சனி, 28 டிசம்பர், 2013

வசியம்


                                                                    வசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் உண்மையில் வசியம் என்ற பெயரில் ஏற்படுத்தப்படும் அனைத்து பாதிப்புகளுமே மூலிகைகளை பயன்படுத்தி ஆழ்மன சக்தியைக் கொண்டு ஏற்படுத்தப்படும் மன உடல் பாதிப்புகளே என்பதற்கு மிக வலுவான சான்றுகள் உள்ளன.


                                                   ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒருவரின் மனதை தன் உத்திரவுக்கு கட்டுபடுத்தி செயல்படுத்தும் ஹிப்னாடிஸத்தை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆழ்மன சக்தியை ஒருங்கினைத்து மன மொழி உத்தரவுகளை செலுத்தி தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று ரெய்கி மருத்துவம் நிரூபித்திருக்கிறது. ஆழ்மன சக்த்தியை ஒருங்கினைத்து தூரத்தில் இருக்கும் ஒருவருக்கு செய்திகளை அனுப்பும் டெலிபதி முறையை நவீன அறிவியல் ஏற்றுக்கொண்டிருக்கிறது. 


                                                            விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. எங்கோ இருக்கும் ஒருவரை ரெய்கி மூலமாக குணப்படுத்தமுடியும் என்றால், எங்கோ இருக்கும் ஒருவரிடம் டெலிபதி மூலம் பேச முடியும் என்றால் எங்கோ இருக்கும் ஒருவருக்கு வித்வ பிரயோகம் மூலம் ஏன் பாதிப்புகளை ஏற்படுத்தமுடியாது என்பது வித்வ பிரயோக வல்லுனர்களின் கேள்வி எது எப்படியிருந்தாலும் ஆன்மீக வழியான வித்வ பிரயோகத்திலும் மூலிகைகளின் சக்தியே அடிப்படையாகவும் முக்கியமானதாகவும் பயன் படுத்தப்படுகிறது. 



                                                          காதல் வெற்றிக்கு..... காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர் தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது. வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி வாய்ந்தது போலவும் யாரை வேண்டுமென்றாலும் வசியம் செய்து விடலாம் என்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது. உண்மையில் வசியம் செய்வதற்க்கு சில விதி முறைகளை ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம் சொல்கிறது அதன்படி...... 


* திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது, 

*வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது, 

*உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது, 

*தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது, 

* அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது, 

* அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது, 

* சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது, 

*வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது, 



                                           இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும். அதே போல பெண்களும், 




* திருமணமான ஆண்களை வசியம் செய்ய கூடாது, 

* குரு ஸ்தானத்தில் இருப்பவரை வசியம் செய்ய கூடாது, 

*விரதம் மேற்கொண்டிருப்பவரை வசியம் செய்ய கூடாது, 


                                                                          இன்னும் சில நிபந்தனைகள் வருணம், ஜாதி போன்றவை குறித்து சொல்லப்பட்டிருக்கின்றன) காதலில் வெற்றி பெற யட்சினி உபாசனைகளில் பூஜை முறைகளே அதிகம் சொல்லப்பட்டிருக்கின்றன. மனதில் எண்ணியவரையே கணவராக அடைய அமாவாசை கழித்து வரும் மூன்றாம் பிறையன்று துவங்கி மதன மேகலா லக்ன பீடம் வைத்து செவ்வாய் வெள்ளிகிழமைகளில் மந்திர உச்சாடனம் செய்துவர எண்ணிய திருமணம் பலிதமாகும். 



                                                                        மதன மேகலா என்பது விஸ்ரூப யட்சிணி அதாவது நீர், காற்று, மண் தீ போன்ற இயற்கை சக்தியில் அட்சராம்சம் கொண்டது. மதன மேகலா லக்ன பீடம் ஐந்து அங்குல நீளம் நான்கு அங்குல அகலம் கொண்டது இதன் உள்ளே ரதிமன்மத வசிய சக்ரமும், விவாக பந்தினி சக்ரமும் பதிக்கப்பட்டிருக்கும். (சில இடங்களில் குறிப்பிட்ட ஆடவனின் ஜாதகமும் பந்தனம் செய்யப்படுவதுண்டு) பொதுவாக இந்த உபாசனையை நீரில் நின்றுக்கொண்டு செய்ய வேண்டும் ஆனால் குளியலறையில் குளித்து முடித்தப்பின் ஈர உடலோடு ஆடைஏதும் அணியாமல் கிழக்கு நோக்கி நின்று வலது உள்ளங்கையில் பீடத்தை வைத்து இடது கையால் தாங்கி, "ஓம் ஈம் க்லீம் நமோ பகவதி ரதி வித்மயே மஹா மோஹினீ காமேசி மம பந்தம் சித்த பதீம் ஸ்வயம் பூர்வம் பந்தம் வசி குரு குரு ஸ்வாஹா" என்ற மந்திரத்தை ஒன்பது முறைகள் சொல்லி உடலில் இருந்து நீரை எடுத்து மூன்று முறை பீடத்தை சுற்றி குறிப்பிட்ட ஆடவனை நினைத்து காற்றில் தெளிக்க வேண்டும். இந்த முறை பல இடங்களில் பரிபூரண வெற்றியை கொடுத்திருக்கிறது. இதை தவிர்த்து காதலில் வெற்றி பெற, வசிய பொடி அல்லது சொக்கு பொடியை பயன்படுத்துவதாக மலையாள மாந்த்ரீகத்திலும், சித்தர் வழி முறைகளிலும் சொல்லப்படுகின்றன. குறிப்பாக சிதம்பர அஷ்ட கர்மத்தில் கருவூர் சித்தர் பல முறைகளை சொல்லுகின்றார். 



                                                        மலையாள மாந்த்ரீகத்தில் இந்திர கோபம்.மதனகாமபூ, வெண்குன்றி மணி,சுழல் வண்டு, ஈப்புலி, நீர் மேல் நெருப்பு போன்றவற்றை அஷ்ட்டாங்க திராவகம் எனப்படும் குறிப்பிட்ட சில எண்ணைகளை சேர்த்து தயாரிக்கப்படும் களிம்பை மூங்கில் குறுத்தில் காப்பிட்டு வீனாயட்சினி மூலமந்திரத்தை ஒன்பது வேளை 1008 உரு ஏற்றி பெண்ணின் உடல் திரவத்தோடு கலந்து உட்கொள்ள கொடுக்க ஆண்களை வசப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது. 

