவாகா, 4. வௌஷடு, 5. வஷடு, 6. உம், 7. படு என்பனவாம். இதற்க்கு இவ்வாறு இல்லாமல் ஏழுகோடியாகிய எண்களை கொண்ட மந்திரங்கள் என்றும் அவை இது இதுவென்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கல்பம் என்னும் வட நூலில் பொருள் கூறப்பட்டிருக்கிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க
-
சித்தர்கள் அருளிய அஷ்ட கர்ம செயல்களான வசியம், தம்பனம், மோகனம், உச்சாடனம், பேதனம், ஆகர்ஷணம...