          மரமஞ்சள்.கஸ்தூரி,தாழம்பூத்தாள்,கல்மதம்,பாதிரி,வென்கற்கை ஆகியவற்றுடன் குறிப்பிட்ட சில பூஞ்சைகளை குழிதைலத்தில் சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக்கி வெங்கார பற்பத்தில் புடம்போட்டு வாகை பலகையில் வைத்து மதன கன்னிகா மூல மந்திரத்தால் உரு ஏற்றி உணவில் கலந்து கொடுத்தாலும், பாற்குரண்டி வேரில் கணமாக பூசி காயவைத்து குறிப்பிட்ட ஆணின் உடமைகளில் வைத்தாலும் உச்சிஸ்ட்ட மதன கன்னிகா அந்த ஆணின் உறக்கத்தில் போய் குறிப்பிட்ட பெண்ணோடு சேர உத்தரவு கொடுக்கும் என்று யட்சிணி வசிய நிகண்டு என்ற நூல் குறிப்பிடுகிறது. எத்தகைய வசிய முறையை பின் பற்றினாலும் முதலில் வசியம் படுத்தும் நபரின் லக்ன பலன், தாரா பலன், பஞ்சக பலன் தெரிந்து அதற்கு தக்கவாறு வசிய முறைகளை பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். 

                                                   குடும்ப பிரச்சனைகள் தீர.. ..... ..... கணவன் மனைவி இடையே ஏற்படும் மன வேறுபாடுகள், விருப்பமின்மை, தாம்பத்தியத்தில் ஈடுபாடுஇன்மை, வெறுப்பு ஆகியவற்றை எதிர்மறை சக்த்திகளால் ஏற்படுத்தமுடியுமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது. விஷ தன்மை வாய்ந்த மூலிகைகளை பயன்படுத்தி மன பாதிப்புகளையும் உடல் பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. வித்வ பிரயோகம் எனப்படும் பூதபிரேத பைசாச பிரயோகங்கள், துர் தேவதைகள், யட்சிணிகள் மற்றும் பிரம்ம ராட்சசர்களைக் கொண்டு செயல் படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் மனோசக்தி யைக்கொண்டு எதிர்மறை பதிவுகளை ஆழ்மனத்தில் ஏற்படுத்துவதன் மூலமாகவே செயல் படுத்தப்படுகின்றன. 


                                          பொதுவாக கணவன் மனைவிக்குள் பிரச்சனைகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்த வேண்டும் என்று முற்சி செய்பவர்கள் மூன்று வழிகளை பயன் படுத்துவதுண்டு. சமாதானமாக இருக்கும் கணவன் அல்லது மனைவியை குறிவைத்து அவர்களின் மனத்தை மாற்றி கணவன் அல்லது மனைவியை பற்றிய சிந்தனைகளை மறக்கசெய்வது அல்லது எதிற்மறை சிந்தனைகளை அதிகப்படுத்துவது வித்வேசனம் எனப்படும். 


                                                  ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவிக்கிடையே எதிற்மறையான எண்னங்களை ஏற்படுத்தி தேவையற்ற சந்தேகங்கள், பயங்கள், மற்றும் குழப்பங்கள் அதிகரிக்க செய்வது இதன் அடிப்படையாகும். கணவன் அல்லது மனைவியின் உடல் அணுக்களில் நச்சுத்தண்மையை ஏற்படுத்தி அவர்களுக்குள் தம்பத்திய உறவும் நெருக்கமும் ஏற்படாமல் செய்வது அஸ்ரஸ்வதம் எனப்படும். இதனால் கணவன் மனைவிக்குள் தாம்பத்திய உறவு ஏற்பட்டால் கணவனுக்கோ மனைவிக்கோ உடல் பாதிப்புகள்,சிரமங்கள் மற்றும் சங்கடங்கள் ஏற்பட்டு ஒருவரை விட்டு ஒருவர் விலகும் நிலை ஏற்படும். இந்த முறையை பயன்படுத்தும் போது கணவன் மனைவி அல்லது காதலர்களிடையே உடல் நெருக்கம் ஏற்பட்டாலோ, உடல் ஸ்பரிசம் ஏற்பட்டாலோ, கந்த ஸ்பரிசம் ஏற்பட்டாலோ அவர்களுக்கிடையே எதிற்மறை எண்னங்கள் ஏற்பட்டு வெறுப்பும் பகையும் ஏற்படும். இதனால் உடல் நெருக்கத்தை தவிர்த்து ஒருவரை ஒருவர் விட்டு விலகி செல்லும் நிலை ஏற்படும். அடுத்ததாக கணவன் அல்லது மனைவிக்கிடையில் மன சஞ்சலங்களை ஏற்படுத்தி மூன்றாம் நபரை பிரவேசிக்க செய்வது இது அந்தராசனம் அல்லது அந்தரபிரவேசம் எனப்படும். 


                                                  ஒழுக்கமான பெண் அல்லது ஆணுக்கு வேற்று ஆண் அல்லது பெண்ணோடு தொடர்புகள் அல்லது உறவுகள் ஏற்பட்டு அதனால் குடும்பத்தில் விரிசலும் பிரிவும் ஏற்பட செய்வது. பொதுவாக எல்லாவித வசிய முறைகளிலும் திலகம்,அஞ்சனம், மசிகந்தம், ஔஷதம், குளிகை என்ற ஐந்து வித மூலிகை பொருட்கள்அதிகம் பயன் படுத்தப்படுகின்றன.இதில் திலகம் என்பது நெற்றி அல்லது வகிட்டில் வைக்கப்படும் பொட்டையும், அஞ்சனம் என்பது கண்கள் அல்லது புருவத்தில் பூசப்படும் மையையும், மசிகந்தம் என்பது உடலில் பூசும் வசியபொடியையும், ஔஷதம் என்பது உட்கொள்ளும் மருந்தையும், குளிகை என்பது மருந்து உருண்டைகளையும் குறிக்கும். பாதிப்புகளை ஏற்படுத்தவும் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்கவும் என இரண்டு வழிகளுக்கும் இந்த ஐந்து பொருட்க்களும் பயன் படுத்தப்படுகின்றன. 


                                             ஆண்களை வசியம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் மசிகந்தம் அல்லது ஔஷதம் என்ற இரண்டு வழிகளையே பின்பற்றுகின்றனர். சந்தர்ப்ப வசத்தால் நெருக்கமாக பழகும் சூழ்நிலை ஏற்பட்டாலோ உடல் உறவு கொள்ளும் நிலை ஏற்பட்டாலோ மசிகந்தம் முறையில் வசிய மருந்தை உடலில் பூசிக்கொண்டு அந்த ஆனோடு நெருங்கி பழகுகின்றனர். உடலில் பூசப்படும் மூலிகை கலவையின் சக்தி பெண்ணின் ஜீவகாந்த அணுக்கள் மற்றும் மூலிகை கலவையோடு சேர்ந்து ஆணின் வியர்வை துவாரங்கள் வழியாகவும் , உடல் திரவங்கள் வழியாகவும் உடாலுக்குள் ஊடுருவியும், வாசானை நாசி வழியே சுவாசத்தில் கலந்தும் விஷுவல் எனப்படும் காட்சி வடிவிலும்,ஆடிட்டரி எனப்படும் ஒலி வடிவிலும்,கினஸ்தடிக் எனப்படும் உணர்வு வடிவிலும் ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் ஆழ்மனதில் பதிந்த பெண்ணின் தோற்றம், நறுமணம்,செயல் போன்றவை மீண்டும் மீண்டும் அந்த ஆணின் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. 


                                                               இவ்வாறு வசியம் செய்யப்பட்ட ஆண் தனது சுய கட்டுப்பாட்டை இழந்து வசியம் செய்தவர்களின் சிந்தனையிலேயே இருப்பான். அவர்களை தவிர மற்ற அனைத்தும் ஒரு பொருட்டாகவே தெரியாது. வசியத்தை செயல் படுத்தியவர்களை நேரில் பார்த்தாலோ, அவர்களின் குரலை கேட்டாலோ ஒரு வித பயம் அல்லது பதட்டம் ஏற்படும். மற்றவர்களின் கருத்தைவிட வசியத்தை செயல் படுத்தியவர்களின் உத்திரவுக்கு முழுமையாக கட்டுபடுவான். 



                                                        ஔஷதம் எனப்படும் வசிய மருந்துகளை உட்கொள்ள செய்தால் முதலில் உட்கொள்ளுபவர்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். உடலில் தளர்ச்சியும் சோர்வும் அதிகமாகும். வயிற்றில் குத்தல் அல்லது வலி விட்டு விட்டு ஏற்படும், முதுகின் கீழ் புறத்திலும் நடு முதுகிலும் தொடர்ந்து வலி ஏற்படும்.உணவு உட்கொள்ளுவது படிப்படியாக குறையும் நாளடைவில் வசியம் வைத்தவரின் முழு கட்டுப்பாட்டில் அவர்களூக்கு மட்டுமே ஆதரவாக மாறிவிடுவார்கள். உட்கொள்ள கொடுக்கப்படும் மருந்துகள் உடல் திரவங்களை பாதித்து மனத்தின் செயல் இயக்கத்தை மாற்றுவதால் சுய கட்டுபாடு இழந்து ஒரு குறிப்பிட்ட நபரை பற்றிய தொடர் சிந்தனைகள் ஏற்படுகின்றன. இத்தகைய வித்வபிரயோகத்தை செயல்படுத்துபவர்கள் மந்திர யந்திர ஔஷத சக்திகளால் மனமொழி உத்தரவுகளை செலுத்துவதுண்டு. இவ்வாறு மந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 90 நாட்களிலும், யந்திர பிரயோகங்களை பயன் படுத்தினால் 60 நாட்களிலும், ஔஷதங்கள் எனப்படும் மருந்துக்களை பயன் படுத்தினால் 30 நாட்களிலும் பாதிப்புகள் ஏற்படும் என்பது பொதுவான கருத்து. மாந்த்ரீக சாஸ்திரத்தில் உபதேவதை வழிபாட்டின் மூலமாகவே இத்தகைய பிரயோகங்கள் செயல் படுத்தப்படுகின்றன. 



                                       உச்சிஸ்டசன்டாளி, உச்சிஸ்டகாளிகா, பந்தினி, மதனமேகலா, வடயட்சிணி. துமாவதி, சங்கதரணி போன்ற யட்சிணி உபாசனைகளை பயன்படுத்தி வசியம், தம்பனம், மோகனம், வித்வேசனம், மாரணம், உச்சாடனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக உச்சிஸ்ட்ட சண்டாளி மூல மந்திரத்தை 1008 உரு நாற்பத்தி எட்டு நாட்க்கள் ஜெபம் செய்து மந்திர ஸித்தியானதும். கர்னீகரம்,புன்னாகமலர்,ஜபபுஷ்பம்,பாதிரி, பாற்குறண்டி இவற்றை முதல் முறையாக காய் விடும் தென்னை மரத்தின் இளனீரில் சேர்த்தரைத்து புடம்போட்டு உணவில் கலந்து கொடுத்தால் சத்ரு வசியம், ஸ்த்ரீவசியம், புருஷ வசியம் ஏற்படும் என்று ருத்ர ஸ்யாமளா என்ற நூலில் சொல்லப்பட்டுள்ளது. நீலி தாரா என்ற யட்சிணி உபாசனையை 1000 இலுப்பை சமித்தில் பசு நெய் கொண்டு ஹோமம் செய்து சந்தனம், கோரோசனை, கஸ்தூரி,புனுகு,கும்குமபூ,வெள்ளாடனை,ஆகியவற்றை அயகாந்த செந்தூரத்துடன் கலந்து மண்சட்டியின் உட்புறத்தில் பூசி ஒன்பது நாட்க்கள் நிழலில் அதன் பின் அரசு சமித்தில் பசு நெய் தடவி தீயிலிட்டு எறித்து அதன் தீயை மன்சட்டியில் காட்டி கரியாக எடுத்து அதோடு எண்ணை கலந்து உலர்த்தி திலகமாக இட்டால் பதி வசியம் ஏற்படும். 


                                                  காமதேவனான மன்மதனின் ஐந்து வித மலர் அம்புகளான தாமரை, மாம்பூ, அசோகம், முல்லை, நீலோற்பவம் ஆகியவற்றை மசித்து அத்துடன் வெங்காரம், மனோசிலை, உத்தரோணிபூ ஆகியவற்றை மணிக்கு ஒன்றாக கலந்து வேப்பெண்னை தவிர்த்து ஏதாவது ஒரு எண்னையில் கலந்து மூன்று நாட்க்கள் ஊறவைத்து உச்சிஸ்ட பைரவி மூலமந்திரத்தை மூன்று வேளை மூன்று நாட்கள் வளர் பிறையில் உரு ஏற்றி உடல் முழுவதும் தேய்த்து மூன்று நாழிகை (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடலில் ஊற விட்டு அதன்பின் ஸ்னானம் செய்தால் மன வேற்றுமையால் பிரிந்த கணவன் மனைவி ஓன்றாக சேர்வார்கள். என்றும்,( மனைவியின் மணம்,ஸ்பரிசம், நெருக்கம் கணவனின் அண்மையில் இருக்க வேண்டும்) மேற்படி கலவையை பனை ஓலையில் தேய்த்து மனைவியின் கூந்தல் ரோமம் மூன்றை பந்தனம் செய்து நன்றாக காய வைத்து விருப்பம் இல்லாத கணவனின் படுக்கையில் வைத்தால் அவனுக்கு மனைவி மீது அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். மேற்சொன்ன ஐந்து பூக்களுடன் கன்று ஈனாத பசுவின் கோமியம் ஒரு பலம், சரம் கொன்றை மிளறு, தேவதாரு வேர், இலந்தை வேர்,வெண்டை வேர், வெம்பலி (வெள்ளை கொள்ளுகாடை வேர்) ஆகியவற்றை கலந்து மண்கலயத்தில் வைத்து காலை நேரத்து சூரிய ஒளியில் சூடாக்கி உடலில் தேய்த்து மூன்று நாழிகை கழித்து ஆணுடன் உறவு கொண்டால் அந்த ஆண் எந்த காலத்திலும் அந்த பெண்ணை விட்டு விலக மாட்டான். என்றும் பைரவி தந்த்ரம் என்ற நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. 


                                                   இத்தகைய மருந்து கலவைகளை பெண்கள் தங்கள் கணவனிடம் பயன் படுத்தினால் அது அவர்களின் குடும்ப வாழ்வில் அதிக நெருக்கத்தையும் இன்பத்தையும் தரும் ஆனால் துரதிருஷ்டவசமாக சில பெண்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது உதவிகரமான அல்லது வசதியான, திருமணமான ஆண்களிடம் பயன் படுத்தும் போது அது அந்த ஆடவனின் குடும்ப வாழ்வில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வாறு தவறாக பயன்படுத்தி ஆண்களின் மனதை மற்றும் முயற்சிகளை தடுக்கவும் நமது பாரம்பர்ய சாஸ்திரங்கள் வழிகளை சொல்லி இருக்கின்றன. பெண்கள் தங்களுக்கு வேறு யாராவது எதிர்மறை பிரயோகங்களை செலுத்திவிடுவார்கள் என்ற பயம் இருந்தாலோ, எதிர்மறை பிரயோகங்களால் தன் கணவனின் உயிருக்கோ ஆரோக்கியத்திற்க்கோ பாதிப்பு ஏற்படும் என்ற பயம் இருந்தாலோ வைஜயந்தி யந்திரம் என்னும் அஸ்வரூட ரக்ஷையை வெள்ளி கிழமையும் பஞ்சமி திதியும் சேர்ந்து வரும் நாளில் மாங்கல்யத்தில் கோர்த்து அணிவது பாதுகாப்பை தரும். அஷ்வரூடா என்பவள் பராசக்தியின் பாஸ பானத்தில் இருந்து தோன்றியவள். கணவன் மனைவி ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் உரிய தெய்வமாக தேவி மஹாத்மியம் சொல்கிறது. 



                                                      ரக்ஷையில் இருக்கும் அஸ்வரூடா யந்திரம் கணவன் மனைவிக்கிடையே ஜென்ம பந்தம் எனப்படும் மன இணைப்பை அதிக படுத்துவதுடன், பகளாமுகி யந்திரம் - கணவன் மனைவி ஒற்றுமையான திருமண பந்தத்திற்கு ஏற்படும் ஆபத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது. ஔஷதம் எனப்படும் மருந்துகள் கொடுக்கப் பட்டிருந்தால் என்ன வகையான மருந்துகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்து அவற்றை செயல் இழக்க செய்யும் எதிருரை மருந்துகளை ஸ்ரீ தேவி கார்த்யாயணி மந்திர பிரயோகத்தால் ஒன்பது வேளைகள் உரு ஏற்றி தேய் பிறை நாட்களில் உட்கொண்டால் செலுத்தப்பட்ட விஷம் உடல் கழிவுகள் வழியாக வெளியேரும். எதிர் மறை சக்திகளால் குடும்பதலைவனின் பொறுப்பின்மை அதிகரித்தாலோ, குடும்பத்தில் குழப்பங்களும் அமைதியின்மையும் நிலவினாலும் கார்த்யாயனி யந்திர பீடத்தை வீட்டில் வைத்து வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் பூஜித்து வந்தால் அனைத்து வித ஸாகினி, டாகினி,மோகினி,பில்லி, சூனியம்,வைப்பு,ஏவல் முதலிய துஷ்ட சக்திகளின் பாதிப்புகளை தடுத்து நீக்கிவிடும். 








வியாழன், 26 டிசம்பர், 2013

நலங்கள் யாவும் நல்கும் நவாவரண பூஜை




                         ஸ்ரீ சக்ர நாயகி, அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாக
விளங்குபவள், வேதங்கள் போற்றும் வேதநாயகி, அனைத்துலைகயும்
ஈன்றவள், அனைத்து உயிரினங்களுக்கும் அன்னையாக விளங்குபவள்,
மஹா மஹா சக்ரவர்த்தினியாக ஈரேழு பதினான்கு லோகங்கைளயும்
அரசாட்சி புரிபவள் - ஸ்ரீ மாதா புவேனஸ்வரி அம்பிகை.
அம்பிகையே  அனைத்திற்கும் காரணியாக எண்ணிப் போற்றி வழிபடும்
சாக்த வழிபாடு எனும் முறைப்படி செய்யப்படும் பூஜைகளில்
முதன்மையானதாகவும், மிக மேன்மையானதாகவும் விளங்குவது ஸ்ரீ
நவாவரண பூஜையாகும்.

ஸ்ரீ மாதா புவேனஸ்வரி அம்பிகை , க்ஷடர சாகரம் எனும் அலகிலாத
எல்லைகளுடைய பாற்கடலின் நடுவே, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ
சக்ரத்தின் நடுவே  கற்பக விருட்சங்கள் நிறைந்ததும், சிந்தாமணி எனும்
கேட்டவுடன் வரமளிக்கக் கூடிய கற்களால் ஆன கருவறையில்,
மந்த்ரிணி, வாராஹி, அச்வாரூடா எனும் தனது சக்தி பரிவாரங்களுடன்
மஹா ராஜ ராஜேஸ்வரியாக, திரிபுர சுந்தரியாக, பஞ்ச ப்ரஹ்ம
ஆசனத்தில் அமர்ந்து அகிலங்கள் அனைத்தையும் பரிபாலனம் செய்து
வருகின்றாள்.

ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ நகரம் அல்லது ஸ்ரீ சக்கரம் அல்லது
ஸ்ரீ யந்திரம் என்பது பொன்னாலும், ரத்தினங்களாலும் இழைக்கப்பட்ட ஒரு
அற்புதமான கோட்டை. அந்தக் கோட்டையினுள் ஒன்பது பிரகாரங்களின்
வாசல்கள் உண்டு. ஒன்பது பிரகாரங்களுக்கும் மத்தியில் அம்பிகை
கொலுவீற்றிருக்கின்றாள்.

ஸ்ரீ யந்திரத்தில் நாற்பத்து மூன்று முக்கோணங்கள் அமைந்துள்ளன.
ஒவ்வொரு முக்கோணத்திலும் ஒவ்வொரு அம்பிகை  ஸ்ரீ மாதா
புவேனஸ்வரி  அம்பிகைக்கு சேவை  புரிவார்கள். அம்பிகையின் குதிரைப்
படையை  அச்வாரூடா, யானைப் படையை  கஜமுகி, மந்திரியாக
மந்த்ரிணீ போன்ற அம்பிகைகள் பரிபாலனம் செய்கின்றார்கள்.
ஸ்ரீ நகரத்தின் நடுவே , கோடி சூர்ய பிரகாசத்துடனும், கோடி சந்திரர்களின்
குளிர்ச்சியுடனும், பக்தர்கைள எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கும்
இமை மூடாத மீனைப் போன்ற கண்களுடனும், மாதுளம்பூவை  ஒத்த
நிறத்துடனும், பொன்னும், வைரமும், ரத்தினங்களும் இழைக்கப்பட்ட
கிரிடத்துடனும், அனைவருக்கும் அபயம் எனும் வகையில் காக்கும்
கரமும், ஆணவம், கன்மம், மாயை  எனும் மும்மலங்களை  அழிக்கும்
வகையில் பாசமும் அங்குசமும் கொண்டு, வேண்டுவோருக்கு
வேண்டுவனவற்றை  அருளும் வகையில் அமைந்து ஸ்ரீ மாதா
புவேனஸ்வரி  அம்பிகை  அருள்பாலிக்கின்றாள்.

ஸ்ரீ நவாவரண பூஜை  ஸ்ரீ சக்ரத்தினுள்ளே  இருக்கும் அனைத்து பரிவார
தெய்வங்களுக்கும் மற்றும் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ மாதா
புவேனஸ்வரி  அம்பிகைக்கும் அனைத்து பூஜை  அம்சங்களும் இணைந்த
வகையில் செய்யப்படுவது ஸ்ரீ நவாவரண பூஜை ஆகும்.
நவ (ஒன்பது) ஆவரணங்களில் (வரிசையில்) உள்ள
தெய்வங்களுக்கான பூஜை, அர்ச்சனை, தர்ப்பணம் போன்ற பூஜைகள்
நடத்தப்படும். ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரிய பூஜை  முடிந்ததும்
ஒரு தீபாராதைன நடத்தப்படும். ஒன்பது தீபாராதைனகளுக்குப் பிறகு
சுவாஸினி பூஜை, கன்யா பூஜை  போன்ற பூஜைகள் நடைபெறும்.
புரஸ்சரணை என்பது உடனடி பலன் தரும் பூஜா முறையாகும். அதில்
பூஜை, அர்ச்சனை, ஹோமம், தர்ப்பணம், பலி, போஜனம் எனும் வரிசை
கிரமமாக அமைந்தது. புரஸ்சரணையை ஒத்தது ஸ்ரீ நவாவரண பூஜை.
இதில் யாகம் என்பது நேரடியாக இல்லாவிட்டாலும், பூஜை
செய்யும் சாதகன் தனனைத்தானே  பூஜை  முறையால் ஹோமாக்னி
போல் இருப்பதே இதன் சிறப்பம்சம்.

பூஜையும், தர்ப்பணமும் ஒரே  நேரத்தில் இணைந்து செய்யப்படும் பூஜை,
நவாவரண பூஜையை  தவிர வேறு எந்த வகையிலான பூஜையிலும்
கிடையாது. பூஜைக்கு மலரும், தர்ப்பணத்திற்கு இஞ்சி
துண்டத்தில் நனைத்த பாலையும் ஒரு சேர அர்ச்சிப்பது (பூஜையாமி
தர்ப்பயாமி நம:) இந்த பூஜையில் மிக மிகச் சிறப்பு வாய்ந்ததாகக்
கருதப்படுகிறது.

இந்த பூஜை  குரு ஸ்துதியில் ஆரம்பித்து குரு வந்தனத்தோடு முடிவதும்
மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

ஸ்ரீ நவாவரண பூஜையில் உள்ள பூஜைகள் :

மண்டப ப்ரவேச பூஜை, பூத சுத்தி, ஸங்கல்பம், குரு ஸ்தோத்ரம், அமரும்
ஆசனத்திற்குரிய பூஜை, பூஜிப்பவர்  தன்னைத்தானே மந்திர
மண்டலத்திற்குள் உட்படுத்திக்கொள்ளும் பூஜை, திக் பந்தனம், ப்ராண
ப்ரதிஷ்டை , ஸ்ரீ நகரத்திற்குரிய பூஜை, ஸகலவிதமான நியாஸ
பூஜைகள், கலச பூஜை, சங்குக்குரிய பூஜை, விசேஷ அர்க்கியம் எனும்
பிரஸாதமாகத் தரக்கூடிய, அஷ்டகந்தம் எனும் வாசனை  திரவியங்கள்
கலந்த பாலுக்கு உரிய பூஜை, ஆவாஹன உபசார பூஜை,
மங்களாராத்ரிகம் எனும் பூஜை  (சத்துமாவை விளக்காகக் கொண்டு
தீபாராதனை  செய்வது), சதுராயதனம் எனும் சிறப்பு பூஜை, குரு மண்டல
பூஜை, அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆவரணங்களுக்கான, ஒன்பது
வரிசைகளுக்கான பூஜை, பஞ்ச பஞ்சிகா பூஜை  எனும் பஞ்ச
ப்ரஹ்மாசனத்திற்குரிய பூஜை, ஸ்ரீ மாதா புவேனஸ்வரிக்கு சிறப்பு பூஜை,
தூப தீப நிவேதன பூஜை, பலிதானம், குரு வந்தனம், ஸஸாவாஸினி
பூஜை, கன்யா பூஜை, வேதார்ப்பணம் (வேதகோஷம்), நிருத்யார்ப்பணம்
(நாட்டியம்), கானார்ப்பணம் (பாடல்) என்று மிக அழகியதொரு
வரிசையில் ஸ்ரீ நவாவரண பூஜை அமைகின்றது.

பூஜை  பிரஸாதம் :

பூஜையின் நிறைவில் பிரஸாதமாக, ஸாமான்யர்க்கியம் எனும்
வலம்புரிச் சங்கில் உள்ள பூஜை  செய்யப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்படும்.
விசேஷ அர்க்கியம் எனும் பூஜை  செய்யப்பட்ட பால்
விநியோகிக்கப்படும்.
இவ்விரண்டையும் பெறுபவர்கள் அம்பிகையின் பரிபூரணமான
அருளையும், நவாவரண பூஜையின் முழு பலனையும் பெறுவார்கள்
என்று இந்த பூஜையின் பலஸ்துதியில் உள்ள ஸ்லோகம் கூறுகின்றது.
உடல் சுத்தத்திற்கு சங்கு தீர்த்தமும், உள்ளுறுப்புகளை  (மனதை  -
உள்ளத்தை) சுத்தம் செய்ய பூஜிக்கப்பட்ட பாலும் கொடுக்கப்படுகிறது.

வேத புராண இதிகாசங்களில் ஸ்ரீ நவாவரண பூஜை  :

இந்த பூஜையின் மகத்துவம் ஸ்ரீ ஸூக்தம், ஸ்ரீ தேவ ஸூக்தம் போன்ற
ச்ருதிகளிலும், தேவ உபநிஷத், கோனோபநிஷத், பஹ்ருவ்ருசோபநிஷத்,
பாவேனாபநிஷத் போன்ற உபநிஷதங்களிலும், பிரம்மாண்ட புராணம்
(ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம்) போன்ற புராணங்களிலும், துர்கா சப்த
சதீயிலும், ராமாயணம், மஹா பாரதம் போன்ற இதிகாசங்களிலும்
காணப்படுகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தில் ருக்மிணி விவாகத்திற்கு முன்னதாக தேவி
வழிபாடு செய்ததாகவும், ராமாயணத்தில் ராமர் அம்பிகையை
வழிபட்டே  வெற்றி கொண்டதாகவும், மஹாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணர்
அர்ஜுனனுக்கு துர்கை  வழிபாட்டினை  உபேதசம் செய்ததால் ஜெயம்
கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தேவிக்குரிய பூஜைகளை  பல்வேறு ஆர்ணவங்கள், வேதங்கள்,
புராணங்கள் கூறுகின்றன.
பரமசிவன் பார்வதி தேவிக்கு பல்வேறு தந்திரங்களை உபதேசித்த
பின்னர், தேவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைத்து
தந்திரங்களின் சாரமாக ஸ்ரீ வித்யா எனும் ஸ்ரீ தந்திரத்தை  உபேதசம்
செய்தார். இதுவே  ஸ்ரீ புர உபாஸனை  அல்லது ஸ்ரீ சக்ர உபாஸனை
அல்லது ஸ்ரீ வித்யா உபாஸனை என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்ரீ புர
உபாஸைனையை  தத்தாத்ரேயர், தனது தத்த ஸம்ஹிதையில் த்ரிபுர
உபாஸனை  உட்பட அனைத்தையும் சுமார் 18000 ஸ்லோகங்களில் மிக
விரிவாகக் கூறியுள்ளார். தத்தாத்ரேயரிடமிருந்து பரசுராமர் வித்தைகள்
அனைத்தையும் கற்று சுமார் 6000 ஸதோத்திரங்களாக சுருக்கி
எழுதியுள்ளார். பரசுராமரின் சிஷ்யர் ஸமேதஸ் என்பவர் மேலும்
சுருக்கமாக தத்தருக்கும் ஸ்ரீ ராமபிரானுக்கும் இடைய நடைபெறும்
சம்பாஷணை வடிவில் நூல் இயற்றினார். இதுவே பரசுராம மஹா கல்ப
தந்திரம் அல்லது 'பரசுராம கல்ப சூத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.
தற்காலத்தில் செய்யப்படும் அம்பிகைக்குரிய அனைத்து பூஜை
அம்சங்களும் இந்த பரசுராம தந்திரத்தை ஒட்டியே  செய்யப்படுகிறது.
ஸ்ரீ லலிதோபாக்யானம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி,
அபிராமி அந்தாதி ஆகிய நூல்களில் தேவியினுடைய பூஜை  மிக
அழகாக விளக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ வித்யா உபாஸனை  :

உபாஸனை என்றால் ஒரே  தெய்வத்தை  மனதில் மேன்மையானதாக
இருத்திக்கொண்டு அந்த தெய்வத்தையே  சதா சர்வ காலமும் நினைத்து
போற்றி வழிபாடு செய்வதாகும். ஸ்ரீ வித்யா என்பது அம்பிகையின் மூல
மந்திரங்களில் மிக மேன்மையானது. பதினாறு எழுத்துக்கைளக்
கொண்ட மந்திரம் ஸ்ரீ வித்யா எனப்படும். இந்த மந்திரம் அம்பிகையே
அனைத்திற்கும் காரண காரணியாக விளங்குகின்றாள் என்பதை
எடுத்துக்காட்டும் மிகச் சிறப்பு வாய்ந்த மந்திரம்.
ஸ்ரீ நவாவரண பூஜையை  தகுந்த குருவிடம் ஸ்ரீ வித்யா உபேதசம்
எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே  செய்யேவண்டும்.
பூஜை  செய்யும் போது பூஜகன் மந்திரங்களால் சூழப்பட்டு, அஹமேத்வம்
எனும் சொல்லுக்கிணங்க பூஜகனே அம்பிகையாக மாறிச் செய்வது தான்
இந்த பூஜையின் மிக முக்கியமான அம்சமாகும். பூஜகன் பூஜனை
மந்திரத்தினால் மானசீகமாக தன்னை பூஜையில் எரித்துக்கொள்வதே
இந்த பூஜையின் யாகமாகக் கருதப்படுகிறது. ஆகையினாலேயே  இந்த
பூஜை  "ஸ்ரீவித்யா மஹா யாக க்ரமம்" என்று போற்றி
அழைக்கப்படுகிறது.

ஸ்ரீ என்றால் செல்வங்களை  வாரி வழங்கும் லக்ஷ்மிக்குரிய அக்ஷரம்.
வித்யா என்றால் கலை. இந்த பூஜையைக் காண்பதால் வாழ்விற்குத்
தேவையான செல்வம், புகழ் தரும் கலை  எனும் வித்தை  தன்னாலேயே
உண்டாகும் என்பது மரபு.

ஸ்ரீ நவாவரண பூஜையில் முத்திரைகள் :

இந்த பூஜையில் முத்திரை  மிக முக்கிய இடம் பெறுகிறது.
ஸ்ரீ தஷினாமூர்த்தியானவர் சனத்குமாரர்களுக்கு சின் முத்திரையின்
(ஆட்காட்டி விரலும் கட்டை  விரலையும் இணைப்பது) மூலமாக,
பேசாமல் பேசி பொருளுணர்த்தி உபேதசம் செய்வது போல, இந்த
பூஜையில் அம்பிகைக்கு முத்திரைகளால் பூஜைகளைச் செய்வது மிக
மேன்மையானதாக அமைகின்றது. ஆகையினால்தான், நவாவரண
பூஜை  ஆரம்பித்தது முதல் இறுதி வரை  பூஜகன் பூஜை  மந்திரங்களைத்
தவிர வேறேதுவும் பேசாமல் இருக்க வேண்டும் என்று இந்த பூஜை
வரையறுக்கிறது.

ஸ்ரீ நவாவரண பூஜையை  தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :



1 நற்குழந்தைப் பேறு,

2 அனைத்து தோஷங்களும் நீங்குதல்,

3 குழந்தைகளின் கல்வி மேம்படுதல்,

4 நல்ல இல்லற வாழ்க்கை,

5 அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெறுதல்,

6 உத்தியோகம், வியாபார அபிவிருத்தி,

7 ஸகல நோய்களும் நீங்குதல்,

8 வேண்டுவன அனைத்தும் பெறுதல்,

9 ஆனந்தமான, வசதியான அமைதியான வாழ்வு,

ஸ்ரீ நவாவரண பூஜை  பரார்த்த பூஜை, பராபரா பூஜை, ஸபர்யா நியாஸ
பூஜை, தஷிணாச்சாரம், வாமாசாரம் போன்ற பல்வேறு முறைகளில்
பல்வேறு இடங்களில் செய்யப்படுகின்றது.
அனைத்து தெய்வங்களுக்கும் மேலான ஒரே  தெய்வமான அம்பிகையை,
ஏகாக்ரமாக (ஒரே மனதாக) பூஜையில் ஈடுபாடு கொண்டு
செய்யப்படுவது,
இம்மை மறுமை  இரண்டிலும் சுபம் அளிக்கவல்லது,
மனம், வாக்கு, காயம்  எனும் முப்பொறிகளாலும், ஆணவம்,
கன்மம், மாயை  எனும் மும்மலங்களை அறுக்கக்கூடியது,
பிரம்மச்சரியம், இல்வாழ்வு, வானப்ரஸ்தம், சன்னியாஸம் என்ற சதுர்
(நான்கு) வர்ணத்திற்கும் பொதுவான பூஜை, சாலோகம், சாமீபம்,
சாரூபம், சாயுஜ்யம் எனும் நான்கு நற்பதவிகளைத் தருவது,
பஞ்ச (ஐந்து) தன்மாத்திரைகளாலும் (கண், காது, மூக்கு, வாக்கு,
சருமம்) பூஜை  செய்யப்படுவது, பஞ்ச (ஐந்து) யக்ஞத்தினால் (பிரம்ம
யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம், பிதுர் யக்ஞம், மானுஷ்ய யக்ஞம்)
செய்யப்படும் பூஜையை விட மேலானது, காமம், குரோதம், உலோபம்,
மோகம், மதம், மாத்சர்யம் எனும் ஆறுவகை  பகைகளைக் களைவது,
மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி,
ஆக்ஞா எனும் மனித உடலில் உள்ள ஆறுவகைச் சக்கரங்களை
உயிர்ப்பித்துத் தூண்டி பூஜைகளைச் செய்யப்படுவது,
உலகம் ஏழுக்கும் (பூலோகம், புவலோகம், சுவலோகம், மஹாலோகம்,
சனலோகம், தவலோகம், சத்யலோகம்) அதிபதியாக விளங்குபவளும்,
காப்பவளும் பின் கரந்து விளையாடுபவளும் ஆகிய அம்பிகையைத்
தொழுது பணிவது, அஷ்ட - எட்டு - (தனம், தான்யம், நிதி, பசு, புத்திரர்,
வாகனம், ஆற்றல், தைரியம்) ஐஸ்வர்யங்களைத் தருவது, அஷ்டமா
(எட்டு) சித்திகளை  (அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிரார்த்தி,
பிராகாம்யம், ஈசித்வம், வசித்வம்) அருளூவது, குபேரனுக்கு நிகரான
செல்வங்களை  நிறைக்கும் நவ (ஒன்பது) நிதிகளை (சங்க நிதி,
பதுமநிதி, மகா பதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்)
தரவல்லது ஸ்ரீ நவ (ஒன்பது) ஆவரண (வரிசை) பூஜை.
ஆவரணம் என்பதற்கு வரிசை  என்று ஒரு பொருளும், அடைப்பு அல்லது
மறைப்பு என்று ஒரு பொருளும் உண்டு.
நம் மனதில் உள்ள அழுக்கான ஒன்பது திரைகளை, மறைப்புகளை
விலக்கி நிர்மலமான பேரானந்தம் தரும் அம்பிகையின் ஸ்வரூபத்தை
தரிசனம் செய்வது இந்த பூஜையின் மிக முக்கிய தாத்பர்யம்.



யோகா முத்திரைகள்





                            முத்திரை யோகம் கதயோகத்தின் ஒரு அங்கம். எளிமையானது. சுலபமாக செய்யக் கூடியது. நம் விரல்களை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆசனங்களாகும். மற்ற விரல்களால் கட்டை விரலை தொடுவது இதன் முக்கிய அம்சம். சித்தா, ஆயுர்வேதம் மற்றும் யோகா இவற்றின் அடிப்படை தத்துவம் – உலகில் உள்ள அனைத்தும் ஐந்து மூலப் பொருட்களால் ஆனவை. இந்த ஐம்பூதங்கள் ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியனவாகும். இதில் ஆகாயம் “ஈதர்” என்று விஞ்ஞான ரீதியாக கூறப்படுகிறது. உலகின் பொருட்களை சூழ்ந்து இருப்பது ஆகாயம். பூமி அடர்த்தி மிகுந்தது. நீருடன் சேர்ந்த பூமி கப தத்துவமாக சொல்லப்படுகிறது. காற்று உருவமில்லாத ஆகாயத்துடன் சேர்ந்து உடலில் வாதத் தத்துவத்தை ஏற்படுத்துகின்றன. தீ பித்தம். வெளிச்சத்தை உண்டாக்கும். இந்த ஐம்பூதங்கள் உடலில் சமச்சீராக இருந்தால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இவைகளில் ஏதாவது ஒன்று பாதிக்கப்பட்டால் வியாதி உண்டாகும்.நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன.


1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.

இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.

முத்திரைகளை பயிலும் முறை

1. “பத்மாசனம்” போன்ற உட்காரும் ஆசனங்களில் அமர்ந்து யோகமுத்திரைகளை செய்வது சிறந்தது. ஆனால் நீங்கள் பல நிலைகளில் முத்திரைகளை செய்யலாம். டி.வி. பார்க்கும் போது, நிற்கும் போது, பயணிக்கும் போதும் செய்யலாம்.

2. ஞான முத்திரைதவிர மற்றவைகளை ஒரேசமயத்தில் இரண்டு கைகளை உபயோகித்து செய்யலாம்.

3. எல்லா பருவத்தினரும், எப்போது வேண்டுமானால் முத்திரைகளை செய்யலாம். விலக்கு “சூன்ய முத்திரை”. இதுமட்டும் காது கேட்காதவர்கள் மட்டும் செய்ய வேண்டிய பயிற்சி.

4. எல்லா முத்திரைகளையும், அக்னியை குறிப்பிடும் கட்டைவிரலை சேர்த்துத் தான் செய்ய வேண்டும்.

5. இவற்றை செய்யும் போது, விரலோடு விரலை மெதுவாக தொடவும். அழுத்த வேண்டாம்.

6. முதலில், ஆரம்பத்தில் 10-15 நிமிடம் இந்த யோகமுத்திரை பயிற்சிகளை செய்யவும். பிறகு தினமும் 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.

7. வலதுகை முத்திரைகள் உடலின் இடது பக்க அவயங்களுக்கு பலன் அளிக்கும். அதே போல் இடது கையினால் செய்யப்படும் பயிற்சிகள் வடபக்க உறுப்புகளுக்கு பலன் கொடுக்கும்.

முத்திரைகள் 100 வகைகள் உள்ளன. முக்கியமான சில

1. பிராண முத்திரை – மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களை சேர்த்து வளைத்து கட்டை விரலை தொடவும்.
பயன்கள் – களைத்த உடலை புதுப்பிக்கும். நரம்புத்தளர்ச்சியை போக்கும் பார்வைத் திறன் அதிகரிக்கும். ஞானமுத்திரையுடன் சேர்த்து செய்தால், தூக்கமின்மை வியாதி குணமாகும். அபான முத்திரையுடன் சேர்த்து செய்தால் நீரிழிவு குணமாகும். உடலில் நோய் தடுப்புசக்தியை அதிகரிக்கும். பொதுவாக ஆரோக்கியம் மேம்படும்.

2. ஞான முத்திரை – இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்கவும்.
பயன்கள் – மூளைக்கு அதிக ரத்தம் பாயும். மூளை செயல்பாடு, ஞாபகசக்தி அதிகரிக்கும். முன்பு சொன்னபடி ‘பிராண முத்திரையுடன் செய்தால்’ தூக்கமில்லா வியாதியை தீர்க்கும்.

3. அபான முத்திரை – நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொடவும்.
பயன்கள் – நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீர் பாதிப்புகளை குறைக்கும். அடைப்பட்ட மூக்கு சளியை குறைக்கும். மல ஜலங்கள் சீராக பிரிய உதவும். வியர்வையை அதிகரித்து உடலின் நச்சுப் பொருட்களை களையும்.

4. அபான வாயு முத்திரை (மிருத்த சஞ்சீவினி முத்திரை) – ஆள்காட்டி விரல் (வாயு) நுனியை கட்டைவிரலின் (அக்னி) கட்டை விரலின் அடியை தொடவும் பிறகு நடு விரல் மற்றும் மோதிர விரல்களால் கட்டை விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – இந்த முத்திரை இதயத்திற்கு நல்லது. அதனால் இதன் மற்றொரு பெயர் இதய முத்திரை. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். வாயு மற்றும் தலைவலியை குறைக்கும்.

5. வாயு முத்திரை – ஆள்காட்டி விரலால் கட்டை விரலின் அடி பகுதியை தொடுவது வாயு முத்திரை ஆகும். கட்டை விரல் வளைந்து மெதுவாக ஆள்காட்டி விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – மூட்டு வலி – ஆர்த்தரைடீஸ், ரூமாடீஸம், ஸ்பாண்டிலோஸீஸ் இவற்றின் வலிகளை குறைக்கும். பிராண முத்திரையுடன் சேர்த்து செய்தால் முழு பயன் கிடைக்கும்.

6. பிருத்திவி முத்திரை- மோதிர விரல் நுனியால் கட்ட விரல் நுனியை தொடவும்.
பயன்கள் – உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மன அமைதியை உண்டாக்கும். உடலை பருமனாக்கும்.

7. சூரிய முத்திரை – மோதிர விரலை வளைத்து அதன் நுனி கட்டை விரலை தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை அழுத்த வேண்டும். இந்த முத்திரையை பத்மாசனத்தில் அமர்ந்து இரு கைகளால் செய்ய வேண்டும்.
பயன்கள் – டென்ஸன், அதிக உடல் பருமன் இவற்றை குறைக்கும். சோம்பலை போக்கும்.

8. வருன முத்திரை – சுண்டு விரல் நுனியை கட்டை விரல் நுனியால் தொடவும்.
பயன்கள் – சிறுநீரக கோளாறுகள் ரத்தத்தில் நச்சுப் பொருள்கள் நீர்மச் சத்து குறைவு சூளுக்கு இவற்றுக்கு எல்லாம் இந்த முத்திரை நல்ல சிகிச்சை.

9. லிங்க முத்திரை – இரண்டு உள்ளங்கைகளையும் சேர்க்கவும். இரண்டு கைகளின் விரல்களை ஒன்றுக்கொன்றுடன் பின்னிக் கொள்ளவும். இடது கட்டை விரலை மட்டும் விட்டுவிடவும். இந்த விரல் தனித்து நிமிர்ந்து நிற்கட்டும் வலது கையின் கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் லேசாக இடது கட்டை விரலை தொட்டுக் கொண்டு மற்ற விரல்களை பிடித்துக் கொள்ளவும்.
பயன்கள் – இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்வது நல்லது. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். ஜீலதோஷம் இருமலுக்கு நல்லது. உடல் எடை குறைக்கும். இந்த பயிற்சியை செய்பவர்கள் பால், நெய், பழங்கள், மற்றும் தண்ணீர் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. சூன்ய முத்திரை – இந்த முத்திரையில் நடு விரல் கட்டை விரலின் அடி பகுதியை தொட வேண்டும். கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
பயன்கள் – இந்த முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும். காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும்.எச்சரிக்கை

1. காது கோளாறு இல்லாதவர்கள் இந்த முத்திரையை செய்யக் கூடாது. செய்தால் காதுகளில் அடைப்பு ஏற்படும்.

2. இந்த முத்திரையை செய்யும் பொழுது இரண்டு கைகளையும் உபயோகிக்க வேண்டாம்.



11. சங்க முத்திரை – இடது கை கட்டை விரலை வலது கை விரல்களால் பிடித்துக் கொள்ளவும். இடது ஆள்காட்டி விரல் வலது கை கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மீதமுள்ள இடது கை மூன்று விரல்களால் வலது கை விரல்களை லேசாக அழுத்தவும். இந்த பயிற்சியை கைகளை மாற்றி மாற்றி செய்யவும்.
பயன்கள் – தொண்டை பாதிப்புகள், தைராயீடு பிரச்சனைகள், ஜீரண கோளாறுகள் இவற்றை குறைக்கும். குரல் வளத்தை அதிகரிக்கும்.



12. ஆகாய முத்திரை – கட்டை விரலின் நுனியை நடு விரலால் தொடவும்.
பயன்கள் – இதயத்திற்கு நல்லது. தேவைப்பட்டால் மட்டும் இந்த முத்திரையை செய்யவும்.

நமது பழங்கால முனிவர்ககளும் சித்தரகளும் விரல் நுனிகளில் ஒரு வித மின்சக்தி இருப்பதாக கருதினர். முத்திரைகளை பயிலும் போது, இந்த மின்சக்தி பல பலன்களை தரும் என்று நம்பினர்.
நமது கைகளின் ஐந்து விரல்கள் ஐம்பூதங்களை குறிக்கின்றன



1. கட்டைவிரல் – தீ
2. ஆள்காட்டி விரல் – காற்று
3. நடுவிரல் – ஆகாயம்
4. மோதிரவிரல் – நிலம்
5. சுண்டுவிரல் – நீர்.



இந்த ஐந்து விரல்களை பயன்படுத்தி முத்திரை ஆசனங்கள் செய்தால் உடல் நலம் கூடும்.



திங்கள், 23 டிசம்பர், 2013

வேங்கை மரமும் சில உண்மைகளும்




                        வேங்கை மரமும் சில உண்மைகளும்  என்ற தலைப்பில் வேங்கை மரம் எத்தனை வழிகளில் எந்தெந்த வழிகளில் மனிதனுக்கு பயன்படுகிறது என்பதனை பற்றி நாம் ஆராய இருக்கிறோம்.

                 வேங்கை மரம் நவ கிரகங்களில்  செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியும். ஏனென்றால் செவ்வாய் கிரகத்தின் கதிர்கள் சிவப்பு நிறமாகும். நம் தமிழ் கடவுளான முருகப் பெருமான் இம்மரத்தில் வாசம் செய்வதாக வேதங்கள் குறிக்கின்றன.

                 வேங்கை மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொண்டால் பேய், பிசாசு, காற்று, கருப்பு இவைகள் நம்மை அண்டாது. ஆங்கில தேதி 9,18,27 ல் பிறந்தவர்களும் மேஷம் விருச்சிகம் இராசியில் பிறந்தவர்களும் இம்மரத்தின் பாலை நெற்றியில் வைத்துக்கொள்வதால் இதன் சக்தி உடலில் பரவி நல்ல ஆற்றல்களையும் வாழ்வில் உயர்வுகளையும் உண்டாக்கும்.



தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க

                       தொழிலில் வெற்றி அடைய / வியாபாரத்தில் சிறந்து விளங்க